Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

Making Of "படிக்கட்டுகள்" 8

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2015 | , ,

"படிக்கட்டுகள்" தலைப்பு வைக்கவே எனக்கு 18 பட்டி பஞ்சாயத்தின் விருப்பம் தேவைப்பட்டது. 'முன்னேற்றம், புறப்படு , விழித்தெழு" என்று நிறைய பேர் எழுதி முடித்து விட்டார்கள். இனிமேலும்  இப்படி எழுதினால் போய்ச்சேருமா என்ற சந்தேகம்தான்.

இன்னும் சொல்லப்போனால் நம் ஊர் சார்ந்த மக்கள் இன்றைக்கு அதிக அளவில் வலைப்பூக்கள் நடத்துவதில் அசத்திக்கொண்டிருக்கிறார்கள். நமது வலைப்பூக்களின் தரத்தை இன்னும் சில நல்ல விசயங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு முன்னேற்றத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பது என் ஆசை. அதனால் நான் எழுத எடுத்த சப்ஜெக்ட் Personal Development.

எழுதிய பிறகு இருந்த வரவேற்பு என்னை அந்த தொடருடன் தொடர்பில் இருக்க வைத்தது. அந்த 24 தொடரிலும் நான் எழுதியது வெறும் தலைப்புதான்...இன்னும் ஆழமாக எழுத முடியும். ஆனால்  குழப்பம் வரும். இதை எல்லாம் ஒரு ஒர்க்ஷாப் ஷெசனில்  4 , 5 நாள் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்களே அதிகம்.

எனக்கும் அறிவுரை வழங்குவதில் உடன்பாடில்லை, If I can bring some awareness, that itself  can be worth my effort.

நம்மைச் சார்ந்த ஒருவன் நமக்கு தெரிந்த ஒருவன் இதுபோல் எழுத முடியும் என்று சிலர் நம்பத்தயாராக இல்லை. அது அவர்களின் ஜனநாயக உரிமையாதலால். அதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

நான் எழுத எனக்கு ஆதரவாக இருந்த விசயங்கள் நான் இதுவரை கற்றுக்கொண்ட சில பயிற்சிகள். அதில் சில ஒரு தீவுக்கு போய் சூரியன் உதிப்பதற்கு முன் செய்யும் சில தற்காப்பு கலையின் ஆரம்பக் கல்விகளும் / பயிற்சியும் அடங்கும். சில பயிற்சிகள் நமது தொழிலுக்கு நிச்சயம் உதவும். அவைகளில் மரம் ஏறத்தெரியாத எனக்கு ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடத்திலிருந்து செங்குத்தாக பூமியை நோக்கி முகம் வைத்து இறங்கும் பயிற்சியும் அடங்கும். [ஷேஃப்டி விசயங்கள் உண்டு].

இப்படியெல்லாம் செய்வதற்கும் வாழ்க்கையில்  முன்னேறுவதற்கும் எதுவும் தொடர்பு இருக்குமா என்று நான் அப்ரானியாக நினைத்தது உண்டு. உடலை சில தடைகளை கடக்க வைப்பதன் மூலம் வாழ்க்கையின் தடைகளை கடக்க பயிற்சிகள் கிடைக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது. இவை அனைத்தும் தொழிலில் team building  பயிற்சிகள்.

சமயங்களில் கமென்ட்ஸ் எழுதும் சகோதரர்களுக்கு பதில் எழுதும் நான் சாகுல் / இக்பால் / சபீர் ..இந்த மூவருக்கும் பதில் எழுதுவது இல்லை. காரணம் இந்த 3 பேரின் பெயரில் யாரையாவது நான் மைனஸ் செய்தால் என் வாழ்க்கையில் மிகப்பெரிய பகுதியை ஒழித்து எழுதியதாகிவிடும்

சாகுல்.. எல்லோருக்கும் கிடைப்பது அவரவர்கள் நட்புதான். எங்கள் இருவருக்கும் கிடைத்தது மூன்று தலைமுறை நட்பு.  எங்களின் இருவரின் பாட்டியிலிருந்து ஆரம்பித்த நட்பு, எங்கள் தந்தையினர் என்று ஆரம்பித்து இப்போது எங்கள் நட்பு என்று இருக்கிறது. சாகுல் சின்ன வயதிலிருந்தே தெரியும், ஆதலால் அவரின் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விசயமும் எனக்கு தெரிந்தே நடந்தது.   வயதில் என்னைவிட குறைந்தவராக இருந்தாலும்  புத்திக்கூர்மையில் எனக்கு தெரிந்த மிகப்பெரிய அனுபவசாலிளை மிஞ்சக்கூடியவர்.

இக்பால்... என் நெருங்கிய நண்பர்களில் இவனும் ஒருவன். அவனது வீட்டில் அவனுடைய பெற்றோர்கள் , கூடப்பிறந்தவர்கள் அனைவரும் எனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட அவனுக்கு கொடுக்க மாட்டார்கள்.  அந்த அளவுக்கு நான் அவன் வீட்டில் முக்கியமானவன். நான் சொல்லும் எந்த விசயத்தையும் விவாதித்து சரி / தவறு என்பதற்கு காரணம் சொல்லி சண்டை போட்டு எப்போதும் என் மீது உள்ள அன்பில் மாறாத குணம் உடையவன். சின்ன வயதில் விவாதிப்பது என்பது சண்டை போடுவதல்ல. கருத்து பரிமாற்றம் என உணர வைத்தவன். மார்க்க விசயங்களில் நமக்கு கிடைத்த ஆன்லைன் ரெஃபரன்ஸ் இவன்.  உண்மையைச்சொல்ல யாராக இருந்தாலும் பயப்படமாட்டான். சிங்கப்பூர் கவர்ன்மென்ட் மாதிரி..தப்புனா தப்புதான்.

சபீர்.... ஸ்கூல் படிப்பு / கல்லூரி என்று தொடர்ந்தாலும் ஏனோ மெடிக்கல் ரிப்போர்ட் கூட ஒன்றாக தெரியும் ஒற்றுமை எங்களிடம். நண்பனாக இருப்பது என்பது வேறு. நண்பனாகவே ஆகிப்போவது என்பது வேறு. நாங்கள் 2 வது ரகம். எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு = நட்பு என்பதின் அடையாளங்கள் நாங்கள். எங்கள் சின்னம்மாவின் [சபீரின் தாயார்] செல்லப்பிள்ளை நான். இரண்டு பேரும் ஒன்றாக கால்பந்தாட்டத்தில் அடிபட்டு வர எனக்கு முதலில் மருந்து கொடுத்த தாய். நிறைய பேர் நினைப்பது நாங்கள் இருவரும் சகோதரர்கள்... எனக்கு அதில் உடன்பாடில்லை.. நண்பனாய் இருப்பதில் அதிகம் சுதந்திரம் இருக்கிறது. என் தவறுகளை இவன் கண்டித்தால் மட்டும் கேட்டுக்கொள்வேன் சின்ன வயது தொடக்கம். என் வாழ்க்கையில் முக்கிய தருணங்கள் இவன் முடிவுக்காக காத்திருந்திருக்கிறது, அன்றும் இன்றும் எப்போதும்.

படிக்கட்டுகள் எழுத நிறைய நெறியாளுகை செய்திருக்கிறான். கால ஒட்டம் பல விசயங்களை மாற்றிப் போட்டிருக்கிறது. நாங்கள் இருவரும் அப்படியேதான் இன்னும் மாறாமல்.

படிக்கட்டுகள் எழுத முக்கிய காரணங்களில் ஒன்று , நம்மைச் சார்தவர்கள் யாரும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்ற என் பாசிட்டிவ் அப்ரோச்தான். பெரும்பாலும் எழுதும்போது மற்றவர்களை திறமையற்றவர்களாகவும் , ஒன்றுக்கும் உதவாதவர்களாகவும் அட்வைஸ் அள்ளிக்கொட்டும் எந்திரமாக இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம் பகுதியை சார்ந்த அனைவரும் மிகவும் கடின உழைப்பாளிகள். சரியான வாய்ப்புகள் , வழிகாட்டிகள் இல்லாததும் அவர்களின் பின் தங்கிய நிலைக்கு காரணம்.  May be எனக்கு கிடைத்த அந்த exposure மற்றவர்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதை ஏன் நாம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று முதல் படிக்கட்டுகள் எழுதிய உடன் சகோதரர்கள் அபு இப்ராஹிம் / தாஜூதீன் இருவரும் தந்த ஆர்வம் தொடராக வெளிவர உதவியாக இருந்தது.   அபு இப்ராஹிமின் அர்ப்பணிப்பு உணர்வு போற்றத்தக்கது. வேலையிடத்தில் உள்ள டென்சன், மற்றும் பல வேலைகளுக்கிடையே தனது அதிரை நிருபருக்கான வேலையை தள்ளிப்போடாமல் செய்தது மிகவும் பாராட்டக்கூடியது.  தம்பி தாஜூதீன் அவர்களின் தன்னடக்கமான பண்பு போற்றத்தக்கது.

இதை எழுதுவதற்கு நான் எந்த புத்தகங்களையும் ரெஃபரன்சாக எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் அது நம் வழக்கம் / இனம் / மொழி சார்ந்த விசயங்களுடன் ஒத்துப்போகாது.

வெள்ளைக்காரர்களும், வெளிநாட்டினருக்கு மட்டும்தான் இதுபோன்ற விசயங்களை தொட்டு எழுத முடியும் என்ற விசயத்தில் உண்மைகள் இல்லை.
 
இந்திய தேசம் இதுவரை கணக்கில் அடங்காத ஞானிகளையும் , அறிவாளிகளையும் இதுவரை கொடுத்திருக்கிறது. ஆசியாவில் பிறந்தவர்கள் சொல்லாத பிசினஸ் சைக்காலஜியை மற்றவர்கள் சொல்லியிருப்பார்களா என்பதில் சந்தேகம்தான். மற்றும் வெள்ளைக்காரர்களின் அதிகமான அறிவுரைகள் ஒரு rat race போலத்தான் இருக்கும். ஜெயித்த பிறகு ஜீவன் செத்துப்போயிருக்கும்.

சம்பாத்யம் புருச லட்சனம்,” எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும் மாதம் ஒரு வருமானம் இருக்க வேண்டும் உனக்கு" என்று சொன்ன  மர்ஹூம் சமது மாமா அவர்கள்.   [ இப்ராஹிம் அன்சாரி அண்ணனின் தந்தை ] ,  எந்த சுழ்நிலை வந்தாலும் தன்மானத்தை ஒரு சதவீதம் கூட விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து காட்டு என்று எனக்கு அறிவுரை தந்த எங்கள் முகம்மது பாரூக் மாமா [சாகுலின் தந்தை] ,ஆம்பளையா பொறந்தா ஒரு 24 பேருக்கு உணவு கொடுக்கும் அளவுக்கு சம்பாதிக்க வேண்டும், அதே சமயம் அப்படி உணவளிக்கவும் வேண்டும் என்று சொன்ன எங்கள்  மாமா  [மர்ஹூம்] முஹம்மது யூனுஸ் அவர்கள். [சபீரின் தாய்மாமா].   உழைக்க  துணிஞ்சவனுக்கு கஷ்டம் ரொம்ப நாள் இருக்காதுடா என்று சொன்ன என் தாய். "மேயப்போற மாட்டுக்கு கொம்புலெ எதுக்கு புல்லு??" என கேட்ட படிக்காத என் பாட்டி [தந்தையின் தாய்]

இவர்கள் யாரும் எந்த யுனிவர்சிட்டியிலும் படிக்கவில்லை.இது போன்ற காகிதக்கல்வி படிக்காத மனிதர்களிடம் அதிகம் நடைமுறை அறிவை கற்றுக்கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை.
 
இதுவரை இந்த தொடர் எழுத எனக்கு கமென்ட்ஸ்களின் வழி உற்சாகம் தந்த அனைவருக்கும் நன்றி.

அவர்களின் பெயரை இங்கு குறிப்பிடுகிறேன். 

இப்ராஹிம் அன்சாரி அண்ணன், ஜமீல் நானா, அதிரை அஹ்மது காக்கா ,  அண்ணன் N.A.S, [சமயங்களில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கும் எல்லா ஸ்டேசனும் எடுக்கும் அறிவுஜீவி],   சகோதரர் கிரவுன் [சமயங்களில் டெலிபோனில் அழைத்துபேசுவார்] தம்பி யாசிர் [ஒரு அத்தியாயம் படித்து விட்டு டெலிபோனில் அழைத்து பேசினார்] சகோதரர் கவிஞர் அபுல்கலாம் [மறவாமல் எல்லா அத்யாயங்களிலும் இவரின் கவிதையான கருத்து இருக்கும் ]  

என் பாசமிகு சகோதரர்கள் நூருல் அமீன்.  அப்துல்வாஹித் அண்ணாவியார். அப்துக் ராஜிக், அப்துல் மாலிக் , எம் ஹெச் ஜஹபர் சாதிக், ZAEISA , Ara Ala , Naina [ AlKhobar ] B. Ahamed Ameen, Sister Ameena.A,  Abu Bakar [ amazan ] Abdul Malik , Alaudeen S. uroovaasi ,  Ahamed Irshad, MSM Naina Mohamed [இவரின் எழுத்துக்கு நான் ரசிகன் ],  புதுசுரபி,  LMS AbooBakar , Mohamed Buhari, SS Syed Ibrahim.A [ Dubai], அன்புடன் புகாரி , sekkana M.Nijam,  Hidaayathullah,  Adirai N.Safath,  Noor Mohamed [ My senior in school ] , Ashik Ahamed , N. fathhudeen, ஜாகிர் ஹுசைன் , நட்புடன் ஜமால் .... மற்றும் எனக்கு கல்வி தந்த SKM ஹாஜா முஹைதீன் சார் , வாவன்னா சார் , முஹம்மது அலியார் சார், திரு சீனிவாசன் சார் இன்னும் யாரையாவது எழுதாமல் விட்டிருப்பேன்.. மறதிதான்…. மன்னிக்கவும்.

 படிக்கட்டுகள் இது போன்ற நிறைய பேருடன் என்னை அழைத்துச்சென்று அன்பையும், சகோதரத்துவத்தையும், நட்பையும் எனக்கு பரிசாக தந்திருக்கிறது.

Wish You All the Best,  இறைவன் உதவியால் மீண்டும் சந்திப்போம்.

ZAKIR HUSSAIN

8 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

நீகட்டிய'படிக்கட்டு'களுக்கு அதை கட்ட ஆர்வ மூட்டியவர்களுக்கும் பாராட்டிபின்னூட்டமிட்டவர்களுக்கும்உன்வாழ்க்கைசெம்மையுறஉனக்கு போதனைகள்புரிந்தவர்களுக்கும் நீ நன்றி கூறியதை பார்த்ததும்' நீ ஒரு இந்தியன்தானா?'என்ற ஒருவினா என்னுள் எழுந்தது! காரணம் நீயே என்னிடம்ஒருமுறைசொன்னாய்''என்னஉதவிசெய்தாலும்இந்தியர்கள் சொல்ல மறந்த வார்த்தை'நன்றி/Thank you!. நன்றி பட்டியலில் என்னையும் இணைத்ததற்குநன்றி.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

என் வாப்பா அவர்களை நினைவு கூர்ந்ததற்கு நன்றி. எனக்குத் தெரிந்து உணர்ச்சிகரமான் இப்படி ஒரு நிறைவுரையை யாருமே எழுதியதில்லை.

நமக்குள் இருக்கும் நான்கு தலைமுறைகளான உறவுகளில் இந்த எழுத்துக்கள் ஒரு புதிய பரிணாமம்.

உனக்கு எனது வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

Shameed said...

//நம்மைச் சார்ந்த ஒருவன் நமக்கு தெரிந்த ஒருவன் இதுபோல் எழுத முடியும் என்று சிலர் நம்பத்தயாராக இல்லை.//

நீங்கள் சொல்லவரும் செய்தி அவங்களுக்கு "செண்டேரலே" அதான் அவங்க அப்படியெல்லாம் பேசுறாங்க !

அப்துல்மாலிக் said...

கூடியவிரைவில் “படிக்கட்டுகள்” புத்தகவடியில் கிடைக்க விரும்புகிறேன்.. மிக்க நன்றி காக்கா

Yasir said...

//என் வாழ்க்கையில் முக்கிய தருணங்கள் இவன் முடிவுக்காக காத்திருந்திருக்கிறது, அன்றும் இன்றும் எப்போதும்./// ஏங்க வைத்த வரிகள்....நன்றி காக்கா

Unknown said...

உங்களது ஆக்கமும் ஏக்கமும் சுப்பர்! உயிர் உள்ள வரிகள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

இன்னும் வேண்டும் உங்கள் ஊக்க கட்டுரை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு