Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தரமற்ற தாரகை விருப்பம்! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | April 14, 2015 | , , ,


(against “My Choice” of Deepika Padukon)

பெண்ணியம் என்றொரு
பிரம்பை எடுத்துத்
தன்னையே தாக்குதல்
தகுமா

கண்ணியம் காப்பதே
புண்ணியம் மிக்க
பெண்ணியம் என்பதை
எண்ணியும் பாராமல்…

உண்ணி ஏறிய
ஊர்ப்பசு போல
கடியில் சொக்கிக்
குறுதி இழத்தலே
கதியா

பாரதி தேடிய
புதுமைப் பெண்ணிலும்
பகுத்தறிவுற்று
பண்பட்ட இம்மண்ணிலும்
பாலியல் வக்ரமும்
பலருடன் புணர்ச்சியும்
புதுமை என்று
புலம்புதல் பேதமை

வனப்பைக் காட்டி
பிழைப்பை நடத்துவோர்
முறையான பெண்மைக்கு
வரையறை சொல்வதா

அவர்தம் பிழைப்பில்…

ஆடைகள் குறைத்து
அடைந்த செல்வத்தில் -நவீன
ஆடைகள் வாங்குவர்

மேடைகள் கிடைத்தால்
போதையில் ஆடுவர்

கூடுதல் காசுக்குக்
கொஞ்சுவர் குழைவர்

வசனத்திற்கேற்ப
வதனத்தை மாற்றுவர்

வாலிபர் மனத்தில்
போலியைக் காட்டி
சோலியை முடிப்பர்

இந்தப் பெண்டிர்…

சொப்பன உலகத்தில்
சொலிக்கும் தாரகைகள்

எதார்த்தம் எதிர்வந்தால்
கழுத்தில் சுறுக்கிட்டு
சுறுக்கெழுத்தில்
சொல்லி முடிப்பர்
அவர்தம் வாழ்க்கையை

ஆணும் பெண்ணும்
அனைத்திலும் சமம் என்றால்
ஆணென்றும் பெண்ணென்றும்
‘அவன்’ ஏன் படைக்க வேண்டும்

ஆண்மைதான்
அகிலத்தில் உயர்ந்தது
ஆயினும்
அதைவிட உயர்ந்தது
தாய்மைப் பண்புள்ள
தரமான பெண்மை!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

9 Responses So Far:

Unknown said...

/ஆண்மைதான்
அகிலத்தில் உயர்ந்தது
ஆயினும்
அதைவிட உயர்ந்தது
தாய்மைப் பண்புள்ள
தரமான பெண்மை!//

பெண்மையின் உயர்வை உயர்த்திப்பிடித்து
ஒழுக்கமற்ற சுகத்தை ஓரம் கட்டும்
சாட்டையடி கவிதை ( என் ஆசை நிறைவேறியது )

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

காதர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நீ கேட்டுக்கொண்டபடி எழுதியது உனக்குத் திருப்தியாக இருந்தது என்பதில் மகிழ்ச்சி.

நன்றி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சுட்டுங்கள் என்றதும், கவிதை தோட்டாக்களால் துளைத்து எடுத்து விட்டீர்கள் !

Shameed said...

//வனப்பைக் காட்டி
பிழைப்பை நடத்துவோர்
முறையான பெண்மைக்கு
வரையறை சொல்வதா//

303 துப்பாகியால் சுட்டது போல் உள்ளது

ZAKIR HUSSAIN said...

கவிதையின் கடைசி வரிகள் ஒரு கவிஞனின் நடையை கத்தியில் நடக்க வைக்கும் சோதனை. சரியாக கடந்து ஜெயித்திருக்கிறாய்.

sabeer.abushahruk said...

அபு இபு,

பெண்மையை உயர்த்திப் பிடிப்பதாக நினைத்துக்கொண்டு பெண்ணியவாதிகள் சிலர் உடல்சார்ந்த விஷயங்களை மட்டும் எடுத்துச்சொல்லி பெண்களை அவர்கள் இருக்கும் நிலையிலிருந்து பாதுகாப்பற்ற படுபயங்கர படுகுழியில் பிடித்துத் தள்ளவே முனைகின்றனர். அந்தோ பாவம்.

sabeer.abushahruk said...

ஹமீது,

My Choiceல் சொல்லப்பட்டிருப்பதுபோல், "கல்யாணம் முடிந்துவிட்டாலும் புற ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள" விரும்பும் தீபிகா படுகோன்களுக்காக ச்சப்புக்கொட்டிக் காத்திருக்கிறது உறவு பந்தங்களை விரும்பாத ஓநாய் ஆண்கள் கூட்டம் ஒன்று.

sabeer.abushahruk said...

ஜாகிர்,

சரியாகப் பிடித்திருக்கிறாய். எதார்த்தமான கடுப்போடு இலகுவாக எழுதிக்கொண்டே வந்த நான் 'ஆணினமா பெண்ணினமா? எந்த இனம் பெரியது?' என்று சொல்லி முடிக்கத்தான் சிரமப்பட்டேன்.

தாயான பெண்கள் மட்டுமல்ல; தாய்மைக்கான பண்புகளைப் பெற்ற பெண்ணே உயர்ந்த படைப்பு.

அதிரை.மெய்சா said...

பெண்ணியத்தின் பெருமையையும் பேணுதலையும் சொல்லி பெற்றெடுத்த தாய்மைக்கும் தலைநிமிர்த்தும்படியான தரமான கவி படைத்துள்ளாய் நண்பா அருமை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு