ஷிர்க் (இணை வைப்பு) என்பது மாபாதகமான பாவம், இந்த பாவத்தை செய்பவன் சொர்க்கம் செல்ல இயலாது, இவனைவிட அந்த பாவத்திற்கு துனை நிற்பவர்களுக்கும், ஊக்கப்படுத்துபவர்களுக்கும், அல்லாஹ்விடம் அதிக கேள்விகள் உண்டு. கந்தூரி என்ற பெயரில் மாகான்களின் சமாதிகளின் வழிபாடும் ஷிர்க்கு அரங்கேரும் நிகழ்ச்சி, அதனை ஒட்டிய இசைக்கச்சேரி, கூத்தாட்டம் இவைகளுக்கு நிதி உதவி செய்தவர்கள், விழாவில் கலந்து கொண்டவர்கள், துவக்கி வைத்தவர்கள், நடத்துனர்கள், இதனை ஊக்கப்படுத்தும் வலைத்தளங்கள், ஆதரவளிப்பவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை நினைவூட்ட இதனை பதிவு செய்கிறோம்.
கந்தூரி, மெளலிது போன்றவைகளில் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயல்கள் உள்ளது, அவைகள் மார்க்கவிரோதம் என்று அதிரை வலைத்தள நடத்துனர்களுக்கும், முன்னால் நடத்துனர்களுக்கும் தெரியாதா என்ன? தவறு என்றிக்கும் போது அதனை கண்டித்து பதிவிடாமல், கந்தூரி பற்றிய செய்தியை வெளியிட்டு கந்தூரி ஏற்பாட்டாளர்களை ஊக்கப்படுத்துவதும் விதமாக செய்திகள் வெளியிடுவது நியாயமா? இஸ்லாத்திற்கு செய்யப்படும் துரோகம் என்று சொன்னால் மிகையில்லை.
கந்தூரி போன்ற அனாச்சார நிகழ்வுகளின் செய்திகளை வெளியிடமாட்டோம் என்று சொன்ன வலைத்தளங்களின் நிலைபாடு காற்றில் பறந்துவிட்டனவா?
கந்தூரி, மெளலித் போன்ற அனாச்சாரங்களை செய்ய நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்களா? சஹாபாக்கள் காலத்தில் இருந்துள்ளதா? நான்கு முக்கிய இமாம்கள் இமாம் ஷாபி இமாம் அபூஹனீபா இமாம் அஹ்மத் இமாம் மாலிக் ஆகியோர் காலத்தில் அவர்கள் அனுமதியோடு நடந்துள்ளதா? ஏன் அல்லாஹ்வுடைய தூதருடைய கப்ருக்கு விழாக்கள் எடுக்கப்படுகிறதா? ஷஹாப்பாக்கள் கபுருக்கு விழாக்கள் எடுக்கப்படுகிறதா? இந்த கேள்விகளுக்கு பதில் கந்தூரி ஏற்பாட்டர்களிடமும், அதனை புறக்கணிக்காமல் ஊக்கப்படுத்தும் வலைத்தள நடத்துனர்களிடமும்தான் வைக்கப்படுகிறது.
விபச்சார தொழில் செய்வது பாவம், ஆனால் அந்த தொழில் செய்பவர்களை ஊக்கப்படுத்தும் செயலை ஓரு முஸ்லிம் செய்ய விரும்புவானா?
கொலை செய்வது பாவம், ஆனால் கொலை செய்வதை ஊக்கப்படுத்தும் செயல்ல ஓர் முஸ்லீம் செய்ய விரும்புவானா?
இவைகளைவிட மிகப்பெரிய பாவம், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, அடங்கி இருக்கும் மகான் அல்லாஹ்விடம் கேட்டுத் தருவார் என்று அவ்லியாவிடம் துஆ செய்வது ஷிர்க். இதற்காக விழாக்கொண்டாடுவது மிகப்பெரிய பாவம். இதனை ஊக்கப்படுத்துவதை ஓர் முஸ்லீம் செய்கிறான் என்றால், இது நம்மை படைத்த அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் செயல் அல்லவா?
விபச்சாரத்தையும், கொலையும் ஊக்கப்படுத்த மறுக்கும் ஓர் முஸ்லீமின் உள்ளம், இதனைவிட பலகோடி மடங்கு ஷிர்க் என்ற மாபாதக இணை வைப்புச் செயலை ஊக்கப்படுத்துவதை நிச்சயம் விரும்பவே விரும்பாது.
தான் விரும்பாத ஓரு ஈனச் செயலை நம் சக முஸ்லீம் மட்டும் செய்ய விரும்புவது நல்ல முஃமீனின் பண்பா? என்பதை நம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
ஏன் தர்கா வழிபாடு கூடாது?
"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்" ஜாபிர் (ரலி) : திர்மிதீ 972, அஹ்மது 14748.
அவ்லியாக்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, ஆண்டு தோறும் கந்தூரி என்ற பெயரால் விழாக்கள் எடுப்பதும் அதில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதும் எவ்வளவு பெரிய வழிகேடு என்பதைப் பல நபிமொழிகள் எச்சரிக்கின்றன. அல்லாஹ்வின் கோபமும் அல்லாஹ்வின் தூதரின் சாபமும் கந்தூரிக்கு நிச்சயமாக உண்டு என்பதை விளங்குவதற்கு இன்னுமா தயக்கம்?
"உங்கள் வீடுகளை(த் தொழுகையற்ற) கபுருஸ்தான்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரித்தார்கள்"அபூஹுரைரா (ரலி) : அஹ்மது 8449, அபூதாவூது 1746.
"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்" அதா இப்னு யஸார் (ரலி) : அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 . `
"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்" இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.
"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். தம்முடைய சமாதியை அவ்வாறு ஆக்கிவிடுவதைப் பற்றி எச்சரித்தார்கள்" அன்னை ஆயிஷா (ரலி) : புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.
அல்லாஹ்வும் அவனின் தூதரும் கண்டித்த செய்யலை செய்யும் கந்தூரி ஏற்பாட்டளர்களே, அதற்கு உதவி செய்பவர்களே, கந்தூரி பற்றிய செய்திகளை வெளியிடுபவர்களே நீங்கள் தவ்பா கொள்ளுங்கள். இனியும் அதிரையில் உள்ள செய்திகளை திரட்டி பதியும் சகோதரர்கள், மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஷிர்க்கிற்கு துணைப்போகும் செய்திகளை வெளியிட்டு ஊக்கப்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுக்கும், மார்க்கத்தில் இல்லாத இரவு நேர கேளிக்கை விளையாட்டுக்கு வெளிநாட்டில் உள்ளவர்களும், உள்ளூரில் உள்ளவர்களும் ஊக்கம் கொடுக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.
கந்தூரி கூத்தும் ஆரம்பமாகி விட்டது. இரவு நேர கேளிக்கைகளை கந்தூரி கப்ருத் திருவிழாவில் நடத்தப்படுகிறது. நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களோ, சத்தியத் தோழர்கள்கள் யாருமே செய்யாத கந்தூரி கப்ரு வழிபாடு கேளிக்கை நிகழ்ச்சிகளை, இந்த பாவத்தின் விபரீதம் அரியாத பாவப்பட்ட நம் சமுதாயம் செய்து வருகிறது, இந்த பாவத்திலிருந்து மீட்டெடுக்க, பல வருடத்திற்கும் மேலாக நம்முடைய சமுதாய சகோதரர்கள் அவமானம், அடி, உதைகள் வாங்கிக் கொண்டு, பிறமத காலாச்சாரமான கந்தூரி கூத்து திருவிழாக்களை முஸ்லீம்களிடம் இருந்து தூக்கி எறிய அயராது போராடி வருகிறார்கள். இந்த சூழலில் மக்களிடம் செய்திகளை எளிதில் எடுத்துச் செல்லும் நவீன மீடியாக்களை தன் கையில் வைத்திருக்கும் நம் சமுதாய இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். செய்திகளை தருகிறோம் என்ற பெயரில் மார்க்கத்துக்கு விரோதமான தர்கா கப்ரு வழிபாடு, கூத்து கும்மாளம் நிறைந்த கந்தூரி கூத்துக்களை ஊக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வுடைய கோபத்திற்கு நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களும் ஆளாக வேண்டாம் என்று நல்லெண்ணத்தில் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புடைய சுட்டிகள்:
அதிரைநிருபர் பதிப்பகம்
3 Responses So Far:
நரகத்தின் கொள்ளிக்கட்டைகலாகத்தான் எங்கள் வாழ்வை நாங்கள் இவ்வுலகை விட்டும் முடித்துக்கொள்வோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு , வீம்பையும் வீராப்பையும் மனதில் கொண்டிருப்பவர்களுக்கு இது போன்ற எத்தனை விழிப்புணர்வு பதிவுகளை பதிந்தாலும் மர மண்டைகளுக்கு மனதில் ஏறாது.
ஆதலால் கதவு உடையும் வரை தட்டுவோம். உடைக்கப்படாமல் திறக்கப்பட்டாலும் சரி உடைத்தே திறந்தாலும் சரி ஒரு நாள் அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வந்தே தீரும். அது இன்றாகவும் இருக்கலாம் நாளையாகவும் இருக்கலாம்.
யா அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டு என்று இறைவனிடம் இறைஞ்சுவோம் நம் சமுதாயம் நரகத்தை நோக்கி சென்றுவிடக்கூடாது என்று
கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவோம் . முயற்ச்சிக்கு இறைவனின் உதவி
கிடைக்கும் என்று நம்புவோம்.
இறையருள் கிடைக்க இறுதி நபியை பின் செல்வோம்.
அபு ஆசிப்.
,
யா அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டு என்று இறைவனிடம் இறைஞ்சுவோம் நம் சமுதாயம் நரகத்தை நோக்கி சென்றுவிடக்கூடாது என்று
கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவோம் . முயற்ச்சிக்கு இறைவனின் உதவி
கிடைக்கும் என்று நம்புவோம்.
ஆதலால் கதவு உடையும் வரை தட்டுவோம். உடைக்கப்படாமல் திறக்கப்பட்டாலும் சரி உடைத்தே திறந்தாலும் சரி ஒரு நாள் அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வந்தே தீரும். அது இன்றாகவும் இருக்கலாம் நாளையாகவும் இருக்கலாம்.
Post a Comment