Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரமளானில் நிதானமும், உடல் ஆரோக்கியமும் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 21, 2016 | , , ,

இந்த பதிவு சென்ற ஆண்டு ரமளானில் நம் அதிரைநிருபரில் பதியப்பட்டது, பயனுள்ள பதிவு என்பதால் இதை மீள் பதிவு செய்கிறோம்.

அன்பானவர்களே, புனித ரமளான் மாதம் ஆரம்பமாகிவிட்டது,   எம் மனதில் தோன்றிய முக்கியமான சில உடல் ஆரோக்கிய சார்ந்த செய்திகளை இங்கு பகிர்ந்துகொள்வது நல்லது என்று கருதுகிறோம்.

மற்ற நாட்களைவிட ரமளான் மாதத்தில் ஒரு பரபரப்பான சூழல் ஏற்படுவது சகஜம் என்றாலும் நம் சகோதரர்கள் ரமளானுடை பண்புகள் தெரிந்திருந்தும் சில நேரங்களில் நிதானம் இழந்துவிடுகிறார்கள்.

நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.

பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லாப் பாவ செயல்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ரமளான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா நற்செயல்களையும் ஞாபகப்படுத்தக்கூடிய ஒரு மாதமாகும். தொழாதவர்கள் தொழ ஆரம்பித்து விடுகின்றனர். தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கின்றனர். உம்ராச் செய்யாதவர்கள் உம்ராச் செய்கின்றனர். குர்ஆன் ஓதாதவர்கள் ஓத ஆரம்பித்துவிடுகின்றனர். தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றனர். இன்னும் இது போன்ற பல நல்ல செயல்களையும் கற்றுத்தருகின்றது இந்த நோன்பு.

இந்த அவசர உலகில் நம் மக்கள் குறிப்பாக வேலைகளுக்கு வாகனங்களில் செல்லும் நம் நோன்பாளிகள் நேரமின்மையை கருத்தில் கொண்டு நிதானம் இழந்து அவசரத்தில் வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாகிறார்கள். அரபு நாடுகளில் வேலைகளில் இருக்கும் நிறைய சகோதரர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களாகவும், நான்கு சக்கரம் வாகனம் ஓட்டுபவர்களாகவும் உள்ளார்கள். வருடா வருடம் தினமும் எம் கண்முன்னே சாலை விபத்துக்கள் அதிகம் ரமளான் மாதத்தில் தான் காணமுடிகிறது. விபத்துக்கு காரணமானவர் பாதிக்கப்படுவதைவிட  விபத்துக்கு காரணமில்லாத அப்பாவிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவும் நேரிடுகிறது. அல்லாஹ் காப்பாத்துவானாக.

குறிப்பாக ரமளான் மாதத்தில்  நேரமின்மை  என்ற  காரணத்தால்   பல சகோதரர்கள் நிதானமிழந்து சாலைகளை முறையில்லாமல் கடக்கும் போதும் அதிகம்  விபத்துக்கள் அன்றாடம் நடைப்பெருகிறது. இது மிகவும் வேதனையான செய்தி. சந்தோசமாக இபாதத்து செய்யக்கூடிய மாதத்தில் சாலை விபத்துக்கள் போன்ற துக்க செய்திகளை கேட்காத நாளே இல்லை. அல்லாஹ் நம்மையும், நம் மக்களையும் காப்பாத்துவானாக.

வாகன ஒட்டிகள் ரமளான் மாதத்தில் மட்டுமல்லாது மற்ற எல்லா நாட்களிலும் நிதானதமாக வாகனங்களை ஓட்டி தங்களின் பாதுகாப்பையும், அடுத்தவர்களின் பாதுகாப்பையும் மனதில் கொள்ளவேண்டும்.

எமது சமூகத்தவர்களில் பலர் புகைப்பிடித்தல் எனும் தீய பழக்கத்திற்குள்ளாகியுள்ளனர். புகைத்தலை விட்டும் விலக ரமளானே சிறந்த வாய்ப்பாகும். சுமார் 14 மணி நேரம் புகைத்தலை விட்டும் விலகியிருக்கும் எமது சகோதரர்கள் நோன்பு திறந்ததும் பகலில் குடிக்காத சிகரட்டுக்களையும் சேர்த்தே குடித்து விடுகின்றனர். நோன்பிருந்தபோது தளர்ந்திருக்கும் சுவாசத் திசுக்கள் புகை பிடித்தலால் நிக்கோட்டினால் தாக்கப்படும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழக்கத்தைக் கைவிட நோன்பைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அதை அப்படியே விட்டு விட அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்.

சரியான முறையில் ஸஹர்-நோன்பு துறப்பு உணவுப் பழக்கம் இல்லாவிட்டால் என்னவாகும்?

செரியாமை: நாள்முழுவதும் உணவு இல்லாமல் இருக்கும் இரைப்பை திடீரென்று பல்வகையான உணவுப் பொருட்கள் திணிக்கப்பட்டால் திணறித்தானே போகும்? அளவான, சத்து நிறைந்த உணவே நோன்பு துறக்க மிக உகந்ததாகும்.

மலச்சிக்கல்: சரியான அளவில் நார்ச்சத்து இல்லாத பொறித்த தின்பண்டங்கள், இனிப்பு வகைகள் அதிக அளவில் உட்கொள்வதால் மலச்சிக்கல் வரும்.

சோம்பல்: திடீரென்று உட்கொள்ளப்படும் மாவுச்சத்து நிறைந்த உணவுகள் நாள்முழுவதும் இருந்த பட்டினியால் குறைந்த குருதி அழுத்தத்துடன் இணைந்து சோம்பல் உணர்வைத் தூண்டும்.

தலைவலி: சரியான முறையில் உறக்கச் சுழற்சியை வகுத்துக் கொள்ளாவிட்டால் தலைவலி வருவதைத் தவிர்க்க இயலாது.

தசைப்பிடிப்பு: சரியான அளவில் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் உள்ள உணவை நோன்பு துறக்கப் பயனபடுத்தாவிட்டல் தசைப்பிடிப்பு ஏற்படும்.

உறக்கமின்மை: ஒவ்வொருவர் உடலுக்கும் தக்கவாறு தேவையான உறக்கத்தை நல்லமுறையில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். (இரவு வணக்கங்கள், அருள்மறை ஓதுதல், அன்றாடப் பணி இவற்றுக்கு நேரம் திட்டமிடுதலைப் போலவே)

நிதானத்துடன் ஆரோக்கியமான வழியில் நோன்பு மேற்கொண்டு மனநலத்தில் மட்டுமின்றி உடல்நலத்திலும் சிறந்தவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக.

அதிரைநிருபர் பதிப்பகம்

தகவல் சேகரிக்க உதவிய  இஸ்லாம் கல்வி, சத்தியமார்க்கம் இணைய தளங்களுக்கு மிக்க நன்றி.

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு