Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உலக பெண்கள் - பெண்களின் தினம்? 4

அதிரைநிருபர் பதிப்பகம் | March 08, 2015 | , ,

பெண்கள் தினம் உருவானது எப்படி?

ஆண்டுதோறும், மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பலவகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதன் முதலில் 1909ல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைபிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்ரவரி 28ம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

பிறகு, கோபன்ஹேகனில் 1910ல் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாக பேசப்பட்டது. அப்போது, சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

இந்த வேண்டுகோளின்படி, பல நாடுகள் 1911ல் மீண்டும் விவாதித்தன. முதன் முறையாக, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 19ம் தேதி கொண்டாட முடிவு செய்யப் பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

அதன்பின், மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் 1913ல் ஒன்று கூடி, மார்ச் 8ம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

நன்றி: நக்கீரன் (மார்ச்-2011)

இன்று உலக பெண்கள் தினமா இந்த பெண்கள் தினம்?

பெண்கள் தினம் என்று ஒரு நாளை குறிவைத்து பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்துவிட்டதாக மேதாவி(?) மேற்கத்தியவாதிகளும், பெண்ணுரிமை பாதுகாவலர்கள் (?) என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் இந்திய அறிவுஜீவிகள்(?) என்று நம்மிடையே நாடகமாடுகிறார்கள் என்பது மட்டுமே நிதர்சனம்.

முழுவதும் ஆண்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருட்களின் விளம்பரங்கள் அனைத்திலும் பெண்களின் இனக்கவர்ச்சி அவசியம் என்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் பகட்டு வெளிச்சத்தை நோக்கி விட்டில் பூச்சிகளாக விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் போலி நாகரீக பெண்களை நினைத்து வேதனைப்படுவதா? சிரிப்பதா?

டென்னிஸ் விராங்கனையின் ஆடைக்கு வக்காலத்து வாங்கும் ஆடவர்கள் வைத்திருக்கும் நிரந்தரக் காரணம் “ஆடையைப் பார்க்காதே; பெண் விளையாடும் விளையாட்டை பார்” என்பது. பெண்கள் பெண்களாக வாழும்போதுதான் அவர்கள் முழு உரிமை பெற்றவர்களாக இருக்க முடியும்.

நான் எப்படியும் இருப்பேன் என்று கலாச்சார சீர்க்கேட்டால் அறைகுறை அடையுடன்  வலம் வருபவர்கள், தனக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய கண்ணியம் என்ற தனது உரிமையை இழந்தவர்களாகவே நிற்கிறார்கள். அப்படியே கிடைக்கும் போலி உரிமை தான் கிழவியானாலும் தன் இளம் வயது அறைகுறை ஆடை புகைப்படங்கள் இன்றைய வளர்ச்சியடைந்த தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் தன் பேரன் மற்றும் கொள்ளுப்பேரன்மார்களின் காம உணர்ச்சி தூண்டுதலுக்கு அவ்வகை புகைப்படங்கள் காரணமாகி விடப்போவது என்பது தான் பெண்ணுரிமையா?

இன்றைய நிலை, பெண்களை பாலியல் கொடுமை செய்து அதை மொபைல் போனில் படங்கள் எடுத்து ஆயிரக்கணக்கில் இணையத்தில் காணொளியை இலவசமாகவும், காசுக்காவும் வெளியிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் வக்கிரபுத்தி கொண்ட பொறம்போக்கு அநாகரீக மிருகங்கள். இதை பற்றி எழுதவோ, குரல் எழுப்பவோ,  தடுக்கவோ முடியவில்லையே பெண் சுதந்திரம் என்று பேசும் அறிஜீவிகளாலேயே. கூகுல் குதிரை போன்ற தேடல் தளங்களும் தட்டியவுடன் உடனே வாரி வழங்குகிறது.

உலகிலேயே பெண் பாலியல் கொடுமைகளுக்கு பதிக்கப்படும் சமுதாயங்களில் முஸ்லீம் சமுதாயம் மிக மிக மிக குறைவே. ஏதாவது ஒரு நாள் இந்தியாவில் பல பகுதிகளின் பாலியல் கொடுமைகள்  நடைப்பெறவில்லை என்ற செய்தி வந்தால் அது அன்றைய தினத்தின் மிக ஆச்சரியமான செய்தியாகவே இருக்கும். இந்த லட்சனத்தில் பெண்கள் சாதனை பட்டியல் என்று ஒரே ஒரு நாளில் மட்டும் தங்களின் செய்தி ஊடகங்களின் புகழ்பாடி செய்திகள் வெளியிட்டு பெண்களிடம் நாடகமாடி காலாச்சார சீரழிவை தினிக்கிறார்கள் மேற்கத்திய போலி நாகரீக மேதாவிகளின் புரோகிதர்கள் உலகெங்கும் ஏன் அதிகம் நம் நாட்டிலும்.

இஸ்லாத்தில் பெண்களுக்கு சுதந்திரமில்லை, உரிமையில்லை, இஸ்லாம் பெண்ணடிமையை தூண்டுகிறது என்றெல்லாம் இன்று புலம்பி பிழைப்பு நடத்திவரும் மேதாவிகளுக்கு பதில் தரும் விதமாக, உலக புகழ் பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் சகோதரர் காலித் யாஸீன் அவர்கள் ஆற்றிய செற்பொழிவுகளிலிருந்து ஒரு சில பகுதியை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம். (இந்த காணொளி நம் அதிரைநிருபரில் ஏற்கனவே பதிந்திருந்தாலும், மீண்டும் உங்கள் பார்வைக்கு சூழல் கருதி மீள்பதிவு செய்கிறோம்.)



இச்சொற்பொழிவு ஆங்கிலத்தில் இருந்தாலும், சாதாரன ஆங்கில அறிவு உள்ளவர்களுக்கும் புரியும்படி உள்ளது. இறைவனின் மார்க்கமான இஸ்லாம் மட்டும் தான் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் மார்க்கம் என்பதை மேற்கத்திய கலாச்சார மேதாவிகள் புரிந்துக்கொள்ளட்டும்.

போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு, இஸ்லாமிய வாழ்வியலின் வசந்தம், உலக மனிதர்கள் அனைவருக்குமாக அருளப்பட்ட  திருக்குர்ஆனையும், ரஸூல்(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரமான ஹதீஸ்களையும் சற்றே நடுநிலையான, நியாயமான பார்வையுடன் சிந்தித்து பார்த்தார்கள் என்றால் 1429 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் பெண்ணுரிமையை நிறைவாக வழங்கியுள்ளது என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டு அதனைப் பின்பற்றவும் செய்வார்கள்.

இஸ்லாத்தினைக் குறை கூற முற்படும் முன்னர் தங்களின் வழிபாட்டு சடங்குகளோ, மதங்களோ பெண்ணுரிமை பற்றி என்ன போதிக்கின்றன என்பதை இவர்கள் ஒன்றுக்கு பலமுறை முறை நினைவு படுத்திக்கொண்டு இஸ்லாத்தில் பெண்களுக்குரிய உரிமைகள் யாவை? என்று கணக்கெடுத்துப் பார்த்தாரேயானால் அவர்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்திடுவர்.

பிறப்பதில் உள்ள உரிமை, அறிவைப் பெருக்குவதில் உரிமை, கண்ணியம் கொடுக்கும் ஹிஜாப், திருணத்தில் உரிமை, திருமண விலக்கிலும் இஸ்லாம் வழங்கியுள்ள உரிமை, வாரிசு உரிமை என்று எல்லாவற்றிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ள ஒரே மார்க்கம் இனிய இஸ்லாமிய மார்க்கம்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "மனிதர்களிலேயே நான் அதிகம் கண்ணியப்படுத்துவதற்குரிய நபர் யார்?" என்று மூன்று முறை திரும்பத்திரும்ப கேட்டும் நபியவர்கள் ஒவ்வொரு முறையும் "உனது தாய்தான்!" என்றும் நான்காவது முறையாகத்தான் தந்தையைக் குறிப்பிட்டார்கள் எனும் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாமிய பெண்கள் தங்கள் வீட்டை ஆட்சி செய்து ஒவ்வொரு நாளையும் கொண்டாடி சந்தோசமாக இருந்து வருகிறார்கள். இஸ்லாத்தில் பெண்ணுரிமை பற்றி அறிய வேண்டுமா? நடிகை குஸ்பு, எழுத்தாளர்(?) தஸ்லீமா நஸ்ரின், சல்மான் ருஸ்டி (பல வருடங்களாக இவர்களை பற்றியே பேசுறவய்ங்க, வேற ஆளுங்க இன்னும் கிடைக்கல போல) போன்ற பெயர் தாங்கிகளிடம் இன்னும் ஏன் மாரடிக்கிறீர்கள், எங்கே பெண்ணுரிமை சிறைப்படுத்தப்படுகிறது என்று கை நீட்டுகிறீகளோ அங்கே சென்று இஸ்லாமிய நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து வரும் இஸ்லாமிய பெண்களிடம் கேட்டுப்பாருங்கள் தெளிவான பதிலும் கிடைக்கும் உங்கள் உள்ளத்தை உருக்கும் மார்க்கமும் உள்புகும் உங்கள் இதயங்களிலும் இடம் தேடி இன்ஷா அல்லாஹ்.

(தகவல்கள் சேகரிக்கும்போது உதவிய இஸ்லாம்கல்வி மற்றும் சத்தியமார்க்கம்  என்ற இரண்டு இணையதளங்களுக்கும் மிக்க நன்றி)

அதிரைநிருபர் பதிப்பகம்

4 Responses So Far:

Ahamed Ameen said...

Assalamu Alaikkum

Women's day is a kind of cheating the whole world's women. Feminism and crying for women's right without showing strong principles based living model (like Islamic way of living) are just currupting the women's dignity without their consious awareness that they are being cheated and abused almost everywhere.

May Almighty Allah protect us all.

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai.

Ebrahim Ansari said...

இரண்டாம் , மூன்றாம் வகுப்பில் படிக்கும் போதே பெண்களைத் ஆணாதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் நிலைகளைப் பாடங்கள்- பாடல்கள் சொல்லித்தருகின்றன.

ஒரு சிறுமி பாடுவதாக இரண்டாம் வகுப்புப் பாடல் இது :-

“தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அண்ணனுக்கு மூணு
எனக்கு ரெண்டு
அம்மாவுக்கு ஒண்ணு “ என்று இட ஒதுக்கீடு அடுப்பங்கரையிலேயே பெண்களுக்கான பாகுபாட்டை ஆரம்பித்துவிட்டது.

ஒளவையார் பெண்ணாக இருந்தும் கூட “ உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு “ என்றார்.

பெண்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்து அவர்களை ஒரு உணர்வுள்ளவர்களாக உலகுக்கு அடையாளம் காட்டிய போக்கு இஸ்லாம் தழைத்த பிறகே ஏற்பட்டது. இன்றும் உலகெங்கும் அணியணியாக பெண்கள் இஸ்லாத்தைத் தழுவி வருவதே இதற்கு சான்று.

வரலாற்றின் பன்முகங்களைப் பார்ப்போமானால் , இஸ்லாம் தோன்றித் தழைக்கும் முன் உலகம் பெண்களை எப்படி நடத்தியது என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்.

sabeer.abushahruk said...

//பெண்களை பாலியல் கொடுமை செய்து அதை மொபைல் போனில் படங்கள் எடுத்து ஆயிரக்கணக்கில் இணையத்தில் காணொளியை இலவசமாகவும், காசுக்காவும் வெளியிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் வக்கிரபுத்தி கொண்ட பொறம்போக்கு அநாகரீக மிருகங்கள். //

நல்ல செருப்படி! (இதெல்லாம் இரும்புக்கரம் கொண்டு அடக்கும்வரை மகளிர் தினம் ஒரு கண் துடைப்பு)

sheikdawoodmohamedfarook said...

ஆசிரமங்களில்இளம்அழகிகளை சேர்த்து வைத்து பஜனைநடத்தும்நாட்டுக்குபெண்கள்தினம்தேவைஇல்லை. நைட்டேபோதும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு