Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஓட்டுக்கு பணம் - லஞ்சம் ஹராம் 12

அதிரைநிருபர் பதிப்பகம் | April 27, 2016 | , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்....!

தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது வரும் ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் நாள். மக்கள் யாருக்கு ஓட்டு போடுவது என்று அநேகம் முடிவு செய்திருப்பார்கள். இச்சூழலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் போக்கு தமிழக அளவில் அதிகரித்துள்ளது. இதை யார் செய்கிறார்கள் என்பது நாடறிந்த விசயமாகி விட்டது. தன் அணிக்கு ஒட்டுப் பெறுவதற்காக பணம் பட்டுவாடா செய்வதில் அதிரைவாசிகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓட்டுரிமை ஒரு ஜனநாயக கடமை, காசுக்காக ஓட்டு போடுவதும் ஓட்டுப்போட வைப்பதும் நம் நாட்டில் சட்டப்படி குற்றம். சட்டத்தை இயற்றும் அவைக்கு செல்பவனே சட்டங்களை மதிப்பதில்லை இந்நாட்டில் எவர்தான் சட்டத்தை எல்லாம் மதிக்கிறார்கள், மக்களுக்கு உழைப்பின்றி காசு கிடைக்குது இதுக்கெல்லாமா ஒரு கட்டுரை? என்ற எண்ணம் இதை படிக்கும் சிலருக்கு தேன்றும். உண்மை தான். ஜனநாயகத்தை மதிக்கும் இந்தியனாக அணுகுவதற்கு முன்பு இதை ஒர் இஸ்லாமிய பார்வையில் அணுகுவதே ஒவ்வொரு முஸ்லீகளின் கடமை. சிந்திப்பீர்...!

ஓட்டுக்காக (தீர்ப்புக்காக) பணம் வாங்குவது லஞ்சம் இது ஹராம் என்பதை பின் வரும் இறைவசனங்களும், நபி மொழிகளும் நமக்கு நன்கு உணர்த்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.  (அல்-குர்ஆன் 4:29)

மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:

தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இப்னுமாஜா)

அல்லாஹ்வின் இறை வசனமும், நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் மாறிமாறி இருந்து வரும் இருபெரும் கட்சியும் இன்னும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும், ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் கட்சிகளும் கடந்த பல தேர்தல்களில் பணம் பட்டுவாடா செய்து ஓட்டுக்கள் பெற்றார்கள் என்பதை ஊரில் உள்ள மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் அறிவார்கள். மார்க்கத்தை விளங்காத காலத்தில் சில தெருக்களில் பிரபலமான நம்மூர் பெண்கள் (பெருசுகள்) இரவோடு இரவாக வீடுவீடாக சென்று பணம் கொடுத்து ஓட்டுக்கள் பெரும் முயற்சியில் ஈடுப்பாட்டார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் சிறுபிள்ளைகளாக இருந்த காலத்தில் கண்டிருப்பார்கள். பாவம் அந்த பெருசுகளுக்கு இது போன்ற ஹதீஸ்கள், குர்ஆன் ஆயத்துக்கள் எத்தி வைக்கப் படாமிலிருந்திருக்கலாம். யா அல்லாஹ்! ஓட்டுக்காக பணம் லஞ்சம் பட்டுவாடா செய்த அந்த பெண்மணிகளை மன்னித்து விடுவாயாக. ஆனால் இன்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அவலம் தொடர்கிறது என்பது தான் வேதனை. தேர்தல் அல்லாத நேரத்தில் மார்க்கத்தை பேசும் சிலரும் இது போன்ற ஹராமான செயல்களை நம் சமூகத்தவர்கள் செய்கிறார்கள் என்று அறிந்தும் அதை தடுக்க மறுக்கிறார்கள், என்ற செய்திகளை கேள்விப் படும்போது போது மிக வேதனையாக உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஓட்டுக்காக பணம் விநியோகம் மறைத்து வைத்தும் ரகசியமாகவும் பட்டுவாட நடந்து வருவதை பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும பிடிபடுவதை காண முடிகிறது. சில வீடுகளில் இருக்கும் நபர்களின் ஓட்டு எண்ணிக்கையை வைத்து தொகையை முடிவு செய்து கொடுக்கப்படுகிறதையும் அறிய முடிகிறது. தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்பவர் 5000-ருபாய்க்கு 500-ருபாயும், 1000-ரூபாய் 100-ரூபாயும் பட்டு வாடா செய்பவர் கமிஷன் என்று சொல்லி எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் தகவல்கள் கசிந்து கொண்டு இருக்கிறது. என்ன கேவலமோ...! இது உண்மையா? அல்லது பொய்யா? என்பதை அல்லாஹ் மட்டுமே நன்கறிவான்.

இது நம் பணம் தான் என்று சாக்கு சொல்லும் பிரபலங்கள் சொல்லுகிறார்கள், ஏன் நாம் இதை வாங்கிக் கொள்ளக்கூடாது? என்று ஒரு சில அறிவாளிகள் வாதாடுகிறார்கள். இவர்கள் இப்படிச் சொல்லுவதால் அது நம் பணமாகி விடுமா? அடுத்த தேர்தல் தேதிக்குள் எனக்குள்ள பங்கு பணம் தரவேண்டும் என்று இந்த அரசியல் கொள்ளைகார கூட்டத்துடன் நம் மக்கள் அக்ரிமண்ட் போட்டுத்தான் சென்ற தேர்தலில்  தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா?  ஓசியில் பணம் எவன் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வெட்கமில்லையா நம் மக்களுக்கு?

அன்பானவர்களே ஓட்டுக்காக பணம் வாங்குவதும் லஞ்சமே, அது தடுக்கப்பட்டது என்பதை மேல் சொல்லப்பட்ட இறைவசனங்களும், நபிமொழியும்  நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இதை அதிரையில் உறவுகளிடம் எடுத்துச் சொல்லுங்கள், பணம் வாங்கியிருந்தால் தந்தவரிடமே அதை திருப்பி கொடுத்துவிட சொல்லுங்கள். ஊருக்கும் நம் சமுதாயத்திற்கும் நல்லது செய்பவர் யார் என்பதை முடிவு செய்து ஓட்டுப்போட சொல்லுங்கள்.

ஏகத்துவத்தை இவ்வுலகில் நிலைநிறுத்தி, இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ்வின் திருப்தியை அடைவதை மட்டுமே லட்சியம் என்பதை மறந்து, கட்சிகளுக்கு நம் பலம் காட்ட வேண்டும் என்று கச்சைகட்டி உண்மைகளை மறைத்து பொய்களை மெய்படுத்தி மேடை மேடையாக இந்த தேர்தல் பிரச்சாரங்களில் பேசிவரும் நம் சமுதாய சகோதரர்களுக்கு கிழ் வரும் இறைவசனத்தை கேள்வியாக வைத்து இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

வேதமுடையோரே! ஏன் உண்மையை பொய்யுடன் கலக்கிறீர்கள்! அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள். (திருக்குர்ஆன் 3:71)

அல்லாஹ் போதுமானவன்.

தயவு செய்து உங்கள் பொன்னான வாக்குகளை தகுதியானவருக்கும் இன்றைய சூழலில் யார் ஆட்சிக்கு வந்தால் நம் சமுதாயம் அமைதியுடன் நிம்மதியாகவும் இருக்கும் என்ற திடமான தீர்மானத்தில் ஓட்டு போடுங்கள் இன்ஷா அல்லாஹ் !

அதிரை நிருபர் பதிப்பகம்

12 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

காந்தி நோட்டு
கள்ள ஓட்டு
இன்றைய இந்தியா

sheikdawoodmohamedfarook said...

ஒட்டு வாங்கி வெற்றி பெற்று போறவனும் லஞ்சம்தான் வாங்குகிறான்.அவனிடம் ஓட்டுக்கு பணம் வாங்காமல் ஓட்டு போடும் மக்கள் மக்கள் அல்ல மக்கு. 'ஆடை இல்லா ஊரில் கோவணங் கட்டியவன் பைத்திய காரன்'என்பதே உண்மை.When you are in Rome do as Romans do.

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்

தஜுதீன் மிக அருமையான ஆர்டிக்கில்
இதில் உள்ள ஹதீசயும் இன்னும் சில கருத்துக்களையும் சிறிதாக கோர்வை செய்து இன்றைக்கே நமதூரில் ஆட்டோ விளம்பரம் செய்தாக வேண்டும்

மக்களுக்கு இந்த ஹதீஸ்களை எடுத்து சொல்லி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவேண்டும் ஹராமான காசு அப்பவிமாக்களுக்கு போய் சேரக்கூடாது

இரண்டு நாட்களுக்கு ஆட்டோ விளம்பரம் செய்தால் என்ன 2000 ரூபாய் செலவாகப் போகின்றது நான் வேண்டுமானாலும் இத தொகைக்கு ஸ்பான்சர் செய்கின்றேன் உடனடியாக ஏற்பாடு செய்யவெண்டும்

அத்துடன் காசு கொடுப்பவகளுக்கும் காசு வாங்குபவர்களுக்கும் இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்த சட்டப்படி என்ன தன்டனை என்பதையும் குறிப்பிட வேண்டும்

sheikdawoodmohamedfarook said...

//இரண்டு நாட்களுக்கு ஆட்டோ விளம்பரம் 2000 ரூபாய் நான் கொடுக்கிறேன்// தம்பிஅதிரை மன்சூர் சொன்னது./ என்னிடம் கொடுங்கள் ஒருநாள் மட்டும் ஆட்டோவிளம்பரம் செய்துவிட்டு மறுநாள் காசை என் பாக்கெட்டில் போட்டுக்கொள்வேன்.சுடுகாட்டு ஊழலில் ஒருM.P.க்கு இரண்டுஆண்டு சிறை.பள்ளிவாசல்,மதர்சா கட்டுவதில் எல்லாம் கூடஊழல்உலவுது தம்பி. வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை ஊழல்ஒழிப்புவிளம்பரத்திற்கு செலவு செய்யாதீர்கள் அந்த விளம்பரத்தால் பலன் அடையப்போகும் நபர் ஊழல் வாதியே ! இந்தக்கட்டுரையாலும் ஹதீசாலும் பலன்அடைபாவனும் அவனே!

adiraimansoor said...

பாரூக் காக்கா
அந்த பாவம் அரசியல் வாதிகளோடு நிறுவிடட்டும் அப்பாவி மக்களையும் பாவ்த்டில் மூழ்கவைக்கும் இப்படிபட்டோர்களை நாம் தோலுறித்து காட்டுவது மிக முக்கியமான விசயம் நம் அப்பவி மக்களு விழுப்புனர்வை ஏற்படுத்த இதுதான் சந்தர்ப்பம் அவர்களுக்கு இது லஞ்சம் என்று அறியாததினாலும் ஏதோ கட்சிக்காரன் கொடுக்கின்றான் என்றும் கை நீட்டி வாங்கி பாவத்தை சுமக்கின்றார்கள்
லஞ்சம் வாங்குபர் இருக்கும் வரை லஞ்சம் கொடுப்பவரும் இருப்பர்

லஞ்சம் வாங்குபரை ஒழித்தால் லஞ்சம் கொடுப்பவர் இருக்கமாட்டார்
இருகை அடித்தால்தான் லஞ்சம் என்ற ஓசை பிறக்கும் ஒருகையை மட்டும் ஆட்டினால் ஓசைக்கே இடமில்லை

அறிஞர். அ said...

ஓட்டுக்கு கையூட்டு ஹராம் என்றால், சாராய ஆலை வருமானத்திலிருந்து தரப்படும் தேர்தல் கையூட்டு எந்த வகை? இதில் வேடிக்கை என்னவென்றால் புனித இயக்கங்கள்(?) கூட இதனை கண்டும் காணாமல் இருக்கின்றனர். (கட்டுரை ஆசிரியர் இதனையும் சொல்லியிருக்கவேண்டும். டிஆர் பாலுவிற்கு சாராய ஆலைகள் (கிங்ஸ் மினரல்ஸ்) இருப்பதாக அறியமுடிகிறது, )

திமுகவின் கோட்டை என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு ஏன் ஓட்டுக்கு கையூட்டு கொடுக்கவேண்டும்.

Ebrahim Ansari said...

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதில்தான் ஊழலின் ஊற்றுக்கண் இருக்கிறது. இப்படியெல்லாம் செல்வு செய்து தேடிக்கொள்ளும் பதவியை தாங்கள் செய்த செலவின் அளவை ஒன்றுக்குப் பத்தாக இலஞ்ச லாவண்யங்கள் மூலம் பெற்றுக் கொள்கிறார்கள்.

sheikdawoodmohamedfarook said...

சிறிய லஞ்சம்கொடுத்து பெரிய லஞ்சம் பெறுகிறார்கள்.அதாவது சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பதை போல! இது தப்புங்களா?! தப்புன்னு சொன்னா நாங்க எப்போதான் பணக்காரன் ஆகுறது.? கப்ப காடிவச்சு ஓட்றது?இதெல்லாம் பேசிகிட்டு இருக்காமே சட்டுபுட்டுன்னு போடுங்க சாமி ஓட்டு!

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

வாக்கு மாறுவதற்கு
வக்காலத்து(கேட்கும்)
வாக்கு;

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

வாக்கு மாறுவதற்கு
வக்காலத்து(கேட்கும்)
வாக்கு;

ஜலீல் நெய்னா said...

அது சரி..... இவ்வளவு அலுச்சாட்டியத்திற்கும் தேர்தல் கவிஷன் என்ன செய்கிறார்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு