Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஃபோட்டோ ஃபெஸ்டிவல் ! - பேசும் படம் தொடர்கிறது... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2015 | , , , , ,


நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அப்படியே ஊர்பக்கம் நெனப்பை சுற்ற விட்டேன். அட ! நம்ம தலைப்பு ! 'ஃபோட்டோ ஃபெஸ்டிவல்' ன்னு வச்சுடலாமேன்னு முடிவு செய்துட்டேங்க. இங்கே ஆட்டம் பாட்டம் என்று எதுவும் இருக்காது உத்திரவாதம் தருகிறேன். ஆனால் பின்னூட்டம் இருக்கும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.


எப்போது ஊருக்கு போனாலும் ஒரு பசுமை காட்சியை சுட்டு அதிரை நிருபருக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கில் சுட்டதுதான் இந்த பசுமைக் காட்சியமைப்பு. 


மனிதனின் சாதனைகளில் இதுவும் ஒன்று. பிரமாண்ட மிருகத்தை பிடித்து வந்து பிச்சை எடுக்க பழக்கிக் கொடுத்து மட்டுமல்லாமல் அதற்கு சமய சாயமும் பூசி விட்டார்கள்.
 

MSM 'மின்' ஆதங்கத்தை போக்கவே இந்த சிட்டுக்குருவி போஸ்.


அந்தக்காலத்து டெக்னாலஜி இந்தக்காலம் வரை தாக்கு 'பிடி'க்கின்றது  இன்னும் ஆச்சர்யமே !


இந்த பாம்பன் பாலத்தில் ரயில் செல்வதை பார்த்தால் அண்ணன் NAS அவர்களின் நினைவு வரும் காரணம் இந்த பாலத்தில் ஓடும் இரயிலில் நான்  முதன்  முதலாக அண்ணன் NAS கூட பயணம் செய்தது (ஆனால் இந்த ரயில் அல்ல).


நாங்கள் மீனுக்கு வலை வீசுகின்றோம் எங்களுக்கு சிங்கள கடற்படை வலை வீசுகின்றது (உலகில் இந்திய ராணுவம் நான்காவது இடத்தில் இருக்காமே உண்மையா ?).


மாதத்தில் ஒரு நாள் இது போன்ற இடத்தில் ஒரு பொழுதை தனிமையில் கழிக்க வேண்டும் (மொபைல் போன் இல்லாமல் )


பூனே முன்பெல்லாம் "பசுமை" பள்ளத்தாக்காக இருக்கும். ஆனால், இப்போது வெறும் பள்ளத்தாக்காய் இருக்கிறது.


நான் எந்த கட்சியிலேயும் இல்லீங்க, இது எதார்த்தமா எடுத்த படமுங்கோ !


பலா பழத்தில் "ஈ மொய்ப்பது போல் என்ற பழமொழியை மாற்றி பலா பழத்தில் எறும்பு மொய்ப்பது போல் என்று மாற்றிவிட வேண்டியதுதான் இதுக்கப்புறம். 

Sஹமீது

4 Responses So Far:

ஜாகிர் ஹீசைன் said...

அழகான கண்னுக்குக் குளிர்ச்சியான படங்கள்

"MSM 'மின்' ஆதங்கத்தை போக்கவே இந்த சிட்டுக்குருவி போஸ்."
இது சிட்டுக்குருவி இல்லையே

sabeer.abushahruk said...

ஹமீது,

அழகான, குளிர்ச்சியான, பழைமையானவற்றின் தத்ரூபப் புகைப்படங்களின் அணிவகுப்பு மனத்தை அள்ளுகின்றன.

(கூட கூட்டிப்போகாவிட்டாலும் :-( இப்டி காட்டியாவது கூல் பண்ணியதற்கு நன்றி)

Ebrahim Ansari said...

அதான் அதேதான்.


(கூட கூட்டிப்போகாவிட்டாலும் :-( இப்டி காட்டியாவது கூல் பண்ணியதற்கு நன்றி)

இப்னு அப்துல் ரஜாக் said...

ஏகன் படைத்த யானை
பரிதாபமாக
இணை வைப்பு சின்னங்களுடன்...

ஆனால்

மஹ்ஷரில் அது சாட்சி சொல்லும்
அந்த இணை வைப்பாளர்கள் பற்றி

Nice and thinkable photos

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு