
போராட்டம் என்பதும் ஒரு போர்தான்! ஆனால் போராளிகளின் வீர சரணங்கள் அரசாங்கத்தின் காதுகளை தொடுவதில்லை! சில மரணங்கள் மட்டுமே அரசாங்கத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே போகிறது ! தன் சட்டையில் தீப்பற்றும் போதுதான் நெருப்புக்கெதிராக கருப்புக் கொடி தூக்கும் சமுதாயத்தில் நாம் இருக்கிறோம்!
கந்து வட்டியை தடை செய்ய ஜீ வி அவர்களின் ஆவி தேவைப்பட்டது அரசாங்கத்திற்கு...! அதே வரிசையில் மதுவுக்கெதிரான போராட்டம் தன் பசிக்கு காந்தியவாதி சசிபெருமாள் உயிரையும் ருசித்து விட்டது! நல்ல மனிதன் மட்டுமல்ல நல்ல போராட்டங்கள் கூட மரணத்திற்கு பிறகே மதிப்பை பெறுகின்றன!
இன்று மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அரசியல்வாதிகள் மரணத்திற்கு முன்பு அவரது போராட்டங்களை காது குடைந்தபடியே கவனித்ததை அனைவரும் அவதானித்தே வந்திருக்கிறோம்!
ஒழுங்காக இருக்க ஒழுக்கத்தைப் பற்றி ஒருபுறம் பாடம் எடுக்கும் ஆசிரியர் அந்தபுரத்தில் விபச்சார வியாபாரியாக இருப்பதுபோல் "புகை நமக்கு பகை" "குடி குடியை கெடுக்கும்" என்று பாட்டுப் பாடியபடி நன்றாகவே நடிக்கிறது அரசாங்கம்! தீண்டாமை ஒரு பாவச் செயல் என புத்தகங்களின் முன்பக்கத்தில் முன்னுரைக்கும் அரசாங்கம் உன் ஜாதி என்னவென்று பின்னாளில் விண்ணப்பதிலும் சலுகைகளிலும் பின்னுரைக்கிறது!
புகையிலைகளாலும் மதுவினாலும் உயிர் இத்தனை மில்லிமீட்டர் குறைந்ததாக அறிவியல் அலறி கொண்டிருக்கையில் மனித உயிர்கள் ஒரு பொருட்டே அல்ல என தமிழக அரசு இதன் மூலம் தன் கஜானா நிறைந்ததா குறைந்ததாவென விரைந்து கணக்கெடுத்துக் கவலைப் படுகிறது!
இருட்டில் கொளுத்திய தீக்குச்சிப் போல சில போராட்டங்களில் சுய விளம்பரமே பிரமாண்டமாக தெரிகிறது! போராட்டம் என்ற கண்ணாடியில் தங்கள் பிம்பங்களை காணவே பிரியப்படுகிறார்கள் போராட்டக்காரர்கள்! இங்கே நடக்கும் உண்ணாவிரத போராட்டத்திலும் கோஷம் போடும் போராட்டத்திலும் அதிக நஸ்டமடைந்தது காவல் துறையே! லாபம் அடைந்தது பழக்கடை ஜூஸ் வியாபாரிகள் அவ்வளவே!! போராடும் அரசியல் தலைவர்களின் கவனம் அதற்கான தீர்வின்மேல் இல்லாமல் முன் வரிசையில் நின்றபடி தன் பத்திரிகையில் வெளிவரும் புகைப்படம் சரியாக இருக்கிறதா என்பதிலேயே குறியாக இருக்கிறது!!
ஆனால், இப்போது இந்த மதச் சார்பற்ற நாட்டில் நடப்பது என்ன?
நம்மவர்களுக்கு ஒரு கெட்டப் பழக்கம் ! இதை செய்யாதே என்றுரைப்பதையே செய்து முடிக்கத் துடிக்கும் பிடிவாதம்..
`யாரையும் காயப்படுத்தாதே` என்ற இயேசுவை (ஈசா நபியை) இவர்கள் ஏசாத வார்த்தைகள் இல்லை!
விபச்சாரம் அபச்சாரமென்ற சொல்லாணையிட்ட கண்மணி நாயகத்தின் மேல் கல் எறியாத அந்தக்கால கயவர்கள் இல்லை!!
ஒவ்வொரு சமுதாயத்திற்கு அவர்களை நேர்வழிப்படுத்த அந்தந்த காலகட்டங்களில் ஒரு நபி போதுமானதாக இருந்தது. இறுதித் தூதர் அவர்களின் வருகையால் அனைத்தும் முழுமை பெற்றுவிட்டது. இனியொரு தூதர் உலக இறுதிநாள் வரை வரப்போவது இல்லை. மனிதகுலத்துக்குரிய சட்டம் அல்குர்ஆனும் நபிவழியும் மட்டுமே நேர்வழி படுத்தும்.
கனவு காணுங்கள் என்று கிளிபிள்ளையாய் சொன்ன கலாம் அவர்களே! மன்னிக்க வேண்டும்! வேலியே பயிரை மேய்கிறது எனும் `கிலி`யில் நாங்களிருக்கையில் உங்கள் கனா வினாதான் என்பதில் எனக்கு வியேப்பேதும் இல்லை!
ஷேக் முகைத்தீன்
12 Responses So Far:
ஒவ்வொரு சமுதாயத்திற்கு அவர்களை நேர்வழிப்படுத்த அந்தந்த காலகட்டங்களில் ஒரு நபி போதுமானதாக இருந்தது. மாறாக இப்போது அரசுக்கு ஒரு வேதமும் தீர்க்கதரிசியும் வேண்டும் என்ற நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு விட்டதென்பதே தவிர்க்கவியலாத பிரச்சினை !
அந்த வேதம் குர்ஆன் அந்த தீர்க்க தரிசி நாயகம் ஸல் என்பதும் உமக்கு தெரியாதோ?
Please don't confuse,thanks
இந்த பதிவில் தேவையில்லாமல் ''ஒரு வரலாற்று சம்பவம் "" நுழைக்கப்பட்டிருக்கிறது, அதிரை நிருபர் குழாம் துயிலில் இருக்கிறதோ ?
அன்புச் சகோ இப்னு அப்துல் ரஜாக்:
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் !
கட்டுரையாளர் தேவையான திருத்தங்களை செய்து பதிந்து இருக்கிறார்.
தமிழகத்தின் தற்போதைய நிலையைப் பற்றி தரமான கட்டுரை.
வார்த்தைப் பிரயோகங்களில் அடுக்குமொழி ரசிக்கத்தக்க அளவில் கையாண்டிருப்பது கூடுதல் ஈர்ப்பு.
தீர்வு காண வேண்டிய கட்டாயத்திற்கு அம்மா அரசு தள்ளப்பட்டுள்ளது.
சமூக அக்கறையான முதல் பதிவிற்கு வாழ்த்துகளும் வரவேற்பும்!
// ஒவ்வொரு சமுதாயத்திற்கு அவர்களை நேர்வழிப்படுத்த அந்தந்த காலகட்டங்களில் ஒரு நபி போதுமானதாக இருந்தது. இறுதித் தூதர் அவர்களின் வருகையால் அனைத்தும் முழுமை பெற்றுவிட்டது. இனியொரு தூதர் உலக இறுதிநாள் வரை வரப்போவது இல்லை. மனிதகுலத்துக்குரிய சட்டம் அல்குர்ஆனும் நபிவழியும் மட்டுமே நேர்வழி படுத்தும்.//
excellent
புதிய எழுத்தாளரின் புரட்சிகரமான ஆக்கம்.....எடுத்த கருவும் ..அதற்க்கு அவர் அணிவித்து இருக்கும் சுந்தர தமிழ் வார்த்தைகளும் கட்டுரையை கடைசிவரை ஒரு உத்வேகத்துடன் படிக்க தூண்டுகின்றது....வாழ்த்துக்கள் நண்பரே....மதுவிலக்கு மலரும் காலம் விரைவில் வரும்
அடுக்கு மொழியில் கட்டுரையாளர் அசத்தி உள்ளார்
Brother Shaik Mohideen....Well done. Your writings resembles you have more experiences in writing. Keep it up,
சிறந்தநைடை சிறப்பான சிந்தனைகள் வரவேறகிறேன்
வாழ்த்துகிறோம்
அல்ஹம்துலில்லாஹ்! கருத்திட்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!! ஜஷக்கல்லாஹ் கைர் சகோஸ்!
ஷேக் முகைத்தீன்
சிறந்தநைடை சிறப்பான சிந்தனைகள் வரவேறகிறேன்
வாழ்த்துகிறோம்
இன்றைய சூழலுக்கு ஏற்ற கட்டுரை.. ஜஸாக்கல்லாஹ்
Post a Comment