என்னைக் கண்டெடுத்தேன்!


இந்த இருவரிடமும்
ஏதோ
ஈர்ப்பு சக்தி இருக்கிறதோ ?!

பார்த்ததும்
பத்து வயது குறைகிறதே!
பார்வையில்
பச்சை வயல் விரிகிறதே!

இவ்விருவரும்
நட்பென்ற உறவை -எனக்கு
நச்சென்று உணர்த்தியவர்கள்

உயிரூட்டப்பட்டப் புத்தகங்களாய்
என்னோடு வளர்ந்து
எனக்குள்
அறிவைப்
பயிரிட்டு வளர்த்த பண்பாளர்கள்

கால்க்காசு அரைக்காசுவென
காசில்லாக் காலத்திலும்
கோடீஸ்வரக் கொண்டாட்டத்தைக்
குறைவின்றித் தந்தவர்கள்

ஒருவன் துவக்கி
ஒருவன் முடிக்கும்
இந்தப்
பள்ளிப் பருவ
தொடர் ஓட்ட வீரர்களால்
இடையோட்டக்காரனான
என் தொய்வான பிள்ளைப் பிராயம்
வெற்றியையே எட்டி மீண்டது

வயற்காட்டு நடுவில்
குளிர் நீர்க் குளம்
கடற்காற்று வீசும்
ரயில் ஊரும் தடம்

உடல் வேர்க்க ஆடும்
விளையாட்டுத் திடல்
உடை மாற்ற நாடும்
குளக்கரை  இடம்

அதிகாலை தொழ
சாளரக் கதவு தட்டவும்
அடைமழை காலம்
கூடவே கச்சல் கட்டவும்

என
இறக்கைக் கட்டிப் பறந்த
வாழ்க்கையில்...

ஆளுக்கொரு வேகத்தடை
ஆங்காங்கே சிரித்தாலும்
அழகாய்ப் போய்ச் சேர்ந்தோம்
அவரவர் இணையோடு

சந்தோஷம்
சர்வ பலத்தோடு
என்னுள் நிலவ
சகலமும் இவர்கள் நட்பே

எங்களின்
அன்றாட உரையாடல்களைக்
காற்புள்ளி வைத்தே
கலைந்து செல்வோம்;
முற்றுப்புள்ளி இல்லாத
உரையாடல்கள்,
இறுதிச்சுற்றிலாத விளையாட்டுகள்
என
நட்பில் திளைத்த
நாட்கள் அவை

ஒத்த ரசனையும்
மெத்த ஒழுக்கமும்
ஒன்றிணைத்த எங்களை
எந்த விஷமமும்
சீண்டியதில்லை
எந்த இச்சையும்
தூண்டியதுமில்லை

புன்னகையைக் கூட
பற்கள் தெரிய
பிரமாண்டமாகவே பூப்போம்

எல்லையற்ற இந்த
இன்பக் கடலில்தான்
என் நண்பர்களிடம்
என்னை நான் கண்டெடுத்தேன்

வீடென்றும்
தெருவென்றும் - பின்னாளில்
நாடென்றும் - எங்களைப்
பிரித்துப்போடாமல் விட்டிருந்தால்
உறக்கத்தைக்கூட
முடிச்சுப்போட்டு வைத்து
விலகாமல் வாழ்ந்திருப்போம்

காலக் கத்தியில் நடந்து
தூரதேசம் பயணித்து
தோழர்களைத் தோளணைக்க
தொலைந்துபோன காலங்களின்
திகட்டாத
மகழ்ச்சி மட்டுமே
மறுபடியும் மீள்கிறது

இந்த மீட்சியே
தலையாய பிடிமானம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

25 கருத்துகள்

crown சொன்னது…

ஒருவன் துவக்கி
ஒருவன் முடிக்கும்
இந்தப்
பள்ளிப் பருவ
தொடர் ஓட்ட வீரர்களால்
இடையோட்டக்காரனான
என் தொய்வான பிள்ளைப் பிராயம்
வெற்றியையே எட்டி மீண்டது
-----------------
அஸ்ஸலாமுஅலைக்கும். ஆஹா! எதார்த்தமாக சொல்ல பட்ட உண்மையுடன் தமிழையும் மெல்ல குழைத்து சமயத்தில் புகுத்தி ஓடும் ஓட்டம்!அருமை!

sheikdawoodmohamedfarook சொன்னது…

இந்தநூற்றாண்டில்இதுபோன்ற ஒருநட்பு உலக அதிசயங்களில் ஒன்று.உஸ்ஸ்யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். கண்ணுபடும்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

அந்த தாடிக்கார மூன்றாவது நபர்யார்?

Shameed சொன்னது…

சிரிப்பில் கூட ஒற்றுமை

Shameed சொன்னது…

என்னுடைய ரோல் மடல் ஹீரோ இந்த மூவரும்

sabeer.abushahruk சொன்னது…

வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவ்ன்.

நட்பு எனும் வார்த்தை தமிழுக்கே அழகெனில் நண்பன் என்ற பதம் உறவுகளிலேயே மிக அழகானது.

நன்றி.

sabeer.abushahruk சொன்னது…

ஹமீது,

செல்வத்துள் செல்வம் சிரிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை ?

உங்களிடம் நான் கற்றதும் நிறைய உண்டு. சிலவற்றிற்கு நாங்கள் உப்க்களுக்கு ரோல் மாடல் எனில் சிலவற்றிற்கு நீங்கள் எனக்கு.
அதில் குறிப்பாக, உங்கள் 'திட்டமிடல்' பிடிக்கும்.

sabeer.abushahruk சொன்னது…

ஃபாரூக் மாமா,

அந்த மூண்றாமவன் எங்கள் ரியாஸ்.

கடற்கரைத் தெரு.

முஹமது ரசீது ஃபரீதாமா தம்பதியரின் மூத்த மகன்; அப்பாவீட்டு அலி அக்பர் வான் ஃபரீதா தம்பதியரின் இரண்டாவது மருமகன். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் மகன் ஹமீதுவின் நல்ல நண்பன்; உங்களுக்கு நல்ல பரிச்சயமானவன்.

Ebrahim Ansari சொன்னது…

இளமை நட்பு இன்றும் பசுமையாகத் தொடர்வதில் இருக்கும் ஆனதமே அலாதி.

http://adirainirubar.blogspot.in/2012/01/blog-post_26.html

அதிரை.மெய்சா சொன்னது…

நட்பெனும் உறவு எந்த ஒரு உறவுக்கும் ஈடு இணை இல்லாத உன்னத உறவு.

நம்மைச்சுற்றி எத்தனை சொந்தபந்தங்கள் இருந்தாலும் ஒரு நண்பன் இல்லையெனில், மனத்தினில் மகிழ்ச்சி இருக்காது. நட்பை பற்றிய நல்ல நினைவூட்டல் நண்பா.

(என் ஃபிரண்டைபோல யாரு மச்சான்.)

sheikdawoodmohamedfarook சொன்னது…

//அந்தமூன்றாமவன் எங்கள் ரியாஸ் //மன்னிக்கவும் நீண்டநாள் கண்ணில் காணாததால்என் நினைவில் ஒருமயக்கம். மருமகன்ரியாசுக்கு என் சலாத்தை சொல்லவும்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

நல்ல நண்பர்கள் அமைவது ஒரு பாக்கியம்.அது எல்லோருக்கும் கிட்டுவதில்லை.எனக்கமைந்த நண்பர்களில்தன் காரியம் ஆனதும் ''நீயாரோ?நான்யாரோ?''என்று கை விட்டுபோனவர்பலர்.ஒரே ஒருவர் மட்டும் கடைசிவரை நின்றார்.அவர் தண்டையார்வீட்டு மர்கும் ராவன்னா. மூனா.சாஹுல் ஹமித்[அல்லாஹ் அன்னார் மீதுசாந்தியும் சமாதானத்தையும் பொழிவானாக] மற்றதெல்லாம்அற்றகுளத்தில்அறுநீர்பறவைகள்தான்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//புன்னகையைக் கூட
பற்கள் தெரிய
பிரமாண்டமாகவே பூப்போம்//

அதைத்தானே எப்போதும் பார்ப்போம் ! :) உங்கள் முகங்களில்...

Ebrahim Ansari சொன்னது…

இந்தப் பதிவு நெறியாளரின் கருத்திடலால் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கும் பெருமையையும் பெற்று இருப்பதைக் காண மகிழ்ச்சி.

sabeer.abushahruk சொன்னது…

காக்கா,

தங்களின் அந்தக் கடிதம் ஒரு திரைக்கதை வடிவத்தைவிட சுவாரஸ்யமானது.

மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன்.

நன்றி

sabeer.abushahruk சொன்னது…

அபு இபு,

இன்னும் சற்று காலம் கடந்தபின் நினைவுகூரத்தக்கதே நமது நட்பும்

நன்றி

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கும் பெருமையையும் பெற்று //

யாங் காக்கா ! :)

நானும் காரணம் சொல்லி தப்பிக்க வில்லை...

:)

Ebrahim Ansari சொன்னது…

அன்புள்ள தம்பி அபு இபு!

//யாங் காக்கா ! :)//

//நானும் காரணம் சொல்லி தப்பிக்க வில்லை...//

தம்பி!

நானும் பதிவுகளை அனுப்ப இயலாவிட்டால் உண்மையான காரணங்களையே சொல்வேன். தப்பிக்கும் தப்பை செய்தவனில்லை.

குறை சொன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சும்மா அன்பான சீண்டல் என்றே எடுத்துக் கொள்ளவும்.

Ebrahim Ansari சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Ebrahim Ansari சொன்னது…

அன்பான தம்பிகளே!

சிரிக்கும்போது கூட நீயும் நானும் ஒரே எண்ணிக்கையில் பல் தெரியும்படி சிரிக்கவேண்டுமென்று வகுத்து இருக்கிற சபீர்- ஜாகிர் நட்பு ஒரு உயர்வான உதாரணமாகும்.

இந்தக் கவிதையைப் பார்த்த உடன் நினைவுக்கு வந்தது அன்று நான் பேராசிரியருக்கு எழுதிய கடிதம் அதிரை நிருபரில் வெளிவந்த அந்தத் தருணம். அதை மீண்டும் படிக்கவும் பகிரவும் எண்ணியே சுட்டினேன். மீண்டும் படிக்கும்போது பலமுறைகள் கண்கள் கசிந்தன. வாழ்வின் கடைசிப்படிக்கட்டுகளில் நிற்கும் இந்தத் தருணங்களில் அப்படி எல்லாமா வாழ்ந்தோம் என்று எண்ணிப் பார்க்கும்போது ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்த இதயம் சற்றும் அதிகமாகவே பிசையப்படுவதாக உணர்கிறேன்.

இன்னும் நண்பர்களைப் பற்றியும் நட்பு பற்றியும் நினைக்கும் போதெல்லாம் மூச்சை உள்ளே இழுக்காமலேயே ஆக்சிஜன் , அடுக்கடுக்காய் கிடைக்கிறது.

நட்பும் நண்பர்களும் என்றும் வாழ்க. எல்லா இனிய நண்பர்களுக்கும் இறைவனின் அருள் கிட்டுமாக!

Riyaz Ahamed சொன்னது…

Very much well done kavithai. But to publish it ??...will it be welcomed by others?
-zakir hussain

சலாம்.பீர் என்னா சொல்வதென தெரியலெ உணர்வுகளையும்,உணர்ச்சிகளையும் வார்த்தெடுக்க உன்னை தவிர வேறு யாரையும் எனக்கு தெரியலெ
-ரியாஸ்

சலாம்.ஜாகிர் லேங்வேஜில் எப்படி பாஸ் இதெல்லாம்?

Riyaz Ahamed சொன்னது…

Very much well done kavithai. But to publish it ??...will it be welcomed by others?
-zakir hussain

சலாம்.பீர் என்னா சொல்வதென தெரியலெ உணர்வுகளையும்,உணர்ச்சிகளையும் வார்த்தெடுக்க உன்னை தவிர வேறு யாரையும் எனக்கு தெரியலெ
-ரியாஸ்

சலாம்.ஜாகிர் லேங்வேஜில் எப்படி பாஸ் இதெல்லாம்?

نتائج الاعداية بسوريا சொன்னது…

அப்பாடா இப்பவாச்சும் கொஞ்சமாகிலும் நரைமுடி தெரிகின்றதே!

நான் யாரோ

sabeer.abushahruk சொன்னது…

என் தலைமுடியில் கூடுதல் கண் வைக்கக் கூடியவன்...

யாதரு... ஐ மீன் யாரது?

யாகாரம் காகாரமானவனோ?

மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?

டேய்...நீதானே?

தான் எவிட போயடா? காணாங்கிட்டுதில்லல்லோ

Ahamed irshad சொன்னது…

மாஷா அல்லாஹ், உங்கள் நட்பு பொறாமை கொள்ள வைக்குது...சரியான ஒரு பின்னூட்டம் (I mean Answer/Reply) என்னிடம் இல்லை..ஒருவேளை உங்கள் வயசில் வரும்போது அந்த பக்குவத்தில் வார்த்தைகள் வரும் போல இருக்கிறது சபீர் காக்கா....