மனிதனின் வாழ்வில் மகிழ்வைத் தொலைத்து மன நிம்மதியை இழக்கச் செய்து மனதைக்குன்ற வைத்து ஒருவனை மனநோயாளியாகக்கூட ஆக்கிவிடும் சக்தியொன்று இருக்கிறது என்றால் அது இந்த பாழாய்ப்போன சந்தேகமெனும் தீராத நோயாகத்தான் இருக்கமுடியும்.
அனுதினமும் ஒவ்வொருவரும் ஏதாவது ரீதியில் சந்தேகப்பட்டுக் கொண்டுதான் வாழ்நாளைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இவை யாவும் நடைமுறை வாழ்வில் நிகழக் கூடிய சந்தேகங்களேயாகும்.
உதாரணமாகச் சொல்வதாயின் வீட்டைப் பூட்டிவிட்டோமா.? சமையல் கேஸை ஆஃப் செய்தோமா.? பாக்கிப் பணம் திரும்பப் பெற்றோமா..? அல்லது வெளியில் செல்லும்போதோ, பயணத்திலோ, அலுவலகப்பணியிலோ, ஏதாவது ஒரு பொருளை எடுத்துவர மறந்துவிட்டு கொண்டுவந்தோமா..? இல்லையா.? என்று சந்தேகப்படுவது. அடுத்துச் சொல்வதானால் சந்தேக நிலையில் உள்ள சில அறியாத விசயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வது, ஆதாரமில்லாத சில செய்திகளைக் கேள்விப்படும்போது சந்தேகத்தோரணையில் கேட்பது இதுபோன்ற இப்படி பலவகையில் ஒருமனிதனுக்கு நடைமுறை வாழ்வில் அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு.
ஆனால் சிலரது சந்தேகங்கள் அவசியமற்றதாக நின்றாலும் குற்றம், நடந்தாலும் குற்றம், பார்த்தாலும் குற்றம்,பேசினாலும் குற்றம் என்று சொல்வதுபோல சதா எல்லாவற்றிற்கும் எல்லா விசயத்திற்கும் சந்தேகப்படுவது ஆரோக்கியமற்றதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக குடும்பவாழ்வில் திருமண வாழ்வில் ஏற்படும் சந்தேகம்தான் எல்லா சந்தேகங்கங்களை விடவும் மிக மோசமானவையாகவும் பிரச்சனைக்குரியவையாகவும் இருக்கிறது.இந்த சந்தேகம்தான் நிம்மதியைத் தொலைக்கச் செய்து விடுகிறது. இச்சந்தேகம் கொண்டவர்கள் சந்தோசமாக வாழ்ந்ததாகத் தெரியவில்லை.
சந்தேகம் என்பது பொதுவாக அனைவருக்கும் இருக்கும் குணங்களில் ஒன்றாக இருந்தாலும் . அதேசமயம் சூழ்நிலையைப் பொருத்து ஏற்படக் கூடியவையாக இருக்கிறது. இப்படி சூழ்நிலைச் சந்தேகங்கள் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைப் பொருத்து அதிகபட்சம் ஏற்றுக்கொள்ள கூடியவையாகவும் இருக்கிறது. அர்த்தமுள்ள சந்தேகங்கள் ஆரோக்கியமானதே அதேசமயம். அர்த்தமில்லா அவசியமற்ற சந்தேகங்கள் சந்தோசத்தைத் தொலைத்து சங்கடத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கிறது.
ஒருவருக்கு அவசியமற்ற சந்தேகங்கள் சதா எந்நேரமும் மனதைவிட்டு மாறாமல் இருக்குமானால் எதற்கெடுத்தாலும் சந்தேகக் கண்களால் பார்த்துப்பழகி அதுவே ஆட்கொள்ளத்தொடங்கி விட்டால் அதுவே நாளடைவில் மனநோயாளியாகக்கூட மாறிவிட வாய்ப்பாகிவிடுகிறது.
ஆகவே பெற்றோர்களானாலும், கணவன் மனைவி, பிள்ளைகளானாலும், சகோதர,சகோதரி உறவினார்கள் மற்றும் நட்புகளானாலும் புரிந்துணர்வு மிகமிக அவசியம் இருக்கவேண்டும். ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள வேண்டும்.நம்பிக்கை தளர்ந்து வலுவிழந்து விடுமாயின் அந்த இடத்தை சந்தேக நோய் தான் ஆக்கிரமித்துக் கொள்ளும். பிறகு பிரச்சனைகளுக்கு சொல்லவேண்டிய அவசியமில்லை.
தேவையற்ற சந்தேகத்தினால் எத்தனையோ கணவன் மனைவிமார்களும், குடும்பங்களும், உறவுகளும் நட்புகளும் சிதறுண்டு நாலாபுறமும் பிரிந்து கிடப்பதை நாம் இவ்வுலகில் பார்க்கிறோம் கேள்விப்படுகிறோம் பல ஊடகங்கள் மூலமாக செய்திகளை அறிகிறோம். இப்படி அவசியமற்ற சந்தேகத்தினால் ஏற்படும் பிரிவுகளை நினைக்கும்போது மனம் வேதனை அடையத்தான் செய்கிறது.
குடும்பப் பிரச்சனையில் ஏற்படும் சந்தேகங்கள் கணவன் மனைவிக்குள் ஏற்படும் கருத்துவேறுபாடுகளினால் சந்தேகங்கள் நாளடைவில் பெரிதாகி வளர்ந்து காரணத்தை சரிவரத் தெரிந்துகொள்ளாமல் சந்தேகத்தால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அநியாயத்திற்கு தன்னை மாய்த்துக் கொண்டவர்களும் நிறையபேர் உண்டு.
மற்ற சந்தேகங்களை விட ஒரு மனிதனுக்கு குடும்ப உறவில் சந்தேகம் வந்து விட்டால் அவனிடம் எவ்வளவு செல்வமிருந்தாலும் பணிவிடை செய்ய ஆயிரம் உதவியாளர்கள் இருந்தாலும் மனதில் நிம்மதிமட்டும் இருப்பதில்லை.. நிம்மதியில்லாத வாழ்க்கை நரகவேதனைக்குச் சமம் என்றுதான் சொல்லமுடியும்.நம்பிக்கைதான் வாழ்க்கை இதை நன்கு உணர்ந்தவர்கள் இன்புற்று வாழ்வார்கள். இல்லையேல் துன்பத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு நடைபிணமாகத்தான் வாழமுடியும். ஆகவே அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தை தருவதில்லை என்பதை உணர்ந்து அவசியமற்ற சந்தேகங்களைத் தவிர்த்துக் கொண்டு நமது இவ்வுலக வாழ்க்கையை ஆரோக்கியமானதாக ஆக்கிக் கொள்வோமாக...!!!
அதிரை மெய்சா
11 Responses So Far:
அருமை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய மெய்சா,
அருமையான சமூக அக்கறையுடன்கூடிய உன் முதல் பதிவுக்கு நன்றி.
தவறான சந்தேகம் ஒரு கொடிய நோய். அது கொள்பவரையும் உரியவரையும் நடைப்பிணமாக்கிவிடும்; சில சமயம் நிசப்பிணமாக்கிவிடுவதும் உண்டு என்பதைத்
தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லியிருக்கிறாய்.
வரவேற்பும் வாழ்த்துகளும்.
கட்டுரையில் மெய்யாளுமே சமுக சிந்தனை மிளிர்கின்றது
எனக்கு ஒரு சந்தோகம் அதிரை நிருபரில் அதிரை மெய்சாவின் முதல் கட்டுரை இதுவா?
கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோ.இப்னு அப்துல் ரஜாக்
சந்தேகமெனும் நோயை விரட்டியடிப்போம்.
சந்தோசமான வாழ்க்கையை மேற்கொள்வோம்.
அன்பின் சபீர்
நீயே எனது ஊக்கமருந்தென்று சொல்வேன்.
உனது தட்டிக் கொடுப்பும் பாராட்டுதலும் தான்
என்னை எழுதத் தூண்டியது. நன்றி நண்பா
சகோ.சமீத்
தாங்களின் பாராட்டுதலுக்கும் கருத்து பதிந்தமைக்கும்
மிக்க நன்றி.
ஆம்... அதிரை நிருபரில் இதுவே எனது முதல் விழிப்புணர்வு கட்டுரை.
இன்ஷா அல்லாஹ் நமது சகோதரர்களின் ஆதரவுடன் இனி தொடர்ந்து எனது விழிப்புணர்வு கட்டுரை இத்தளத்தில் இடம்பெறும்.
~சந்தேகம் கொடியது... அங்கேதான் சதோஷம் மடியுது...~
இங்கே மட்டும்தான் முதல் பதிப்பு, இதற்கு முன்னர் எழுத்தால் பதிந்த தடம் கடல்கடந்தும் ஒலிப்பேழையும் வலைப்பூவிலும் வலம் வந்த சகோதரர் அமைதியின் ஆளுமைக்குள் ரிலாக்ஸ் ப்ளீஸ் !
நல்வரவாகட்டும், அங்கும் இங்கும் எங்கும் நல்லெண்ணம் கொண்ட, தெளிந்த கருத்தாய்வுகள் கொண்ட படைப்புகள் தொடரட்டும் இன்ஷா அல்லாஹ் !
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் சகோ மெய்ஷா !
சந்தேகம் சந்தோஷத்தை கெடுக்கும்.....இன்று இல்வாழ்க்கை
பலருக்கும் நரக வாழ்க்கையாக மாறி இருப்பதற்க்கு முக்கிய காரணம் சந்தேகம் என்ற இந்த சைகாட்ரிக் கண்டிஷன் தான்....மெய்சா காக்கா அவர்களின் இந்த ஆக்கம் ஒரு சில சந்தேகப்பிராணிகளுக்கு சவுக்கடி
Ask your heart
Rasul Allah (sal Allahu alaihi wasallam) said: “Ask yourself for a decision, ask your heart for a decision (saying it three times.) Righteousness is that with which the soul is tranquil and the heart is tranquil, but sin is that which rouses suspicion in the soul and is perplexing in the breast, even if people give you a decision in its favour.” [Mishkat]
Everybody has within them the sense to distinguish right from wrong. And each person will be held accountable for using this sense. It is possible to twist facts and get people to give the decision that you want to hear, but if your heart is not at peace with the decision then know that it is most likely sinful for you to act on it. Unfortunately, if a person sins enough then the heart becomes dead and the ability to feel disquiet dies.
Rasul Allah (sal Allahu alaihi wasallam) said: “Leave that which causes you doubt for that which does not cause you doubt.” [Tirmidhi]
This hadith is one of the ahadith around which the whole religion revolves: it is the foundation of scrupulousness (wara) around which revolves certainty; and it brings relief from the dark oppressiveness of doubts and speculation.
Assalamu Alaikkum
Dear brother Mr. Maisha,
First of all I want to congratulate you for posting first and foremost article in Adirai Nirubar forum. Heartfelt congratulations and welcome here.
Very important thoughts on "Doubts". The doubts become destruction when it becomes extreme and uncontrolled by oneself by unaware of oneself. It needs psychological counselling to cure.
//சந்தேகங்கள் சதா எந்நேரமும் மனதைவிட்டு மாறாமல் இருக்குமானால் எதற்கெடுத்தாலும் சந்தேகக் கண்களால் பார்த்துப்பழகி அதுவே ஆட்கொள்ளத்தொடங்கி விட்டால் அதுவே நாளடைவில் மனநோயாளியாகக்கூட மாறிவிட வாய்ப்பாகிவிடுகிறது.//
Hope your thoughts further will unfold on different issues and make awareness in our community.
Jazakkallah khair
B. Ahamed Ameen from Adirampattinam
அன்புள்ள தம்பி மெய்ஷா அவர்களை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.
அன்பின் சகோ.m.nainathambi.அபூஇப்ராஹீம்
தாங்கள் என்னை நன்கு புரிந்து வைத்து நற்க்கருத்து பதிந்தமைக்கு
மிக்க நன்றி.
இனி தொடர்ந்து அனைவர்களின் ஆதரவுடன் எனது விழிப்புணர்வு கட்டுரைகள் இத்தளத்தில் இடம்பெறும்.
-----------------------------------
அன்பின் சகோ.Yasir
உங்கள் கருத்திலேயே நல்ல சவுக்கடி கொடுத்துள்ளீர்கள்.அருமை.
சந்தேகம் என்பது கொடிய மன நோய். அதிலிருந்து அல்லாஹ் அனைவரையும் காப்பானாகவும்.
--------------------------------------------------
அன்பின் சகோ.இப்னு அப்துல் ரஜாக்
உங்கள் ஆங்கில விளக்க உரை. எனது இக்கட்டுரைக்கு மேலும் பலன் சேர்ப்பதாக அமைந்துள்ளது. மிக்க நன்றி.
அன்பின் சகோ.Ahamed Ameen
ஆம். தாங்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருப்பதுபோல சந்தேகம் தீவிரமடைந்து கட்டுப்பாடற்று போகும்போது அது அழிவுக்கே வழிவகுக்கும். அதை குணப்படுத்த உளவியல் ஆலோசனை அவசியம் தேவை.
மேலும் உங்களின் விளக்கவுரையில் குறிப்பிட்டு இருப்பதுபோல பல்வேறு விழிப்புணர்வு கட்டுரைகளை இத்தளத்தில் நான் பதிவேன்.
தாங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.
------------------------------------------
அன்பின் காக்கா Ebrahim Ansari
தாங்களின் மனமுவந்த வரவேற்ப்பிற்க்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி காக்கா.
Post a Comment