வலைத்தளங்களில்
எழுதுவது என்பது எல்லோராலும் முடியும் என்பதை தமிழ்கூறும் நல்லுலகுக்கு சொல்லவே
இந்த நோக்கம்.
இது 70 களின் நடுவருடங்களாய் இருப்பதால் கொஞ்சம் நம்
ஊரை பற்றி சொல்லும்போது கூடவே நிலக்கரி எல்.ஜி எஞ்சின், தலை நரைக்காத நம் ஆசிரியர்கள், டெலிவிசன் இல்லாத வீடுகள், ரேடியோவில் இலங்கை ஒலிபரப்பு
கூட்டுஸ்தாபனத்தின் தமிழ்ச்சேவை 2. , பைப் வசதியில்லாததால் ஒரளவு சுத்தமான தெருக்கள். ஆட்டோ / கேபில் டி வி / இல்லாத நம் ஊரை கற்பனையில் காண்க:
Riaz Ahamed |
“உன் எழுத்தில் ஆங்கிலம்
அதிகம் தெரிகிறது. தமிழில் எழுதித் தொலைடா என்று திட்டும்” எங்கள் பாஸ் சபீர். எங்கள் பத்திரிக்கை வெளியிட முழுப் பொறுப்பும் ரியாஸ்தான் எடுத்துக் கொள்வான். சின்ன வயதிலிருந்தே ரியாஸிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஊர்சுற்றுவதே எங்கள் வேலையாக இருந்தது.
இப்படித்தான் “தேன் துளி” என்ற கையெழுத்து
பத்திரிக்கை வெளியிட்டோம். [இதில் கையெழுத்தில் பிரதிகள் வேறு-நோ போட்டோஸ்டேட்]
எப்படியோ
ஒருத்தனை ஒருத்தன் திட்டிக் கொண்டு பத்திரிகை வெளியிடுவதில் கண்ணும் கருத்துமாக இருப்போம்.
வரும் வருமானத்தில் பரோட்டாவும் டீயும் குடிக்கும் சந்தோசம் [பந்து
விளையாட்டுக்குப் பிறகு] ஏதோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடும் சந்தோசம்
இருக்கும்.
Sabeer Ahamed |
பிறகு சரித்திர
நாவல் எழுத எங்கள் அஸ்லம் மாமா வர இன்னும் களை கட்டியது. பிறகு இக்பால் [இக்பால்
சாலிஹ் ] வெளியிட்ட தேடல் கவிதையுடனும், புதிய பாதையில் பயணித்தது. "என் ஆக்கத்தை அப்படியே போட்டு 'எடிட்' பன்றதுக்கு எனக்கு நீ வேலையே
கொடுக்கல" என்று சொன்னான். பிறகு என் தம்பி
நசீர் ஹுசேன் வெளியிட்ட “நியூ இந்தியா”வில் எழுதி ஸ்கூலில் ஆசிரியர்களிடம் அட்வைஸ்
வாங்கியது எல்லாம் அப்படியே காற்றோடு கலந்து மறைந்து விட்டது. நியூ இந்தியாவில்
என் நண்பன் சரபுதீன் நூஹ் உடைய தம்பி அஸ்ரப் பங்களிப்பும் இருந்தது.
Haja Ismail |
இப்போது அந்த
வேலைகள் ரியாஸ் இறைமார்க்கம் என்ற வலைதளம்
தொடங்கவும், ஹாஜா இஸ்மாயில் '
ஹாஜாவின் கைவண்ணம்"
என்ற வலைத்தளம் தொடங்கவும் உதவியது என நினைக்கிறேன். ஹாஜா கைவண்ணம் என்று
எழுதினாலும் பிளாக் இங்க்-தான் அதிகம் உபயோகிப்பான். நாங்கள்
எல்லோரும் சேர்ந்து "தேன் துளி" என்று வலைத்தளம் உருவாக்கினோம், எங்களுக்கே பாஸ்வேர்ட் மறந்து போர அளவுக்கு
நாங்கள் இப்போ அதை கண்டுக்கிறது இல்லே.
பின்னாளில்
படிக்கும் பழக்கத்தை சின்ன வயதில் ஏற்படுத்திக் கொண்டதும், தொடர்ந்து ஏதாவது படிக்க வேண்டும் என்ற
ஆர்வமும் சமயங்களில் எழுத உதவியாக இருக்கிறது.
நான் சமீப காலமாக
சிலரின் கருத்துக்களை பார்த்து வருகிறேன். அவர்கள் கருத்துப் பகுதியுடன் நிற்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களும் எழுதுவதற்கு
நிறைய விசயம் வைத்து இருக்கிறார்கள். அவர்களில் என் கண்ணுக்கு பட்ட ஆட்கள். நண்பர்
அப்துல்காதர், ZAEISA ,
எம். ஹெச். ஜே., மற்றும் கிரவுன் இருவரும் எழுதினாலும் எப்போதாவது வரும் பள்ளி மாணவர்கள் போல் இல்லாமல்
ஆக்கங்கள் தருவதிலும் 'அடிக்கடி" இருக்க
வேண்டுவது அவர்களின் திறமையே.
அதிரை மன்சூர் [நான் படிக்கும்போது படித்த நண்பர்] இவரிடமும் நிறைய விசயம் இருக்கிறது. சரியான
ட்ராக்கில் இவரது எழுத்து தொடர்ந்து பதியப்படுமானால் ஒரு சிறந்த பங்களிப்பாளர்
கிடைத்துவிடும்.
அடுத்து நமக்கு
கிடைத்த பொக்கிஷம் எங்கள் மரியாதைக்குறிய எஸ். முஹம்மது ஃபாரூக் மாமா அவர்கள் .
நமது வயது
அவர்களின் அனுபவம்..இதைவிட எதுவும் எழுதத் தேவையில்லை. மலேசியாவில் அவர்கள்
சொந்தமாக நடத்தியதே ஒரு பப்ளிசிங் கம்பெனி.
தனியாக ப்ளாக்
வைத்திருப்பவர்களின் ஆக்கமும் நாம் சமயங்களில் அவர்களின் அனுமதியோடு வெளியிடலாம்.
எனக்கு தெரிந்து அஹமது இர்ஷாத், முஜீப், இவர்களின்
ஆக்கங்களை நான் எப்போதும் படித்து வருகிறேன். இருவரிடமும் நல்ல
ஜர்னலிசம் சென்ஸ் அதிகம் இருக்கிறது.
சரி... ஏன்
எல்லோரையும் எழுதச் சொல்கிறேன். எழுத்து ஒரு வெளிப்படுத்தும் கலை. இதற்கு நீங்கள்
வில்லியம் வேர்ட்ஸ் வொர்த் , கீட்ஸ், கம்ப ராமாயணம், மணிமேகலை , வலையாபதி, குண்டல கேசி... எந்த மண்ணும் படித்திருக்க தேவையில்லை. சொந்தமாக தபால்
எழுதத் தெரிந்தாலே போதுமானது. 4 பேர் 30 வயதைத்தொட்டவர்கள்
எழுதினால் ஏறக்குறைய 120 வருடத்தின்
நிகழ்வுகளை எழுதப்போகிறீர்கள். இதை விட என்ன பெரிய விசயம் இருக்கப்போகிறது.
பொதுவாகவே
எழுதுபவர்கள் அதிகம் வாசிப்பவர்களாக இருப்பது நல்லது. ஏனெனில் எப்படி மற்றவர்கள்
எழுதுகிறார்கள் என்ற ஒரு அவதானம் கிடைக்க வாசிப்பே உதவி செய்யும்.
இப்போது சில
தமிழ் வலைத்தளங்களை பார்த்தால் எந்த அளவு மெச்சூரிட்டி இல்லாமல் எழுதுகிறார்கள்
என்பதும் புரியும். சிலர் ஜாதிச்சண்டை, ஒருத்தனை பத்து பேர் திட்டித்தீர்ப்பது எல்லாம்
பார்க்கும்போது இவர்கள் பள்ளிக்கூடத்தில் படித்தது போல் தெரியவில்லை, ஏதோ பேட்டை ரவுடிகளின் "ரோட்டோரக்கல்வி" கற்றவர்கள் என்றுதான்
எடுத்து கொள்ள முடியும்.
முக்கியமாக
சினிமாவை பற்றி எழுதும் வலைத்தளங்களில் "பேட்டைத்தமிழ்" பின்னி
விளையாடும். சில கவிதை வலைத்தளங்களில்
சில விவாதங்கள் அழகாய் இருந்தாலும் ஒரு கவிஞரை மனம் திறந்து பாராட்டும் மற்றொரு
கவிஞர் என்பது அறிதாகிவிட்டது. ஒரு கவிஞர் 'நிலா' என்று எழுதிவிட்டால் 'என்னுடைய நிலாவை காப்பி அடிச்சிட்டான்யா"
என்று கமென்ட் போட சில கவிஞர்கள் இருக்கிறார்கள்.
முன்பு பள்ளியில்
படிக்கும்போது தமிழ் - 2 பரீட்சை எழுதும் தெனாவெட்டு ஆர்ட்டிக்கிள்
எழுதும்போது ரொம்பவும் உதவுகிறது.
வலைத்தளம்
வைத்திருப்பவர்கள் சிறுகதைகளை வெளியிட யோசிக்கலாம். சமயங்களில் கதைகளின் மூலமும்
ஒரு நல்ல கருத்தை சொல்ல முடியும்.
Shahul Hameed |
உலகம் நவீனமயமாதலில்
விவசாயத்தை இழந்து வரும் அபாய மணியை ஆனந்த விகடன் ஒரு 20 வருடத்துக்கு முன் ஒரு கதைப்போட்டியின் மூலம் உலகத்துக்கு சொன்னது [முதல்
பரிசும் அந்த கதைக்குத்தான்]. கதையை கதையாக படித்ததால்… இன்றைக்கு ஒரு படி அரிசிக்கு இவ்வளவு பெரிய
விலை நாம் கொடுக்கிறோம்.
சம்பவங்களை
விவரிக்கு முன் இப்போதைய நடைமுறையுடன் ஒன்றியிருப்பது நன்று. நடைமுறைக்கு ஒவ்வாத
சென்டன்ஸை யாரும் கண்டு கொள்வதில்லை.
ஒரு இளைஞனை
அறிமுகப்படுத்தும்போது ' கல்லூரி மாணவன் ராமு ஒரு
"கட்டிளங்காளை" என்றெல்லாம் எழுதாதீர்கள், "எங்கே கழுத்திலெ கறுப்பு கயிற்றில் கட்டிய சங்கை
காணவில்லை?'- என்று கமெண்ட் போட நிறைய பேர் இருக்கிறார்கள்.
அதே போல் 'காலம் உருண்டோடியது....' என்று எழுதினால் ' அப்படி எப்படி கரெக்டா சொல்றீங்க காலம் 'உருண்டையா"
தான் இருந்ததுன்னு- ஏன் அது ஹெக்ஷாகன் ஆக
இருக்ககூடாது" என கேள்வி வரும்.
முதலில் எழுத
நம்மைச் சுற்றி நடக்கும் இன்டர்ஸ்டிங் ஆன விசயங்களை எழுதுங்கள். ஒரு சின்ன விசயத்தை
எப்படி ஒரு ஆர்டிக்கிள் ஆக எழுத முடியும் என்று யோசிக்க வேண்டாம். பல சின்ன
விசயங்களை எழுதலாம் அல்லவா? . பல விசயங்கள் ஒரு
ஆர்டிக்கிள் ஆக எழுதினாலும் வெளியிடுவோம். இப்போதைக்கு
எழுதுவதற்கு பல விசயங்கள் இருக்கிறது.
இவ்வளவு பேர்
வெளிநாட்டில் இருக்கிறீர்கள், நீங்கள் பல
போராட்டங்களுக்கு இடையேதான் விசா கிடைத்து போயிருக்க வேண்டும். எப்படி நீங்கள்
விடாமல் முன்னேறத் துடித்தீர்கள் என்று எழுதலாம். எனக்கு தெரிந்து சபீர் பம்பாயில்
ஏறக்குறைய ஒரு தந்தூரி அடுப்பு மாதிரி புழுங்கும் ஒரு ரூமில் பல மாதம்
தங்கியிருந்து, ஒரு
டாய்லெட்டுக்கு காலையில் 20 பேருடன் க்யூவில் நின்று, பழக்கமில்லாத
ஊரில் பணப்புழக்கம் இல்லாத சூழலில்தான் சவூதிக்கு முதலில் சென்றான். இதுபோல்
எத்தனையோ பேரின் அனுபவம் இப்போது கேட்ஜெட்டில் கேம் விளையாடும் இளைஞி /
இளைஞர்களுக்கு ஒரு முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அறியத்தரலாம். ஊரில் நடந்த பல
விசயங்கள் இப்போதைக்கு உள்ள சூழ்நிலையில் படிப்பை தரலாம்.
உங்கள் மனதை
பாதித்த நெகிழ்ச்சியான விசயத்தை எழுதலாம். இப்படி நிறைய
விசயங்கள் இருக்கிறது எழுத.
கூடிய விரைவில்
எங்கள் மரியாதைக்குறிய எஸ்.முஹம்மது ஃபாரூக் மாமா தனது அனுபங்களை எழுத
இருக்கிறார்கள். அவர்களின் ஆக்கத்திற்கு வரும் கமென்ட்ஸ் நிச்சயம் பெரியவர்கள்
சொல்வதை கேட்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற உண்மையை உலகுக்கு
உணர்த்தும்.
Iqbal Salih |
இந்த ஆக்கத்தில்
என் நண்பர்களை படத்துடன் உங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு நியாயமான காரணம்
இருக்கிறது.
காலம் அதன்
வழக்கத்தோடு ஓடிக் கொண்டிருந்தாலும் எங்களுக்குள் நாங்கள் சேமித்து வைத்த 'சிறுவர்களை' நாங்கள் இப்போது எங்களை சுற்றி
வளர்ந்திருக்கும் பொறுப்புகளுக்கு பலி கொடுக்கவில்லை.
சாகுல் சின்ன வயதில் உருவாக்கிக் கொண்ட ஃபோட்டோகிராஃபி தான் இன்று அவர் எழுத காரணம். அதுபோல் எங்கள் ஹாஜா இஸ்மாயிலின் காமிக்ஸ் ஆர்ட் திறமை அவனை ஒரு மிகப்பெரிய வாசக வட்டத்தை உருவாக்க உதிவியிருக்கிறது. சபீரின் கவிதைகள் பாராட்டப்பட காரணம் அவன் வாழ்வில் சந்தித்த நிஜங்கள் அவனுக்கு கற்றுத்தந்த "ஞானிகளின் கல்வி".
சாகுல் சின்ன வயதில் உருவாக்கிக் கொண்ட ஃபோட்டோகிராஃபி தான் இன்று அவர் எழுத காரணம். அதுபோல் எங்கள் ஹாஜா இஸ்மாயிலின் காமிக்ஸ் ஆர்ட் திறமை அவனை ஒரு மிகப்பெரிய வாசக வட்டத்தை உருவாக்க உதிவியிருக்கிறது. சபீரின் கவிதைகள் பாராட்டப்பட காரணம் அவன் வாழ்வில் சந்தித்த நிஜங்கள் அவனுக்கு கற்றுத்தந்த "ஞானிகளின் கல்வி".
என் நண்பன்
இக்பால் சாலிஹ் உடைய மார்க்க அறிவின் விசாலம் அவன் தனது அத்தனை கஷ்டங்களிலும்
கொஞ்சம் கூட அலுத்துக்கொள்ளாமல் மார்க்கத்தின் மீது அவன் செலுத்திய அசைக்க முடியாத
ஈடுபாடு, அல்லது மார்க்கத்தின் மீது 'கல்வித்தாகம்"
உங்களுக்கு
உள்ளேயும் பல திறமைகள் இருக்கும்,
அதை எழுத்தில் கொண்டு வர
வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.
ZAKIR HUSSAIN
14 Responses So Far:
எல்லோரையும் நினைவு கூர்ந்து இருக்கிறீர்கள்.
மிக்க நன்றி.
நல்ல வேலை போட்டோவிற்கு கீழே பெயரை போட்டீர்கள் இல்லையென்றால் யாரையும் அடையலாம் தெரியாது
ம்ஹ்ம்.....
அதெல்லாம் ஒரு காலம்!
//பொதுவாகவே எழுதுபவர்கள் அதிகம் வாசிப்பவர்களாக இருப்பது நல்லது. ஏனெனில் எப்படி மற்றவர்கள் எழுதுகிறார்கள் என்ற ஒரு அவதானம் கிடைக்க வாசிப்பே உதவி செய்யும்.//
உண்மை! உண்மையிலும் உண்மை!! வாசிப்பை நேசிப்போம்!!!
நம்மவர்கள் இப்போது புத்தகங்கள் படிப்பது, குதிரைக் கொம்புதான்.
வெறும் 'நோண்டி'களாகவே இருக்கிறார்கள், ஐஃபோனை அல்லது ஸ்மார்ட் ஃபோனில் மணிக்கணக்கில் அறுத்துத் தள்ளுகின்றனர்.
எழுத்துதான் வரலாற்றின் மாறாப் பதிவு! முப்பதுக்கு மேல் நூல்களை எழுதிப் பதிப்பித்துவிட்டு, இப்போது நான் முகநூலிலும் எழுதத் தொடங்கியுள்ளேன். வாருங்கள்!
ஜாஹிரின் மலரும் நினைவுகள் படிக்க நன்றாக இருந்தாலும் இப்போது உள்ள காலசூழலில் நேரம் கிடைத்தாலும் எல்லோரும் எழுத முடிவதில்லை என்பதே உண்மை.
அதிலும் சுவராஸ்யமாக எழுதுவதற்கு தனித்திறமை வேணும்.
வாலிபத்தை தொட்டு செல்லும் இப்பதிவு
ஏதாவது நீயும் எழுது என்று தூண்டுவது என்னவோ உண்மை.
அபு ஆசிப்.
எழுத வேண்டுமானால் புத்தகங்கள் படிக்கவேண்டும். பினாங்குபோய் வேலை கிடைக்காமல் சும்மா இருந்தபோது புத்தகம் வாங்கிபடித்தேன் ..''நீஎன்னடா? பெரிய அண்ணா துரையோ? எப்போ பாத்தாலும்புத்தகமும் கையுமா ஈக்கிரா?''என்று என்னை அடிக்கவந்தார் என்தெருவு காரர்.காரணம்அவர் ஒரு கைநாட்டு.மனிதனை வார்ப்பது சூசல்.
மருமகனே ஜாஹிர்!உன் எழுத்து எழுததூண்டுகிறது.அதிரை நிருபர் ஆசிரியரும் எழுத்தாளர்களை தூண்டிக்கொண்டே இருக்கவேண்டும்.
//இது 70 களின் நடுவருடங்களாய் இருப்பதால் கொஞ்சம் நம் ஊரை பற்றி சொல்லும்போது கூடவே நிலக்கரி எல்.ஜி எஞ்சின், தலை நரைக்காத நம் ஆசிரியர்கள், டெலிவிசன் இல்லாத வீடுகள், ரேடியோவில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் தமிழ்ச்சேவை 2. , பைப் வசதியில்லாததால் ஒரளவு சுத்தமான தெருக்கள். ஆட்டோ / கேபில் டி வி / இல்லாத நம் ஊரை கற்பனையில் காண்க://
வளர்ந்த பிறகு வரும் பொறுப்பின் அழுத்தத்தில் வாழ்க்கை முன்பு போல் இருந்து விடக்கூடாதா என்று "வாழ்க்கையின் ரிவைன்ட் பட்டனுக்கு" ஏங்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும், ஜாகிர் காக்கா,
உங்களின் நினைவுகளோடு, ஆசைகளையும் பகிர்ந்து இருக்குறீர்கள்..இன்ஷா அல்லாஹ் நிறைவேறும்னு நம்புகிறேன்...எழுத்து எல்லோர்க்கும் இருக்கிறது... 'Express Yourself' வகை கொஞ்சம் பேர்தான்.. அதை வெளிபடுத்த என் நண்பர்களை நிறைய முறை சொல்லி இருக்கேன்...அவர்களது சுபாவம் வரவிடவில்லை... நீளமான கட்டுரையாக இருந்தாலும் படிப்பார்கள்...ஆனால் அதை பற்றின எதிர்வினையோ/பாராட்டோ இருக்காது...இந்த வகை மனிதர்கள் இணையத்தில் நிறைய இருக்கிறார்கள்...
16 வயதினிலெ கமலை எல்லோருக்கும் தெரியும் என்பதால் போட்டோவின் கீழ் பெயரிடவில்லை என்பதை அன்புடன்,பண்புடன் தெரிவித்து கொள்கிறோம்...
16 வயதினிலெ கமலை எல்லோருக்கும் தெரியும் என்பதால் போட்டோவின் கீழ் பெயரிடவில்லை என்பதை அன்புடன்,பண்புடன் தெரிவித்து கொள்கிறோம்...
சரியா சொன்னீங்க காக்கா, இன்று எத்தனையோ இளைஞர்கள் திறமையிருந்தும் அடுத்தவங்களின் உனக்கேன் இந்த வம்பு, உருப்படியா முன்னேறத்தெரியலே வெட்டியா எழுதுறானாம் என்றெல்லாம் எதிர்வினைகள் வந்தாலும் இன்றைய கால எழுத்து திறம் குறைந்ததாகவே நினைக்கிறேன்.. இந்த மாதிரி பதிவுகளின் ஊக்கம்தான் மேலும் எழுத தூண்டுகிறது..
Post a Comment