அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.
''உங்களின் (தொழுகை) அணிவகுப்பை சமப்படுத்துங்கள். (இல்லையெனில்) உங்கள் முகங்களுக்கிடையே அல்லாஹ் வேறுபாட்டை (பிரிவை) உண்டாக்கி விடுவான்'' என்று நபி(ஸல்) கூற நான் நான் கேட்டேன். (அறிவிப்பவர்: (அபூஅப்துல்லா என்கிற) நுஹ்மான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).
''நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ உங்களின் தோற்றங்களையோ பார்க்கமாட்டான். எனினும் உங்களின் இதயங்களையும் உங்களின் செயல்களையும் பார்ப்பான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்:7 )
''ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரான் ஆவான். அவர் மற்றவருக்கு அநீதி இழைக்க வேண்டாம். அவரை ஆதரவற்றவராக விட்டு விட வேண்டாம். தன் சகோதரனின் தேவையை ஒருவன் நிறைவேற்றுபவனாக இருந்தால், அவனது தேவையில் (உதவிட) அல்லாஹ் இருப்பான். ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை (இவ்வுலகில்) ஒருவன் நீக்கி வைத்தால், மறுமையில் பல கஷ்டங்களில், ஒரு கஷ்டத்தை அவனை விட்டும் அல்லாஹ் நீக்கி வைப்பான். ஒரு முஸ்லிமின் குறையை (இவ்வுலகில்) மறைத்தால், மறுமை நாளில், அல்லாஹ் அவனது குறையை மறைப்பான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 233)
''மரணித்த நபரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை: குடும்பம், அவனது சொத்து, அவனது செயல் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று தங்கி விடுகிறது. (அதாவது) அவனது குடும்பமும் அவனது சொத்தும் திரும்பி விடுகிறது. அவனது செயல் (அவனுடன்) தங்கி விடுகிறது. '' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).
''உலகத்தின் கஷ்டங்களில் ஒரு கஷ்டத்தை ஒரு மூஃமினை விட்டும் ஒருவன் நீக்கினால் மறுமை நாளின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். கஷ்டப்படுபவனுக்கு (உதவி செய்து) இலகுவை ஏற்படுத்தினால் அவருக்கு இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் (உதவி செய்து) இலகுவாக்குவான். முஸ்லிமின் குறையை ஒருவர் மறைத்தால், இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவரின்(குறையை) மறைப்பான். ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவி செய்பவனாக இருக்கும்வரை அந்த அடியானுக்கு உதவி செய்பவனாக அல்லாஹ் இருப்பான். கல்வியைத் தேடியவனாக ஒரு வழியில் நடந்தால், அவருக்கு சொர்க்கத்திற்குச் செல்லும் வழியாக அதை அல்லாஹ் இலேசாக்குவான்.'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)அவர்கள்(முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்:245)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
அலாவுதீன் S.
1 Responses So Far:
அம்சம்
Post a Comment