Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வா... `கிங்` ! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | April 05, 2016 | , , , ,

இது அரசியல் பதிவல்ல...

வேற எங்கே... அருகில் இருக்கும் இப்னு பத்துத்தா மால்`க்குதான்.

ஒரு முனையிலிருந்து அடுத்த முனைவரை நடந்தாலே நல்ல நடையும் கிடைக்கும் எடையும் குறையும்னு நெனப்புலதான் அப்படி எல்லா நேரமும் இல்லையென்றாலும் அவ்வப்போது சென்றுவருவேன்...

நான் யாரையும் அங்கிட்டும் இங்கிட்டெல்லாம் ப்ப்ராக் பார்க்க மாட்டேன் எனது தேவையெதுவோ அதை மட்டும் மனதில் ஓட்டிக் கொண்டே செல்வதுதான் வழக்கம், வேறயாரும் என்னை அப்படி இப்படி பார்த்தாங்கன்னா நான் பொறுப்பாக முடியாதுல அதான் சொல்லிகிட்டேன் !

ஒரு நாள் !

`அஸ்ஸலாமு அலைக்கும் ப்ரதர்`

`அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...` புருவமுயார்த்தி பார்க்கும் முன்னரே...

`என்னைத் தெரிகிறதா ?`

`ஞாபகம் சட்டென்று வரவில்லையே சொல்லுங்கள் நீங்களே`

`இவர் என் சகோதரரின் மகன் அல்தாஃப், அதோ பின்னாலே அங்கே உட்கார்ந்து இருக்காரே அவர் எனது கணவர், இது எங்கள் குழந்தை ஹாஸிம்`

பார்க்க சந்தோஷமாக இருந்தது... எப்படி சாத்தியம் !? என்ற குழப்பத்திலிருந்த எனக்கு உள்ளங்களை பார்ப்பவன் அல்லாஹ் மட்டுமே என எண்ணிக் கொண்டேன்...

*/*/*/*

வருடம் 2007 ரமளானுக்கு இரண்டு வாரத்திற்கு முன்னர்..

இப்னு பத்துதா மால் ஜியண்ட்டிலிருந்து கேஷ் கொடுத்துவிட்டு வெளியில் வரும்பொது ஒரு பெண்ணொருத்தி அழைத்தார்...

`சார் உங்ககிட்டே பேசனும்`

`என்ன விஷயம்`

`நான் இங்கேதான் வேலை செய்றேன், உங்களை இங்கே தினமும் என்னோட மதிய டூட்டி டைமில் பார்க்கிறேன்`

`சரி அதுக்கென்ன இப்போ`

`எனக்கு ஒரு உதவி வேண்டும், எனது சகோதரன் விசிட்டில் வந்திருக்கான் வேலை தேடிக் கொண்டு இருக்கான்`

`சரி என்னிடம் என்ன உதவி...?`

`உங்கள் கம்பெணியில் ஏதாவது ஒரு வேலை வாங்கி கொடுத்தா எங்க குடும்பம் நன்றியோடு இருக்கும் அவனுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கு ரொம்ப கஷ்டப்படுகிறான்`

`இப்போதைக்கு ஏதும் சொல்ல இயலாது சரி வந்து பார்க்கச் சொல்லவும்`

என்னோட விசிட்டிங் கார்டை கொடுத்தேன்...

`என் ஃப்ரெண்டுக்குத் தெரியும் உங்க கம்பெணி இருக்குமிடம் அவரிடம் கேட்டுக்கிறேன், எப்போ வரச் சொல்ல ? நாளைக்கு...?`

`எப்போ வேனும்னாலும் வரட்டும்`

*/*/*/*/

வருடம் 2010...

`ஏன் ஊருக்கு போகனுமா ?`

`ஆமாம் போகனும்`

`கஷ்டப்படுகிறேன்னு சொல்லித்தானே இங்கே வந்தீங்க`

`இங்கே இருக்க பிடிக்கலை போகனும், என் சிஸ்டர் அவங்க இஷ்டத்துக்கு நடந்துகிட்டு இருக்கா எனக்கு பிடிக்கல`

`ஏன் சொல்லித் திருத்த வேண்டியதுதானே எதுக்கு பயந்துகிட்டு ஓடனும்`

`என்னைய திருத்துறேன்னு சண்டை போடுறா`

/*/*/*/*/


வருடம் 2015...

`உங்க கம்பெணியில வேலை செய்துட்டு பிடிக்காம போறேன்னு சொன்னாரே அவரின் மகன் தான் இவர்`

`ஓ... அப்படியா சந்தோஷம், இப்போ இவர் என்ன பன்றார்...?`

`இங்கே எனது கணவர் வேலை செய்யும் கம்பெணியில் வேலை செய்றார்`

`தப்பா எடுத்துக்க வேணாம், ஒருவிஷயம் கேட்கனும்னு தோனுது...`

`கேளுங்க ப்ரதர்`

`அன்னைக்கு நீங்க குட்டைப் பாவாடையுடன் கேஷ் கவுண்டரில் இருந்தீங்க இன்னைக்கு ஹிஜாபோடு இருக்கீங்க பார்க்க சந்தோசமா இருக்கு...`

`அல்ஹம்துலில்லாஹ்... ஆமாம், நல்லவர் ஒருத்தவரை விரும்பினேன் அவர் வாழ்க்கையை தலைகிழாக மாற்றினார் பின்னர் அவரே என்னை திருமணமும் செய்து கொண்டார் அவரும் எங்க நாடுதான்`

`மாஷா அல்லாஹ் சந்தோஷமாக இருக்கு`

`என்னோட ப்ரதர் அன்னைக்கு சண்டை போட்டுக் கொண்டு போனது நான் இவரோடு பழகுவதை விரும்பாமலும் இஸ்லாம் மார்க்கம் தழுவ இருப்பதை அறிந்து கொண்டதாலும் இங்கே எங்களோடு இருக்க பிடிக்காமல் ஊருக்குச் சென்று விட்டார்`

`ஓ... அதன் பின்னர் எப்படி எங்கே திருமணம் ஆச்சு?`

`இங்கேதான் நாங்க திருமணம் செய்து கொண்டோம், அதன் பின்னர் வேலையை விட்டுவிட்டேன், அல்ஹம்துலில்லாஹ் எனது கணவர் நல்ல வேலையில் இருக்கார் இப்போ ஹவுஸ் ஒய்ஃப் ஒரு குழந்தை`

`இப்போ உங்க ப்ரதர் எப்படி இருக்கார் ?`

`ஹா ஹா ஹா அல்ஹம்துலில்லாஹ் அவரும் இனிய மார்க்கத்தில் சங்கமித்து விட்டார் அவருடைய மகன் இவர்தான்...!

`அல்ஹம்துலில்லாஹ்`

`வாங்க ப்ரதர் காஃபி சாப்பிடலாம்`

`எனக்கு நேரமாகிவிட்டது பின்னர் சந்திக்கலாம்`

`அந்தப் பெண்மணிக்கு அறியுமா எனத் தெரியவில்லை அவரின் கணவர் முன்னர் ஒரு வருடத்தில் வேறு வேலை தேடிக் கொண்டு மாறிகிட்டார், அவர் செல்லும்போது வேலை செய்த கம்பெணியில் சண்டை போட்டுக் கொண்டுதான் சென்றார் (காரணங்கள் வேற).

அவர்தான் அந்தப் பெண்மணியின் சகோதரருக்கு வேலை கேட்கச் சொல்லி சொன்னவர் என்பதையும் அப்போதே அந்த பெண்ணின் சகோதரரிடம் கேட்டு தெரிய வந்தது.

ஏனோ அவர் இந்த உரையாடல் நடக்கும் வரை எங்கள் பக்கம் வரவே இல்லை !

இறைவனின் நாட்டம் !

அல்லாஹ் பொருந்திக் கொள்வானக அவர்களின் நல்லெண்ணங்களை !

*-*-*-*-*-*

அபுஇப்ரஹிம்

1 Responses So Far:

sabeer.abushahruk said...

மிதிரிக்கட்டையைத் தொடர்ந்து வாக்கிங்கா?

நல்ல செய்தி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு