Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 033 12

அதிரைநிருபர் பதிப்பகம் | April 22, 2016 | ,


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

போதுமாக்குதல், பேணுதலுடன் இருத்தல், வாழ்க்கையிலும் செலவு செய்வதிலும் நடுநிலையாக இருத்தல், நிர்பந்தம் ஏதுமின்றி யாசகம் கேட்பதின்  கேடு:

அல்லாஹ் கூறுகிறான்:

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். (அல்குர்ஆன் : 11:6)

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:273)

அவர்கள் செலவிடும் போது விரையம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும்  செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும். (அல்குர்ஆன்: 25:67)

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன்: 51:56)

நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை, அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை. (அல்குர்ஆன்: 51:57)

''அதிகம் சொத்து உள்ளதால், செல்வம் என்பதில்லை. எனினும் (இருப்பதைப் போதுமாக்கும்) மனதளவில் உள்ள செல்வம் தான் செல்வமாகும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 522)

''ஒருவர் இஸ்லாத்தில் இணைந்து, அவருக்குப் போதுமான  அளவுக்கு செல்வம் வழங்கப்பட்டு, அவருக்கு தான் தந்துள்ளதை போதுமாக்கிக் கொள்ளும் குணத்தையும் அல்லாஹ் வழங்கி விட்டால், அவர் வெற்றி அடைந்து விட்டார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 523)

''(கொடுக்கும்) உயர்ந்த கை, (வாங்கும்)தாழ்ந்த கையை விட சிறந்ததாகும். உன் பொறுப்பில் உள்ளவர்களிடம் (உன் உதவியை) ஆரம்பிப்பீராக! தர்மத்தில் சிறந்தது, தேவைக்குப் போக உள்ளதில் ஆகும். ஒருவர் பேணுதலாக நடக்க விரும்பினால், அல்லாஹ் அவரை பேணுதலாக்கி வைப்பான். ஒருவர் பிறரின் தேவை இல்லாமல் வாழ விரும்பனால் அல்லாஹ் அவரை செல்வந்தராக்குவான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.    (அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஷாம் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 527)

''நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்த நிலையில் தர்மம் செய்தல் பற்றியும் யாசகம் கேட்பதை விட்டும் பேணுதலாக இருப்பது பற்றியும் நினைவூட்டியவர்களாக, ''மேலே உள்ள கை, கீழே உள்ள கையை விட சிறந்ததாகும். மேலே உள்ள கை, கொடுக்கும் கையாகும். கீழே உள்ள கை, யாசகம் பெறும் கையாகும்;'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 531)

''ஒன்று, இரண்டு கவள உணவுக்காக, ஒன்றிரண்டு பேரீத்தம் பழத்திற்காக மக்களைச் சுற்றி (யாசகம் கேட்டு) வருபவர் ஏழை அல்ல! எனினும்  ஏழை என்பவர், அவரின் தேவையை பெற்றுக் கொள்ளாதவராக இருப்பார். அவருக்கு தர்மம் செய்யப்பட (தேவையில்லை எனும் அளவுக்கு) அவர் ஏழ்மை அறியப்படாதவராக இருப்பார். மேலும் அவர் மக்களிடம் யாசகம் கேட்டும் நிற்கமாட்டார் (இவரே ஏழையாகும்)'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 537)

யாசகம் கேட்காமலும், எதிர்பாராமலும் கிடைத்ததை எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு:

''நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஒரு பொருளைக் கொடுத்தார்கள், ''என்னை விட மிகவும் தேவை உள்ளவருக்கு நீங்கள் கொடுங்கள்'' என்று நான் கூறினேன். ''இதை எடுத்துக் கொள்வீராக. நீர் எதிர்பார்க்காமலும், கேட்காமலும் இருந்த நிலையில் ஏதேனும் ஒரு பொருள் உம்மிடம் வந்தால் அதை நீர் பெற்றுக் கொள்ளும். அதை நீர் அதிகப்படுத்திக் கொள்வீராக! நீர் விரும்பினால் அதை சாப்பிடுவீராக! விரும்பினால் அதை தர்மம் செய்வீராக! அப்படி இல்லாத ஒன்றை உம் மனதால் விரும்பிடச் செய்யாதீர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

தன் தந்தை அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறியதாக கூறும் ஸாலிம் இப்னு அப்துல்லா அவர்கள், ''(என் தந்தை) அப்துல்லா (ரலி) அவர்கள் எவரிடமும் எதையும் கேட்கமாட்டார்கள். தனக்கு கொடுக்கப்படும் எதையும் மறுக்க மாட்டார்கள்'' என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 538)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
  
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

12 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//''அதிகம் சொத்து உள்ளதால், செல்வம் என்பதில்லை. எனினும் (இருப்பதைப் போதுமாக்கும்) மனதளவில் உள்ள செல்வம் தான் செல்வமாகும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.//
இத்தகைய மனநிலையை நாமும் அடைந்து மகிழ்வோமாக! ஆமீன்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா!
---------------------------------------------------------------------------------
ஜமாத்துல் அவ்வல் பிறை 24
ஹிஜ்ரி 1434

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர், காக்கா !

Unknown said...

சகோ அலாவுதீன்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தாங்கள் தங்களின் எழுத்துக்கு தீனிபோட எடுத்திருக்கும் கான்செப்ட் எனக்கு ஒரு கதையின் தலைப்பை ஞாபகப்படுத்திகறது. அதுதான் "அலாவுதீனும் அற்புத விளக்கும்". கதையின் விளக்கு வேறு . நீங்கள் எடுத்திருப்பதோ அல்லாஹ்வின் அற்புதம் ( திருக்குர்ஆன்) என்னும் விளக்கு.

அல்ல அல்ல குறையாத தங்கச்சுரங்கத்தில் நுழைய இருக்கின்றீர்கள்.
தாங்கள் அள்ளித்தாருங்கள் பயனடையக்காத்திருக்கின்றோம்.
விளக்கை ஏற்றுங்கள் அவ்வொளியில் நடைபோடுகிறோம் .ஏனனில் ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் " உங்களை வெள்ளை வெளேரென்று பளீரென்று பிரகாசிக்கக்கூடிய பாதையிலே விட்டுச்செல்கிறேன். அதில் இருள் கூட பகல் போல இருக்கும் " என்றார்கள். அந்தப்பாதையில் தொடர்ந்து நடக்கவும் ,

மேலும் சொன்னார்கள் " உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச்செல்கிறேன் அதை கடை பிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமாகிய குரான் . மற்றொன்று என்னுடைய சொல், செயல் அங்கீகாரங்கள் (ஹதிஸ்) என்றார்கள்.

இவ்விரண்டிலுமே இந்த அற்புத வேதம் நம்மை வழி நடாத்திச்செல்ல துடிக்கின்றது. நாம்தான் தயார் நிலையில் இல்லாமல் மாற்று வழியில் உலகத்தின் மாய வலையில் (ஷைத்தான்) சிக்கித்தவிக்கின்றோம்

ரசூல் (ஸல்) அலைஹிவசல்லம் அல்லாஹ்விடம் கையேண்டியதுபோல் " யா அல்லா என்னை ஏழையாக வாழச்செய்து , ஏழையாக மரிக்கச்செய்து , ஏழையின் கூடத்தில் என்னை எழுப்புவாயாக! என்றார்கள்.

அத்தகைய துஆவை நாமும் தூய எண்ணத்துடன் அல்லாஹ்விடம் கையேந்தி இவ்வுலக வாழ்வின் ஆசாபாசங்களில் மூழ்கிவிடாமல் , ஏழையாகவே அல்லாஹ்விடம் கையேண்டுவோமாக!
அல்லாஹ் நம் பிழைகளை பொருத்தருள்வானாக , நம் கைஎண்டுதலை ஏற்றுக்கொள்வானாக ! உங்களின் இந்த தூய முயற்ச்சிக்கு புத்துணர்ச்சி தந்து
உங்களின் செயல்பாட்டை ஏற்றுக்கொள்வானாக!

ஆமீன் யாரப்பல் ஆலமீன்!

அன்புடன் அப்துல் காதர்
ரியாத் சவுதி அரேபியா.!




sabeer.abushahruk said...

//அல்லாஹ் நம் பிழைகளை பொருத்தருள்வானாக!//

Ebrahim Ansari said...

இந்த அருமருந்தைக் குடித்ததும் மனம் அமைதியடைவதென்னவோ உண்மை.

ஜசக் அல்லாஹ் சகோதரர் அலாவுதீன் அவர்களே!

Unknown said...

தம்பி !

அரு மருந்துமட்டுமல்ல
ஆத்மா திருப்தியும் கூட!

அபு ஆசிப்,
ரியாத் , சவுதி அரேபி

KALAM SHAICK ABDUL KADER said...

தேனான ஆக்கம்; தேனும் ஓர் அருமருந்தாம்; தேனும் இனிப்பானது. ஆக இனிய மருத்துவம்!

Adirai pasanga😎 said...

//போதுமாக்குதல், பேணுதலுடன் இருத்தல், வாழ்க்கையிலும் செலவு செய்வதிலும் நடுநிலையாக இருத்தல்//

ஊதாரித்தனத்துக்கும், கஞ்சதனத்துக்கும் இடைப்பட்ட நிலையை நடு நிலை என எடுத்துக்கொள்ளலாம்.

அல்லாஹ் அவனது பொருத்ததிற்குரிய வாழ்வினை நம் அனைவருக்கும் தந்தருள்வானாகவும்.

ஜஜாகல்லாஹு கைரன்...

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ்!
எல்லாம் வல்ல அல்லாஹ் இம்முயற்சியை அனைவருக்கும் பயனாக்குவானாக!

அதிரை.மெய்சா said...

உங்களது இந்த ஆக்கத்தின் ஒவ்வொரு வரிகளும் மிக முக்கியமாக அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியவையே சொல்லி இருக்கிறீர்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு