Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 001 0

அதிரைநிருபர் பதிப்பகம் | August 14, 2015 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

அபூஹூரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்: ''ஒரு மனிதனின் அழகிய இஸ்லாமிய பண்புகளில்; அவன் தனக்கு அவசியம் இல்லாததை விட்டு விடுவதும் ஒன்றாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (திர்மிதீ.) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 67 )

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: பலமுள்ள ஒரு மூஃமின், பலவீனமான மூஃமினை விட சிறந்தவனும், அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவனும் ஆவான் ஒவ்வொன்றிலும் சிறப்புண்டு உனக்கு பயனளிப்பவற்றில் ஆசை கொள்வீராக! அல்லாஹ்விடம் உதவி தேடுவீராக! பலவீனம் அடையாதே! உனக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் 'நான் இப்படிச் செய்திருந்தால் இப்படி, இப்படி ஆகி இருக்குமே' என்று கூறாதே! எனினும் 'அல்லாஹ்வின் விதி. அவன் நாடியபடி நடந்தது' என்று கூறு! நீ இதை செய்யவில்லை என்றால், இது ஷைத்தானின் செயலாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 100)

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ஒருவர் தன் வீட்டிலிருந்து வெளியேறும்போது ‘’ பிஸ்மில்லாஹ் தவக்கல்து அலல்லாஹ், வலா ஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்‘’ என்று கூறினால், நீ நேர்வழி கொடுக்கப்பட்டீர். நீ போதுமாக்கப்பட்டீர். நீ பாதுகாக்கப்பட்டீர்' என அவரிடம் கூறப்படும். ஷைத்தான் அவரைவிட்டும் தூரப் போய் விடுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( துஆவின் பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன்) அல்லாஹ்வையே பொறுப்பாக்குகிறேன். எந்த ஒரு திரும்புதலும், ஆற்றலும் அல்லாஹ்விடமே தவிர இல்லை. ((அபூதாவூது, திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னு ஹிப்பான்) - (ரியாளுஸ்ஸாலிஹீன்: 83)

அல்லாஹ் கூறுகிறான்:'. ..நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்... (அல்குர்ஆன் : 2:148)

'உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சொர்க்கத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது இறையச்சமுடையயோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.' (அல்குர்ஆன் : 3:133)

அபூஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: 'இருள் நிறைந்த இரவு போல் (தொடரும்) குழப்பத்தை அஞ்சி, நீங்கள் நற்செயல் புரிய விரையுங்கள். ஒருவன் காலையில் மூஃமினாக இருப்பான். மாலையில் காபிராக இருப்பான். அல்லது மூஃமினாக மாலையில் இருப்பான். காபிராக காலையில் எழுவான். உலக நோக்கங்களுக்காக தன் மார்க்கத்தையே விற்று விடுவான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 87)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''.
(புகாரி,முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

அலாவுதீன். S.

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு