ஏழை மாணவர்கள் இலவசமாக மெட்ரிக் பள்ளிகளில் படிக்க முடியும்...
ஏழைக் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 ன் கீழ், பிரிவு 12 (1) (c) மற்றும் பிரிவு 13 (i) கீழ், மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, மாநில அரசின் ஆணைப்படி ஏழைக்குழந்தைகள் வசதி படைத்த பணக்கார குழந்தைகளுக்கு இணையாக மெட்ரிக் பள்ளிகளில் கல்வி பயில "சர்வ சிக்ஸா அபியான்" திட்டம் கொண்டுவரப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. பணமொன்றே கதியென கிடக்கும் மெட்ரிக் பள்ளிகள் இது குறித்த முறையான அறிவிப்புகள் வெளியிடுவதில்லை... இதனால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டு இத்தனை ஆண்டுகளாகியும் கூட மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு அவ்வளவாக அல்லது அறவே இல்லை... எல் கே ஜி முதல் 12ம் வகுப்பு வரையிலும் ஒரு ஏழை மாணவனால் மெட்ரிக் பள்ளியில் படிக்க முடியும் என்ற மிகபெரும் செய்தி பலருக்கு தெரியாமலே போய்விட்டது, இதன் மூலமான உதவி அவர்களுக்கு கிடைக்காமலேயே போய்விடுகிறது!
போன கல்வியாண்டின் புள்ளி விபரப்படி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 25 சதவீத ஒதுக்கீட்டின் படி 58,619 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட போதும் 23,248 மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனை அனுபவிக்க முடிந்தது... மீதி காலியிடங்கள்??? யோசித்து பாருங்கள்... மீதியிடங்கள் நிச்சயம் அந்த பள்ளிகளின் கல்லாவை நிரப்பவே வழிவகுத்திருக்கும்... இன்னும் கொடுமை என்னவெனில் இந்த திட்டத்தின் மூலம் ஏழை மாணவர்களை சேர்க்க இலவசமாக விண்ணப்பங்கள் வழங்க உத்தரவிட்டும் அதனை ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள் பல பள்ளி நிர்வாகத்தினர் !!
அனைத்து கல்லூரி மாணவர்கள் சங்க மாநில செயலாளர் பால்ராஜ் , தெருவோரம் வாழும் மக்கள் சங்கத்தினை சேர்ந்த ராசேந்திரன் , சென்னை பழனி போன்றவர்கள் இதற்காக அவ்வப்போது பிரச்சாரமும், போராட்டமும் செய்துவருகின்றனர்.
அல்லாஹ் அவர்களுக்கு நன்மையை வழங்குவானாக...
பால்ராஜ் அவர்கள் மூலமாக நம் குழுமத்தின் சகோதரரர் அன்சார் மீரான் அவர்களும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நேரடியாக களமிறங்கியிருக்கிறார்.
நிற்க.
மேற்குறிப்பிடப்பட்ட அரசாணைப்படி ஒவ்வொரு ஆண்டும்,
ஏப்ரல் 2 - ல் ஒவ்வொரு மெட்ரிக் பள்ளியும் தங்கள் பள்ளியில் 25 சதவீத ஒதுக்கீட்டின் படி எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பதனை மக்கள் அறியும் வண்ணம் நோட்டீஸ் போர்ட்டில் ஒட்டியிருக்க வேண்டும்
மே 2 - ல் 1,50,000 ரூபாய் ஆண்டு வருமானம் பெறும் பெற்றோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுதல் வேண்டும். சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிள்ளையின் பிறந்த சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகிய நான்கும் போதுமானது.
மே 3 - விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது.
மே 9 - விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள்
மே 11 - ல் தகுதிபெற்ற மற்றும் தகுதி பெறாத பெற்றோர்கள் பற்றிய விபரங்கள் அறிவிப்பு பலகையில் வெளியிடுதல் வேண்டும்.
மே 14 - ஒருவேளை எந்த பள்ளியிலாவது தகுதி பெற்ற பெற்றோர்கள் 25 சதவிகிதத்திற்கும் அதிகம் இருந்தால் , 25 சதவீத ஒதுக்கீட்டின் படி காலியிடங்களுக்கான பெற்றோர்களை தேர்ந்தெடுக்க ரேண்டம் முறையை பின்பற்ற வேண்டும். பெற்றோர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன் மூலம் தேர்ந்தெடுத்தல் வேண்டும். இவை வெளிப்படையாகவே நடக்க வேண்டும்.
மே 20 ல் தன் பள்ளியில் 25 சதவீத ஒதுக்கீட்டின் படி எத்தனை மாணவர்கள் சேர்ந்தார்கள், எத்தனை காலியிடங்கள் மீதமுள்ளது என்பதனை அறிக்கையாக மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் மெட்ரிக் பள்ளிகள் சமர்பிக்க வேண்டும்..
மற்றொரு முக்கிய விஷயம், இதை பயன்படுத்தி எல்.கே.ஜி யில் சேரலாம் அல்லது 6 ம் வகுப்பில் சேரலாம். இடையில் வேறு எந்த வகுப்பிலும் புதிதாக சேர முடியாது.
இதில் தவறுகள் நடக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட பள்ளிநிர்வாகத்தினை பற்றி புகார் கொடுக்க முடியும். இதன் மூலம் பள்ளி உரிமத்தையே ரத்துசெய்யப்பட வைக்க முடியும்.
இத்தனை அதிகாரம் நம் கையில் இருந்தும் நாம் இச்சலுகையை விடவேண்டுமா? திட்டமிட்டே மறைக்கப்பட்ட இத்திட்டத்தின் பயனை கட்டாயம் ஏழைக் குழந்தைகள் அனுபவிக்க நம்மால் ஆன சிறு முயற்சி செய்வோமா சகோஸ்?
உங்கள் பகுதியில் அல்லது உங்களுக்கு தெரிந்த ஏழை மாணவர்களை இந்த ஒதுக்கீட்டின் படி மெட்ரிக்கில் சேர்க்க மேலே சொன்ன 4 சான்றிதழ்களும் , பெற்றோர்களின் ஒத்துழைப்பும் இருப்பின் எங்களை அணுகுங்கள்.
இன்ஷா அல்லாஹ் சகோதரர் அன்சர் மீரான் மற்றும் சகோதரர் அப்துல் ஹமித் இருவரும் சம்மந்தபட்ட நபர்களின் நேரடி ஒத்துழைப்போடு 25 சதவித ஒதுக்கீட்டில் ஏழை குழந்தைகள் சேர வழிசெய்ய உதவுவதாக உறுதி தந்திருக்கிறார்கள். இதை அவர்கள் அவர்களின் நண்பர் பீட்டர் பால்ராஜ் என்பவரின் உதவியுடன் செய்ய இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
நேரம் குறைவாகவே இருக்கிறது.. மே 9 தான் விண்ணப்பம் சமர்பித்தலுக்கான கடைசி தேதி என்பதால் தேவையுடையோர் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்....!
அன்சர் மீரானின் தொலைபேசி இலக்கம்....
9003361406
9786220915
அப்துல் ஹமீத் அவர்களின் தொலைபேசி இலக்கம்..
9941086586
இதற்காக முயற்சிக்கும் அனைவருக்கும் இறைவன் தனது மகத்தான நற்கூலியினை வழங்குவானாக.
குறிப்பு : இதை அனைவரும் ஷேர் செய்து அதிகமான மக்களை சென்றடைய உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவண்.
டீக்கடை பேஸ்புக் குழுமம்
நன்றி : டீக்கடை முகநூல் குழுமம்
2 Responses So Far:
அறிவுள்ள குழந்தைகளை பெற்ற ஏழை பெற்றோர்களின் வாழ்வில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி அவர்கள் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும் பயனுள்ள பதிவு.
அதிரை நிருபர் குழுவுக்கு ஆயிரம் நன்றிகள்.
அபு ஆசிப்.
அறிவுள்ள குழந்தைகளை பெற்ற ஏழை பெற்றோர்களின் வாழ்வில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி அவர்கள் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும் பயனுள்ள பதிவு.
அதிரை நிருபர் குழுவுக்கு ஆயிரம் நன்றிகள்.
Post a Comment