Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேசும்படம் - ஏக்கம் ! 38

அதிரைநிருபர் பதிப்பகம் | June 26, 2016 | , ,


பிரமிக்க வைக்கும் தோற்றத்துடன் பழங்காலத்து வீடு, அதன் கம்பீரமும் நேர்த்தியான கட்டிடக் கலையும் நிமிர்ந்து பார்க்க வைக்கிறது அவ்வழியே கடக்கும் எவரையும்.


ஓடையில் மிதந்து வங்கக் கடலிலும் அரபிக் கடலிலும் மீன் பிடிக்க பயணிக்கிறோம், மீண்டு கரை வந்து சேர்வது என்பது உறுதியற்ற நிலையில், இலங்கை நேவி ஒரு பக்கம் எங்களை தாக்கினான் கூச்சல் போட்டோம், அதோடு பொறுத்துக் கொண்டோம். அரபிக்கடலோரம் இத்தாலி காரனும் போட்டு தாக்குறான் அதுவும் போதாது என்று மர்ம கப்பல்கள் வேறு எங்கள் படகு மீது மோதி விட்டு போகின்றார்கள். நாங்கள் பிடிக்கும் மீன்கள்தான் நாறிபோகும் முன்பெல்லாம், ஆனால் இப்போது எங்கள் பொலப்பும் நாறிபோச்சி.


நாங்கள் பொங்கி வழியும் சந்தோஷம் போன்றே அவசரமாகவும் வேகமாகவும் அடித்து பிடித்துக் கொண்டு ஓடுகின்றோம் எங்கள் வழியில். எங்களுக்காக இந்த பூமியில் பலவகையான அடிதடியே நடக்கின்றது.


இருட்டு இரவில்தான், தமிழக இல்லங்கள் அனைத்திலும் இறுக்கம் தொடர்கிறது, அம்மா வந்தால் விளக்கை ஏற்றுவார் என்று மக்களும் அரியனையில் ஏற்றி வைத்தார்கள். ஆனால், ஊருக்கு ஊர் பவர் கட் தவணை முறையில் அமுல்!  யார் ஆட்சிக்கு வந்தாலும் இதற்கு முடிவே இல்லையா என்ற ஏக்கம் இந்த உருகும் மெழுகு கேட்கும் கேள்வி காதில் விழவா போகிறது ?


தெருவுக்குள் நடமாட அச்சமான சூழ்நிலை, நமது சகோதரர்கள்தானே என்று நம்பி தெருக்களில் நடமாடுவதில், இப்படி ஒன்றோடு ஒன்றாக இருக்கும் ஒற்றுமை நமக்கு(ள்) எப்போதுங்க வரும்!?


வாழ்க்கையில் வெற்றி பெற பல தடைகளை உடைத்து எறிய வேண்டும் என்பதை இந்த பிஞ்சுச் செடி மழலையின் சிரிபைப்போன்றே வெளியுலகைக் காண எழுகிறது.


எந்த கனரக இயந்திரங்களின்றி எங்களுக்கும் சுரங்க பாதை அமைக்க தெரியும் என்று மண் புழுக்களின் சவால் இன்றைய காண்டரக்டர்களுக்கு எரிச்சையூட்டுவது போல் இருக்கிறது !


அதிரை பட்டுக்கோட்டை ரோட்டில் தீட்டிவைத்த கோடாலி போல், கூர் தீட்டிய இந்த குறுக்கு குட்டிச் சுவர் பாதுகாப்புக்கா அல்லது அதன்மீது மோதி கீழே விழுபவருக்கு மண்டையை பிளக்கவா? 


எங்களைப் பாருங்கள் என்று வரவேற்பு தோரனை கட்டியிருக்கும் இந்த புளிய மரங்கள் நிழற்குடையா?அல்லது ஒற்றுமைக்குள் வரவேற்கும் நுழைவாயிலா?


உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தென்னந்தோப்பில் இருக்கும் சுகந்தம்போல் வருமா ? வெயிலுக்கும் மழைக்கும் ஏற்ற பச்சைச் குடை, பரவசமடைய வைக்கிறது.


சரிங்க ஊருக்கு போனியலமே என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது வருகிறேன்.. இராஜாமட வழிப் பயணத்திலும் ஆழ்கடலில் மீண் பிடிக்கச் சென்றோபோது ஏற்பட்ட அனுபவ சம்பவங்களோடு விரைவில் !

-Sஹமீத்

38 Responses So Far:

sabeer.abushahruk said...

ஏலேலோ ஐலஸா
ஏதேதோ அபிலாஷா

இத்தாலிக்காரன் சுட்டுப்புடுவான்
சுருக்காப் போநீ ஐலஸா

சிங்கள ஆட்கள் சங்க நெறிப்பான்
சீக்கிரம் போநீ ஐலஸா

மோட்டார் போட்ல வலையை அறுப்பான்
சட்டுனுப் போநீ ஐலஸா.

எந்திரப் படகு கிடைச்சிப்போனா
தீர்ந்துபோகும் அபிலாஷா.

Unknown said...

மிகச்சிறந்த படங்கள், முதல் படம் அநேகமாக காரைக்குடி கட்டிடம் என நினைக்கிறேன்.

இரண்டாவது அநேகமாக மல்லிப்பட்டினம்...? பட்டுக்கோட்டை சாலை தவிற வேறு எதுவும் ம்ஹூம்...

ஆனால் எல்லாமே பேசாமல் பேசும் படங்கள்

JAFAR said...

அழகான பேசும் படங்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

படமும் வருணனையும் சூப்பரு!
----------------------------

1. இந்தக் கோட்டையை வாங்கத்தான் ஊருக்கு போனியலாமே! சந்தோசம்.

2. நாறிப்பொற மீன் பொழப்புல ஏப்ரல் மேயில தடை வேறயாம்.

3. பொங்கிடும் நீர் போல் மனதில் என்றும் மகிழ்ச்சி பொங்கிட வேண்டும்.

4. இந்த ஆட்சி இப்படியா என்று உருகும் மெழுகாய் அழுது நம் கவிஞரின் "வெளிச்சம் காண்பீர்" கவிதையை படித்து மனம் தேற்றிகொள்ள வேண்டியதாயிருக்கு.

5. கருத்தால் கத்தரிக்காய் போல இரண்டாக இருந்தாலும் ஊர் நலன் என்று வரும்போது தாய்ச்செடியாய் ஒன்றிணைய தயங்காதே என்று கத்தரியும் கருத்து சொல்லுது.

6. விதையிலிருந்து பிறக்கும் செடி விசித்திரமாக இருக்கிறது. சுபுஹானல்லாஹ்!

7. ரயிலுக்கு மரவட்டைகள் போல
சுரங்கப்பாதைகளுக்கு மண் புழுவோ, புள்ளபூச்சிகளோ!

8. நல்லாத்தான் இருக்கு சாலை,தடுப்புதான் நல்லா இல்லை.

9. எங்களைப்போல் கைகோர்த்து இருங்கள் என்று ஊருக்குள் நுழையும்போதே புளிய மரம் கூட வலிய சொல்லி அனுப்புது.

10. தென்னந்தோப்பின் சுகமும் தென்னம்பாலின் சுவையும் தெவிட்டாத இன்பம் தருபவை!

சேக்கனா M. நிஜாம் said...

வாழ்த்துகள் !

சகோ. ஹமீத் அவர்களின் “புகைப்படக்கலை”யின் வல்லமை இதன் படங்களில் பேசுகின்றது !

ZAKIR HUSSAIN said...

படங்களைப்பார்த்து ஊர்போக ஆசை..."மே" வெயிலை நினைத்தால்...???

Unknown said...

படங்களைப்பார்த்து ஊர்போக ஆசை..yes

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

புகைப்பட வல்லுனர் ஹமீது காக்காவின். அமைதியான சிரிப்பு கலந்த மவுன பேச்சு மெழுகு திரியை போல் சுடர் விட்டு பேசுகிறது.

// பிரமிக்க வைக்கும் தோற்றத்துடன் பழங்காலத்து வீடு, அதன் கம்பீரமும் நேர்த்தியான கட்டிடக் கலையும் நிமிர்ந்து பார்க்க வைக்கிறது அவ்வழியே கடக்கும் எவரையும்.//

கட்டிடக் கலையை நாம் நிமிர்ந்து பார்க்க.நுழைவாயில் மேலே இருந்து இரண்டு சிங்க குட்டி நம்மை முறைத்து பார்க்கிறதே!

பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டாப்க்கு பக்கத்தில் உள்ள வீடுபோல் தெரிகிறதே.

// தெருவுக்குள் நடமாட அச்சமான சூழ்நிலை, நமது சகோதரர்கள்தானே என்று நம்பி தெருக்களில் நடமாடுவதில், இப்படி ஒன்றோடு ஒன்றாக இருக்கும் ஒற்றுமை நமக்கு(ள்) எப்போதுங்க வரும்!?//

உயிருள்ள ஜீவராசிகளுக்கு நாம் உணவாக போகபோகிறோம் என்று.கத்திரிக்காய்கள் காய்த்து தொங்குவது போல்.நம்மை நம்பி உள்ள தாய் தந்தை மனைவி மக்களுக்காக உழைப்பில் கவனத்தை செலுத்தினால் ஒற்றுமைக்கு(ள்) நாம் சென்று விடுவோம்.இன்ஷா அல்லாஹ்.

படங்களை பார்த்து மன நிறைவாக இருந்தாலும்.ஊருக்கு வந்த ஹமீது காக்காவை பார்க்காதது பெரும் குறையே!

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மருமகன் சாகுல் ஹமீது இந்த முறை ஊர் சென்று பலவகையிலும் அசத்திவிட்டார். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

தம்பி ஜாகிர் கூறுவதுபோல் மே மாதத்தை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.

அதுமட்டுமா? மின்வெட்டுக்குபயம்; துரத்திக்கடிக்கும் கொசுக்கு பயம்; வீடுதேடிவரும் ரியல் எஸ்டேட் புரோக்கருக்கு பயம்;

பஸ்களில் கூட்டத்துக்கு பயம்; கடைத்தெரு நாற்றத்துக்கு பயம்; வாசலில் ஓடும சாக்கடைக்கு பயம்; சகோதர இயக்கங்களின் சண்டைக்கு பயம்;

சுற்றிவரும் சோம்பேறிகளை காண ஒரு பயம்; முட்டிமோத வரும் குடிகாரர்களை காண ஒரு பயம்; இப்படி பல.

இருந்தாலும் EAST OR WEST HOME IS BEST.

இபுராஹீம் அன்சாரி

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// படங்களைப்பார்த்து ஊர்போக ஆசை..."மே" வெயிலை நினைத்தால்...???//

AC , DC , இவைகளில் இயங்காத காற்றாடியோ,குளிர்சாதனப்பெட்டியோ அங்கே கிடைத்தால் வாங்கி கொண்டு ஆசையாக வந்தால் நன்றாக இருக்கும்.ஜாகிர் காக்கா.

அப்துல்மாலிக் said...

படங்களும் அதற்கேற்றார்போல் கருத்துக்களும் பிரமிக்க வைத்தன

அதிரை என்.ஷஃபாத் said...

"ஆறாம் படம்" - அழகு !! ஆயிரம் கவிதைகள் எழுதத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது..

"
பூமிப் போர்வையை விலக்கி
உறக்கம் களைந்து
விழித்தெழுந்தது ஒரு
விதை!!"

சேக்கனா M. நிஜாம் said...

// ஏலேலோ ஐலஸா
ஏதேதோ அபிலாஷா

இத்தாலிக்காரன் சுட்டுப்புடுவான்
சுருக்காப் போநீ ஐலஸா

சிங்கள ஆட்கள் சங்க நெறிப்பான்
சீக்கிரம் போநீ ஐலஸா

மோட்டார் போட்ல வலையை அறுப்பான்
சட்டுனுப் போநீ ஐலஸா.

எந்திரப் படகு கிடைச்சிப்போனா
தீர்ந்துபோகும் அபிலாஷா. //

மீனவர்களுக்கேற்ற “அபிலாஷா”க் கவிதை !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா,

நலமா?

அனைத்து புகைப்படங்களும் அருமை காக்கா,

போர் கம்பிரஸர் புகைப்படம் மிக அருமை..

சேக்கனா M. நிஜாம் said...

// படங்களைப்பார்த்து ஊர்போக ஆசை..."மே" வெயிலை நினைத்தால்...??? //

பயப்பட வேண்டியதில்லை ! குளிர்ச்சியை தரக்கூடிய
M.P. காக்கா “சர்பத்”, அமீர் கடை “மோர்” , ஆச்சி “வெள்ளரிப்பிஞ்சி “, “நாவப்பழம்”, தக்வா பள்ளி “தர்பூஸ்” போன்ற எல்லாமே இங்கே ஈக்கீது..............ஆனா மறக்காம எலுமிச்சைப்பழ ஷாம்பு மட்டும் கொண்டு வந்துருங்கோ....................

சேக்கனா M. நிஜாம் said...

// அதுமட்டுமா? மின்வெட்டுக்குபயம்; துரத்திக்கடிக்கும் கொசுக்கு பயம்; வீடுதேடிவரும் ரியல் எஸ்டேட் புரோக்கருக்கு பயம்;

பஸ்களில் கூட்டத்துக்கு பயம்; கடைத்தெரு நாற்றத்துக்கு பயம்; வாசலில் ஓடும சாக்கடைக்கு பயம்; சகோதர இயக்கங்களின் சண்டைக்கு பயம்;

சுற்றிவரும் சோம்பேறிகளை காண ஒரு பயம்; முட்டிமோத வரும் குடிகாரர்களை காண ஒரு பயம்; இப்படி பல.//

நல்ல “தெனாலி"யான விழிப்புணர்வு கருத்து

N. Fath huddeen said...

//முதல் படம் அநேகமாக காரைக்குடி கட்டிடம் என நினைக்கிறேன்.// No, it is வக்கீல் முனாப் வீடு செக்கடி பள்ளி அருகில் (முச்சந்தி). ஓல்ட் ஹவுஸ், கோல்ட் ஹவுஸ்!

இறுதிப்படம் - தென்னை, சூபெரிலும் சூப்பர்!

இப்னு அப்துல் ரஜாக் said...

படம் சொல்லுது சேதி,


என்னதான் அறுதப் பழசானாலும்,
அழகாய் இருக்கு கட்டிடம் ,

நீர் மேல ஆட்டம் போடுது
மீனவனின் வாழ்க்கை

பீறிடும் நீரும் ஒரு சாட்சி
இறைவன் ஒருவன் என்று

தாலிக்கு தங்கமும்,தாளிக்க வெங்காயமும் அப்போ,
கரண்டு கட்டுதான் இப்போ

கத்தரிக்காய் ரெண்டும் சொல்லுது சேதி
ஒற்றுமையாய் இருக்கோணும்னு

ஏகனின் அத்தாட்சியை
மேலே வருது பிஞ்சி செடி

இறைவனின் படைப்பின் அற்புதம்
இங்கு மண்புழுவாய் நகர்கிறது

கழுதை கெட்டால் குட்டி சுவர்
ஒற்றுமை இன்றேல் முட்டு - மோதல்

பயணிகள் இளைப்பாற
இலைகளின் சங்கமம்

இது நம் ஊரின் அடையாளம்.


ஊர் ஞாபகத்தை கிளறி விட்ட
சாகுல் காக்காவுக்கு
ஒரு ராயல் சல்யூட்

Yasir said...

படங்கள் போட்டிபோட்டுக்கு கொண்டு மனதில் பதிகின்றன...நக்கலுடன் கூடிய கருத்துள்ள போட்ட கமெண்ட்கள்...

அடுத்த தடவை படங்களை போடுமுன்...ஒரு ஏர் டிக்கெட் எடுத்து அனுப்பிட்டு போடுங்க...தென்னந்தோப்பு ஆசை ஆளை இழுக்குது

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

வக்கீல் முனாஃப் காக்கா ஊடு எப்பொ காரைக்குடிக்கு போனுச்சி?

ஊரே வெறிச்சோடி கிடக்கும் பொழுது இதுலெ டைலர் கட வேற???

சாகுல் காக்கா இன்னும் நெறையா படத்தெ போட்டு உடுங்க....நல்லாயீக்கிது.....

ராஜாமட பாலம் அருகில் அடர்ந்த மூங்கில்/பனைக்காடுகள் இருக்கும். காற்று பலமாக வீசும் சமயம் அதனுள்ளே சென்றால் மரங்கள் ஒன்றோடொன்று உராந்து ஒரு அச்சமூட்டும் சப்தத்தை எழுப்பி எம்மை பயமுறுத்தும் (பேய் படம் பார்ப்பது போல் இருக்கும்). வண்ண மயில்களும், கூவும் குயில்களும் அங்கு அவ்வப்பொழுது வந்து செல்லும். ராஜநாகங்களும், கொள்ளுக்காட்டு நரிகளும், காட்டுப்பூனைகளும் இன்னும் இரவில் என்னவென்ன விலங்குகளெல்லாம் அங்கு வந்து செல்கின்றனவோ? இறைவனுக்கே வெளிச்சம். காட்டின் ந‌டுவே ஒரு விள‌க்கு அமைத்து கேமாராவையும் பொருத்தி விட்டால் காலையில் அத‌னுள் ப‌ட‌ம் பிடிக்க‌ப்ப‌ட‌வைக‌ள் தெரியும்.

இன்ஷா அல்லாஹ், வ‌ரும் கோடை விடுமுறையில் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள‌ ல‌கூன் தீவு சென்று ப‌ட‌ம் பிடித்து வ‌ந்து கட்டுரை மூலம் இங்கு க‌ண்ணுக்கு ந‌ல்ல‌ தீணி போட‌ ஆசை..... அல்லாஹ் தான் நிறைவேத்தி வ‌க்க‌னும்.....

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மாஷா அல்லாஹ்!

சகோ. ஹமீது :

அழகிய புகைப்படங்கள்!

வாழ்த்துக்கள்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//வக்கீல் முனாப் வீடு செக்கடி பள்ளி அருகில் (முச்சந்தி). ஓல்ட் ஹவுஸ், கோல்ட் ஹவுஸ்!//

//வக்கீல் முனாஃப் காக்கா ஊடு எப்பொ காரைக்குடிக்கு போனுச்சி?//

சிங்க சிலைகள் அங்கு இருப்பதால் அது அவர் வீடு இல்லை என்று ஒரு வக்கீல் இன்று தீர்ப்பு கூறினார்.

Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது

//சிங்க சிலைகள் அங்கு இருப்பதால் அது அவர் வீடு இல்லை என்று ஒரு வக்கீல் இன்று தீர்ப்பு கூறினார்.//


நீதிபதிகள் தீர்ப்பு அட்டுதீர்ப்பாக இருப்பதால் இப்பதேல்லாம் வக்கீல்களே தீர்ப்பு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க

Shameed said...

முதல் போட்டோ எந்த இடம் என்று சரியாக சொல்கின்றவர்களுக்கு ஒரு செட்டிநாடு சிக்கன்கறி இலவசம்(பரோட்டா யாசிர் கொடுப்பார் )

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லா வர்ணனையும் பதிவுக்குள்ளும், அற்புதமான கருத்தோட்டங்களும் ஏற்கனவே இங்கே சொல்லிட்டாங்க...

நான் என்ன புதுசா சொல்றதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தேனா ! - ஆஹ்ஹ்

"அதிரைநிருபர் லோகோ அருமை"

அப்பாடா இதத்தான் இதுவரையில் யாரும் சொல்ல்வேயில்லை... :)

Shameed said...

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

//ஊரே வெறிச்சோடி கிடக்கும் பொழுது இதுலெ டைலர் கட வேற???//

எப்போதும் போட்டோ எடுக்கும் போது என் கவனம் மானிட்டரில் இருக்கும் இந்த வீட்டை போட்டோ எடுக்கும் போது மட்டும் அப்படி இல்லை காரணம் ரோட்டில் நடமாடுபவர்கள் போட்டோவில் வந்து விட கூடாது என்பதால் மானிட்டருக்கு வெளியோ என் கவனம் இருந்தது

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

முதல் படத்தின் வீடு யாரு ஊடு? எங்கேக்கிது? என்ற விவரம் அறிய கீழ்கண்ட டைலரின் வெப் சைட்டில் சென்று அணுகலாம்.

www.vspdresses.com

Shameed said...

m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…

//"அதிரைநிருபர் லோகோ அருமை"//

லோகோ பற்றி மட்டும் சொல்லவா நான் லோலோ என்று அலைந்து போட்டோ எடுத்தேன்!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// முதல் போட்டோ எந்த இடம் என்று சரியாக சொல்கின்றவர்களுக்கு ஒரு செட்டிநாடு சிக்கன்கறி இலவசம்(பரோட்டா யாசிர் கொடுப்பார் )//

என்ன காக்கா இடியப்ப சிக்கலான ஒரு கேள்வியை கேட்டுப்புட்டு.கறி, பரோட்டா இலவசம் என்று சொன்னா எப்படி? சிக்கலை பிரித்து எடுப்பதற்குள் கறி மரத்து போய் பரோட்டா இருவி போய்டுமே!

இருந்தாலும் முயச்சி கும்பகோணத்திலிருந்து வரும் வழியில் இருக்கலாம்.

Yasir said...

//முதல் போட்டோ எந்த இடம் என்று சரியாக // செட்டி கெட்டாலும் பட்டுகட்டுவான்,பகட்டுகாட்டுவான் என்பதற்க்கு ஏற்ப இவ்வீடும் காரைக்குடியில் உள்ள ஒரு செட்டிவீடுதான்.....நானே பரோட்டா போட்டு நானே சாப்பிடனுமா ??

Yasir said...

காலைப்பனி சூழ்ந்திருக்கும் அதிரையில் அழகு வரவேற்புவாசல் அசத்தலா இருக்கு...என்ன காக்கா சுபுஹ் தொழுததும் கேமராவ தூக்கிக்கிட்டு கிளம்பிட்டீங்களா ??

Shameed said...

லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…

//இருந்தாலும் முயச்சி கும்பகோணத்திலிருந்து வரும் வழியில் இருக்கலாம்.//



போட்டோ எடுத்த இடம் கும்பகோணமா இருந்த பரிசு வெற்றிலை பாக்காக இருந்திருக்கும். செட்டிநாடு சிக்கன்கறியா இருந்திருக்காது

Shameed said...

Yasir சொன்னது…
//காலைப்பனி சூழ்ந்திருக்கும் அதிரையில் அழகு வரவேற்புவாசல் அசத்தலா இருக்கு...என்ன காக்கா சுபுஹ் தொழுததும் கேமராவ தூக்கிக்கிட்டு கிளம்பிட்டீங்களா ?? //


நம்மளைத்தான் கேமரா அதிகாலையோ இழுத்துக்கிட்டு போவுது!

ZAKIR HUSSAIN said...

முதல் படம் .....கானாடுகாத்தான்?....காரைக்குடி?....அரியக்குடி?..நாட்டார்வயல்?

sabeer.abushahruk said...

//.....நானே பரோட்டா போட்டு நானே சாப்பிடனுமா ??//

படித்ததும் சிரித்துவிட்டேன். இரண்டு வேலை உங்களுக்கு எதற்கு? இரண்டாவதை வேண்டுமானால் நான் செய்து ஹெல்ப்றேனே?

ஹமீது, க்ளூ சரியான எல்கேஜியா இருக்கு. முதல் எழுத்து நே இரண்டாவது எழுத்து ரு, இடையிலே எழுத்தே இல்ல யார் அவர் என்றது போல்.

ஆச்சி ஊர்தானே?

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//ஆச்சி ஊர்தானே? //

ஆளாலு கானாடுகாத்தான்?....காரைக்குடி?....அரியக்குடி?..நாட்டார்வயல்? என்று பட்டியல் போடும் போது நீங்கமட்டும் ஆச்சியை குறி வைத்து விட்டீர்கள்!



இது கரைகுடிக்கும் கண்டனூர் புதுவயலுக்கும் இடையில் உள்ள செட்டியார்கள் வீடு

KALAM SHAICK ABDUL KADER said...

படம்:01)

பட்டுக்கோட்டை GNP தங்கமாளிகை உரிமையாளர் ராஜவர்மன் வீடு

படம் 02)

கடவுளி னருளினால் கடலிலே உயிரினம்;
படகிலே வலையுடன் பயணமாம் முயற்சியால்
நடக்குமே வணிகமும் நலம்

படம் 03)

கிணற்றுநீரும் பெருகுவதும் கருணையா ளனருட்டானே
உணர்ந்துநீயும் முயல்கின்றா யுனதுவாளி கயிற்றினாலே
குணங்களிலே விடாமுயற்சி குழைத்து.

கிணற்று நீரின் தட்ப-வெப்ப
சமன்பாடு
ஆழ்குழாய் நீரில்
முரண்பாடு

படம் 04)

திருட்டை யொழிக்கத் திரும்ப அழைத்தும்
இருட்டை வழங்கினார் ஈண்டு.


படம் 05)

வேதியியல் கத்தரிக்காய் வேண்டாம் நமக்கு
பேதியும் வருமோ பயந்து.

படம் 06)

நிலமெனும் தாய்வயிற்றில்
நிகழும் சுகப்பிரசவம்!

படம் 07)

மரவட்டை புகைவண்டிக்கும்
மண்புழு கட்டிடப் பொறியாளர்க்கும்
அறிவு புகட்டினால்....
ஆறறிவின் ஆற்றல்?

படம் 08)

பொதுப்பணித்துறையின்
பொத்தாம் பொதுவானப் பணி?!

படம் 09)

ஊருக்குட் செல்லுமுன் உற்சாக மூட்டுமிடம்
ஆருக்கு முள்ள வுணர்வு.

படம் 10)

நிழலில் அன்னையாக
தென்றலில் கன்னியாக
இளநீரில் மருத்துவனாக
அடிமுதல் நுனிவரை
அளவிலா நன்மைகள்
தென்னை மரம்
உன்னை வளர்க்க
எங்கே இயற்கை உரம்?

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

புகைப்படத்துடன் விளக்கியவிதம் அருமை

படம் 1 - மிக அருமையான கட்டிடம் வழுமிகுந்தது,

படம் 2 - கடலில் மிதக்கும் மீன்பிடிபடகு போல் இப்பொழுது அவர்கள் (மீனவர்களின்) வாழ்க்கை மிதக்கிறது நேரும் கொடுமையால்

படம் 3 - கம்பரசர் ஊத அவ்விடத்தில் இருக்க மனமில்லாமல் பொங்கிவழியும் குடிதண்ணீர்,

\\எங்களுக்காக இந்த பூமியில் பலவகையான அடிதடியே நடக்கின்றது.//

ஆமா முல்லை பெரியார் அணை என்ன ஆகிற்று ? ( அரசியல் சுழற்ச்சியில் ஆடும் இந்த அணை பாவம் அங்கே திண்டாடுவது தண்ணீரே )

படம் 4 - "தன்னம்பிக்கை சொல்லும் ஒளிப்பாடம்.
தீக்குள் உறவாகி கருவாகும் வெளிச்சம்...
வாழ்க்கைக்கு நம்பிக்கை நட்சத்திரம்."

நான் 
அழுது 
அழிந்தேன்! 


பிறருக்கு 
வெளிச்சத்தை 
கொடுத்துவிட்டு!!!

படம் 5 - கத்தரிக்காயின் அழகு தோற்றம்

படம் 6 - இக்காலத்தின் நிலை நிழல் தரும் மரங்களை வேர்றருப்பது அதனால் தான் என்னவோ மனிதருக்கு பயந்து ஒளிந்து எட்டிப் பார்க்கும் அவலம்....குட் ஸ்நேப்

படம் 7 - வெயிலுக்கு பயந்தோ அல்லது மற்றவைக்கு பயந்தோ தன்னுள் பூமிக்கடியில் உருவாக்கிய மெட்ரோ தடம்

படம் 8 - PKT - AMM சாலையில் குறுக்கே அமைந்த இந்த இருவழி சாலை ஆபத்தானது, மிக குறுகிய இந்த சாலையில் இருவழியாக பிரித்திருப்பது வேதனைக்குரியது

படம் 9 - மழை காலத்தில் இம்மரத்தோரனத்தில் விழும் மழைத்துழி அழகோ அழகு

படம் 10 - "பசுங்காற்று பவனி வரும்
தென்னைமர நிழனிலே
தேன்கவிதை சுரந்து வரும் மகிழ்ச்சி வேணும்!"
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்." -- இது கிடைப்பது அரிது இவ்வளைகுடா நகரினிலே

அனைத்து படங்களையிட்டு அதற்கேற்ற வர்ணனையுடன் தொகுத்து எழுதிய சகோ ஹமீது அவர்களுக்கு வாழ்த்துக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு