Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மரியாதைக்குரிய வாக்காளப் பெருமக்களே! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | April 18, 2016 | , ,

"இனிப்பு" என்றெழுதி
இளித்து நக்கும் மக்களே! - இல்லாததை
'இருக்கு' என்றியம்பும்
இம்சை அரசர்கள் பராக்!

வாக்குறுதி வசதிகள்
வாழ்க்கைக்கு உதவுமா? – அன்றியும்
வாய்ப்பந்தல் பற்றிக்கொண்டு
வளர்ச்சிக்கொடி படருமா?

தேர்தல் அறிக்கையென்ன
அலாவுதீன் கைவிளக்கா?
தேய்த்ததும் தேவைகள் தீர்க்க
அது பட்டணத்தில் பூதமா?

அரசியல்வாதி அறிக்கை
அமுத சுரபியல்ல! - தேர்தல்
மணிமேகலை கதையல்ல
உணவு ஊறிவர!

வாக்குச்சீட்டு ஓர்
அலிபாபா கடவுச்சொல்! – கவனம்,
பொக்கிஷம் பறிபோகும்
பொல்லாதோர் பறித்துக்கொண்டால்

கூட்டணிகள் கண்டீரே
கொள்கைகளைக் கண்டீரா? - வாக்குச்
சீட்டுக்கு வலைவிரிக்கும்
வேடர்களை வெல்வீரா?

வெற்றியெனும் போதைக்கு
வேட்டிக்கரை மாறும் - இந்த
வீணர்கள் சேவையெல்லாம்
வெறும்பேச்சு, வினையல்ல

வாக்காளப் பெருமக்கள்
விற்பனைக்கு இல்லை - முழங்கு
"ஓட்டு, பணத்துக்கல்ல!"
ஓட, ஓட, விரட்டிவிடு!

காசுக்கு விலைபோய்
கட்சிகளிடம் கற்பிழக்காதே! - கவரும்
மேடைப்பேச்சில் மதிமயங்கி
மேலும் சுயமிழக்காதே!

ஒரு வாக்குதானே எனும்
உதாசீனம் வேண்டாம் – உன்
வாக்குச்சீட்டு ஒன்றுதான்
வெற்றியை நிர்ணயிக்கும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
நன்றி : சத்தியமார்க்கம்.com

6 Responses So Far:

نتائج الاعداية بسوريا said...

ஒரு வாக்குதானே எனும்
உதாசீனம் வேண்டாம் – உன்
வாக்குச்சீட்டு ஒன்றுதான்
வெற்றியை நிர்ணயிக்கும்!

இந்த உதாசீனம் தான் அரசியல்வாதிகள் குளிர்காய வசதிஎன்பேன்
ஒரு ஒட்டுதானே என்று அதன் மகிமை புரியாமல் , இதை செலுத்தாதவர்களும் உண்டு, அந்த ஒன்று கூட வெற்றியை நிர்ணயிக்கும் ஒரு சூழ்நிலை உருவாக வாய்ப்புண்டு என்பதை புரியாத நம் மக்கள் தமது உரிமையை தம்மை அறியாமலேயே பிறர் பறிக்க வேண்டிய அவசியமில்லாமல் தாமே இழக்கின்றனர் .

நச்சுப்பாம்புகளும், தேள்களும், விஷ கிரிமிகளும் அரசியல்வாதிகள் என்ற போர்வையில் அடிப்படை அறிவும், கொள்கை பிடிப்பும் இல்லாமல் , படிப்பு என்ற வாசனையே இல்லாதவர்களும் அதிகார நாற்காலியில் அமர, காசு கொடுத்து ஒட்டு வாங்குவதால் , போட்ட காசை எப்படி எடுப்பது என்ற நோக்கத்தோடு வரும்பொழுது , அங்கே மக்கள் நலம் என்றே பேச்சே இல்லாமல் செய்து விடுகின்றது இந்த நகைச்சுவை தேர்தல்.

நாம் இந்த ஒரு வோட்டை போட்டு என்ன ஒரு பெரிய அரசியல் மாற்றம் வரப்போகின்றது என்ற தன ஓட்டை தானே எள்ளி நகையாடுதலே இதற்க்கு காரணம்.

ஒரு ஓட்டாக இருந்தாலும் விழிப்போடு இருப்போம், தகுதியானவர்களை
தேர்ந்தெடுப்போம் , ஜனநாயகம் வெல்ல, பணனாயகத்தை புதைப்போம்.

அபு ஆசிப்

அதிரை.மெய்சா said...

தக்க சமயத்தில் ம.கள் விழிப்புணர்வுடன் இருந்து வாக்களிக்கவேண்டி பதியப்பட்ட நல்லதொரு கவிதை. அருமை.

இனிமேலாவது மக்கள் ஒருகட்சியிலேயே மோகம் கொண்டிருக்காமல் சமூகசேவைக்காக யார் கலமிறங்கி நிற்கிறார்களோ அ வர்களுக்கே நாம் வாக்களிப்போம்.

sheikdawoodmohamedfarook said...

நாட்டை கொள்ளையிட லைசென்ஸ் கேட்பதே தேர்தல்.எவனுக்குபோட்டாலும் திருடுவான்.இங்கேயாரும் அரிச்சந்திரன் இல்லை.நல்லதிருடனுக்கு ஒட்டுபோடுங்க.

sheikdawoodmohamedfarook said...

அண்ணாநூலகத்தை பாத்து போடுங்கம்மா ஒட்டு!டூஜியே பாத்து போடுங்கம்மா ஒட்டு!

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

விரலில் மை(இட்டு)
தலையில் மிளகாய்(அரைத்து)
முடிந்தது தேர்தல்:

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

விரலில் மை(இட்டு)
தலையில் மிளகாய்(அரைத்து)
முடிந்தது தேர்தல்:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு