(*)உழவுக்கு மாடு
ஒத்துழைக்க மறுத்தால்
எந்திரம் கொண்டு
எம் நிலம் உழுவோம்.
(*)வான் வழங்காது
வஞ்சகம் செய்திட்டால்
கேணி நீரிறைத்து
காணி நனைப்போம்.
(*)பொல்லாத பூச்சிகளின்
தொல்லை ஒழிப்பதற்கு
கொல்லி மருந்தடித்து
கொஞ்சம் காத்திட்டோம்.
(*)வளறும் பயிர்மேய
வரும் கால்நடைகள்,
தீண்ட விடாது
தடுக்குமெம் கைத்தடி.
(*)அறுத்து கதிரடித்து
விலைநெல் முக்காலும்
விளைநெல் காலுமென
வீட்டினுல் பிரித்துவைத்தோம்.
(*)கையகப் படுத்திய
கதிர்தந்த நெல்மணிகள்
பத்தாயம் ஒன்றில்
பத்திரமாய் எங்களிடம்.
(*)சர்க்கார் கண்படாது
சாமர்த்தியமாய் எம்நிலத்தை
எப்படி மடித்து
எதற்குள் மறைப்பதென்னும்
சூட்சுமம் தெரிந்தால்
சொல்லுங்கள் எம்மக்காள் !
ஆட்சியில் இருப்போர்-நிலத்தை
அபகரிக்கும் முன்னம்!
அதிரை என்.ஷஃபாத்
3 Responses So Far:
தற்கால அரசியல் விபரீதங்களைப் பாதிக்கப்பட்டவர்கள் நிலையிலிருந்து அனுகும் தம்பி ஷஃபாத்தின் கவிதைகளில் கூர்மையான பொருள் நிலவும்; இந்தக் கவிதையில் இன்னும் கூராகவே இருக்கிறது.
நிலம் கையகப் படுத்துவோர் ஆளும் நாட்டைவிட்டு விலகி வாழும் ஷஃபாத்துக்கு மொழி கையகப்படுத்துதல் இலகுவாகவே வருகிறது.
மாஷா அல்லாஹ்!
நல்ல கவிதை; நயமான விதை!
என்ன நினைக்கிறோமோ அதனையே கவிதையாக்குகிறாய் - தம்பி
எங்கள் ஆசையும், நீதான் முதல்வராக வேண்டும் (கவிதையின் முதல்வரே)...
தரிசு எல்லாம் அவர்களாக எடுத்துக் கொண்ட பரிசு
விளை நிலைங்கள் பறிப்போ திட்டம் போட்ட சட்டம் !
வாசித்த கண்களுக்கும், வார்த்தைகள் தந்த அன்பு இதயங்களுக்கும் நன்றி ! ஜஜாகுமுல்லாஹ் கைரன் !
Post a Comment