அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
மக்களிடம்
மென்மையாக நடப்பது, அவர்களுக்கு நன்மை செய்வது:
(நபியே!)
உம்மைப் பின்பற்றிய நம்பிக்கை கொண்டோருக்கு உமது சிறகைத் தாழ்த்துவீராக!
(அல்குர்ஆன்: 26:215)
நீதி,
நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள்
நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். (அல்குர்ஆன்: 16:90)
'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களாவீர். ஒவ்வொருவரும்
தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். தலைவரும் பொறுப்புதாரியே! அவர் தன் பொறுப்பு
பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு மனிதர் அவர் மனைவி குறித்து பொறுப்புதாரியாவர். அவரின்
பொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கு பொறுப்புதாரியாவாள்.
அவள் தன் பொறுப்பு பற்றி கேள்வி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியர் தன் எஜமானர் விஷயத்தில்
பொறுப்புதாரியாவார். ஒவ்வொருவரும் பொறுப்புதாரியே! அவரவர் தம் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்கள்!
என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 653)
''அல்லாஹ்
ஒருவருக்கு பொறுப்பை வழங்கி, அவர் தன்
பொறுப்பை விட்டும் பாராமுகமாக இருந்தவராக மரணித்து விட்டால், அவருக்கு சொர்க்கத்தை அல்லாஹ்
தடை செய்திடாமல் இருப்பதில்லை' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(புகாரி,முஸ்லிம்)
''தன் நல்ல நடவடிக்கை மூலம் தன் பொறுப்பை நிறைவேற்றத்
தவறியவர், சொர்க்கத்தின்
வாடையைக் கூட நுகர மாட்டார் என்று மற்றொரு அறிவிப்பில் உள்ளது.
''முஸ்லிம்களின் காரியங்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட
ஒரு தலைவர், பின்பு
அவர்களுக்கு பாடுபடாமல் அவர்களுக்கு நல்லது செய்யாமல் இருந்தால், அவர் அவர்களுடன் சொர்க்கத்தில்
நுழைந்திடமாட்டார்'' என்று முஸ்லிமின்
மற்றொரு அறிவிப்பில் உள்ளது. (அறிவிப்பவர்: அபூயஹ்லா என்ற மஹ்கில் இப்னு யஸார் (ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 654)
'(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னுடைய இந்த வீட்டில்
துஆச் செய்தார்கள். ''இறைவா!
என் சமுதாயத்தின் காரியத்தில் ஏதேனும் ஒன்றிற்கு ஒருவர் பொறுப்பேற்று, அவர்களிடம் கடுமையாக அவர் நடந்து
கொண்டால், அவரிடம்
நீ கடுமையாக நடந்து கொள்வாயாக! என் சமுதாயத்தின் காரியத்தில் ஏதேனும் ஒன்றிற்கு ஒருவர்
பொறுப்பேற்று, அவர் அவர்களிடம்
மென்மையாக நடந்து கொண்டால், அவரிடம்
நீ மென்மையாக நடந்த கொள்வாயாக!'' என்று
(பிரார்த்திக்கும் போது) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 655)
நீதமான அரசர்
அல்லாஹ் கூறுகிறான்:
நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை
அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை
உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை
கூறுகிறான். (அல்குர்ஆன்: 16:90)
நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ்
விரும்புகிறான்.(அல்குர்ஆன்:49:9)
'ஏழுபேர். இவர்களுக்கு அல்லாஹ், தன் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத
அந்த (மறுமை நாளில்) தன் அர்ஷின் நிழலில் நிழல் தருவான். (1)நீதமான அரசன் (2) அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபடும்
வாலிபர். (3) பள்ளிவாசல்களில்
தன் உள்ளத்தைப் பறி கொடுத்த மனிதர். (4)
அல்லாஹ்வுக்காக பிரியம் கொண்டு, அவனுக்காகவே ஒன்று சேர்ந்து, அவனுக்காகவே பிரிந்தும் நிற்கின்ற
இருவர். (5) அழகும், குடும்பப் பெருமையும் நிறைந்தப்
பெண் விபச்சாரத்திற்கு அழைத்தும், 'நான் அல்லாஹ்வைப்
பயப்படுகிறேன்'' என்று கூறும்
மனிதர். (6) தன் வலது
கை செய்வதை, இடது கைக்குத்
தெரியாமல் (அதை மறைத்துக் கொண்டு) தர்மம் செய்கின்ற ஒருவர். (7) தனிமையான நிலையில் அல்லாஹ்வை நினைவு
கூர்ந்து, இதனால்
கண்கள் கண்ணீரைச் சிந்தும் ஒருவர் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 659)
''தங்களின் அதிகாரம், தங்கள் குடும்பம், தங்கள் பொறுப்புகளில் நீதமாக நடந்து கொண்டவர்கள், அல்லாஹ்விடம் ஒளியிலான மேடைகளில்
இருப்பார்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு இப்னுஸ் ஆஸ் (ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 660)
'(தலைவர்களில் சிறந்தவர்) அவர்களை நீங்கள் அன்பு கொள்வீர்கள்.
அவர்கள் உங்களை அன்பு கொள்வார்கள். அவர்களுக்கு நீங்கள் துஆச் செய்வீர்கள். உங்களுக்கு
அவர்கள் துஆச் செய்வார்கள் என்ற நிலையில் உள்ளவர்களே, உங்களின் சிறந்த தலைவர்களாவர். அவர்களை நீங்கள் கோபம்
கொள்வீர்கள். அவர்கள் உங்களை கோபம் கொள்வார்கள். அவர்களை நீங்கள் சபிப்பீர்கள். உங்களை
அவர்கள் சபிப்பார்கள் என்ற நிலையில் உள்ளவர்களே, உங்களின் கெட்டத் தலைவர்களாவர் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
''இறைத்தூதர்
அவர்களே! அவர்களிடம் நாங்கள் போரிடலாமா?''
என்று கேட்டோம். ''அவர்கள் உங்களுடன் தொழுகையை பேணும் வரை கூடாது. அவர்கள்
உங்களுடன் தொழுகையை பேணும் வரை கூடாது என்று (இருமுறை) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 661)
'சொர்க்கவாசிகள் : (1) நல்லுதவி புரியும் நீதமான அரசர். (2) நெருங்கிய உறவினர் மற்றும் முஸ்லிம் அனைவருக்கும் இரக்கம் காட்டும்
இதயமுள்ள கருணையானவர். (3) குழந்தைகள் உள்ள, பேணுதலை விரும்பும், பேணுதலான மனிதர் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 662)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன் S.
5 Responses So Far:
இன்றைய நாளில் பொறுப்பற்று இருக்கும் பொறுப்பாளர்களுக்கு நல்ல ஹதீஸ் தொகுப்பு.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
-------------------------------------------------
ஷஃபான் பிறை 18 / 1434
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா... !
கட்டயம் வாசிக்க வைக்கும் வாரம் ஒருமுறை வரும் அருமருந்து !
ஒவ்வொரு நற்குணமும் ,பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேன்டிய பொற்குனங்கள்.மாஷா அல்லாஹ்!!! இந்த நற்குணங்களில் ஒன்றையாவது அல்லாஹ் நமக்கு நசீபாக்கித்தருவானாகவும்.ஆமீன்... எல்லா நற்குணங்களும் நம்மிடம் வர முயற்ச்சிப்போமாக!!!
வெள்ளிக்கிழமை விருந்தை அருமருந்தாகத் தந்தமைக்கு மிக்க நன்றி, அலாவுதீன்.
ஏப்ப வர்ரே?
அஸ்ஸலாமு அலைக்கும் .
சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு,
சிறப்பான ஹதீஸ் மற்றும் திருமறையின் தொகுப்பு. அருமருந்து என்கிற தலைப்பு அப்படியே பொருந்துகிறது. பஜ்ர் தொழுகைக்குப் பிறகு படிக்கும்போது மன அமைதி ஏற்படுத்துகிறது அத்துடன் நினைவில் பதிவாகின்றன.
Post a Comment