Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள் - 9 3

அதிரைநிருபர் பதிப்பகம் | April 29, 2015 | , ,

எந்த நம்பருக்கு போட்டீங்க?...

இது இப்போதைக்கு அடிக்கடி மொபைல் ஃபோன் நம்பர் மாற்றுபவர்களின் கேள்வி. இது ஏதொ சின்ன பசங்க கேட்டால் பெரிய விசயமில்லை. ஒரு தொழிலில் இருப்பவர்கள் அடிக்கடி நம்பர் மாற்றுவது ' என்னமோ கள்ள வேலை செய்றான்யா" என உங்களிடம் பேசிவிட்டு 'சிகப்புபொத்தானை" அழுத்துபவர்கள் சொல்வது சிங்கப்பூர்,மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு கூட கேட்பது எப்படி உங்கள் காதில் விழாமல் போனது?.

ஏர்செல்லெ இவ்ளதான், ஏர்டெல்லெ 100 SMS  ஃப்ரீயாமே என மாதத்துக்கு ஒரு நம்பர் மாற்றும் யாரும் பணக்காரனாகிவிட்டார்கள் என்று நான் இதுவரை கேள்விப்படவில்லை.  முதலில் இது போன்ற பிஸ்னஸ் டெக்னிக்கில் விட்டில் பூச்சி மாதிரி விழுந்து விட்டுபங்குசந்தைக்கே அட்வைசர் மாதிரி பேசுபவர்களிடம் சொல்ல வேண்டிய வார்த்தை...ஸ்ஸப்பா....முடியலெ!!”.


அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.!!

கடன் வாங்கி ஆடம்பர செலவுகள் செய்ய காரணம் , இனிமேல் கிடைக்கபோகும் வருமானம் கைக்கு கிடைக்குமுன் செலவு எப்படி செய்வதென்று திட்டமிடும் முட்டாள்தனம்தான். " உங்க கிட்டதான் அந்த டீலிங்...மத்தவங்க சரியா வராது' என்று கற்பூரம்  அணைத்து சத்தியம் செய்யும் கஸ்டமர்கூட சமயத்தில் சில காரணங்களுக்காக மாறி விடக்கூடும். இதை நான் எழுதகாரணம் நம் ஊர் போன்ற இடங்களில் அதிக இளைஞர்கள் ரியல் எஸ்டேட் செய்வதாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் ரியல் எஸ்டேட் செய்வது சரியான முறையில் நெறியாக்கம் [Regulated] செய்யப்படவில்லை. அப்படியே செய்திருந்தாலும் அதன் சட்டங்கள் ஒவ்வொரு ரியல் எஸ்டேட் ஏஜன்ட்டுக்கும் தெரிய பல வருடங்கள் ஆகும்.நமக்கு நடப்பு சட்டங்கள் தெரிய குறைந்த பட்சம் நியூஸ் பேப்பர் படிக்க வேண்டும். நம் ஊர்களில்  பேப்பர் படிப்பதே முடி வெட்டிக்கொள்ளும்போது மட்டும்தான் எனும் சூழ்நிலையில் எப்படி சட்டமெல்லாம் தெரிந்து கொள்வது. நாம் முடி வெட்டிக்கொள்ளும் தேதி அரசாங்கத்துக்கு தெரியாது.

 ஆனால் இந்த தொழிலில் ட்ரான்சாக்சன் ஆகும் தொகை பெரிதாக இருப்பதால் இதில் கிடைக்கும் வருமானமும் பெரிதாக தெரிவதால் இளைஞர்கள்  [ரியல் எஸ்டேட் ஏஜன்ட்டுஅதிகமான மெட்டீரியல் ஆசைகளில் கவனம் சிதறி கைக்கு கிடைக்குமுன் வருமானத்தையே கடனாக செலவு செய்துவிட வாய்ப்பு அதிகம். எனவே வருமானம் வருமுன் மானம் காக்க!!

அவசரப்படும் பேச்சு

நீங்கள் விற்பனை பிரிவில் இருக்கிறீர்களா?....'ஆலாய் பரப்பதை தவிர்த்து விடுங்கள்". உங்கள் கஸ்டமர்களுக்கு ஒரு திறமை உண்டு, நீங்கள் அவர்கள் தலையில் கட்ட நினைக்கிறீர்கள் என்பதை உங்களின் அவசரமான பேச்சில் எளிதாக உணரக்கூடிய சக்தி அவர்களிடம் உண்டு.  Desperateness Always Kill the sale.

நீங்கள் தரும் பொருளை வாங்கினால் என்ன நன்மை என்பதை நிதானமாக விளக்கினாலே போதும். உங்களுக்கு இது தெரியுமா என சவால் விட வேண்டாம், பிசினசில் சவால்கள் உறவை முறிக்கும். உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் பொறுமையாக மற்றவர்களும் உங்களிடம் வாங்குகிறார்கள் என்பதை உணர்த்துங்கள். 'எங்கே பிசினஸ் அப்படி ஒன்னும் விசேசமா இல்லை...முன்னமாதிரி கூட்டம் இப்ப எங்கெ இருக்கு" எனும் நெகட்டிவ் ஆன வார்த்தைகள் கொசுமருந்து மாதிரி கஸ்டமர்களை விரட்டிவிடும்.

வாய்ப்புகள் மீது கவனம் தேவை:

நம் ஊர் போன்ற கீழ்தஞ்சை மாவட்ட பெண்களின் தொழில்திறன் & Human Capital  அனாவிசயமாக வீணாவதாக நான் நினைக்கிறேன். வருமானம் தேவைப்படும் பல பெண்கள் சரியான வாய்ப்புகள் இல்லாததால் அவர்களால் சம்பாதிக்க முடியாது என்றும் 'காசுக்கும், பணத்துக்கும் என் காலில்தானே கிடக்க வேண்டும்' என்ற எழுதாத ஆண் ஆதிக்க சட்டங்கள் பெண்களை தொடர்ந்து அடிமையாக்கி வைத்திருக்கிறது. நம் ஊர் போன்ற இடங்களில் எந்த தொழிலும் செய்ய முடியாது என்று நினைப்பதால் ஆண்களும் இருந்தால் சும்மா இருப்பேன், இல்லாவிட்டால் "விசா வருது" என சொல்லிக்கொண்டிருப்பேன் என்று எதையும் தொடங்காமல் 10 , 15 வருடத்தை ஒட்டிவிடுகின்றனர். பிள்ளைகளின் தேவைகள் அதிகரிக்கும்போது இதுவரை காப்பாற்றிய குடும்ப கெளரவம், தனிமனித மரியாதை எல்லாவற்றிற்கும் ஒரு "டாட்' வைக்க வேண்டியிருக்கிறது.

நம்மை போன்ற ஒரு மனிதர் பன்க்கர் ராய், ராஜஸ்தானில் எந்த வசதிகளும் அற்ற ஒரு ஊரை எப்படி உலகுக்கு எடுத்துச்சென்றிருக்கிறார் என பார்ப்போம். இப்போது இருக்கும் மின்சாரத்தட்டுப்பாட்டுக்கு எவ்வளவு அழகாக தீர்வு சொல்லியிருக்கிறார். நம் ஊரில் மட்டும் 25000 பெண்கள் இருக்கலாம் அதில் 2000 பேர் இந்த சோலார் பேனல்களை செய்ய ஆரம்பித்தால்.......நம் ஊரிலும் ஒரு பன்க்கர் ராய் உருவாகும் நேரம் வந்து விடாதா?

எதிர்ப்புகள் எல்லாம் நம்மை தாக்கும் அம்புகளல்ல

சிலர் தொழில் செய்யும்போது, அல்லது அவர்களது பொருள்களைக் குற்றம் சொல்லி விட்டால் தன்னை ஏதொ லைட்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மாதிரி ஃபீலிங்கில் இருப்பார்கள். இது சில அனுபவசாலிகளிடம் கூட இருக்கும் விசயம். முதலில் உங்கள் கஸ்டமர் சொல்லும் விசயத்தில் உண்மை இருக்கிறதா என பார்க்க வேண்டும். அதில் உண்மை இல்லாத போது ஏன் கவலைப்பட வேண்டும். அப்படியே உண்மை இருந்தாலும் திருத்தி கொள்வதுதான் நல்லது. அதை விட்டு ஒரே டென்சனாக கஸ்டமரிடமே கொட்டித்தீர்ப்பது "நாக்கில் சனி" என்ற பட்டம் வாங்க அடித்தளம்.

சிலர் ஆபிசில் /கடையில் நுழையும்போதே மற்றவர்களுக்கு ஒரு அசெளகரியம் இருக்கும், நீங்கள் தீயணைக்கும் வண்டி மாதிரி வந்தால் அப்படித்தான்.... எல்லோரும் 'தெறிச்சி' ஒடுவதில் சாதனையில்லை. எவ்வளவு பேரை உங்களின் அருகாமையில் கொண்டுவர முடியும் என்பதே எப்போதும் நல்லது.

கொஞ்சம் லைட் ரீடிங் ஆக எழுதலாம் என்ற முயற்சியில் இந்த படிக்கட்டு..அடுத்த படிக்கட்டு எப்படி என்று எனக்கே தெரியாது.

See you next week
ஏற்றம் தொடரும்...
ZAKIR HUSSAIN

உங்கள் நண்பன் யார்.. ? 3

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2015 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபாரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய். அறிவிப்பவர்: அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி). ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ் தனிமனித வாழ்வில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றி விளக்குகிறது. நபி (ஸல்) அவர்கள் அதனை அழகிய உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள்.

சூழல் எனும் போது பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றனர். ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்பமாக பாதிப்பை ஏற்படுத்துவோர் பெற்றோர்களாவர். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :

ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹுதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.

பெற்றோருக்கு அடுத்தபடியாக, உற்றார் உறவினரை விட நண்பர்களால் ஒரு பிள்ளை பாதிப்படைகிறது. பால்ய வயதை அடைவதற்கு முன்பே அது கூடி விளையாடுவதற்கு நண்பர்களைத் தேடுகிறது. நட்பு கிடைக்கும் பட்சத்தில் அது உள அமைதி அடைகிறது. நட்புக்கத் தடையாக பெற்றோர் அமைகின்ற போது அது உளச் சிக்கலுக்கும் உள இறுக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டு, வேண்டத்தகாத விளைவுகளை குடும்பத்தில் தோற்றுவிக்கிறது. அநேகமாக பெற்றோரின் வழிகாட்டல் இன்றி நட்புத் தேடல் படுமோசமான பாதிப்புகளை ஆறாத வடுக்களாய் பிள்ளைகளிடம் விட்டுச் செல்கிறது. இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை நட்புத் தேடலையும் நெறிப்படுத்தி வழிகாட்டியிருப்பது எம்மை வியப்பிலாழ்த்துகிறது.

நபித்துவ வழிகாட்டலின் வெளிச்சத்தில் நட்புத் தேடலை விளங்க முயற்சிப்போம். நண்பர்களை எக்கோணத்திலிருந்து விளங்கினாலும் கூட அவர்களை இரு வகையாக அமைகின்றனர். நல்ல நண்பர்கள் கெட்ட நண்பர்கள்.

நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரம் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான். இவன் கஸ்தூரியை இனாமாக வழங்குபவன் போலாவான். சிலபோது பிறரினால் இவன் வஞ்சிக்கப்படலாம். அப்பாவியாகக் கருதப்படலாம். நல்ல நண்பன் தனது தரத்தினை பெறுமதியாகக் கருதுகிறான். தனது சிந்தனை ஆன்மா, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் விழுமியம் என்பனவற்றை இலவசமாகக் கொடுத்துக் கிராக்கியைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தனது ஆளுமைப் பண்புகள் இதர மனிதர்களால் மாசுபடுவதை இம்மியளவும் விரும்புவதில்லை. எனவே, அவன் தனது நட்பை நாடி வரும் மனிதர்களை நோக்கி முன் நிபந்தனை - உறுதிப்பிரமாணம் என்பனவற்றின் அடிப்படையில் நகருகிறான்.

எனது நல்ல நண்பர்களுக்கு உங்களால் மாசு கற்பிக்கப்படும் போது கெட்ட பாதிப்பு ஏற்படும் போது உங்களுடன் உள்ள நட்பை முறித்துக் கொள்வேன் என்று பேரம் பேசி நட்பைப் பகிர்ந்து கொள்கிறான்.

இவன் பணத்திற்கு கஸ்தூரியை விற்பனை செய்பவன் போலாவான். ஹதீஸின் மூலத்தில் தப்தாஅ என்ற பதம் உள்ளது. ஒரு பொருளை திருப்தியின் அடிப்படையில் விலை கொடுத்து வாங்குதல் என்ற கருத்து அப்பதத்தில் தொணிகிறது. வியாபாரம் என்பது ஒரு வகை உடன்படிக்கையாகும். விசுவாச பிரமாணத்திற்கு பைஅத் என்ற சொல் பிரயோகப்படுத்தப்படுகிறது. தப்தாஅ - பைஅத் என்ற இரு சொற்களும் கிட்டத்தட்ட ஒரே கருத்தைத் தருகின்ற இருவேறு சொற்களாகும்.

நல்ல நண்பனுடன் ஆழ்ந்த நட்பை கொள்ளப்படா விட்டாலும் கூட அவனால் நல்லன விளையும் என்பதையும் ஹதீஸ் விளக்குகிறது. இக்காலகட்டத்தைப் பொறுத்தவரையில் இனாமாக வழங்கப்படும் பொருள்களுக்கு எவ்வித பெறுமானத்தையும் மனிதன் வைப்பதில்லை. ஆகவே உறுதிப் பிரமாணத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும் நட்பே நித்தியமானதும், நிரந்தரமானதுமாகும்.

மனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது. விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது. பெற்றோர்களது அன்பு உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது.

பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன நிகழ்வுகளாகும். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கு இடையில் உள்ள உறவில் மரியாதைப் பண்பின் காரணமாக அல்லது வெறுப்பின் காரணமாக விரிசல் அதிகரிக்க அதிகரிக்க நண்பர்களுடனான நட்பு படிமுறை ரீதியாக அதிகரிப்பதையும் அவதானிக்கிறோம். நட்பு என்பது ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொருள்களைப் போல அமைந்த விடுகிறது. அதாவது ஒரு நண்பனின் மறு உருவமாக அடுத்தவன் மாறிவிடுகின்றான். சிந்தனைப் பாங்கு பண்பாடு, நடத்தை, நடை, உடை, பாவனை போன்ற சகல விவகாரங்களிலும் ஒருவன் தனது நண்பனை பிரதிபலித்துக் காட்டுகிறான். இப் பேருண்மையை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரித்தார்கள்.

ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும். (ஆதாரம் : அபூதாவூது).

எனவே, இவ்விடத்தில் நல்ல நட்பை தேடல் முக்கியத்துவம் பெறுகிறது. நல்ல நட்பு என்பது சுவன பிரவேசத்திற்கு வழி வகுக்கின்றன. நரக விடுதலை பெற்றுத் தருகின்ற நட்பாகும். சடவாத ஜாஹிலிய்யா சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட குறுகிய உலகில் நலன்களை இலக்காகக் கொண்ட நட்பு கெட்ட நட்பாகும். இத்தகைய நட்பு மனிதனது உயர் லட்சியத்தை விடுவதோடு, சேர்த்து அவனையும் நரகத்தில் எறிந்து எரித்து விடுகிறது. கெட்ட நட்பினால் வழி தவறி, நரகம் சேர்ந்து விட்ட மனிதனது கைசேதம் இவ்வாறு அமைகிறது.

அந்த நாளில் அக்கிரமக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு நம் தூதருடன் நானும் நேரான வழியில் சென்றிருக்க வேண்டாமா? என்று கூறுவான். அன்றி இன்னாரை உற்ற நண்பனாக ஆக்கிக்கொள்ளாமல், நான் இருந்திருக்கக்கூடாதா?என்னிடம் நல்லுபதேசம் வந்தது. பின்னரும் அதிலிருந்து அவன் தான் என்னை வழி கெடுத்து விட்டான். அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தான் (என்றும் கைசேதப்படுவான்). (சூரா அல் ஃபுர்கான் : 27 : 2)

அநேகமாக நட்பு கொள்ளல் என்பது இத்தகைய அறிவுப் பின்னணியும் இன்றியே ஆரம்பமாகிறது. கல்வி வாழ்க்கையிலும் வியாபார கொடுக்கல் வாங்கல் தொழில் சார்ந்த நடவடிக்கைகளின் போது உருவாகும் நட்பு குறுகிய நலன்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகுகிறது.

அறிவுத் தேடல் தொழில் பணம், பெண் போன்றவை இலக்காகக் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு பொழுது போக்கு பின்னணியை கொண்டு எழுகின்ற நட்பு சமூக தீமைகளுக்கு வழி வகுக்கின்றன. புகைத்தல், போதைப் பொருள் பாவனை, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, நாசகார நடவடிக்கைகள் முதலானவை கெட்ட நண்பன் எனும் நுழைவாயில் மூலம் குடும்பத்தில் நல்லவனாக இருந்த மனிதனிடமும் குடி கொள்கிறான். பின்னர் பெற்றோரும் மற்றோரும் கன்னத்தில் விரல் வைத்து நெற்றி சுருக்கி ஆச்சரியத்துடனும், கவலையோடும் வினா எழுப்புகின்ற அளவுக்கு அந்தப்பிள்ளை கெட்டுப் போய் விடுவான். ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நட்புத் தேடல் விசயத்தில் நல்லதொரு வழிகாட்டலைத் தருகின்றார்கள்.

நட்பு அல்லாஹ்வுக்காக அமைகின்ற போது அது நல்ல நட்பாக மாறுகின்றது. நித்திய தன்மை பெற்று நிகழ்கிறது. அதுவல்லாத போது தற்காலிகமாக நீடித்து விரைவில் அது காலத்தால் அழிந்து விடுகிறது. மார்க்கத்தின் பெயரால் உருவாகும் நட்பு கூட உளத்தூய்மை இழந்து இஸ்லாமிய கருத்துக்கு பகரமாக நச்சுக் கருத்துக்களை வளர்க்கும் வகையில் உருமாறினால் அத்தகைய நட்பு விரைவில் அழிந்து விடும். இதுவும் கெட்ட நட்பே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மறுமை நாளில் அல்லாஹுத்தஆலா எனக்காக பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் எங்கே! எனது நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இன்றைய தினம் அவர்களுக்கு எனது நிழலில் இடமளிப்பேன் என்று கூறுவான். (முஸ்லிம்)

வகுப்பறைத் தோழர்கள், பயணத் தோழர்கள், ஆருயிர்த் தோழர்கள் தாம் பகிர்ந்து கொள்ளும் நட்பு இறைச் சிந்தனை இஸ்லாத்தின் கடமைகள் ஷரீஅத்தின் சட்ட வரம்புகளை விட்டு தூரமாக்கி படுமோசமாக உறவுகளுக்கு வழிவகுக்கலாகாது. தமக்கு மத்தியில் பரஸ்பரம் நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்.

முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் நேசர்களாக இருக்கின்றனர். நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்கின்றனர். சூரா அத்தவ்பா : 71)

நண்பர்களாக இருப்போம்! நன்மையை தீமையைத் தடுத்துக் கொள்ளும் விவகாரத்தில் நாம் தலையிடுவதில்லை என்ற வாதம் இஸ்லாமிய சிந்தனைக்கு உட்பட்டதல்ல. இது கெட்ட நட்பாகும். கொல்லனின் துருத்தியில் இருந்து தெறிக்கும் தீப் பொறிகள் ஆடையை எரித்து விடுவது போல் கெட்ட நட்பு மறு உலக பயன்பாடுகளை எரித்து விடும். கொல்லனின் துருத்தியில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போல இவ்வுலக வாழ்வு துர்நாற்றமிக்கதாகவே அமையும்.

எனவே பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல நட்பைப் பெற்றுத் தர முயற்சிப்பதோடு துரதிருஷ்டவசமாக பிள்ளைகளுக்கிடையில் கெட்ட நட்பு அமைந்து விட்டால் மாற்று பரிகாரமாக நல்ல நட்பை பெற்றுக் கொடுக்க முனைய வேண்டும்

ஹதீஸ் விளக்கவுரை அஷ்ஷெய்க் மின்ஹாஜ் இஸ்லாஹி.

பிரியமில்லா பிரிவுகள்! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | April 27, 2015 | , , , ,

படித்த பள்ளியையும், ஆசிரியப் பெருமக்களையும், பள்ளி கால நட்பு வட்டாரத்தையும் இறுதித் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்குப் பின் மேற்படிப்பிற்காக வேறொரு பள்ளி/வேறொரு ஊருக்கு புறப்பட்டுச் செல்லுதல் என்பது ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு பிரியமில்லா பிரிவு.

ஓரளவு கற்ற பின் தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தனக்கும், உடன் பிறந்தோருக்கும் திருமண காரியங்கள் நடந்தேறவும்வீட்டுத் தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும் பாஸ்போர்ட் எடுத்து அயல்நாடு செல்ல விசா வந்து பின் புறப்பட்டுச் செல்ல இருக்கும் தேதியில் அந்த பரிதாபமான உள்ளம் படும் பாடு அது ஒரு பிரியமில்லா பிரிவு.


வியாபார, வணிக நோக்கத்திற்காகவோ அல்லது வாழ்வாதாரத் தேவைகளுக்-காகவோ பாசமிக்க பெற்றோர், அன்பு மனைவி, ஆசைக் குழந்தைகளை கொஞ்ச காலம் விட்டுப் பிரிந்து தொலை தூரங்கள் கிழம்பிச் செல்வது ஒரு பிரியமில்லா பிரிவு.

ஒரு நிறுவனத்தில் சில ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்து விட்டு வேறு வேலை காரணமாகவோ அல்லது சொந்த தொழில் தொடங்கும் எண்ணத்திலோ அந்த நிறுவனத்தின் பணியையும், நட்பு வட்டாரத்தின் நேரடி தொடர்புகளையும் முடித்துக் கொண்டு ராஜினாமா செய்து விட்டு புறப்படுவது வாழ்வின் வசந்தத்திற்காக புறப்பட்டாலும் அது ஒரு பிரியமில்லா பிரிவு.

புனித பயணங்கள் மேற்கொண்டு உள்ளத்தில் தினந்தோறும் நிழலாடும் அந்த புனித நகரங்களான மக்கமாநகரம், மதீனமாநகரத்தில் சில நாட்கள் தங்கிவல்ல இறையோனை அழுது, தொழுது வணங்கி நல்ல பல அமல்கள் செய்து வரையறுக்கப்பட்ட காலம் முடிந்ததும் அப்புனித பூமியை விட்டு நகரும் சமயம் இனி இன்னொரு முறை இத்தலங்களை வந்து தரிசிக்க இறைவன் நாட்டம் உண்டோ? இல்லையோ? என உள்ளத்துக்குள் நினைத்துக் கொண்டு கண்கள் பனித்து உள்ளத்தை பரவசப்படுத்தி கரையவைக்கும் பிரிவு ஒரு பிரியமில்லா பிரிவு.

ஊரில் மிச்சம் மீதியாய், சொச்சமாய் இருக்கும் வீட்டின் மூத்த, வயோதிக சொந்தங்களை விட்டு காலத்தின் சூழ்ச்சியில் பிரிவது ஒவ்வொரு ஆன்மாவிற்கும் ஒரு பிரியமில்லா பிரிவு.

மரணித்த சொந்த பந்தங்களின் ஜனாஸாவை முறையே குளிப்பாட்டி கஃபனிட்டு இறுதியாய் முகத்தை மட்டும் கொஞ்சம் திறந்து வைத்து உறவினர்கள் கடைசியாய் கண்ணீர் மல்க அந்த ஜனாஸாவை பார்த்து பிரியாவிடை கொடுத்தனுப்புவது ஒரு பிரியமில்லா பிரிவு. (பிரியப்பட்டாலும், பிரியப்படா விட்டாலும் ஒவ்வொரு ஆன்மாவும் இந்த இறுதிப் பயணத்தை மேற்கொண்டே ஆக வேண்டியுள்ளது).

தன் வீட்டு பிள்ளைச்செல்வங்களை கொஞ்ச காலம் வீட்டினர்களுடன் இருந்து படிக்க வைத்து பிறகு பெரியவனாக ஆன பின் மேற்படிப்பிற்காக அவனை எங்கேனும் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்க அனுப்பி வைப்பது ஒரு பிரியமில்லா பிரிவு.

அயல் நாடுகளில் தனிமையில் இருப்பவர்களும், குடும்பத்துடன் இருந்து வருபவர்களும் தாயகம் புறப்பட்டு சென்று குறிப்பிட்ட காலம் தான் பிறந்து, வளர்ந்து ஆளான ஊரில் சொந்த பந்தங்களுடன் சுகமாய் இருந்து விட்டு பிறகு காலச் சூழலில் அவர்களை விட்டு பிரிந்து புறப்பட்டு செல்வது ஒரு பிரியமில்லா பிரிவு.

நமதூரில் மார்க்கத்திற்கு மாறாக பெரும்பாலும் திருமணம் முடித்து ஆண் மகன் சொந்தத்திற்குள்ளேயே, ஊருக்குள்ளேயே என்ற ஒரு வரம்பு வட்டத்திற்குள் இருந்தாலும் திருமணம் முடித்து பிறந்து, வளர்ந்த வீட்டை விட்டு அவன் மனைவி வீடு செல்வது என்பது அவனை வளர்த்து ஆளாக்கிய அந்த பெற்றோர்களுக்கும், அவனுக்கும் காலத்தின் கேட்டால் ஒரு பிரியமில்லா பிரிவு.

உலகில் அது எந்த இடமாக இருந்தாலும் நாம் கொஞ்ச காலம் தன் வசிப்பிடத்தை அங்கு ஏற்படுத்தி வாழ்ந்து வந்த அந்த இடங்களை, பழக்கப்பட்ட அந்த சுற்றுப்புற சூழலை விட்டு ஏதேனும் காரணத்தால் பிரிய வேண்டி இருப்பது ஒரு பிரியமில்லா பிரிவு.

ஒவ்வொரு வருடமும் புனித ரமழான் மாதத்தை பிறை நோக்கி சீரும், சிறப்புடன் எதிர்கொண்டு அதனை நல்ல முறையில் வரவேற்று அமல்கள் பலசெய்து வல்லோனை அவன் விரும்பும் வழியில் வழிபட்டு தத்தமது ஆன்மாக்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டு மறுமைக் கணக்கில் அதிக வரவுகளை நன்கு ஏற்படுத்திக் கொண்டு பிறகு 29ம் நாள் அல்லது 30ம் நாள் நம்மை எல்லாம் உடலாலும், உள்ளத்தாலும் குதூகலப்படுத்திய அப்புனித ரமழான் அடுத்த வருடம் நாம் அதை இதே சங்கையுடன் எதிர்கொள்ள வாய்ப்புகள் இருக்குமோ? இல்லையோ? என எவருக்கும் விடை தெரியாமல் விடை பெற்றுச் செல்வது நம் அனைவருக்கும் ஒரு பிரியமில்லா பிரிவு.

வியாபார, வர்த்தகம் மூலம் லாபங்கள் பல ஈட்டி சுகபோகத்தில் இருந்து வாழ்ந்து வந்த மனிதன் ஏதேனும் காலச் சூழ்நிலையால் அதே வியாபாரத்தில் பெரும் நஷ்டமடைந்து அவனுடைய சுகபோகங்கள் கொஞ்சம், கொஞ்சமாய் அல்லது மொத்தமாய் இழக்க நேரிடின் அதன் பிரிவு அவனுக்கு ஒரு பிரியமில்லா பிரிவு.

இல்லற வாழ்க்கை இறையோனின் கிருபையால் நல்லறமாய் நடந்தேறிக் கொண்டிருக்கும் பொழுது வாழ்வில் குறுக்கிடும் ஏதேனும் சிறு, சிறுபிணக்குகளால், சஞ்சலங்களால் பக்குவமற்ற குடும்ப பெரியவர்கள் சிலரின் பயனற்ற அறிவுரையாலும், சமயோசித புத்தியின்மையாலும், குறிப்பாக மார்க்க தெளிவின்மையாலும் சில நல்ல தம்பதிகள் கூட நிரந்தரமாய் விவாகரத்து மூலம் பிள்ளைகள் பெற்ற பின்பும் ஒருவருக்கொருவர் பிரிந்து செல்வது இருவருக்கும் நிச்சயம் ஒரு பிரியமில்லா பிரிவு (எந்த பிள்ளையும் புதிய வாப்பா, உம்மாவை அந்தளவுக்கு உள்ளத்திற்குள் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை).

நல்ல குடும்பங்களில் குடும்ப நல விரும்பிகள் போல் போலி வேசமிட்டு வரும் சில சைத்தான்களின் குறுக்கீட்டாலும், தவறான வழி காட்டுதலாலும் நிலம், சொத்து, வியாபார கொடுக்கல், வாங்கல், திருமண சம்மந்தம் என சில உலகாதாய சில்லரை சமாச்சாரங்களுக்காக உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்குள் கூட ஒரு பெரும் பிணக்கை, சச்சரவை ஏற்படுத்தி அந்தப் பிரிவினையினூடே எவருக்கேனும் ஒருவருக்கு மரணம் சம்பவித்தாலும் கூட அவன்/அவள் வீட்டுப்படி ஏறி மையத்தின் முகம் கூட பார்க்கமாட்டேன் என சத்தியப்பிரமாணம் செய்ய வைத்து தேவையற்ற வைராக்கியத்தை ஏற்படுத்தி இரு குடும்பங்களுக்கும் ஹயாத்திற்கும், மவுத்திற்கும், எதற்கும் கிடையாது என வீராவேசம் பேசி பிரிவது நிச்சயம் ஒரு பிரியமில்லா பிரிவு.

செல்லமாய் வீட்டில் பிள்ளை போல் வளர்ந்த மாடு, கன்று, கோழி,குஞ்சு போன்ற வீட்டு பிராணிகள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டாலோ அல்லது காணாமல் போய் விட்டாலோ அதை சீரும், சிறப்புடன் தினம், தினம் கவனித்து வளர்த்து வந்த வீட்டினர்களுக்கு வாயில்லா ஜீவனாக அது இருந்த போதிலும் அதன் பிரிவு நிச்சயம் ஒரு பிரியமில்லா பிரிவு.

என்ன தான் நாம் உடலாலும், உள்ளத்தாலும் பலசாலிகளாக இருந்து வந்தாலும் அல்லது அது போல் நடித்துக் கொண்டாலும் சில எதிர்பாராத திடீர் பிரிவுகள் எம்மை நிலைகுலைய வைத்து உடலாலும், உள்ளத்தாலும் பலஹீனமடைய வைத்து அவை பால் போன்ற கண்களில் பரிசல் போல் மிதக்கும் கருவிழிகளுடன் சிவக்கச் செய்து கண்ணீர் மூலம் பகிரங்கப்படுத்தி விடும் உள்ளத்தை உலுக்கிய அவ்வேதனைகளை.

இப்படி பிரிவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம். குறிப்பாக, நம்மூரில் மற்ற ஊர்களைக் காட்டிலும், பிற மதத்தினர்களைக் காட்டிலும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அடிக்கடி நம் வாழ்வில் விரும்பியோ, விரும்பாமலோ சம்பவிக்கும் வேதனை தரும் இது போன்ற பிரிவுகள் அதிகமே. இதில் விடுபட்ட உங்கள் வாழ்வில் சங்கடத்தை ஏற்படுத்தும், ஏற்படுத்திய பல பிரிவுகளை நீங்கள் பின்னூட்டங்கள் மூலம் தொடரலாம்.

வஸ்ஸலாம்.

பிரியமில்லா பிரிவுகள் முடியவில்லை இன்னும்...!

மு.செ.மு. நெய்னா முஹம்மது

கந்தூரி மாயை...! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2015 | , , , ,

இது ஒரு மீள்பதிவு
என்னிட முள்ளதொரு கேள்வி – என்
இனத் தவரிடம் கேட்க
முன்பென்று மில்லாத குரோதம் – உன்
உடன் பிறந்தோரிடம் எதற்கு?

அடங்கிய வருக்கேன் ஆராதனை – குழி
முடங்கியவருக்கா முழு அர்ச்சனை
கையில் நெய்யெனக் காப்பவனிருக்க –பொய்
கபுர்தனை வணங்குத லறிவா?

ஈடு இணையற்ற இறையை – எது
ஈருலக வாழ்விலும் விஞ்சும்
ஈனச் செயலாம் கந்தூரி – ஒரு
ஈமான் முறிக்கும் இழிவே

ஊர்வலம் என்றொரு ரனகளம் – நம்
ஊர்ச் சனங்களுக்கே கேவலம்
கொடியேற்றி மகிழும் யார்க்கும் – தம்
குடிகெட்டுப் போவது உறுதி

தோளோடு தோளாகத் தொழுது – நல்
விணையாம் நோன்பினை நோற்று
கணக்காக ஸகாத்தும் கொடுத்து – பின்
கபுர்தனில் கவிழ்தல் சரியா

கலைக் கூத்தாடி கணக்காய் – உன்
களியாட்டம் குமட்டும் குடலை
கண்டெந்தன் கண்கள் கலங்கும் – இக்
கவலையில் நெஞ்சமும் வலிக்கும்

போனது போகட்டும் தோழா – புது
பாதையைப் படைப்போம் நாமே
கந்தூரி கனவினி வேண்டாம் – நம்
சொந்தவூர் ரெண்டுபட வேண்டாம்

அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது
முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை- நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்

இறுதிச் சடங்கென நேற்று – நாம்
உறுதியாய் முடிந்ததெனக் கொள்வோம்
கந்தூரி மாயையை வீழ்த்தி – புது
கலாச்சார மாற்றம் கொணர்வோம்

அல்லாஹ்வை மட்டுமே தொழுவோம் – அவன்
வல்லமை கொண்டே எழுவோம்
தர்கா கலாச்சாரம் ஒழிப்போம் – புது
தலைமுறை செழிக்க உழைப்போம்.


சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

பற! 30

அதிரைநிருபர் பதிப்பகம் | April 25, 2015 | , , , ,


நேற்றைக் கிழித்து
நினைவுக் கூடையில் வீசி
காற்றைக் கிழித்து
கனவு வெளியில் பற!

பறப்பது எங்ஙனம்?

றெக்கை விரிக்கும் பறவைக்கு
காற்றில் மிதக்க
எடை குறைவே
விடை

கனவை விரித்துப் பறப்பதற்கு
கவலை அழுத்தாத
கனம் குறைந்த
மனம்.

எந்திரப் பறவைக்கே
இயக்க,
புற சக்தி
எண்ணப் பறவைக்கோ
மயக்கும்
அக யுக்தி

காற்றின் மூலக்கூறும்
நாம்
உராய்ந்து பறக்க
உற்சாகமாய்
நமை வாழக்கூறும்.

பறக்க
இறக்கைகள
வளர்க்க வேண்டியதில்லை
வாய்த்தாலே போதும்

பூமித் தாயை
மூன்று பரிமாணங்களில்
கண்டு களிக்கயில்
எங்கும் வருடிக் கடக்கும்
எம் நிழல்.

கூர் புத்தியால்
குழப்பங்களைக் கீறி
குடைந்து குடைந்து பறந்து
ஈர்ப்பு விசை
இழந்த வெளியில்
இளைப்பாறலாம்,
மிதந்து கோண்டே

சுமை என்றால்
நடக்காத பொழுதினில்
கால்களும்
பறக்காத போதினில்
சிறகுகளும்கூட சுமைதான்

ஒற்றையாய்ப் பறப்பது
சுமைகளிலிருந்து
விடுதலை என்றல்ல;
இனியும் சுமக்க
இனிய சுமை வேண்டியத்
தேடலே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

சொன்னதைச் செயலில் காட்டுதல் 5

அதிரைநிருபர் பதிப்பகம் | April 24, 2015 | ,


சரியான, அழகான வாழ்வின் முன்மாதிரி (உஸ்வத்துன் ஹஸனா) என்று ஆண்டவனால் அடையாளப் படுத்தப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்கள், தமது கொள்கைப் பிரச்சாரத்தின் முதல் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அண்டை வீட்டாருக்கான கடமைகளைப் பற்றி மக்களுக்கு அறவுரை பகர்ந்தார்கள்; அதன் முதல் முன்மாதிரியாகத் தாமே திகழ்ந்தார்கள். பெண்ணுரிமை பற்றிப் பேசினார்கள்; கடந்த பதினான்கு நூற்றாண்டாக நடைமுறைப் படுத்தப்படாமலிருக்கும் சிறப்பான பெண்ணுரிமைச் சட்டத்தின் வரை விலக்கணத்தை அப்போதே தந்தார்கள். பொது வாழ்வில் உண்மை பற்றி உபதேசம் செய்தார்கள்; அதற்குத் தாமே இலக்கணமாகத் திகழ்ந்து, உண்மை மற்றும் நம்பகத் தன்மைக்காகத் தம் குறைஷி எதிரிகளிடமிருந்தும்கூட, ‘அஸ்ஸாதிகுல் அமீன்’ என்ற பட்டத்தைப் பெற்றார்கள்.

தமக்கு வாழ்க்கை நெறியாக இறைவனால் வழங்கப்பட்ட ‘இஸ்லாம்’ மார்க்கத்தைத் தாமே தமது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் முதலில் நடைமுறைப் படுத்தினார்கள். அதே வாழ்க்கை நெறியைத் தம் அன்புத் தோழர்களுக்கும் எடுத்துரைத்து நடைமுறைப் படுத்துமாறு கூறினார்கள். அத்தகைய சிறந்த முன்மாதிரியாலும், நடைமுறைப் படுத்த இலகுவான தன்மையாலும், இஸ்லாம் தூரமாகவும் விரிவாகவும் உலகில் பரவிற்று. இத்தகைய இஸ்லாத்தின் வளர்ச்சி, போர் மூலமாகவோ, மற்ற மார்க்கங்களோடு கருத்து மோதல் மூலமோ பரவவில்லை. மாறாக, நபியவர்களால் பரப்பப்பட்ட நற்போதனைகள், பாமர முஸ்லிமிலிருந்து படித்த முஸ்லிம்வரை, அனைவரும் செயல்படுத்திய அதன் எளிமையான இயல்பினாலுமே இஸ்லாம் அப்படிப் பரவிற்று. முஸ்லிம்கள் தமது வாழ்க்கையில் செயல்படுத்திய முறையினால்தான், இஸ்லாம் உலகில் விரைவாகப் பரவிற்று என்றும் கூறலாம். இஸ்லாமிய வாழ்க்கையை முழுமைப்படுத்தத் தமது வாழ்க்கையே போதுமானது என்பதை முன்னுதாரணமாக்கி, வாழ்க்கையின் முன்மாதிரியாக்கினார்கள்; அதை இறைவனும் ஏற்றுக்கொண்டான்.

இவ்வடிப்படையில்தான் அல்லாஹ் கூறினான்: “எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அவ்விறைவனை மிகைப்பட நினைவுகூர்ந்து வாழ்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரியுண்டு.” (அல்குர்ஆன் 33:21)

நபிமொழிக் கலை வல்லுனரான இமாம் ஜுஹ்ரி (ரஹ்) அவர்களின் கூற்று ஒன்று இப்போது என் நினைவுக்கு வருகின்றது: “மக்கா வெற்றிக்குப் பிறகுதான், இஸ்லாம் மிக விரைவாகப் பரவிற்று. காரணம், இந்த வாழ்க்கை நெறியை – இஸ்லாமிய நெறியை – பாமர முஸ்லிமும் நடைமுறைப் படுத்த முடியும் என்பதன் உண்மை நிலை உலக மக்களுக்குத் தெரிந்த பின்னர்தான், இஸ்லாம் விரைவாகப் பரவிற்று.”

கொள்கை அளவில் மட்டும் மார்க்க போதனைகள் இருந்து, அவை வாழ்வில் நடைமுறைப் படுத்தப்படாமல் இருக்கும்போது ஏற்படும் மாற்றத்தைவிட, சாதாரண முஸ்லிம்கூட, தனக்குப் போதிக்கப்பட்ட மார்க்க நெறிகளை இலகுவாகப் பின்பற்றி நடைமுறைப் படுத்தியபோதுதான், இஸ்லாத்திற்கு வெளியில் இருப்பவர்கள் இம்மார்க்கத்தை விரைந்து ஏற்றுக் கொள்கின்றார்கள்.

மார்க்கப் பிரச்சாரத்தை மக்கள் கேட்பதைவிட, மிகையாகக் கண்ணால் பார்க்கவும் செய்கின்றார்கள். இம்மார்க்கத்தை ஏற்றவர்களின் வாழ்வில் அது நடைமுறைப் படுத்தப்படும்போதுதான், அவர்கள் மிக விரைந்து முஸ்லிம்களாக உயர்வைப் பெறுகின்றார்கள். மார்க்கப் பிரச்சாரகர்கள் என்று வருவோர், எவ்வளவு திறமையாகப் பிரச்சாரம் செய்திருந்தாலும், பேச்சு ஒன்றாகவும் செயல் வேறாகவும் இருந்தால், அத்தகைய பேச்சாளர்கள் தமது சுயவாழ்வில் இந்த மார்க்கத்தை நடைமுறைப் படுத்தாதவரை, மக்களின் மனங்களைக் கவர முடியாது; அவர்கள் மூலம் இஸ்லாத்தைத் தெரிந்து, உள்வாங்கி, வாழ்வில் நடைமுறைப் படுத்துபவர்கள் மிகச் சொற்பமே.

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாவிட்டால், அந்தப் பிரச்சாரத்தால் யாதொரு பயனுமில்லை. இறைத்தூதரும் அன்னாரின் தோழர்களும் ஒருபோதும் இந்த நிலை ஏற்படுவதற்கு இடங்கொடுக்கவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மனித உரிமையையும் சமூகப் பொறுப்பையும் பற்றிய போதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். அண்டை வீட்டார்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும், அவர்கள் முஸ்லிம்களானாலும் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும், அழுத்தமாக எடுத்துரைத்தார்கள். 

ஒருமுறை அண்ணலார் (ஸல்) தம் தோழர்களைப் பார்த்துக் கேட்டார்கள்: “உங்கள் அண்டை வீட்டாருடன் உங்களுக்குள்ள உரிமையும் கடமையும் பற்றி அறிவீர்களா?” இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு, தம் தோழர்களின் எதிர்பார்ப்பைக் கண்டு, கீழ்வரும் பட்டியலை வழங்கினார்கள்:
  • அவர் உங்களின் உதவியை நாடினால், அவருக்கு உதவுங்கள்.
  • பொருளுதவி தேடினால், கொடுத்துதவுங்கள்.
  • அவருடைய தேவையை அறிந்து உதவி செய்யுங்கள். 
  • அவர் நோயுற்றிருக்கும்போது, அவரைச் சென்று கண்டு ஆறுதல் கூறுங்கள்.
  • அவர் இறந்துவிட்டால், அவருடைய ‘ஜனாஸா’வில் கலந்து கொள்ளுங்கள்.
  • அவருடைய மகிழ்ச்சியான நேரங்களில் அவருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.
  • அவருக்கு இழப்பு ஏற்படும்போது, ஆறுதல் கூறுங்கள்.
  • அவருடைய வீட்டுக்கு வரும் காற்றைத் தடுக்கும் அளவுக்கு உங்கள் வீட்டை உயரமாகக் கட்டாதீர்கள். 
  • நீங்கள் பழம் வாங்கும்போது, அதில் ஒரு பகுதியை அவர்களுக்கும் கொடுங்கள். அவ்வாறு உங்களால் கொடுக்க முடியாவிட்டால், அவர்கள் பார்க்காத அளவுக்கு வீட்டுக்குள் மறைத்து வையுங்கள். உங்கள் பிள்ளைகள் அப்பழங்களை வெளியில் எடுத்துச் சென்று, அடுத்த வீட்டுப் பிள்ளைகள் பார்த்து வேதனைப்படும் அளவுக்கு உங்கள் மக்கள் தின்னுவதை அனுமதிக்காதீர்கள்.
உங்கள் வீட்டுப் புகை அவர் வீட்டுக்குள் புகுந்து, அவருக்குத் தீங்கிழைக்கும் அளவுக்கு நடந்துகொள்ளாதீர்கள்.

இந்தப் பத்து நெறிகளையும் வரிசைப் படுத்திக் கூறிய பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: “அல்லாஹ்வின் கருணையைப் பெற்றவரைத் தவிர வேறு எவரும் இக்கட்டளைகளைப் பற்றி அறியமாட்டார்.”

இன்னுமொரு நபிமொழியின் மூலம், கீழ்க்கண்டவாறு திருநபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியதாக அறியப்படுவதாவது: “அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவன் இறைநம்பிக்கையாளன் (முஃமின்) அல்லன்! அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்! அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்!” என்று (மும்முறை) திருப்பித் திருப்பிக் கூறினார்கள். அப்போது அவர்களின் தோழர்கள், “அவன் யார்?” எனக் கேட்டார்கள். அதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள், “எவன் தன் அண்டை வீட்டுக்காரருக்குத் தொல்லை கொடுக்கிறானோ, அவன்தான்” என்று மறுமொழி கூறினார்கள்.

பிறிதொரு ஹதீஸில் கூறப்படுவதாவது: “அத்தகையவன் ஒருபோதும் சுவர்க்கத்தில் நுழைய முடியாது.” ஒரு காட்சியானது, ஆயிரம் சொற்களுக்கு ஈடாகும்; அதே நேரம், ஒரு செயலானது, பத்து லட்சம் சொற்களுக்கு ஈடாகும். சிந்தித்து நோக்குங்கள்! இத்தகைய போதனைகளின் அடிப்படையில் உலகம் செயல்படத் தொடங்கினால், வாழ்க்கை எப்படி இருக்கும்? மக்கள் தம் கண்களால் தலைவரின் செயல்பாடுகளைப் பார்க்கிறார்கள். எனவே, தலைவர் என்பவர் தன் நல்லுரைகளின்படி நடப்பவராக இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் அவரது பேச்சுக்குப் பெருமதிப்புக் கொடுப்பார்கள். அதுதான் தலைவருக்கான சோதனைக் களம்.

அதிரை அஹ்மது

மக்ரமாஹ்வும் மானப் பிரச்சினையும்! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 23, 2015 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் : 12

படைப்புகளில் எல்லாம் மகிமையானவர், மனித குலத்தின் மாண்பாளர் நம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு, அறிவுப் பெருந்தகை அண்ணலாரின்  எளிமையான, ஆனால் எல்லா வகையிலும் மாட்சிமை பொருந்திய, சக்தியும் யுக்தியும் நிறைந்த அந்த உத்தமர் கொண்டு வந்த உயர் தத்துவத்தின்  போதனைப் பிரகாரம் நேர்வழி நடந்த குலபாயே ராஷிதீன்களில்  மூன்றாவது கலீபா நமது உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் ஆவர்!

முதன்முதலில் தூய இஸ்லாத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட எட்டு நபர்களில் ஏழாவது இடத்தையும், சுவனத்தைக் கொண்டு இவ்வுலகிலேயே அஷரத்துல் முபஷ்ஷரா என்று நன்மாராயம் பெற்ற பதின்மரில் மூன்றாவது இடத்தையும் பெறுபவர் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள்!

இவ்வுலகில் வாழும்போதே, சுவர்க்கவாசிகள் என்று நன்மணி நாயகம் (ஸல்) அவர்களால் நற்செய்தி வழங்கப்பட்ட அந்தப் பத்து முக்கியமான பேறுபெற்ற நபித்தோழர்கள்: (1)அபுபக்ரு இப்னு அபுகுஹாஃபா (ரலி), (2)உமர் இப்னு அல்கத்தாப் (ரலி) (3)உதுமான் இப்னு அஃப்பான்  (ரலி) (4)அலீய் இப்னு அபீதாலிப் (ரலி) (5)தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) (6)ஜுபைர் இப்னு அல்அவ்வாம் (ரலி) (7)அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (8)ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)  (9)அபூ உபைதா இப்னு அல்ஜர்ரா (ரலி) (10)ஸயீத் இப்னு ஸைது (ரலி) ஆகியோர் ஆவர். (1)

மிக முக்கியமாக, ஒவ்வொரு நபிக்கும் மறுமையில் ஒரு நெருங்கிய தோழருண்டு. தேன் சுரக்கும் சொர்க்க லோகம், தூயவர்கள் வாழும் இல்லம்! அங்கே "எவர் என் ஆத்ம நண்பர் என்றால், அவர்தாம் உதுமான் இப்னு அஃப்பான்" என்ற அல்லாஹ்வின் தூதரின் ஆத்மார்த்த நட்பு எனும் அபூர்வமான, நிலையான பாக்கியத்தையும் பெற்றவர்!

வெற்றிகரமான வணிகராகவும் குறைஷிகளில் மாபெரும் செல்வந்தராகவும் திகழ்ந்த உதுமான்  இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள், பல சமயங்களில் சன்மார்க்கம் செழிக்கத்  தம்   செல்வத்தை வாரி வழங்கினார்கள். குறிப்பாக, தபூக் யுத்தத்தின்போது, மொத்தம் ஆயிரம் ஒட்டகங்களும் பதினாயிரம் திர்ஹங்களும் நிதியாக அல்லாஹ்வின் தூதரிடம் வழங்கினார்கள்!

“யூசுப் நபியின் வசீகரமான அழகைக் காண விரும்புபவர்கள், உதுமான் இப்னு அஃப்பானை கண்டுகொள்ளுங்கள்” என்று நன்மொழி நாயகர் நபியவர்களால், அவர்தம் எழில் தோற்றம் குறித்துப் பாராட்டைப் பெற்றவர். அண்ணலாரின் இரு பெண்மக்களான ருகையாவையும் அதன்பின், உம்முகுல்தூமையும் மணமுடித்த, மாண்புமிக்க மருமகன் ஆதலால், “துன்நூரைன்” (இரு ஒளிகள் உடையவர்) எனும் சிறப்புப் பெயர் பெற்றவர்!

நெஞ்சின் இருள்கள் நீங்கிடச் செய்யும் நேரிய வாழ்வு ஓங்கிடச் செய்யும் அருள்மறையைத் தொகுத்தளிக்கும் அரும் பணியை ஆற்றியவர் அவர்!

"நான் நாணத்தின் நகர் என்றால், அதன் நுழைவாயில் உதுமான்" என்று அண்ணல் எங்கள் ஆருயிர் நபியால்  அடையாளம் காட்டப்பட்டவர்.

நபி பெருமானின் நல்லுரைகளைப் பேணி நானிலத்தில் வாழும் நல்லவர்களின் தலைவராக, நீதி மிகுந்த, நெறி மிகுந்த ஆட்சியாளராக அமீருல் முஃமினீன் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அரசோச்சிய காலம் அது!


அன்று மதீனாவில் மஸ்ஜிதுன் நபவீ வழக்கம்போல் மக்களால் நிரம்பி வழிந்தது.

அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி) ன்  மனைவி, நபியவர்களின்  நெருங்கிய தோழர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) உடைய சகோதரி என்பதை முன்னரே நாம் கண்டோம்.  அந்தக்  கோத்திரத்தில் கண்பார்வை அற்றுப் போய்விட்ட மக்ரமாஹ் பின் நவ்ஃபல் என்ற வயோதிகர் இருந்தார். வயது வெறும் 115 தான்! இவர் அந்-நுஐமானின் மனைவிக்கு பாட்டனார் முறை.

மனைவியின் நெருங்கிய உறவினர் என்ற உரிமையில், மக்ரமாஹ்வை சற்று அதிகப்படியாகவே சீண்டிப் பார்ப்பதும் கிண்டல் செய்வதும் அந்-நுஐமானின் வாடிக்கையாகவே இருந்தது!

பள்ளியில் அமர்ந்திருந்த மக்ரமாஹ்வுக்கு, வயோதிகர்களுக்கு அடிக்கடி இயல்பாக வரும் உணர்வாகிய சிறுநீர் உபாதை தோன்றிவிட்டது. தன் கைத்தடியை ஊன்றிக் கொண்டே தள்ளாடி நடந்து சென்று ஓரிடம் தேர்ந்தெடுத்து சிறுநீர் கழிக்க அமர முயன்ற அவரைப் பார்த்து  கும்பலில் இருந்து கூச்சல் எழுந்தது! அவர் இன்னும் தள்ளிப் போக வேண்டும் என்று கும்பலின் அதிரொலிகளால் ஆட்சேபிக்கப்பட்டார். தடம் புரியாத தவிப்பில், சரியான இடம் கண்டுபிடிக்கத் தடுமாற்றம் அந்தகர் அவருக்கு!

‘என் இன்னல் தீர்ப்பதில் உதவிக்கு  எவர் முன் வருவர்?’ என்று ஏங்கி நின்ற அவருக்கு ஆதரவாக, ஒரு குரல் ஒலித்தது!

"உதவ நான் தயார்!" அந்தக்குரல் மக்ரமாஹ்வுக்கு மட்டும் தெரிந்ததல்ல!

அங்கு அனைவருக்கும் அறிமுகமான அதே கிண்டலடிக்கும் கீச்சுக் குரல்தான்! அது யாருமல்ல. நம் அந்-நுஐமான் இப்னு அமர் (ரலி) தான்!

அதாவது, அவரைப் பொறுத்தவரை மக்ரமாஹ்வை வைத்து ஒரு வேடிக்கை செய்து பார்க்க வசமான ஒரு வாய்ப்பு கிட்டிவிட்டது!

"வாருங்கள் பாட்டனாரே!, ஒரு தோதான இடத்திற்கு உங்களைக்  கூட்டிச் செல்கிறேன்" என்று என்ன செய்தார் தெரியுமா?

முன்பு இருந்த இடத்திலிருந்து சில அடி தூரமே சுற்றி வளைத்து அவரை அழைத்துச் சென்று, “இதுதான் வாகான  இடம். நான் தங்கள் முன்னால் நின்று மறைத்துக் கொள்கிறேன். இப்போது நீங்கள் தாராளமாகப் பெய்யலாம்” என்று கிழவருக்கு தைரியம் கொடுத்துவிட்டு, மக்ரமாஹ் சிறுநீர் கழிக்கத் துவங்கியதும், சுற்றுமுற்றும் பார்த்த அந்-நுஐமான் வயோதிகரை அதே நிலையில் அப்படியே  விட்டுவிட்டு, நைஸாக நழுவி ஓடிவிட்டார்.

அந்த இடம் இன்னும் பள்ளியின் எல்லைக்கு உட்பட்டதாகவே இருந்ததால், மக்களுக்கு அவரின்  அமர்வு மறைவாகத் தோன்றவில்லை! அதட்டும் சப்தம் எழுந்ததும் மக்ரமாஹ்வுக்கு மானப் பிரச்சினை ஆகிவிட்டது! மக்களில் சிலர் அவரை அதட்டி, ஆட்சேபம் செய்ததில் மிகவும் சங்கடப் பட்டுப்போன மக்ரமாஹ் சபதம் செய்து நின்றார். "இப்படி என்னை மோசம் செய்த அந்தப் பயலை நிச்சயமாக, என் கைத்தடியாலேயே ஓங்கி அடித்து, அவன் மண்டையைப் பிளப்பேன்!"

அடுத்த நாள், அந்-நுஐமான் மஸ்ஜிதுக்குள் நுழையுமுன்பே, அங்கு மக்ரமாஹ் அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டார்.

சற்று தூரத்தில் அமீருல் முஃமினீன் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். "தொழுகை" அவர்களுக்கு அண்ணலாரின் பாசறையில் பயின்ற நேரடிப் பயிற்சி அல்லவா? எனவே, தக்பீர் கட்டித் தேனமுதத்  திருமறையை உகப்பான முறையில் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் ஓதத் தொடங்கிவிட்டார்கள் என்றால், அதன் பிறகு, இந்த உலகையே மறந்து அதன் இனிமையிலேயே லயித்து விடுவார்கள்!

கிழவர் மக்ரமாஹ்வை  மீண்டும் சீண்டிப் பார்க்கத் தோன்றியது அந்-நுஐமானுக்கு!

அவரை நெருங்கி வந்தார். குரலைக் கனைத்து வைத்துகொண்டார். தொனியை அடிக்குரலில் அழுத்திக்கொண்டு, "பெரியவர் அவர்களே! அந்-நுஐமான் எங்கிருக்கிறான் என்று உங்களுக்குக் காட்டித் தந்தால்  அது உதவியாக இருக்குமா?" என்று கேட்டார் நயமாக!

நேற்று நடந்த அந்-நுஐமானின் அட்டூழியம் நினைவுக்கு வந்து, உடனே அவர் உடம்பெல்லாம்  ஆவேசமானது. "பேராண்டி! உடனே அந்த உதவியைச் செய்! எங்கே அந்தக் காட்டுப் பயல்? காட்டு உடனே" என்றார், நேற்றைய சபதத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன்!

சற்றுத் தள்ளி, தொழுகையில் ஒன்றிப் போய் இருந்த அமீருல் முஃமினீன் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்களுக்கு நேர் பின்னால் கொண்டுபோய் கிழவரைச் சரியாக நிறுத்தினார். “இதோ, அந்-நுஐமான். உங்களுக்கு எதிரேதான் நிற்கிறான். கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கிழவரின் காதுக்குள் அவசரமாக கிசுகிசுத்து விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்!

மனதில் தேக்கி வைத்திருந்த ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி, இரு கைகளாலும் அவர் கைத்தடியை உயரே தூக்கி ஒரே போடாக போடுவதற்கு ஓங்கினாரே கிழவர்!

அவ்வளவுதான்! உடனே பாய்ந்து சென்று மக்ரமாஹ்வை பின்னால் இழுத்துப் போட்டார்  ஒருவர். மக்களிடையே ஒரே கூச்சலும் குழப்பமும் சேர்ந்துகொண்டது!

புனித மஸ்ஜிதுன் நபவீயில் இருந்துகொண்டு அமீருல் முஃமினீன் அவர்களையே தாக்கும் முயற்சியா? என்று ஒரே அமளி துமளியாய் ஆகிப்போனது! கிழவரைப் பிடித்து வைத்துகொண்டு ஆளாளுக்கு ஏசத்தொடங்கினார்கள்! முதலில் அவருக்குப் புரியவில்லை!

பிறகுதான், ஒருமுறை அல்ல! இருமுறை, தான் அந்-நுஐமானால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அங்கிருந்த அனைவருக்கும் விளக்கி வைத்து வருத்தம் தெரிவித்தார்.

அந்-நுஐமானைப் பிடித்து வர சிலர் எழுந்தபோது, அமீருல் முஃமினீன் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் மக்களைக் கட்டுப் படுத்திவிட்டார்கள்.

அந்-நுஐமானை அவர் வழியிலேயே விட்டு விடுங்கள். அவரின் நடத்தை எப்படி இருந்தாலும் அவர் பத்ருப் போரில் பங்கு கொண்ட ஒரு நபித் தோழர் அல்லவா!(2) என்று புன்னகைத்த வண்ணம் நவின்றார்கள்  நிலவில் மலர்ந்திடும் அல்லிமலரைப் போன்ற மென்மையானவராகவும் பொது வாழ்க்கையிலே சாந்தம் கொண்ட மிகவும் நல்லவராகவும் திகழ்ந்த அமீருல் முஃமினீன் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள்!

o o o o 0 o o o o 
ஆதாரங்கள்:
(1) அபுதாவூத் 4632 : ஸயீத் இப்னு ஸைது (ரலி)
(2) ஹயாத்துஸ் ஸஹாபாஹ் 2/587: அப்துல்லாஹ் இப்னு முஸ்அப் (ரலி) 
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர்! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | April 22, 2015 | , , , ,

ஷிர்க் (இணை வைப்பு) என்பது மாபாதகமான பாவம், இந்த பாவத்தை செய்பவன் சொர்க்கம் செல்ல இயலாது, இவனைவிட அந்த பாவத்திற்கு துனை நிற்பவர்களுக்கும், ஊக்கப்படுத்துபவர்களுக்கும், அல்லாஹ்விடம் அதிக கேள்விகள் உண்டு. கந்தூரி என்ற பெயரில் மாகான்களின் சமாதிகளின் வழிபாடும் ஷிர்க்கு அரங்கேரும் நிகழ்ச்சி, அதனை ஒட்டிய இசைக்கச்சேரி, கூத்தாட்டம் இவைகளுக்கு நிதி உதவி செய்தவர்கள், விழாவில் கலந்து கொண்டவர்கள், துவக்கி வைத்தவர்கள், நடத்துனர்கள், இதனை ஊக்கப்படுத்தும் வலைத்தளங்கள், ஆதரவளிப்பவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை நினைவூட்ட இதனை பதிவு செய்கிறோம். 

கந்தூரி, மெளலிது போன்றவைகளில் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயல்கள் உள்ளது, அவைகள் மார்க்கவிரோதம் என்று அதிரை வலைத்தள நடத்துனர்களுக்கும், முன்னால் நடத்துனர்களுக்கும் தெரியாதா என்ன? தவறு என்றிக்கும் போது அதனை கண்டித்து பதிவிடாமல், கந்தூரி பற்றிய செய்தியை வெளியிட்டு கந்தூரி ஏற்பாட்டாளர்களை ஊக்கப்படுத்துவதும் விதமாக செய்திகள் வெளியிடுவது நியாயமா? இஸ்லாத்திற்கு செய்யப்படும் துரோகம் என்று சொன்னால் மிகையில்லை. 

கந்தூரி போன்ற அனாச்சார நிகழ்வுகளின் செய்திகளை வெளியிடமாட்டோம் என்று சொன்ன வலைத்தளங்களின் நிலைபாடு காற்றில் பறந்துவிட்டனவா?

கந்தூரி, மெளலித் போன்ற அனாச்சாரங்களை செய்ய நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்களா? சஹாபாக்கள் காலத்தில் இருந்துள்ளதா? நான்கு முக்கிய இமாம்கள் இமாம் ஷாபி இமாம் அபூஹனீபா இமாம் அஹ்மத் இமாம் மாலிக் ஆகியோர் காலத்தில் அவர்கள் அனுமதியோடு நடந்துள்ளதா? ஏன் அல்லாஹ்வுடைய தூதருடைய கப்ருக்கு விழாக்கள் எடுக்கப்படுகிறதா? ஷஹாப்பாக்கள் கபுருக்கு விழாக்கள் எடுக்கப்படுகிறதா? இந்த கேள்விகளுக்கு பதில் கந்தூரி ஏற்பாட்டர்களிடமும், அதனை புறக்கணிக்காமல் ஊக்கப்படுத்தும் வலைத்தள நடத்துனர்களிடமும்தான் வைக்கப்படுகிறது.

விபச்சார தொழில் செய்வது பாவம், ஆனால் அந்த தொழில் செய்பவர்களை ஊக்கப்படுத்தும் செயலை ஓரு முஸ்லிம் செய்ய விரும்புவானா?

கொலை செய்வது பாவம், ஆனால் கொலை செய்வதை ஊக்கப்படுத்தும் செயல்ல ஓர் முஸ்லீம் செய்ய விரும்புவானா?

இவைகளைவிட மிகப்பெரிய பாவம், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, அடங்கி இருக்கும் மகான் அல்லாஹ்விடம் கேட்டுத் தருவார் என்று அவ்லியாவிடம் துஆ செய்வது ஷிர்க். இதற்காக விழாக்கொண்டாடுவது மிகப்பெரிய பாவம். இதனை ஊக்கப்படுத்துவதை ஓர் முஸ்லீம் செய்கிறான் என்றால், இது நம்மை படைத்த அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் செயல் அல்லவா?

விபச்சாரத்தையும், கொலையும் ஊக்கப்படுத்த மறுக்கும் ஓர் முஸ்லீமின் உள்ளம், இதனைவிட பலகோடி மடங்கு ஷிர்க் என்ற மாபாதக இணை வைப்புச் செயலை ஊக்கப்படுத்துவதை நிச்சயம் விரும்பவே விரும்பாது.

தான் விரும்பாத ஓரு ஈனச் செயலை நம் சக முஸ்லீம் மட்டும் செய்ய விரும்புவது நல்ல முஃமீனின் பண்பா? என்பதை நம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

ஏன் தர்கா வழிபாடு கூடாது?

"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்" ஜாபிர் (ரலி) : திர்மிதீ 972, அஹ்மது 14748.

அவ்லியாக்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, ஆண்டு தோறும் கந்தூரி என்ற பெயரால் விழாக்கள் எடுப்பதும் அதில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதும் எவ்வளவு பெரிய வழிகேடு என்பதைப் பல நபிமொழிகள் எச்சரிக்கின்றன. அல்லாஹ்வின் கோபமும் அல்லாஹ்வின் தூதரின் சாபமும் கந்தூரிக்கு நிச்சயமாக உண்டு என்பதை விளங்குவதற்கு இன்னுமா தயக்கம்?

"உங்கள் வீடுகளை(த் தொழுகையற்ற) கபுருஸ்தான்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரித்தார்கள்"அபூஹுரைரா (ரலி) : அஹ்மது 8449, அபூதாவூது 1746.

"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்" அதா இப்னு யஸார் (ரலி) : அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .                 `

"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்" இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். தம்முடைய சமாதியை அவ்வாறு ஆக்கிவிடுவதைப் பற்றி எச்சரித்தார்கள்" அன்னை ஆயிஷா (ரலி) : புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.

அல்லாஹ்வும் அவனின் தூதரும் கண்டித்த செய்யலை செய்யும் கந்தூரி ஏற்பாட்டளர்களே, அதற்கு உதவி செய்பவர்களே, கந்தூரி பற்றிய செய்திகளை வெளியிடுபவர்களே நீங்கள் தவ்பா கொள்ளுங்கள். இனியும் அதிரையில் உள்ள செய்திகளை திரட்டி பதியும் சகோதரர்கள், மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஷிர்க்கிற்கு துணைப்போகும் செய்திகளை வெளியிட்டு ஊக்கப்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுக்கும், மார்க்கத்தில் இல்லாத இரவு நேர கேளிக்கை விளையாட்டுக்கு வெளிநாட்டில் உள்ளவர்களும், உள்ளூரில் உள்ளவர்களும் ஊக்கம் கொடுக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.

கந்தூரி கூத்தும் ஆரம்பமாகி விட்டது. இரவு நேர கேளிக்கைகளை கந்தூரி கப்ருத் திருவிழாவில் நடத்தப்படுகிறது. நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களோ, சத்தியத் தோழர்கள்கள் யாருமே செய்யாத கந்தூரி கப்ரு வழிபாடு கேளிக்கை நிகழ்ச்சிகளை, இந்த பாவத்தின் விபரீதம் அரியாத பாவப்பட்ட நம் சமுதாயம் செய்து வருகிறது, இந்த பாவத்திலிருந்து மீட்டெடுக்க, பல வருடத்திற்கும் மேலாக நம்முடைய சமுதாய சகோதரர்கள் அவமானம், அடி, உதைகள் வாங்கிக் கொண்டு, பிறமத காலாச்சாரமான கந்தூரி கூத்து திருவிழாக்களை முஸ்லீம்களிடம் இருந்து தூக்கி எறிய அயராது போராடி வருகிறார்கள். இந்த சூழலில் மக்களிடம் செய்திகளை எளிதில் எடுத்துச் செல்லும் நவீன மீடியாக்களை தன் கையில் வைத்திருக்கும் நம் சமுதாய இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். செய்திகளை தருகிறோம் என்ற பெயரில் மார்க்கத்துக்கு விரோதமான தர்கா கப்ரு வழிபாடு, கூத்து கும்மாளம் நிறைந்த கந்தூரி கூத்துக்களை ஊக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வுடைய கோபத்திற்கு நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களும் ஆளாக வேண்டாம் என்று நல்லெண்ணத்தில் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புடைய சுட்டிகள்:

அதிரைநிருபர் பதிப்பகம்

படிக்கட்டுகள் - 8 3

அதிரைநிருபர் பதிப்பகம் | April 22, 2015 | , , ,

வாக்கு கொடுத்தல்.

எந்த விதமான விசயமாக இருந்தாலும் சரி வியாபார விசயங்கள் என்று வந்து விட்டாலே 'வாக்கு" என்பது மிக முக்கியம். இதில் வேலையாட்கள் சம்பந்தப்பட்ட வாக்குகளாக இருந்தாலும் அதே முக்கியத்துவம்தான். ஏனெனில் வாக்குக்கு பணமதிப்பீடு என்று ஒன்று இருக்கிறது.

பணம் வாங்கிக்கொண்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவை எந்த அளவு நெருக்கமான உறவாக இருந்தாலும் இனிமேல் அப்படியே அந்தரத்தில் தான். உங்கள் நல்ல பெயர் கெட்டு குட்டிச்சுவராக எளிதான வழி....' கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் நடந்து பாருங்கள்" . இதை ஏன் இவ்வளவு நெகட்டிவ் ஆக எழுதி புரிய வைக்க வேண்டும் என நினைக்கலாம். இதில் ஏற்கனவே சம்பாதித்த நல்ல பெயர்களும் புயலில் அடித்துக்கொண்டு போகும் மரம் மாதிரி நம் பெயரும் வேரோடு அறுத்து எறியப்படும் எனும் நிதர்சனம்தான்.


தொழிலில் மட்டுமல்ல குடும்ப உறவுகளிலும் வாக்கு மிக முக்கியம். தொடர்ந்தாற்போல் உங்கள் வீட்டில் இருக்கும் சின்ன பிள்ளைகள் கேட்கும் பொருட்களை ' வாங்கித்தர்ரேன்' என சொல்லி அதை வாங்கி கொடுக்காமல் இருந்து பாருங்கள்... வீட்டில் இருக்கும் பல்லிக்கு உள்ள மதிப்பு கூட நமக்கு இருக்காது.

இன்னும் சொல்லப்போனால் சில பெரிய தொழில்களில் எத்தனையோ ப்ராஜக்ட் நடந்தேராமல் போனதற்கு காரணம் அதை வழிநடத்தும் அந்த கார்ப்பரேட் லீடர்களின் வாக்கு சுத்தமில்லாமல் இருப்பதுதான். இங்கு [மலேசியாவில்] சில நிறுவனங்கள் சாலை / நெடுஞ்சாலை கட்ட கான்ட்ராக்ட் எடுக்கும்போது அதற்கான அறிவிப்பு பலகையில் [Project Board]   இல் வேலை தொடங்கும் தேதி / முடிவுறும் தேதி என குறிப்பிடுவார்கள்.  அதில் இப்போதைக்கு 100 % ப்ராஜக்ட்,  முடிவுறும் தேதிக்கு முன்னால் ப்ராஜக்ட் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடுவிடுகிறது. இங்குள்ள இது போன்ற நிறுவனங்கள் 'முடிவுறும் தேதி" க்குள் வேலையை முடிப்பதைத் தனது நிறுவனத்தின் கெளரவமாக கருதுகிறார்கள். நிறுவனங்களுக்கே இப்படி என்றால் 'உப்பு /மிளகாய் சேர்த்துக்கொள்ளும் நமக்கு அது அதிகமாக இருக்கவேண்டும்.

Image maker

நமது எண்ண ஒட்டங்களை ஒரு வெண்திரைக்கு ஒப்பிடலாம். அதில் நீங்கள் என்ன விதமான காட்சிகளையும் ஓட்டலாம்.
  • ஒரே சோகம் / பணப்பற்றாக்குறை.
  • 'என்னை நிந்தித்து விட்டார்கள், / “என்னை வச்சி முன்னேறி என் முதுகில் குத்திட்டாய்ங்க!!” [பேக்ரவுன்ட் ம்யூசிக் யாரை வேண்டுமானாலும் நீங்கள் பணியமர்த்திக்கொள்ளலாம் ]
அல்லது
  • நான் முன்னேறிக்கொண்டிருக்கிறேன். இறைவன் எனக்கு ஓவ்வொரு விசயத்திலும் உதவி செய்துகொண்டே இருக்கிறான்.
  • எனது தொழிலில் வரும் சவால்கள் பிறகு என்னை உயர்த்த காரணமாக இருக்கிறது.
  • எனக்கு நல்ல குடும்பத்தையும்,நண்பர்களையும் இறைவன் அருளியிருக்கிறான்.

இப்படியும் காட்சிகளை திரும்ப திரும்ப ஓட்டலாம் . The CHOICE  is YOURS.

வாழ்க்கையில் முன்னேர ஏணிமரத்தையும் , எஸ்கலேட்டர்களையும் நாம் தயாரித்துக்கொண்டிருக்கும்போது நம் கைகள் நமக்கு 'பள்ளம்' தோண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும். இங்கு நம் கைகள் என சொன்னது நமது எண்ணத்தை.

முதன் முதலில் நாற்காலி எப்போது கண்டு பிடித்து இருப்பார்கள்?. தரையில் உட்கார்வதில் சிரமத்தை உணர்ந்த போது. அந்த நாற்காலியை வடிவமைத்தவர் நிச்சயம் நம்பியிருப்பர். நாற்காலியில் உட்கார்ந்தால் சிரமம் குறையும் என்று..அப்படியானால் நாற்காலியை செய்து முடிக்குமுன் அதன் தோற்றத்தை அவர் பார்க்க முடிந்தது.  அப்படித்தானே?....அப்படி யென்றால் உங்களின் சந்தோசமான / ஆரோக்யமான / வசதியான வாழ்க்கையை பார்க்க உங்களினாலும் முடியும். அப்படி பார்க்க முடியவில்லை என்றால் தடையின் காரணம் நாமாகத்தான் இருக்க முடியும். பதிலை வெளியில் தேடி புண்ணியமில்லை எனவே நீங்கள் எப்படி உருவாகப்போகிறீர்கள் என்பதை புத்தாக்கம் [CREATE] செய்வதும் “நீங்கள்” தான். Creativity யின் வகைகளை பிறகு வரும் வாரங்களில் படிக்கலாம்.

உங்களைப்பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து ரிஜிஸ்டராகும் ப்ராசஸ் Sub conscious Mind க்குள் பதிவாகி விட்டால் அதை மீறி நீங்கள் செயல்படுவதில்லை. மற்றும் தொடர்ந்து எண்ணப்படும் எண்ணங்கள் செயலுருவமாகிறது. எனவே மனைவியை கைநீட்டி அடித்துவிட்டு சில [வீர] கணவன்மார்கள் "திடீர்னு' ஆத்திரம் வந்துடுச்சி என்பதெல்லாம் போலீஸ் பயன்படுத்தும் Lie Detector  கருவியில்லாத தெனாவெட்டாக இருக்கலாம்.

Image Maker ல் எளிய வழியும் உண்டு. அதுதான் copycat. மற்றவர்கள் செய்வதை அப்படியே செய்து முன்னேறுவது. இதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு உடன்பாடில்லை என்பதற்காக அது வொர்க் அவுட் ஆகாது என அர்த்தமில்லை. வாழ்க்கையில் முன்னேறியவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்து அப்படியே அதை நாமும் செய்வது. இதற்கு நாம் ஒருவரை Mentor  ஆக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர் எப்படி தொழில் செய்யும்போது பேசுகிறார்/ எப்படி உடை உடுத்துகிறார் / இப்படி எல்லாவற்றையும் ஈயடிச்சான் காப்பியடிப்பதுதான் இதன் சிஸ்டம். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் நினைக்கும் சாதனை களை ஒரு 70% நிறைவேற்றிவிடலாம். ஒன்றும் செய்யாமல் வழியும் தெரியாமல் 'பேய்முழி" முழித்துக் கொண்டிருப்பதற்கு இது தேவலாம் எனும் ரேஞ்சில்தான் பெரும்பாலான விற்பனை நிறுவனங்கள் Multi Level Marketing / தொழில்துறைகள் / வெள்ளைக்காரர்களின் செமினார்கள் சொல்லிக் கொடுக்கிறது.  

எனக்கு ஏன் இதில் உடன்பாடில்லை என்கிறேன் என்றால்.. நமது வேலைகளில் தனித்தன்மை போய்விடும். உங்களுடைய ஸ்டைல் என்று எதையும் சொல்ல முடியாது.

எப்போது ஒருவரை நாம் Mentor ஆக ஏற்றுக்கொண்டோமோ அதிலிருந்து நமது புத்தி நம்மை " Second Best’  என்று சொல்லும்"  அப்படியானால் யார் அந்த “First Best’ நீங்கள் ஏற்றுக்கொண்ட அந்த Mentor தான். 

உங்களை தாழ்த்தி அவரை உயர்த்தி இறைவன் படைத்திருப்பான் என்று சொல்ல / எழுத என்னால் முடியாது.

மற்றும் ஒரு வழிகாட்டியாக / தலைவராக ஏற்றுக்கொள்ள எம்பெருமானார் நபி முஹம்மத் [ ஸல் ] அவர்களைத்தவிர யாரும் அந்த நிலைக்கு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை நான் முஸ்லீமாக இருப்பதற்காக எழுதவில்லை. எம்பெருமானாரின் வாழ்க்கையை , ஆட்சித்திறமையை , சுபிட்சத்தை நோக்கி தன் மக்களை நடத்திச்சென்ற ஒப்பற்ற Leadership quality ஐ ஓரளவு படித்தவர்கள் அப்படித்தான் எழுதமுடியும்.

See you in next episode…. with lot of light readings…
ஏற்றம் தொடரும்...
ZAKIR HUSSAIN


நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (புகைப்படமல்ல) ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | April 21, 2015 | , ,


கிண‌றுக‌ளில் இருக்கும் த‌ண்ணீர் இன்ப‌மாக‌ இருக்கும்; வீட்டு தேவைக‌ளுக்கும், குளிய‌லுக்கு உத‌வ‌க்கூடிய‌ வ‌கையில் இருந்த‌வை இன்றைக்கு இப்ப‌டித்தான் இருந்த‌து கிண‌று என்று வ‌ரைந்து காட்ட‌ வேண்டிய‌ சூழ‌ல்; சாதார‌ண‌மாக‌ ப‌த்து அடி ஆழ‌த்திற்கு மேல்தான் இருக்கும்; முன்பெல்லாம் ம‌ழைக் கால‌த்தில் குள‌ம், கிண‌று எல்லாம் நிறைந்து போதும் போதும் என்ற‌ள‌வுக்கு ம‌ழை கொட்டித் தீர்த்த‌து; ம‌ழை பெய்த‌ அந்த‌ காலை ம‌ண்ணெல்லாம் ஒருவித‌ ஈர‌ப்ப‌த‌த்தோடு ம‌ண்வாச‌மும் ம‌ண‌க்க‌ ம‌ன‌தினுள் ஒரு குளுமை ஆட்டோமேட்டிக்காக‌ குடி கொள்ளும்.

பால் என்ற‌ப‌டி சைக்கிளில் பால்கேனை க‌ம்பியால் த‌ட்டி ஒலியெழுப்பும் பால்கார‌ர்; ரெண்டு உள்ள‌ங்கைக‌ளையும் தேய்த்த‌ப‌டி வ‌ரும் அடுத்த‌ வீட்டுக்கார‌ர்; ச‌ட்டையை அக்குளில் வைத்து க‌ன‌மான‌ ப‌னிய‌னை போட்டு த‌லையில் துண்டை க‌ட்டிய‌ப‌டி வ‌ரும் கொத்த‌னார் என‌ அன்றைய‌ பொழுதுக‌ளில் ப‌ல‌வ‌ற்றை காண‌லாம் சொல்ல‌லாம்; ப‌ல‌த்த‌ ம‌ழை பெய்த‌ காலையில் கிண‌று நிர‌ம்பியிருக்கிற‌தா என்ற‌ ஆவ‌ல் ஏற்ப‌டும்; போய் பார்த்தால் கிண‌ற்றின் க‌ழுத்து வ‌ரை த‌ண்ணீர் ஏறி கிண‌ற்றின் த‌ண்ணீரில் முருங்கைக்காய் இலை மித‌ப்ப‌தையும், நீண்ட‌ கால்க‌ளையுடைய‌ த‌ண்ணீரில் ஓடும் பூச்சி ஓடுவ‌தையும் பார்க்க‌லாம் [அந்த‌ பூச்சி பேர் தெரிய‌வில்லை]; த‌ண்ணீர் கை எட்டும் தூர‌த்தில் இருப்ப‌தால் க‌யிற்றின் துணையின்றி நேர‌டியாக‌வே த‌ண்ணீர் அள்ளும் செள‌க‌ரிய‌ம் இருந்த‌து;

ஜில் ஜில்லென்று அதிக‌ குளிரில் இருக்கும் அந்த‌ த‌ண்ணீர்; ப‌ட‌க்கென்று குவ‌ளையில் த‌ண்ணீரை எடுத்து உட‌ம்பில் ஊற்ற‌ முடியாத‌ அள‌வுக்கு த‌ண்ணீர் குளிர்ந்து இருக்கும்; அத‌னால் ஒரு குவ‌ளை த‌ண்ணீர் முத‌லில் ஒரு கைக்கு ஊற்றிவிட்டு அப்புற‌ம் ம‌றுகைக்கு ஊற்றி மெதுவாக‌ த‌லைக்கு கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா ஊற்றி ஊற்றி குளிச்சு முடிய‌ற‌துக்குள் ஸ்கூலில் இன்ட‌ர்வெல் பில் அடித்துவிடுவார்க‌ள்; அதே போல் இர‌வினில் வான் நிலாவை கிண‌ற்று த‌ண்ணீரில் பார்த்தால் அற்புத‌ த‌ருணமாக‌ இருக்கும் என‌ கேள்விப்ப‌ட்டிருக்கேன் ஆனால் பார்த்த‌தில்லை; இனிமே அடாப் ஃபோட்டோஷாப்பில் பிர‌மாத‌மாக‌ பார்க்க‌லாம்; 

--------------------------------------------------------------------

ரப்பர் மிட்டாய் என்பது என் சிறுவயதில் படுபிரபலம்; ஒரு நீண்ட தடித்த கம்பு அதில் பாதி கம்புலேர்ந்து மலைப்பாம்பு உடலைபோல் வளைந்து ஒட்டப்பட்டு வைத்திருக்கும் இனிப்பு சொர்க்கம்; ரோஸ்,பச்சை,வெள்ளை என கலர்கள் பின்னி பிசைந்திருக்கும் அந்த ரப்பர் மிட்டாயில் வாட்ச் செய்து தருவார்; அதை என் கைகளில் ஒட்டிவிடுவார்; அதை கையில் ஒட்டியதும் வரும் பாருங்க ஒரு சந்தோஷம்; டுர் டுர் டூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ரெண்டு கையையும் பைக் ஓட்டுவது மாதிரி முறுக்கிக்கிட்டு அரைக்கால் டவுசரோடு ஓடியது இன்னிக்கு நினைச்சாலும் சிரிப்பா வருது; கையில் ஒட்டிய வாட்சை சாப்பிடாமல் வைத்திருந்து சாயங்காலம் சாப்பிட்டு இருக்கிறேன்; ரப்பர் மிட்டாய்க்காரர் தெருவிற்குள் வந்தால் ஒரே குதூகலம்தான்.

அதேபோல் காசு மிட்டாயும் பிரபலம்; அதாவது ரோஸ் கலர் மிட்டாயை சிறிய அதற்கேற்ப பிளாஸ்டிக்கில் சுருட்டி வைத்திருப்பார்கள்; அஞ்சு பைசா அல்லது பத்து பைசா விலை; அந்த மிட்டாயை சப்பி சப்பி காசு இருக்கிறதா இல்லையான்னு பார்த்தே ஓய்ந்துடுவோம்; ரொம்ப எக்ஸைட்டிங்கான மூவ்மெண்ட் அது; காசு தட்டுப்பட்டால் ரவுசு தாங்காது; ‘ஹேய் எனக்கு வந்துருச்சுல்ல வந்துருச்சுல்ல’ என யாருக்கு காசு வருதோ அவன் கொண்டாடுவான்;அழகான அருமையான நினைவுகள் அவை; மாங்காய் கீத்து கீத்தா சீவி அரிசி பொடியோடு தொட்டு சாப்பிடுறது 'வெளி தீனிகளில் ஃபர்ஸ்ட் ஆக இருந்தது சின்ன வயசில்; அதற்கு அடுத்த வெளி தீனிகளில் கல்கோனாதான் அதிகம்; மறக்க முடியாதது; கூகிளான் உதவியோடு இந்த படத்தை பார்க்கும் போது  சுஜாதா சொன்னதுதான் நினைவுக்கு வருது;

'விசிஆர்ல இருக்கிறமாதிரி ஒரு ரீவைன்ட் பட்டன் வாழ்க்கையிலும் இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்'


--------------------------------------------------------------------
அகலப் பாதையாக மாற்றும் பணி தொடங்கியதால் நம்ம ஊர் ரயில்வே ஸ்டேஷன் தற்போது செயல் இழந்து விட்டது; உட்காருவதற்க்காக போடப்பட்டிருந்த க்ரானைட் கற்கள் பெஞ்சுகளையும் பெயர்த்து எடுத்துட்டு போய்விட்டார்கள்; அலுவலகமும் பூட்டு; கிட்டத்தட்ட பொலிவை இழந்து விட்டதென்றாலும் அடிக்கிற கடல்காற்றும் இயற்கை ரம்மியமான சூழலும் காப்பாற்றிவிடுகிறது; 2015ல் திரும்ப ஆக்ட்டிவ் ஆகும் என்கிறார்கள் சந்தோஷம்; அகலப்பாதையில் ஓடும் ரயில்களில் ஜன்னலோர கம்பிகளில் எட்டிப்பார்க்கும் சிறுவர்களை காண ஆவலோடு வெயிட்டிங்;
--------------------------------------------------------------------

ப‌க‌ல் நேர‌ம் இர‌ண்ட‌ரை ம‌ணி இருக்கும்..ஒரு தேவைக்காக‌ ப‌ட்டுக்கோடை போக‌ வேண்டியிருந்த‌து. பைக் ப‌ஞ்ச‌ரான‌தால் பேருந்தில் போக‌லாம்னு பாயிண்ட் டூ பாயிண்ட் என‌ப்ப‌டும் பேருந்தில் உட்கார்ந்தேன். டிரைவ‌ருக்கு பின் த‌ள்ளி நாலு சீட்டுக்கு ஒரு வ‌ல‌துபுற‌த்தில் இட‌ம் கிடைத்த‌து. டிரைவ‌ருக்கு மேலே " அப்பா ப்ளிஸ் வேக‌மாக‌ போகாதீங்க‌ " என்ற‌ ஸ்டிக்க‌ர் வாச‌க‌ம் ஒட்டியிருந்த‌து ஸ்பெஷ‌ல். அதை அவ‌ர் க‌வ‌னிக்கிறாரோ தெரியாது ம‌ற்ற‌ எல்லோரும் க‌வ‌னிக்கிறார்க‌ள். ப‌க‌ல் சாப்பாட்டுக்கு பிற‌கான‌ நேர‌ம் என்ப‌தால் எல்லோரும் தூங்க‌ப் போகும் ஸ்டெஜிலேயே இருந்த‌ ச‌ம‌ய‌த்தில் க‌ல்யாண‌ வீட்டு ஸ்பீக்க‌ரில் அள‌விற்கு ஒரு ச‌த்த‌ம் எல்லோரையும் 'த‌ட்டி' எழுப்பிய‌து. 

க‌டைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த‌வ‌ரின் சைனா மாட‌ல் ஃபோனாம். ஒட்டுமொத்த‌ பேருந்திலிருந்த‌ எல்லோரும் திரும்பி பார்க்க‌ அப்ப‌வும் கொஞ்ச‌ம் அல‌ற‌ விட்டுட்டுத்தான் எடுக்கிறார். இந்த‌ மாதிரி ஹை டெஸிப‌ல் ச‌த்த‌ம் அவ‌ர் ப‌ர‌ம்ப‌ரைக்கே காது கேட்காம‌ல் போய்விடும் என்ப‌து உண்மை. அவ‌ர்கிட்ட‌ போய் 'ஏங்க‌ இவ்ளோ ச‌த்த‌மா ரிங்டோனை வைக்கிறீங்க‌ன்னு சொல்ல‌ யாருக்கும் தேவையும் இல்லை என்ப‌து மாதிரியான‌ ஒரு தோற்ற‌ம் நில‌விய‌து பேருந்தில். நானும் அமைதியாகி விட்டேன், சில‌ நேர‌ங்க‌ளில் சில‌ வேளைக‌ளில் அமைதியாக‌வே இருந்துவிடுவ‌து உட‌ம்புக்கு சேஃப்ட்டி. ஒன்ப‌தாவ‌து அல்ல‌து ப‌த்தாவ‌து கி.மீ.ட்ட‌ரில் வ‌ண்டி நின்ற‌து, இதுதான் எங்கேயும் நிற்காத‌ பேருந்தாச்சேன்னு ப‌க்க‌த்திலிருப்ப‌வ‌ரிட‌ம்…

“ஏங்க‌ இங்க‌ நிக்குது?'”

“இந்த‌....' ஸ்கூல்ல‌ ம‌ட்டும் நிக்குது என்னான்னு தெரிலீங்க‌ன்னார்..”

த‌வ‌று ந‌ட‌க்கிற‌து அதை த‌ட்டிக்கேட்க‌ யாருக்கும் நேர‌மில்லை. ந‌ம‌க்கேன்? என்ற‌ டோண்ட் கேர் ம‌ன‌ப்பான்மை த‌லைவிரித்தாடுகிற‌து. க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் பாக்கி ப‌ண‌ம் வ‌ர‌வேண்டியிருப்ப‌தால் நான் அந்த‌ மாதிரி கேள்வி ப‌தில் பிசின‌ஸ்க்கெல்லாம் த‌யாரில்லை.

--------------------------------------------------------------------

ஏழு ம‌ணிவாக்கில் மெயின்ரோடு சாரா க‌ல்யாண‌ ம‌ண்ட‌ப‌த்திற்கு ப‌க்க‌த்தில் ஒருத்த‌ர் த‌ள்ளு வ‌ண்டியில் வைத்து ஆவி ப‌ற‌க்க‌ சுண்ட‌ல், வெள்ளை கொண்ட‌க்க‌ட‌லை, சோழ‌/ல‌/க்க‌திர், அவிக்காத‌ நில‌க்க‌ட‌வை விற்பார்...ப‌ழைய‌ டால்டா நெய் ட‌ப்பாவில் செங்குத்தான‌ சிறிய‌ குழாயில் திரிவைத்து இருப்பார்..அந்த‌ ட‌ப்பாவில் ம‌ண்ணென்னையை ஊற்றி திரியை கொஞ்ச‌ம் ஈர‌மாக்கி கொளுத்துவார்..ஓர‌ள‌வு வெளிச்ச‌த்தில் எரியும் அவ்விள‌க்கே அந்த‌ த‌ள்ளுவ‌ண்டியின் பிர‌தான‌ அடையாள‌ம்..தெருவிள‌க்கு,ரோட்டில் போகும் வாக‌ன‌ங்க‌ளின் வெளிச்ச‌ம் இருந்தாலும் இந்த‌ விள‌க்கின் மேல் அவ‌ருக்கு ந‌ம்பிக்கை..எரியும் நெருப்பின் புகையும், சுண்ட‌லிலிருந்து வ‌ரும் ஆவியும் ஒன்றாக‌ க‌ல‌க்கும் அத் த‌ருண‌த்தை ஏதோச்ச‌யாக‌ பார்த்திருக்கிறேன்..முன்பு எல்லாம் தெரு வ‌ழியாக‌ வ‌ண்டியை த‌ள்ளிக் கொண்டே விற்ப‌னை செய்வார்..

'முன்ன‌ மாதிரி முடிய‌லீங்க‌'ன்னார்.. ஒருவித‌மான‌ ச‌லிப்பு பேச்சில்..ஆர்வ‌ங்கொண்டு தொழில் செய்ய‌ இய‌லாத அள‌வுக்கு உட‌ல்நிலை இருந்தாலும் தொழில் செஞ்சே ஆக‌வேண்டுமென‌ அவ‌ரை கொண்டு போய் த‌ள்ளியிருந்த‌து வ‌றுமை..சின்ன‌ சின்ன‌ மாங்காய் கீத்துக‌ள்,ப‌ச்சை மிள‌காய் ஆங்காங்கே தூவ‌ப்ப‌ட்டு,வெங்காய‌ம்,கேர‌ட் போன்ற‌வ‌ற்றோடு கூட்ட‌ணி அமைத்து மெஜாரிட்டியோடு ந‌ம் ம‌ன‌ங்க‌ளை வென்று ந‌ம்மை சாப்பிட‌வைக்கிற‌து அவ‌ரிட‌ம் இருக்கும் சுண்ட‌ல். வெள்ளை கொண்ட‌க்க‌ட‌லையும் சாப்பிட‌ ந‌ன்றாக‌ இருந்த‌து..

'ம‌ழை வ‌ந்தா என்ன‌ செய்வீங்க‌?'

'இந்தெ [சிக‌ப்பு க‌ல‌ர் தார்ப்பாயை எடுத்து காட்டுகிறார்] வ‌ண்டிய‌ சுத்தி மூடிட்டு நான் ஓர‌மா ஒதுங்கி நின்றுவேன்' 

'ம‌ழ‌ வ‌ந்தாத்தான் ந‌ல்ல‌து..ஆனா அதிக‌மா வ‌ர‌ப்பிடாது' க‌ண்டிஷ‌ன் போடுகிறார் என்னை பார்த்த‌ப‌டி.

'ஏங்க‌ அப்ப‌டி?'

'அப்ப‌த்தான் சீக்கிர‌ம் வித்துப்போவும் நானும் வூட்டுக்கு போயிடுவேன்ல‌'

ஒவ்வொருத்த‌ருக்கும் ஒவ்வொரு ப்ரார்த்த‌னைக‌ள்..வித‌வித‌மான‌ அப்ளிகேஷ‌ன் ஃபார்ம்க‌ள் பார‌மாக‌ கிடைக்கிற‌து எல்லோர் ம‌ன‌திலும்...

--------------------------------------------------------------------

ம‌ணி எக்சேஞ்சிலிலுள்ள‌ க‌வுண்ட்ட‌ரில் இருந்த‌ நேபாளிகூட‌ த‌மிழில்? பேசிக்கொண்டிருந்தார். அவ‌ர் வ‌ளைகுடா சின்ன‌ அடிமை (பெரிய‌ அடிமை ர‌க‌ம் வேற‌) லேப‌ர் உடையில் இருந்தார். அவ‌ன் திருப்பி இந்தியில் சொல்ல‌ இவ‌ர் மீண்டும் மீண்டும் த‌மிழிலியே பேச‌ அந்த‌ நேர‌ம் நான் அங்கு என்ட்ராவுறேன். இவ்வ‌ள‌வுக்கும் ப‌க்க‌த்தில் ஒரு ம‌லையாளி உட்கார்ந்திருக்கிறார் அவ‌ருக்குத்தான் மெட்ராஸி, த‌மிழ்நாட்டுக்கார‌ன் என்றாலே ஒருவித‌ எள‌க்கார‌ம் அவ‌ர் எப்ப‌டி உத‌வி செய்வார்.

நான் போய் அவ‌ரிட‌ம்,

'என்ன‌ங்க‌ பிர‌ச்ச‌னை'?

'இல்ல அண்ணே ப‌ண‌ம் அனுப்ப‌னும் ர‌ண்டு மாச‌மா இங்க‌தான் வ‌ர்றேன்' என்ற‌தும்,

என‌க்கு பேய‌றைந்த‌து போலிருந்த‌து, ஏனென்றால் அது வெஸ்ட்ர்ன் யூனிய‌னில் ம‌ட்டுமே அனுப்ப‌ வேண்டிய‌ எக்சேஞ் அது.. ச‌ராச‌ரியாக‌ ஒரு ட்ரான்செக்ச‌னுக்கு இருப‌த்து அஞ்சு ரியால் மொய் எழுதிவிடுவார்க‌ள். நான் அர்ஜென்ட்டா அனுப்ப‌ மட்டும் அங்கு வ‌ருவேன். ரூமிற்க்கு ப‌க்க‌மாக‌வும் உள்ள‌தாலும்,

'ஏங்க‌ உங்க‌ளுக்கென்ன‌ பைத்திய‌மா ஏன் இங்க‌ வ‌ந்து ப‌ண‌ம் அனுப்புறீங்க‌?'

'இல்லேண்ணே எங்க‌ ரூம்க்கார‌ய்ங்க‌ சொல்லித்தான் என‌க்கு வேற‌ ஏதும் தெரியாதுங்க‌'

'ப்ச்... எத்த‌ன‌ மாச‌மா இதுல‌ அனுப்புறீங்க‌?'

'நாலு மாச‌மா அனுப்புறேன்னே'

அட‌ப்பாவிக‌ளா... அவ‌ரின் ச‌ம்ப‌ள‌ம் வெளியில் சொல்ல‌முடியாத‌ அள‌விற்கு மிக‌ச் சொற்ப‌ம். அதிலும் வெஸ்ட்ர்னில் அனுப்பும்போது முழுமையாக‌ இருப‌த்து அஞ்சு ரியாலை ச‌ர்வீஸ் சார்ஜாக‌ எடுத்துவிடுவார்க‌ள் என்ப‌து அந்தோ ப‌ரிதாப‌மாக‌ ப‌ட்ட‌து என‌க்கு அன்னிக்கு அவ‌ரைப் பார்க்கும்போது..

'நேபாளிட்ட‌ போய் த‌மிழ்ல‌ பேசுறீங்க‌ அவ‌னுக்கு எப்ப‌டி புரியும்ங்க‌' என்று கோப‌மாக‌வே கேட்டேன்,

'இல்லீங்க‌ இல்லீங்க‌'

'ச‌ரி எந்த‌ ஊரு?'

' க‌முதிக்கு ப‌க்க‌ம்ணே'

ச‌ரி விடுங்க‌.. இனிமே இங்க‌ வ‌ராதீங்க‌.. என்னே.. உங்க‌ வீட்'ல‌ யாருக்காவ‌து பேங்க் அக்க‌வுண்ட் இருக்கா?'

'இல்ல‌ண்ணே'

'ச‌ரி யார் இருக்கா வீட்ல‌'?

'என் பொண்டாட்டி இருப்பா'

'ச‌ரி அவ‌ங்க‌கிட்ட‌ சொல்லி உட‌னே ஒரு பேங்க‌ அக்க‌வுண்ட் ஆர‌ம்பிக்க‌ சொல்லுங்க‌.. ஆர‌ம்பிச்ச‌தும் ஒரு ந‌ம்ப‌ர் பேங்க்லேர்ந்து கொடுப்பாங்க‌ அதை வாங்கி வெச்சுக்கோங்க‌'

அடுத்த‌ மாச‌ம் ப‌ண‌ம் அனுப்ப‌ வேறொரு எக்சேன்ஞ'ஐ நான் காமிக்கிறேன் அங்கே போங்க‌, அங்க‌ போய் ந‌ம்ப‌ரை காமிச்சு ப‌ண‌ம் அனுப்புங்க‌ 12 ரியால் இல்லாட்டி 15 ரியால்தான் வ‌ரும் என்ற‌தும் ரொம்ப‌ ந‌ன்றிண்ணே என்ற‌ப‌டி சொன்ன‌ அந்த‌ ம‌னித‌ரைப் பார்த்த‌போது என்னை அறியாம‌லேயே நான் க‌ல‌ங்கிவிட்டேன்..

உட‌ல் உழைப்பை ம‌ட்டுமே ந‌ம்பி இந்த‌ கொடூர‌ வெயிலில் வேலை செய்ய‌வ‌ரும் இவ‌ரைப் போன்ற‌வ‌ர்க‌ள் பாவ‌ம்.. இதுக்கு இங்க‌ வ‌ர‌வே தேவையில்லை..

அஹ்மது இர்ஷாத்

இவ்வுலகம் அழிவை நோக்கிச் செல்கிறதா? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | April 20, 2015 | ,


ஆம்..! அதில் சந்தேகமே இல்லை! இக்காலத்தில் விஞ்ஞானம்  வளர்ந்து கொண்டே இருக்கிறது. விஞ்ஞானம் என்றால் மனிதனின் வாழ்வை மேம்படுத்துவதற்காக அமைதல் வேண்டும் என்பது நமது அசைக்க முடியாத நம்பிக்கை.

விஞ்ஞானம் வளர்வதால் மனிதன் என்னவாகிறான்?

இக்கால விஞ்ஞான உலகம் மனிதனுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கின்றது, அதனை நாம் யாரும் மறுக்க இயலாது!. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அந்த நஞ்சைப் போல் தான் இவ்வுலகம் மாறிக் கொண்டு இருக்கிறது.

வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகைகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கழிவுகள், இதனால் நீர்நிலைகள் மாசுபடுவது, ப்ளாஸ்டிக்ஸ் போன்று அன்றாடம் பெருகிக் கொண்டே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ப்ளாஸ்டிக்ஸ். சாதரணமாக நாம் பரோட்டா வாங்கச் சென்றாலும் சூடான பரோட்டாவை ப்ளாஸ்டிக் பேப்பரில் (நம் ஊரில் பட்டர் கீஸ் என்கிறார்கள்) வைத்து தருகிறார்கள், சால்னாவை எதில் ஊற்றுகிறார்கள்? ப்ளாஸ்டிக் கீஸ்ஸில் தான், சில இடங்களில் பார்க்க முடிகிறது, தேனீர் பார்சல் வாங்குவதற்கு ப்ளாஸ்டிக் பையை பயண்படுத்துகிறார்கள். சும்மாவே ப்ளாஸ்டிக் பயன்படுத்துவது அபாயம் என்கிறார்கள், இதில் சூடானவற்றை அதில் ஊற்றினால்?? இப்படி எங்கு பார்த்தாலும் ப்ளாஸ்டிக் நம்மைச் சூழ்ந்திருக்க புதிது புதிதாக கேன்சர் போன்ற நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றது.அழிவுக்கானவற்றை எல்லாம் மனிதனே உருவாக்க  படைத்தவனை பழிச் சொல்வோர் ஏராளம். சுற்றுச்சூழல் மாசுபாடுகளை அல்லாஹ் ஏற்படுத்துவதில்லை மாறாக மனிதன் ஏற்படுத்துகிறான்.


அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதாவது

“நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தைச் சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதைச் சுமந்தான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:72.)”

இக்காலத்தில் ஆடையணிதல்:

நியூ ஃபேஷன் என்ற பெயரில் ஆடையணிதலின் நோக்கமே மாறிவிட்டது.மேலை நாடுகளில் பிற மதத்தவர்கள் (ஆண்களும் பெண்களும்) நியூ பேஷன் என்ற பெயரில் உள்ளாடைகள் தெரியுமளவுக்கு உடையணிகிறார்கள். அடுத்தவர்கள் (மேலை நாட்டினர்) என்னச் செய்தாலும் அதனையே பின்பற்றும் உலகமாகவல்லவா மாறிக் கொண்டிருக்கிறது இவ்வுலகம். LowHip Pant, Short Shirt என்று  சீரழிந்துக் கொண்டிருக்கிறது இந்த ஃபேஷன்!!

நமது உயிரிலும் மேலான நம் தலைவர் நபி(ஸல்) அவர்கள் மறுமை நாளின் அடையாளமாக ஆடையணிவது பற்றியும் எச்சரித்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளின் அடையாளத்தில் ஒன்றாக கூறியதாவது”பெண்கள் நிர்வாணமாக ஆடையணிந்திருப்பார்கள்”.இது பற்றி நாம் சொல்ல வேண்டியதே இல்லை, தற்போதைய நடைமுறையில் இருந்து வருகின்றது

மது:

மதுவைப் பற்றி இஸ்லாம் கடுமையாக எச்சரித்துள்ளது.ஆனால், இப்போது நடைமுறையில் இருப்பது என்ன தெரியுமா? இஸ்லாமியர்,இஸ்லாமல்லாதவர் என பாகுபாடின்றி மது அருந்தும் பழக்கம் அரங்கேறி வருகிறது.

என்னுடன் பழகியவர்களில் பல இஸ்லாமியர்கள் என்னிடம் கேட்டதுண்டு..

"பாய்!! தண்ணி அடிப்பீங்களா?" 

அதற்கு நான் “இல்லை”…

பிறகு "பீராச்சும்(BEER) அடிப்பீங்களா?" 

அதற்கும் "இல்லை.."

திருப்பி நாம் கேட்டோமானால் வரும் பதில் என்ன தெரியுமா? "தண்ணி அடிக்க மாட்டேன், பீர் மட்டும் எப்பயாச்சும்..."

இந்த கேடுகெட்ட பழக்கம் பெருமளவில் கல்லூரி மாணவர்களிடம் பெருகிக் கொண்டு வரும் மோசமான பழக்கமாக இருக்கிறது.

“மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்”. இன்றைய காலத்தில் இன்னுமொரு பழக்கம் இருந்துவருகிறது,மது அருந்தாதவர் மது அருந்தும் தங்களின் நண்பர்களுடன் சேர்ந்து அவர்கள் வாங்கி வைக்கும் சைட் டிஷ் ஐ சாப்பிடுவதற்காக அவர்களுடன் அந்த சபையில் உட்கார்ந்திருப்பது.நாம் மது அருந்தாவிட்டாலும் அவர்களுடன் உட்க்கார்ந்திருந்தால் அவர்கள் மீது இறங்கும் சாபம் நம் மீது இறங்காதா?

நபி (ஸல்) அவர்கள்:

எனது சமூகத்தில் வேறு பெயர்களை வைத்து மது அருந்துவார்கள், அவர்களது முன்னிலையில் இசைக்கருவிகள் இசைக்கப்படும், பாடல்கள் பாடப்படும். இவர்களை அல்லாஹ் பூமிக்குள் செருகி விடுவான் என்றார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா)

மேலும் அல்லாஹ் திருமறையில்,

“நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபாணத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடம் பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களை தடுத்துவிடத்தான் எனவே அவற்றை விட்டும் நிங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?” (அல்குர் ஆன் 5:90,91)

ஏன் இந்த புர்கா?

இஸ்லாம் பெண்களுக்கு “ஹிஜாப்” என்ற பர்தா முறையைக் கடமையாக்கியிருக்கிறது. அதன் மூலம் தங்களின் கற்பைக் காத்துக் கொள்ள ஏவுகிறது.இந்த புர்காவை சில இஸ்லாமியப் பெண்கள் எப்படி அணிகிறார்கள் என தெரியுமா? என் கண் முன்னே சில பெண்கள் புர்கா அணிந்த முறையைப் பார்த்திருக்கிறேன்.தங்களின் உடலை ஒட்டியபடி அமையப்பட்டிருக்கும் நிலையில் இருந்தது.

நபி(ஸல்) அவர்களுடன் ஆயிஷா(ரழி) இருக்கும் போது, அஸ்மா(ரழி) வருகிறார்கள். அப்போது அவர்களது ஆடை மிக மெல்லியதாக (உடல் தெரியும் நிலையில்) இருந்தது. அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் யா அஸ்மா ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளுடைய இந்த, இந்த பாகங்களைத் தவிர மற்றவை வெளியே தெரிவது நல்லதல்ல என்று கூறும் போது அவர்களின் முகத்தையும், மணிக்கட்டு வரையிலான கைகளையும் சுட்டிக் காட்டினார்கள். - ஆயிஸா(ரழி) வாயிலாக, காலித் இப்னு தரீக், அபூதாவூது, அபூஹாத்தம்

இன்னும் சிலர் இருக்கின்றனர் தங்களை இஸ்லாமியப் பெண்கள் என்று காட்டிக் கொள்வதற்காக… புர்கா அணிந்திருப்பார்கள் முக்காடில்லாமல். இன்னும் சிலர் இருக்கின்றனர், அவர்களைப் பார்த்தால் இஸ்லாமியப் பெண் என்றே தெரியாது அவர்களாக சொல்லும் வரை. இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறும் போது,

“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முன்றானைகளைத் தொங்க விட்டுக் கொள்ளட்டும். அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும் மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்." - (அல்குர் ஆன்: 33:59)

சாட்டிங்(Chatting):

Social Networking என்ற பெயரில் நேரத்தை வீணே கழிக்கும் சூழல் உருவாகிவிட்டது. முன்பின் தெரியாத யாரோ யாருக்கோ (Friend Request) அனுப்புகிறார்கள், Friend Requestம் Accept செய்யப்படுகிறது.. இதில் ஆண்/பெண் பாகுபாடே கிடையாது. தங்களது அலுவலகப் பணியை ஒழுங்காகச் செய்கிறார்களோ இல்லையோ பெரும்பாலானோர் தங்களது Online Friendsகளுடன் தவறாது Chat பன்னுகிறார்கள்.

என் வேலை, என் குடும்பம், என் சமூகம் என்ற ஒரு காலம் இருந்தது.. அப்போதெல்லாம் தங்களது நெருங்கிய நண்பர்களைக் கூட என்றாவது ஒரு நாள் பார்த்தோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளும் காலம்.இன்றையக் காலத்தில் முன்/பின் தெரியாதவர்களுடன் தேவையில்லாத பேச்சுகள், அரட்டைகள்,ஒருவரை ஒருவர் வர்ணித்துக் கொள்ளுதல் போன்றவையெல்லாம் நடந்து வரும் அவலம் ஏற்பட்டிருக்கின்றது. இதில் மூழ்கி, தங்களது கடமைகளைச் செய்ய தவறிவிடுகின்றனர். அது இம்மைக்கான கடமையாகட்டும் மறுமைக்கான கடமையாகட்டும். மறுமையின் அடையாளமாக நபி(ஸல்) கூறுவது மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும். காலம் சுருங்கி விட்டதையும் சுருங்கிக் கொண்டே போவதையும் நம்மால் நன்கு உணர முடிகிறது.

இசை நம்மைச் சூழ்ந்த நிலை:

தற்போதைய கால கட்டத்தில் இசை நம்மைச் சூழ்ந்திருப்பதனை நாம்  உணரலாம்.நம்மில் பெரும்பாலானோர் இசையைச் சுவைப்பவர்களாகவே இருக்கின்றனர்.இசையைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

என் சமூகத்தாரில் சில கூட்டத்தார்கள் தோன்றுவார்கள் அவர்கள் விபச்சாரம், மது, பட்டு, இசை போன்றவற்றை அனுமதிக்கப்பட்டவையாக கருதுவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதை நாம் ஹதீஸில் காண முடிகிறது.

மேற்கூறப்பட்ட நான்கில் விபச்சாரம் மட்டும் தான் இப்போது மீதமுள்ளதென நினைக்கின்றேன்.

இன்னும் சிலர் நம்மில் இசையை விட்டு விளகியவர்களாக இருக்கின்றனர். ஆனால் நாம் பேருந்தில் பயணிக்கும்போது எப்படியாவது இசை நம் காதுகளை வந்தடைந்துவிடுகின்றது.

முடிவுக்கு வருவோமா?

சுகாதாரமின்மை, அனாச்சாரங்கள்,மற்றும் இஸ்லாம் தடுத்துள்ளவற்றில் பெரும்பாலானவை நடைமுறையில் இருப்பதை நம்மால் மறுக்க இயலாது. இவற்றால் நமக்குக் கேடுதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. எல்லாம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆகையால், சிலவற்றை நம்மால் தடுக்க இயலாவிட்டாலும்,இஸ்லாம் நமக்கு தடுத்தவற்றை விட்டு விளகிக் கொண்டு மறுமைக்காக நம்மை தயார்படுத்திக் கொள்வதே சிறந்தது.

'காலத்தின் மீது சத்தியமான மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்' (103:1,2)

அப்துர் ரஹீம் ஜமீல்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு