நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கன்னிப்பொழுது...! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், செப்டம்பர் 29, 2015 | , ,
பெரு வெடிப்பின்  சீற்றம்
குறைந்து  அமைதி தவழ்ந்த
அந்த புதிய பொழுதுகளின்  போது
தன்  ஆளுமையை  அழுத்தமாக
அனைத்திலும் பதித்தது சூரியன்...!
ஆனால்  ஒன்றை  தவிர...
அன்றுதான்  அதற்கும்
சூரியனுக்கும்  முதல் பரிச்சியம் !
அது ?....

கோபம்  தனந்த  சூரியன்
உக்கிரமாக  உதித்தது
அது மட்டும்
பணியவில்லை ! திமிறியது !
 சூரியனின் உக்கிரம் உச்சத்தை  தொட
 அது  கருகியதே  அன்றி   தன்
இயல்பை  தொலைக்கவில்லை !

சூரியன்  மேகத்தை
தூதிற்கு  அழைத்தது
மேகத்தினூடே  மெலிதாய்
நுழைந்து  தன்  ஜாலத்தை
அதனிடம்  காட்டியது !
அந்தோ ! பரிதாபம்  அதற்கும்
மயங்கவில்லை ! அதன்
இயல்பை தொலைக்கவில்லை  !

தளராத சூரியன்
துணைக்கு  மரம்
செடிகளின் இலைகளை
 இணைத்துக்கொண்டு
அதன் மீது
மென்மையாய்  படர்ந்தது !
ஆவலாய்  சூரியன்  காத்திருக்க
அதுவோ
அன்புடன்  நிராகரித்தது !

மனம் வெதும்பி  சூரியன்
நகர  ஆரம்பிக்க
உடன் பிறப்பான
நிலா   சோகத்தின்  காரணம்   விசாரித்தது !
சூரியன்  தன்  முயற்சியை
எடுத்துரைக்க   ஆவலாய்
நிலா  கேட்டது !

நிலா  சூரியனிடம்  சொன்னது
நீ சென்று வா
நான்  உன் அன்பை அதனிடம்
சேர்கிறேன்  என  கூறி
சூரியனின்  ஒளி  எனும்
அன்பை பெற்று
புதிதாய்  ஒரு
வெண்கலப்  பொழுதை
பாய்ச்சியது
அட்டகாசமாய்
மொட்டு  வெடித்து
சிதறி  இதழ்களை
விரித்து  சிரித்தது
நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera)
என்ற தாமரை !!!!!!!

-Harmys

7 Responses So Far:

Unknown சொன்னது…

புதிய கற்பனை, புதுக்.....'கவிதை'யில்!
எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும்.

Ebrahim Ansari சொன்னது…

சிறந்த கற்பனைக் கவிதை. பாராட்டுவோம்.

ஒரு சந்தேகம்.

சூரியனைக் கண்ட தாமரை போல் மலர்ந்தது என்ற சொல்வழக்கும்
"சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா "என்று தொடங்கும் திரைப் பாடலும்
சூரியன் - தாமரை
சந்திரன் -அல்லி - என்று இணைகளாகக் கூறுகின்றனவே .

இதுபற்றி யாராவது விளக்கம் தந்தால் நலமாக இருக்கும்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

நிலவின் முகம் கண்டு தாமரை மலர்வதில்லை! அல்லிக்கு நிலவையே அல்லா ஜோடிவைத்தான்!

sabeer.abushahruk சொன்னது…

அர்த்தத்தைவிட அழகு விஞ்சும் கவிதை.

sabeer.abushahruk சொன்னது…

காக்கா,

அது
அர்ரேஞ்ட் மேரேஜ்

கதிரவன்
கமலத்தை விட்டுவிட்டு
காட்டல்லியுடன் கலந்தால்
கள்ளக் காதல் என்றாகிவிடும்

ஏற்கனவே
சூரியகாந்தி சக்களத்தியின்
சாடைப் பார்வையில்
சூரியன் சிக்கிவிடுமோ
என்ற அச்சம் வேறு.

கயவர்கள்
கட்சி சின்னமாக்கிவிட்டாலும்
கமலமே கம்பீரம்;

அல்லிமீதும்
எனக்கு
அரைப் பார்வையுண்டு
நிலா வெகுண்டு
முரைக்காதவரை!

Ebrahim Ansari சொன்னது…

தம்பி சபீர் அவர்களின் விளக்கம் ஏற்கப்பட்டது. ஜமாயுங்க அப்துல் ரஹ்மான்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு