Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாழ்க்கையின் பதிவேடுகள்! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2015 | , ,

முடி நரைத்தும்
மூச் சிரைத்தும்
மூப் பெய்தோர்
முக வரிகளைக்
கண் டெடுத்துப்
காணத் தருவது...


 



S.முஹமது ஃபாரூக்

13 Responses So Far:

sabeer.abushahruk said...

தனிமைதான்
முதுமையின் முகவரியோ?

Ebrahim Ansari said...

தன்னந்தநிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே ஒரு புன்னகையைப் பார்த்திருந்தால் அது போதாதோ எந்தனுக்கு?

sheikdawoodmohamedfarook said...

முதல்படம்/ இவர் யாரோஎனக்குதெரியாது .ஆனால்இவர்வயது காரர்கள் எல்லாம் 'அந்ததண்ணி' அடிக்கும் போது இவர்மட்டும் ஐயங்கார் ஆரஞ்சுபாட்டால் பிடித்த ஸ்டயில் எனக்கு பிடித்தது. பிடித்துவிட்டேன்.

sheikdawoodmohamedfarook said...

அவ்வையார்போல்மூன்றாம்பிறைகூனல்முதுகோடு மரைக்காகுளம் வழியாகவந்து கள்ளுக்கொல்லை முழுதும் சுற்றி நடை தளர்ந்து நடுரோட்டிலேயே உக்காந்துஒய்வுஎடுக்கும்இந்த''அதிரைஅவ்வை"' யார்''?என்றுகேட்டேன்/ CNP லைன்பகுதியிலுள்ள இருபது=இருபத்து ஐந்துஅகவை விடலைகள்தொட்டி பிள்ளைகளாக இருக்கும் போது''யாரடிச்சாநீயழுதா?எங்கண்ணேநீஅடிச்சாரேசொல்லியழு ஆக்கினை கள்செஞ்சுடுறேன்' என்று தாலாட்டி வளர்த்ததாய் என்றுஒருவர்சொன்னார்.வளர்த்தபாசம்வயதையும்மீறிஇழுக்கிறது. பால்கொடுத்தநெஞ்சில்மட்டும்தான்ஈரமா?தொட்டி லாட்டிய கைகளுக்கும்பாசமுண்டு.

sabeer.abushahruk said...

இந்தப்
பதிவேடுகளின் பக்கங்களில்
வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
வளர்ந்ததும் தளர்ந்ததும்

கூன் விழுந்த முதுகாகவோ
குழி விழுந்த கண்களகவோ

சுருங்கிய தோலாகவோ
ஒடுங்கிய தோளாகவோ

தள்ளாமையாலும் - தாங்குவார்
இல்லாமையாலும்
எழுதப் பட்டிருக்கின்றன!

sabeer.abushahruk said...

கைத்தடி அளவிற்கேனும்
கைத்தாங்க ஆளில்லை

முளைக்குமுன் இருக்கும்
பொக்கைவாய் ரசிக்கும் மானுடம்
விழுந்தபின் அமையும்
பொக்கைவாய் ரசிப்பதில்லை!

எங்கள் வீட்டில்
நினைவு தப்பிய
ஒரு மூதாட்டி என் மாமியார்
என்னிடம் கேட்டது:
என் மகளை
எப்போ
கல்யாணம் பண்ணப்போறே?

மற்ற யாவையும் விட
முதுமையில் கொடுமை...
மறதி!

sabeer.abushahruk said...

ஃபாரூக் மாமா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

புகைப்படமெடுக்கத்
தங்களைத் தூண்டிய
ஏதோ ஒன்று
எங்களையும் தீண்டியது!

பகிர்வுக்கு நன்றி!

(மேலும் படங்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்)

sheikdawoodmohamedfarook said...

டிகடையில்தம்அடிப்பவரும்கம்பூன்றிபோடோவுக்குபோஸ்கொடுப்பவரும் ஒருவரே!இளம்வயதில்ஒருபண்ணையாரிடம்ரெம்பநாள்வேலை செய்தாராம். பண்ணையார்வீட்டு பரனை சுத்தம்செய்த போது5000ரூபாய் நோட்டுகட்டு கிடந்ததாம்.அதைபண்ணையாரிடம்கொடுத்தபோதுஅவர் அங்கேவைத்ததைமறந்தேபோனது இப்போத்தான் நினைவுக்குவந்ததாம். .நாணயமானமனிதன்.இப்போதள்ளாடும்வயதினிலும்அவித்தகொண்டக் கடலையாவாரம்.மேலதெருவரை நடந்தேசென்றுசேல்ஸ்செய்கிறார் .தம்அடிக்கும்பழக்கம்நிற்கவில்லை''.தண்ணிஅடிப்பது உண்டா?''என்றேன். சிரித்துக்கொண்டே''முன்னேவாலிபத்தில்அதுவும்இருந்துச்சு!அதோடு இன்னொன்றும் இருந்துச்சு''? என்றார்''அந்தஇன்னொன்று'' என்ன என்றேன். நீங்கள்லாம்மரைக்காஊட்டுபுள்ளே!அதெல்லாம்பச்சையாசொல்லமுடியாது''என்றார்.

sheikdawoodmohamedfarook said...

//படமெடுக்கஉங்களைதூண்டியஒன்றுஎங்களையும்தூண்டியது..//மருமகன்சபீர்அபுசாருக்சொன்னது/ உண்மைதான். ஏனோதெரியவில்லை ''காய்த்து ஓய்ந்த மரங்களை கண்டால்படமெடுக்க தூண்டுகிறதுமனம். பச்சை பருவமரங்களின் மீது இச்சைகொண்டுகொச்சைபார்வைவீசியகாலம்ஒன்றிருக்க பட்டமரங்கள் மீதும்சாய்ந்த மரங்கள்மீதும்சாய்கிறது என்மனம். ஆலம்விழுதுகள்போல்உறவுஆயிரம்இருந்தும்என்ன ? வேர்யெனநீ இருந்தாய்-அதில்நான் வீழ்ந்துவிடாதிருந்'தேன்'!என்றஅந்த திரைபாடலைஇரவுக்கு=இரவு நெஞ்சுக்குள் அசைபோட்டு கட்டாந்தரையையும் பஞ்சு மெத்தை போல் பாவித்துமகிழ்ந்த எனக்கு வீழும் மரங்களின் மீதுஎன் நெஞ்சும் விழிகளும் ஏன்விழுகிறது?'' யென்று எனக்குபுரியவில்லை.

sabeer.abushahruk said...

//ஆலம்விழுதுகள்போல்உறவுஆயிரம்இருந்தும்என்ன ?

வேர்யெனநீ இருந்தாய்-அதில்நான் வீழ்ந்துவிடாதிருந்'தேன்'!//

மாமா,

உங்களுக்கு ஸ்ட்ராங்கா மேலுள்ள வரிகள் என்றால்... எங்களுக்கு

"காது வரைக்கும் கம்பளி போர்த்தும் உன் கருணை ஆனந்தம்"

sheikdawoodmohamedfarook said...

//தன்னந்தனிமையிலேதள்ளாடும்வயதினிலேஉங்கள்புன்னகையை .......//மைத்துனர்இனா.அனா.சொன்னது.இதுகி.மு.காலத்துக்குபொருந்தும். இது இமுகோழி வளர்க்கும்திட்டம்போட்டுமக்கள்காதில்பூசுத்தும்காலம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உடல் முழுவதும் (முக)வரிகள் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு