இது ஒரு மீள்பதிவு
என்னிட முள்ளதொரு கேள்வி – என்
முன்பென்று மில்லாத குரோதம் – உன்
உடன் பிறந்தோரிடம் எதற்கு?
அடங்கிய வருக்கேன் ஆராதனை – குழி
முடங்கியவருக்கா முழு அர்ச்சனை
கையில் நெய்யெனக் காப்பவனிருக்க –பொய்
கபுர்தனை வணங்குத லறிவா?
ஈடு இணையற்ற இறையை – எது
ஈருலக வாழ்விலும் விஞ்சும்
ஈனச் செயலாம் கந்தூரி – ஒரு
ஈமான் முறிக்கும் இழிவே
ஊர்வலம் என்றொரு ரனகளம் – நம்
ஊர்ச் சனங்களுக்கே கேவலம்
கொடியேற்றி மகிழும் யார்க்கும் – தம்
குடிகெட்டுப் போவது உறுதி
தோளோடு தோளாகத் தொழுது – நல்
விணையாம் நோன்பினை நோற்று
கணக்காக ஸகாத்தும் கொடுத்து – பின்
கபுர்தனில் கவிழ்தல் சரியா
கலைக் கூத்தாடி கணக்காய் – உன்
களியாட்டம் குமட்டும் குடலை
கண்டெந்தன் கண்கள் கலங்கும் – இக்
கவலையில் நெஞ்சமும் வலிக்கும்
போனது போகட்டும் தோழா – புது
பாதையைப் படைப்போம் நாமே
கந்தூரி கனவினி வேண்டாம் – நம்
சொந்தவூர் ரெண்டுபட வேண்டாம்
அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது
முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை- நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்
இறுதிச் சடங்கென நேற்று – நாம்
உறுதியாய் முடிந்ததெனக் கொள்வோம்
கந்தூரி மாயையை வீழ்த்தி – புது
கலாச்சார மாற்றம் கொணர்வோம்
அல்லாஹ்வை மட்டுமே தொழுவோம் – அவன்
வல்லமை கொண்டே எழுவோம்
தர்கா கலாச்சாரம் ஒழிப்போம் – புது
தலைமுறை செழிக்க உழைப்போம்.
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
5 Responses So Far:
I can daringly say, this is one of the master piece poems of Abushahruk against this 'shirk festival' since he started to write this kind of satirical poetry.
1985 என்று நினைக்கின்றேன் அப்போது கடல்கரை தெரு கந்தூரிக்கு சென்றேன் .
Ricord Dance மேடையிலே மிகவும் மும்முரமாக நிகழ்ந்து கொண்டு இருந்தது.
அப்போது மேடையில் ஒரு பெண் எலந்தபழம் ..எலந்தபழம்..ஆ ..ஆ ..செக்க செவந்தபழம்..இது தேனாட்டம் இனிக்கும் பழம்..என்று ஆடி பாடியபொழுது ஒரு second மேடையின் மின் விளக்குகள் அமர்ந்தன ..பிறகு ஒளிர ..ஒரு ஆண் நனடக்காரன் மேடையில் தோன்றினான் ...அவன் படித்த பாடல் என்ன தெரியுமா ..
வாழைப்பழம் ...வாழைப்பழம் ....ஹீம் ...எத்துணையோ பேருகிட்டே வாழைபழம் பார்த்துரிக்கே..எடுத்து பார்த்த பழ த்தினிலே இம்மா பழத்தை பார்த்தியா ???என்று ...அதோடு நான் மறந்தவன் தான் இந்த கந்தூரிகளை .
Masha Allah. Jazakallahu khair. As quoted by Brother Aboobuckar, can. so many Muslim brothers have avoided going to this kind of festival because of dance, music and other unislamic culture.
Thameem
But most of our brothers and sisters dont understand the grave mistake and unforgivable sin they are committing over the grave. How come? born as Muslim and brought up as Muslim is not able to identify the deed as shirk (associating to Allah) which is equivalent to do ritual to a Ganesh statue.
Where did we slip? Hijacked just by men like Muhammad Kutty aalim ? and Naina aalim ? Or gave more importance for sustenance to bring home. Or did we over react for their appearance?
It is duty of every wise Muslim brothers and sisters to engage in stopping this evil act now collectively and individually.
Thanks lord Bro. Thalaiththanaiyan to encouraging my comments.
Post a Comment