அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
மன்னித்தல், அறிவிலிகளைப் புறக்கணித்தல்:
(நபியே!) பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை
அலட்சியம் செய்வீராக! (அல்குர்ஆன்: 7:199)
வானங்களையும், பூமியையும் அவற்றுக்கு இடையே உள்ளவற்றையும் தக்க
காரணத்துடனேயே படைத்துள்ளோம். அந்த நேரம் வந்தே தீரும். எனவே
அழகிய முறையில் அவர்களை அலட்சியப்படுத்துவீராக! (அல்குர்ஆன்: 15:85)
உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின்
பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம் என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம்
செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப
மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 24:22)
அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்
வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை
செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
(அல்குர்ஆன்: 3:134)
யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ
அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும் (அல்குர்ஆன்: 42:43)
'நான் நபி(ஸல்) அவர்களோடு நடந்து சென்று கொண்டிருந்தேன்.
அவர்கள் (கழுத்தின்) மீது ஓரப்பகுதி தடிப்பமாக இருந்த ''நஜ்ரான்'' நாட்டுப் போர்வை இருந்தது. அப்போது அவர்களை ஒரு கிராமக்
காட்டரபி வந்து சந்தித்தார். அவர்கள் மேல் இருந்த போர்வையை கடுமையாக ஒரு இழு இழுத்தார்.
அப்போது நபி(ஸல்) அவர்களின் தோள்பட்டையின்
மேல் பகுதியைப் பார்த்தேன். அவர் அந்தப் போர்வையை கடுமையாக இழுத்த காரணத்தால் அது அடையாளத்தை
ஏற்படுத்தி இருந்தது. அந்தக் காட்டரபியோ, ''முஹம்மதே! உன்னிடம் உள்ள அல்லாஹ்விற்குரிய (பைத்துல்மால்)
பொருளிலிருந்து எனக்குத் தரக் கட்டளையிடுவீராக'' என்று கூறினார். அவரின் பக்கம் திரும்பிய நபி(ஸல்)அவர்கள்
சிரித்து விட்டு, நன்கொடை
அவருக்குக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 645)
''மல்யுத்தம் செய்பவர், உண்மையான வீரர் அல்ல. வீரர் என்பவர், கோபத்தின் போது தன்னை அடக்கிக்
கொள்பவரேயாவார்'' என்று பலமுறை
நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 647)
வேதனையை
சகித்துக் கொள்ளல்!
அவர்கள்
செழிப்பிலும்,
வறுமையிலும் (நல்
வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று
விழுங்குவார்கள்.
மக்களை மன்னிப்பார்கள்.
நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன்: 3:134)
யார் பொறுமையை
மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும் (அல்குர்ஆன்: 42:43)
'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ''இறைத்தூதர் அவர்களே! எனக்கு சில
உறவினர் உண்டு. அவர்களை நான் இணைத்து வாழ்கிறேன். என்னை அவர்கள் ஒதுக்குகிறார்கள்.
அவர்களிடம் நல்ல விதமாக நடக்கிறேன். என்னிடம் தீவினையுடன் நடந்து கொள்கிறார்கள். அவர்களிடம் நான் கனிவுடன் நடக்கிறேன். அவர்கள் என்னை
கண்டு கொள்வதில்லை'' என்று கூறினார்.
''நீர் கூறுவது
போல் நீர் இருந்தால், சுடு சாம்பலை
நீர் அவர்களை உண்ணச் செய்தது போலாகும். (அதாவது அவர்கள் நரகில் இருப்பர்) இதே நிலையில்
நீ இருக்கும் வரை அவர்களுக்கு எதிரான பாதுகாவலர் அல்லாஹ்விடமிருந்து உன்னுடன் இருந்து
கொண்டேயிருப்பர் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 648)
மார்க்கத்தின்
கண்ணியம் தகர்க்கப்படும் போது கோபம் கொள்ளுதல், அல்லாஹ்வின்
மார்க்கத்திற்காக உதவி புரிதல்:
இதுவே (அல்லாஹ்வின்
கட்டனை) அல்லாஹ்
புனிதமாக்கியவற்றைக் கண்ணியப்படுத்துவோருக்கு அது இறைவனிடம் அவருக்குச் சிறந்தது. (அல்குர்ஆன்: 22:30)
நம்பிக்கை
கொண்டோரே! நீங்கள்
அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான்.
உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான். (அல்குர்ஆன்: 47:7)
'நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ''எங்களுக்கு (தொழவைக்கும்) இன்ன நபர் தொழுகையை மிக
நீட்டி விடுகின்ற காரணத்தால், நான் காலை
சுப்ஹுத் தொழுகையைப் பிந்தி விடுகிறேன்''
என்று கூறினார். அன்று உரை நிகழ்த்தும் போது நபி(ஸல்) அவர்கள்
கோபம் கொண்டது போல் அறவே (இதற்கு முன்) கோபம் கொண்டு நான் பார்த்ததில்லை. அப்போது அவர்கள்
(தன் உரையில்), ''மனிதர்களே!
உங்களில் வெறுப்பை ஏற்படுத்துவோர் உள்ளனர். மக்களுக்கு தொழுகை நடத்துபவர் எவரேனும்
உங்களில் இருந்தால்,அவர் சுருக்(கித்
தொழ வைக்)கட்டும்! நிச்சயமாக அவர் பின்னே முதியவர், குழந்தை, பிற தேவைகள் உடையவர் (என பலரும்) உள்ளனர்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் என்ற உக்பா
இப்னு ஆமிர் பத்ரீ(ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 649)
''நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள்.
எனக்குரியத் திண்ணையை திரையால் மூடி இருந்தேன். அதில் உருவப்படங்கள் இருந்தன. நபி(ஸல்)
அவர்கள் அதைப் பார்த்தபோது, அதைக் கிழித்தார்கள்.
அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. ''ஆயிஷாவே! அல்லாஹ்விடம் மறுமை நாளில் மக்களில் மிகக்
கடுமையான வேதனை பெறுபவர்கள், அல்லாஹ்வின்
படைக்கும் தன்மையை தனக்கும் ஏற்படுத்திக் கொண்டவர்கள்தாம்'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 650)
'ஒரு சமயம், மக்சூமிய்யா குலத்தாரைச் சேர்ந்த ஒரு பெண் திருடி
விட்டாள். இது குறைஷி மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. ''அப்பெண் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் பரிந்து பேசுபவர்
யார்?'' என்று அவர்கள்
பேசிக் கொண்டனர். 'நபி (ஸல்)
அவர்களுக்குப் பிரியமானவரான உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைத் தவிர நபி(ஸல்) அவர்களிடம்
பேச தைரியமானவர் யார் உள்ளார்?' என அவர்கள்
கூறினர். எனவே உஸாமா(ரலி)அவர்கள், நபி(ஸல்)
அவர்களிடம் பேசினார். உடனே நபி(ஸல்)அவர்கள், ''அல்லாஹ்வின் குற்றவியல் சட்டங்களிலே ஒன்றில் நீ பரிந்துரை
செய்கிறாயா?'' என்று கேட்டார்கள்.
அதன்பின் எழுந்து, உரை நிகழ்த்தினார்கள்.
''உங்களுக்கு
முன் இருந்தோர் அழிந்து போனதன் காரணம்,
அவர்களில் வசதியானவர் திருடினால், அவரை அவர்கள் விட்டு விடுவார்கள். அவர்களில் ஏழை
ஒருவர் திருடினால், அவரைத்
தண்டிக்க முயற்சிப்பார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, முஹம்மதின் மகளான பாத்திமா திருடி விட்டால் கூட, அவளின் கையையும் நான் துண்டிப்பேன்'' என (தன் உரையில்) நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)
அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 651)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன் S.
8 Responses So Far:
மண்ணித்தல் சம்மந்தமான அழகிய ஹதீஸ்கள்.
நல்ல தொகுப்பு, ஜஸாக்கல்லாஹ் ஹைர், காக்கா.
"உங்களை வெள்ளை வெளேரென்று பளீரென்று பிரகாசிக்கக் கூடிய
பாதையிலே விட்டுச்செல்கிறேன் . அதில் இருள் கூட பகல் போல இருக்கும்"
என்று பெருமானார் (ஸல்) சொன்னார்கள்.
அந்தப்பிரகாசிக்கக் கூடிய ஹதீஸ் தொகுப்புகளில் சில
இன்றைய A.N. வலை தளத்தை அலங்கரிக்கின்றது.
அபு ஆசிப்.
அழகிய ஹதீஸ்கள் ஜஸாக்கல்லாஹ் ஹைர்
நல்ல தொகுப்பு, ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்
சீரிய தொகுப்பு. மாஷா அல்லாஹ். ஜசாக் அல்லாஹ் சகோதரர் அலாவுதீன் அவர்களே!
அழகிய ஹதீஸ்கள் ஜஸாக்கல்லாஹ் ஹைர்
மன்னித்தலின் சிறப்பைப் பற்றிய அழகிய தொகுப்பு...இக்காலத்திற்க்கு மிக மிக அவசியமான பதிவு
Post a Comment