அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
உலக
பற்றின்மையின் சிறப்பு – உலக
சுகங்களை குறைத்துக் கொள்ள ஆர்வமூட்டல், ஏழ்மையின் சிறப்பு
மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்), அல்லாஹ்
விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம். (அல்குர்ஆன்: 35:5)
மண்ணறைகளைச்
சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது
உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள். அவ்வாறில்லை நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின்
நரகத்தைக் காண்பீர்கள். பின்னர்
மிக உறுதியாக அறிவீர்கள். பின்னர்
அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 102:1-7)
இவ்வுலக
வாழ்க்கை வீணும், விளையாட்டும்
தவிர வேறில்லை மறுமை வாழ்வு தான் வாழ்வாகும், அவர்கள் அறியக் கூடாதா? (அல்குர்ஆன் : 29:64)
''நபித்தோழர்கள் ஒரு நாள் நபி(ஸல்) அவர்களிடம் உலகைப் பற்றி நினைவு
கூர்ந்தார்கள். அப்போது நீங்கள் கேட்க மாட்டீர்களா? நீங்கள் கேட்க மாட்டீர்களா? நிச்சயமாக எளிமையான தோற்றம், இறைநம்பிக்கையில் உள்ளதாகும். நிச்சயமாக எளிமையான தோற்றம், இறை நம்பிக்கையில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா என்ற இயாஸ் இப்னு தஹ்லபா அன்சாரீ ஹாரிஸீ(ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 517)
நபி(ஸல்)
அவர்கள் எங்களை (ஒரு போருக்கு) அனுப்பினார்கள். எங்களுக்கு அபூஉபைதா(ரலி) அவர்களை தலைவராக நியமித்தார்கள். குறைஷிகளின் படையை நாங்கள் சந்தித்தோம். பேரீத்தம்பழம்
இருந்த ஒரு தோல் பையை எங்களுக்கு நபி(ஸல்) வழங்கினார்கள். அது தவிர வேறு எதுவும் எங்களிடம்
இல்லை, அபூஉபைதா(ரலி) அவர்கள் ஒவ்வொரு பேரீத்தம் பழமாக எங்களுக்குக் கொடுத்துக்
கொண்டிருந்தார்கள். ''அதைக் கொண்டு நீங்கள் எப்படி (பசி போக்கிட) செய்தீர்கள்? என்று
கேட்கப்பட்ட போது, சிறுவர்கள் சாப்பிடுவது போல் அதை நாங்கள்
சப்பிக் கொள்வோம். பின்பு அதைத் தொடர்ந்து தண்ணீரைக்
குடித்துக் கொள்வோம். எங்களின் ஒருநாள் இரவு வரை எங்களுக்கு
அது போதுமாகும். எங்களின் கம்புகளால் நாங்கள் மரக்கிளையில் அடிப்போம். பின்பு உதிர்ந்த அதன் இலைகளை தண்ணீரில் ஊற வைத்து, அதை
உண்போம். கடற்கரையில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்.
மணல் திட்டுப் போன்ற ஒரு பொருள் கடற்கரையில் எங்களுக்குத் தெரிந்தது.
அந்த இடம் வந்தோம். அப்போது அது அன்பர் எனும் ''திமிங்கலம்'' ஆகும். ''இறந்து
விட்டதே'' என்று கூறிய அபூஉபைதா(ரலி)
அவர்கள், பரவாயில்லை, நாம்
நபி(ஸல்) அவர்களின் தூதர்களாக
இறைவழியில் உள்ளோம். எனவே நீங்கள் சாப்பிடுங்கள்' என்று அபூஉபைதா(ரலி) கூறினார்கள்.
அங்கே நாங்கள் ஒரு மாதம் தங்கி இருந்தோம். நாங்கள்
முன்னூறு பேர். இருப்பினும் (அதைச்
சாப்பிட்டு)குண்டாகி விட்டோம்.
நாங்கள் அதன் கண்ணை |நோண்டி, அதன் குழியில் உள்ள கொழுப்பை சேகரித்தோம்.
அதிலிருந்து காளைமாட்டைப் போல், அதன் இறைச்சி (யை வெட்டுவது) போல் வெட்டி எடுப்போம். அபூஉபைதா(ரலி) அவர்கள்,
எங்களில் பதிமூன்று நபர்களை தேர்ந்தெடுத்து: அதன்
கண் குழியில் அவர்களை உட்கார வைத்தார்கள். அதன் விலா
எலும்புகளில் ஒரு எலும்பை எடுத்து, அதை நட்டு வைத்து,
பின்பு எங்களுடன் இருந்த பெரும் ஒட்டகையை, அதன்
கீழே நடக்கச் செய்தார்கள். மீன் இறைச்சியிலிருந்து உப்புக்
கண்டங்களையும் சேகரித்துக் கொண்டோம். மதீனாவிற்கு நாங்கள்
திரும்பிய போது நபி(ஸல்) அவர்களிடம்
வந்தோம். அவர்களிடம் நடந்ததைக் கூறினோம். அப்போது அவர்கள் ''இது அல்லாஹ், உங்களுக்கு அனுப்பிய உணவாகும். உங்களிடம் அதன்
இறைச்சியில் ஒரு துண்டு இருந்தால், எங்களுக்கு நீங்கள்
சாப்பிடத் தரலாமே'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள்
கொடுத்தோம் அதை அவர்கள் சாப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஅப்துல்லா ஜாபிர் இப்னு அப்துல்லா(ரலி)அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 518)
நாங்கள் அகழ்போரின் போது, அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது பெரும் பாறை ஒன்று தென்பட்டது. |உடனே
நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம்
வந்து, ''இது பெரும் பாறையாகும். அகழ்
குழிக்குள் தென்படுகிறது'' என்று கூறினார்கள். ''நான் (|குழிக்குள்) இறங்குகிறேன்
எனக் கூறிய நபி(ஸல்) அவர்கள், எழுந்து நின்றார்கள். அவர்களின் வயிறோ கல்லால்
கட்டப்பட்டிருந்தது. மூன்று நாட்களாக எந்த உணவையும் நாங்கள்
சுவைக்கவே இல்லை. நபி(ஸல்) அவர்கள் கோடாரியை, எடுத்து அடித்தார்கள். (அந்தப்பாறை) தூள்தூளாக ஆகிவிட்டது. இறைத்தூதர் அவர்களே! என் வீட்டிற்குச் செல்ல எனக்கு
அனுமதி தாருங்கள்'' என்று கேட்டேன். (வீட்டிற்கு
வந்து) என் மனைவியிடம், ''நபி(ஸல்) அவர்களை நான் பொறுத்துக் கொள்ள இயலாத நிலையில்
கண்டேன். உன்னிடம் (உண்ண) ஏதேனும் உண்டா?'' என்று கேட்டேன். ''என்னிடம் தொலிக் கோதுமையும், ஒரு ஆட்டுக் குட்டியும்
உள்ளது'' என என் மனைவி கூறினார்.
நான் ஆட்டை அறுத்தேன்.
தொலிக் கோதுமையை மாவாக அரைத்தேன். இறைச்சியை
ஒரு சட்டியில் போட்டோம். பின்பு நபி(ஸல்)
அவர்களிடம் வந்தேன். அப்போது மாவும் ஊறி
இருந்தது. சட்டியும் அடுப்பில் இருந்தது. இறைச்சி வெந்த நிலையில் இருந்தது. ''என்னிடம்
சிறிதளவு உணவு உள்ளது. இறைத்தூதர் அவர்களே! நீங்களும் மற்றும் ஓரிருவரும் வாருங்கள்''என்று
கூறினேன். அந்த உணவு எவ்வளவு உள்ளது? என்று
நபி(ஸல்)அவர்கள் கேட்டார்கள். அவர்களிடம் கூறினேன். ''தூய்மையான அதிகமான உணவு அது.
நீ உன் மனைவியிடம் ''நான் வரும்வரை இறைச்சி
சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டாம் என்று கூறு'' என்று
கூறிய நபி(ஸல்) அவர்கள், ''வாருங்கள் என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள். உடனே முஹாஜிர்களும், அன்சாரிகளும் எழுந்தார்கள்.
மனைவியிடம் நான் வந்தேன். ''உனக்கு துன்பம்தான். நபி(ஸல்)அவர்கள் முஹாஜிர்களும்,
அன்சாரிகளும் மேலும்
அவர்களுடன் உள்ள அனைவரும் வந்து விட்டனர்'' என்று
கூறினேன்.
''உங்களிடம்
நபி (ஸல்) அவர்கள் விபரம் கேட்டார்களா?''
என மனைவி கேட்டாள். ''ஆம்'' என்றேன். அதற்குள் இறைத்தூதருடன் அனைவரும் வந்து
விட்டார்கள். அவர்களை, ''உள்ளே
வாருங்கள்! நெருக்கிக் கொள்ள வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் |கூறினார்கள். அவர்கள் ரொட்டியைப் பிய்த்து எடுத்து,
அதில் இறைச்சியை வைத்தார்கள். அடுப்பையும்
சட்டியையும் அதில் எடுத்ததும் மூடினார்கள். தன் தோழர்களுக்குக்
கொடுத்தார்கள். ரொட்டியையும் எடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
இறைச்சியையும் வைத்துக் கொண்டே இருந்தார்கள். நபித்தோழர்கள்
வயிறு நிறைய சாப்பிட்டார்கள். அதில் மீதமும் இருந்தது.
நபித்தோழர் மனைவியிடம், ''இதை நீயும் சாப்பிடு.
பிறருக்கும் அன்பளிப்புச் செய், மக்களை
பசிப்பிணி பிடித்துள்ளது'' என்று நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 520)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன் S.
0 Responses So Far:
Post a Comment