Image Maker-ஐ பார்ப்பதற்கு முன் சில விசயங்கள்:
வெற்றியடைய நினைக்கும் பலபேர் வெற்றியடைய சிரமப்படுவதின் காரணங்கள் என்ன தெரியுமா?... வெற்றியடைந்தவர்கள் பெற்ற வலியை, அவமானத்தை கடக்க இவர்கள் தயாராக இல்லை. சமயங்களில் சில செமினார்களில் வெற்றியடைந்தவர்கள் தமது அனுபவத்தைப் பேசும்போது கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்வி.
- உங்கள் வெற்றியை உங்களால் சிம்பிளாக சொல்ல முடியுமா?
- எப்படிப்பட்ட பிசினசில் உடன் முன்னேறலாம்.?
இதுபோன்ற ஆட்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால் வெற்றியை ஒரு சின்ன கேப்ஸ்யூலில் போட்டுக்கொடு, அல்லது ஒரு தாயத்து மாதிரி சின்னதாக்கி கொடு... நீ 10 வருடம் சம்பாதித்ததை நான் சன் டி வி நியூஸ் ஆரம்பித்து முடிப்பதற்குள் சம்பாதித்து விட வேண்டும் !!!
கேட்கும் நமக்கே ஜக்கி யானால் கேள்விகளைச் சந்திப்பவர்களுக்கு எப்படி இருக்கும்.?.
இப்படிக் கேட்பதற்குக் காரணமே சில திரைப்படங்கள்தான். ஒரு பாட்டு ஆரம்பிக்கும்போது ஏழையாக இருக்கும் கதாநாயகன் பாட்டு முடியும்போது Mercedes Benz –S- Classல் வந்து இறங்குவதும். பல தொழிற்சாலைகளுக்கு முதலாளி ஆவதும். 'ஊர்க்காரைய்ங்க" அனைவரும் வேலை வெட்டியில்லாமல் இந்த பணக்காரன் வீட்டில் வந்து தீர்ப்புக்கும், பணத்துக்கும் நிற்பதும். இதை எல்லாம் உண்மை என்று படிக்காதவனில் இருந்து Ph.D முடித்தவன் வரைக்கும் நம்பி தொலைப்பதும்தான் காரணம்.
வெற்றியடைய [அது பிசினஸ் ஆகட்டும், கல்வியாகட்டும்] சரியான கன்சல்டேசன் முக்கியம். வீட்டை விட்டு வெளியூர் போகவே யோசிக்கும் ஆட்களிடம் எல்லாம் என்ன பிசினஸ் செய்யலாம் / என்ன கோர்ஸ் படிக்கலாம் என்று கேட்டால் என்னவிதமான பதில் வரும் என்று நான் எழுதி தெரிய வேண்டியதில்லை.
நம் ஊர் போன்ற இடங்களிலும் வெளிநாடு போய் வந்தவர்கள் தரும் தோற்றமும், உண்மையை மறைத்த பேச்சுக்களும் ஊரில் கனவுகளுடன் வாழும் இளைஞர்கள் தனது படிப்பை முழுமையாக முடிக்காமல் ஒரு டிகிரி / ஒரு டிப்ளோமாவுடன் வெளிநாட்டுக்குச் சென்று ஒரளவு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு 10 வருடமாகிறது. நான் அடிப்படை என்று சொன்னதில் சொந்த வீடெல்லாம் அடங்காது.
உதாரணமாக ஒருவர் B.Com படிப்பதாக வைத்துக் கொள்வோம்... அது academic course தான்.ஆனால் மற்றவர் பொறுமையாக இன்னும் ஒரு 5 வருடங்களில் C.A முடித்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்...இருவரும் வேலை பார்க்கும் சூழ்நிலையில் இந்த 5 வருடங்கள் பொறுமையாக இருந்து C.A படித்தவர்.. அந்த B.com graduate ன் ஒரு வருட சம்பளத்தை 3 - 4 மாதத்தில் சம்பாதித்து விடுகிறார்.
வாழ்க்கையில் முக்கியமாக பொருளாதார ரீதியில் வெற்றியடைய நினைப்பவர்களுக்கு ரொம்ப முக்கியம் “THINK BIG”.
- 10 ஸ்டிக்கர் சேர்த்தால் 1 சில்வர் தட்டு இனாம் ,
- இத்தனை பாயின்ட் கிரடிட் கார்டில் கிடைத்தால் இந்த லெதர் பேக் இனாம்.
போன்ற மிடில்கிளாஸ் ஃபார்முலா எல்லாம் தொடர்ந்து சின்ன சின்ன விசயத்துக்கு போராடும் மனப்பக்குவத்தைத்தான் வளர்க்கும். "இதுக்காக நாம ஒன்னும் செய்யலியே...சும்மா தர்ரதெ ஏன் வேணாங்கனும்” என உங்களுக்குள் மறைந்திருக்கும் மிருகத்தை தூங்க வைத்து விட்டால் பிரச்சினை இல்லை..இல்லாவிட்டால் அதற்காக 'பன்ச் டயலாக்" எல்லாம் பேச வேண்டிவரும். Don’t focus on petty matters [benefit] in life. இலவசங்களை எப்படி சொந்தமாக சம்பாதிக்க முடியும் என்று செயல்படுங்கள்...அதுதான் வெற்றி.
ஏன் வாழ்க்கையில் எல்லோரும் பொருளாதார ரீதியாக வெற்றியடைய வேண்டும் என்பதைச் சொல்கிறார்கள்.பொருளாதாரத்தைத் தேடும்போது “வாழ்க்கை”யை கற்றுக்கொள்வீர்கள். ஒரு நிமிடம் வாழ்க்கையில் உங்களுக்கு எந்த விதமான நோக்கமும் இல்லை என்று வைத்துக்கொள்வோம். வாழ்க்கை சந்தோசமாக அமையுமா...வாழ்க்கையின் ப்ராசஸ் என்ன "அறியாததிலிருந்து அறிந்து கொள்வதுதான்". "தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது” அது எப்போது ஆரம்பிக்கிறது. முதன்முதலில் நீங்கள் பிறந்த நேரத்தில் தாய்ப்பாலுக்கு அழுத அந்த நிமிடம் தான் வாழ்க்கையின் ஆரம்பம்.
எனவே “In Love with Life” வாழ்க்கையை சுமையாக நினைப்பவர்கள் முன்னேறுவதில்லை. வாழ்க்கையில் பயம் எது தெரியுமா, நீங்கள் உங்களை சந்திப்பதுதான். நாம் இதுவரை வாழ்க்கையை திருப்தியாக வாழ்ந்திருந்தால் நன்று.
”ஒலப்பிட்டியடா” என மனசாட்சி சொன்னால்??? இனிமேல் உள்ள காலங்களை ரிப்பேர் செய்ய திட்டமிட வேண்டும். கவனிக்க வளர்ச்சி எளிதாக நடக்கும் நடப்பு அல்ல. வளர்ச்சியில் சவால்கள் இருக்கத்தான் செய்யும். நீங்கள் விரும்பி செயல்பட எதுவும் இல்லை என்ற "மொட்டைத்தனமான வாழ்க்கை" நீங்கள் உலகத்தில் தோன்றவில்லை என்ற உண்மையைத்தரும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை கவர்ந்து கொள்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வதுடன் எதை விரட்ட வேண்டும் என்பதை தெரிந்தும் இருக்க வேண்டும். நான் சொல்லும் விசயம் எல்லாம் உங்கள் மெக்கானிசத்தில் இருக்கும் விசயம் தான் எதையும் நான் புதிதாக சொல்லவில்லை. நீங்கள் அடையாளம் காணாத எத்தனையோ திறமைகள் உங்களுக்குள் வெளிச்சமில்லாமல் கிடக்கிறது. அதை அடையாளம் காண சொல்வதுதான் என் நோக்கம்.
வாழ்க்கையில் உங்கள் பொறுப்பு என்ன என்பதை உணர்வது உங்களின் மிகப்பெரிய கடமைகளில் ஒன்று. அது ஏனோ தெரியவில்லை கல்யாணம் முடித்து பிள்ளைகள் என்று ஆனபின்பும் பொறுப்பு இல்லாமல் காரணங்கள் சொல்லிக்கொண்டு மற்றவர்களிடம் கேட்டுப்பெறுவதைத் தவறு என்று பல வருடங்கள் உணராத ஆட்கள் தமிழ்நாட்டிலேயே நம் ஊரில்தான் அதிகம் இருப்பதாக தெரிகிறது. குழந்தையாய் இருந்த காலங்களில் நமக்கு பொறுப்பு இல்லை..அதை தொடர நினைத்து அதில் ஒரு 'டேஸ்ட்" கண்டுவிட்டால் அதை விட்டு மீள்வது கொஞ்சம் கஸ்டம். ஆனால் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்று தீர்க்கம் அடைந்து விட்டால் அது மிக எளிது. உங்களின் சொந்த வெற்றியை விட எதுவும் பெரிய motivation கிடையாது.
பரீட்சை நேரமாக இருப்பதால் மாணவர்கள் சிலபேர் மின்சாரம் சரியாக இருந்தால் நான் நன்றாக படிக்க முடியும் என்று காரணங்களைக் கண்டுபிடித்து சொல்லிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். மின்சாரப் பிரச்சினை உங்களுக்கு மட்டும் அல்ல. மொத்த தமிழ்நாட்டுக்கும்தான். உங்களுக்கு ரிசல்ட் வரும்போது மற்ற மாணவர்களும் நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்து இருப்பார்கள், அந்த சூழ்நிலையில் "கூடங்குளத்திலிருந்து தனியாக 3 ஃபேசில் அவன் வீட்டுக்கு மட்டும் கரண்ட் வந்தது” என சொல்லபோகிறீர்களா?'. முன்பு எழுதியதுதான் உங்கள் மார்க் சீட்டில் இப்போது உள்ள “கூடங்குளம் அணு மின்நிலையப் பிரச்சினை”, “தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின் வெட்டு”, “முல்லைப்பெரியாறு அணை விவகாரம்” எது பற்றியும் பிரிண்ட் ஆகி இருக்காது, உங்கள் மார்க்கை தவிர... நீங்கள் வேலை / படிப்பு தேடி போகும் எந்த இடத்திலும் 'இந்த பிரச்சினைகளை" சொன்னால் “பாட்டி வடை சுட்டு வித்த கதை”க்கு கிடைக்கும் முக்கியத்துவம் கூட கிடைக்காது.
Concentrate on your studies… focus on your development not on finding ‘reasons'.
Tough time won’t last…tough people will…
We will meet in next episode…
ஏற்றம் தொடரும்...
ZAKIR HUSSAIN
3 Responses So Far:
நல்லது வேண்டி
அடக்கத்தளங்களில்
படி கட்டுபவர்கள்
படிக்கட்டும் - இந்த
படிக்கட்டுகளை...
கவலையுற்று
காரியமாற்றத் துணிவர்
//மொத்த தமிழ்நாட்டுக்கும்தான். உங்களுக்கு ரிசல்ட் வரும்போது மற்ற மாணவர்களும் நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்து இருப்பார்கள், அந்த சூழ்நிலையில் "கூடங்குளத்திலிருந்து தனியாக 3 ஃபேசில் அவன் வீட்டுக்கு மட்டும் கரண்ட் வந்தது” என சொல்லபோகிறீர்களா?'.//
//நல்லது வேண்டி
அடக்கத்தளங்களில்
படி கட்டுபவர்கள்
படிக்கட்டும் - இந்த
படிக்கட்டுகளை...
கவலையுற்று
காரியமாற்றத் துணிவர்//
ஆஹா ! அருமை....
Post a Comment