Saturday, May 17, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மிதிரிக்கட்டை நினைவிருக்கா !? [ ஒரு நினைவூட்டல் ] 10

அதிரைநிருபர் பதிப்பகம் | April 04, 2016 | ,

அன்றைய காலகட்டத்தில் மிதிரிக்கட்டை என்று அழைக்கப்பட்ட காலனியும்
தான் நம் முன்னோர்களால் கால்களுக்கு செருப்பாக காலனிகளாய்ப் பயன் பாட்டில் இருந்து வந்தன. மரக்கட்டையால் தயாரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த மிதிரிக்கட்டை அதன்மேல் விரல்களைத் தாங்கி நடக்க ஏதுவாக தோல் அல்லது ரெக்சினில் மேல்ப்பாக அமைப்பை ஏற்ப்படுத்தி மிதிரிக்கட்டை என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு ஒரு காலத்தில் காலனியாக பிரபலமாக பயன்பாட்டில் இருந்து வந்தன என்றே சொல்லலாம்.

அன்றைய காலகட்டத்தில் காலனிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்காமல் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று வெற்றுக் கால்களால் நடந்து உழைத்து வேதனையை பெரிதாக நினைக்காத காலம் அது. அப்போதைய காலகட்டத்தில் அப்படியே காலணி அணிந்து கொண்டு கடைவீதி தெருப்பக்கம் நடந்து போனால் பெரும் செல்வதராகவும் சமுதாயத்தில் பெரும் அந்தஸ்த்திற்க்குரியவராகவும் மதிக்கப்பட்டு கருதப்பட்டு வந்தனர். காலனியென்றால் அப்போது ஒரு கௌரவ அணிகலனாக விளங்கியது அன்றைய சூழ்நிலையில் இந்த மிதிரிக்கட்டைதான் பெரும்பாலும் காலணியாக உபயோகத்தில் இருந்தது.

அது ஒருபுறமிருக்க அடுத்துப் பார்ப்போமேயானால் இந்த மிதிரிக்கட்டை எனும் காலணி புழக்கத்தில் இருந்து உபயோகித்தபோது கால்பாதங்கள் பாதிக்காமலும் ஆணிக்கால்கள் ஏற்ப்படுவது அரிதாகவும் இருந்தன. இன்னும் சொல்லப்போனால் கோடைகாலமானாலும், மழைகாலமானாலும் எல்லாப் பருவகாலத்திலும் அணிந்து செல்வதற்கு ஏற்றமானதாகவும் எளிதில் வீணாகிவிடாமலும் நீண்டநாள் பாவித்தும் வந்தன.

இன்னும் சொல்லப்போனால் அந்தக்கால கட்டத்தில் நம் முன்னோர்கள் காலில் மிதிரிக்கட்டையும் கையில் கருப்புக்குடையும் இடுப்பில் பச்சைநிற வாரும் [BELT] வெள்ளைநிற சட்டையும் அணிந்து கொண்டு வீதிப்பக்கம் நடந்து வரும்போது கம்பீரமாய் தெரிவார்கள். ஆனால் இப்போது எத்தனை விதமான நாகரீக உடைகள் அணிந்தாலும்  அதுபோன்ற கம்பீரத் தோற்றம் இருப்பதாக தெரியவில்லை.    

இந்த மிதிரிக்கட்டை எனும் காலணி நமது நாட்டில் மட்டுமல்லாது இலங்கை, நேபாளம், தாய்லாந்து, பர்மா,ஜப்பான், இந்தோனேசியா,மலேசியா, சிங்கப்பூர்,பிலிப்பைன்ஸ்,போன்ற ஆசிய நாடுகளிலும் காலணியாக வெகுகாலமாக பயன்பாட்டில் இருந்து வந்தது..என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை சிறப்பு மிக்க இந்த மிதிரிக்கட்டை எனும் காலணியை படிப்படியாக நாகரீகமும் நவீனமும் வளர்ந்து மாற்றத்தை ஏற்ப்படுத்தி முற்றிலும் காலணிகளின் வடிவமைப்பு மாற்றம் பெற்றுவிட்டன.இன்றைய தலைமுறையினருக்கேற்ப புதுப்புது விதமாய் வடிவமைக்கப்பட்ட தோல், பிளாஸ்டிக் , ரெக்சினிலான செருப்பு லெதர் ஷூ, கேன்வாஸ் ஷூ ஆகிய காலணிகள் வருகைக்குப் பின் இந்த மிதிரிக்கட்டை மறையத் தொடங்கி விட்டன. அதற்குப் பிறகும் கூட ஒரு சில வருடங்களுக்கு முன்புவரை சில தாத்தாமார்கள் கால்களில் காலணியாக ஒட்டிக் கொண்டிருந்த இந்த மிதிரிக்கட்டை தற்ப்போது முற்றிலும் மறையத் தொடங்கி விட்டன.மக்களும் மறக்கத் தொடங்கி விட்டனர். என்னதான் மாற்றம் வந்தாலும் மக்கள் மறந்தாலும் பழமையை மறவாது நினைவு கூறவேண்டும் அல்லவா !

இந்த மிதிரிக்கட்டை காலணி இன்னும் சில ஆசிய நாட்டில் பயன்பாட்டில் இருந்து வருவது பழமை இன்னும் மறையவில்லை என்பதற்கு சான்றாகவும் சற்று ஆறுதலான விசயமாகவும் உள்ளது.

அதிரை மெய்சா

10 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

மிதிறி கட்டையில் இன்னொருமாதிரியும் இருந்தது.அதற்க்கு வார்கிடையாது .அதற்கு பதில்கட்டையின்முனையில் முக்கால்விரல் நீட்டதிற்க்குகட்டையோடு ஒரு கட்டை சொறுகி இருப்பார்கள்.கால்பெருவிரலுக்கும்அதற்க்கு அடுத்த விரலுக்கும் இடைப்பட்டஇடைவெளியில்அந்த கட்டையை இறுக்கிக் கொண்டு நடக்கவேண்டு.கொஞ்சம்பயிற்சிவேண்டும்.இதைஎல்லோரும் அணிவதில்லை.மஹ்ல தீவிலிருந்து நம்மூருக்குவரும் மௌலானாக்கள் அணிவார்கள்.அவர்கள் தங்குவதற்கு என்று கடல் தெருவில் பங்களா உண்டு.அதற்க்கு பெயர்''மஹ்லரா.

sheikdawoodmohamedfarook said...

ஜவ்வரிசி கஞ்சிபோட்ட பின்னல் தொப்பியோடு முழங்கால் அளவு வுயர்த்தி கட்டிய சமேறேண்டா கைலியும்கட்டிமேல்புறம் வெளுத்துப் போன குடையும் பிடித்து டடக்குபுடக்கு என்ற மிதிறிகட்டை சத்தத்தோடு பெரிசுகள் ஹொத்தபாவுக்கு போனஅந்தகாலம்கண்ணில் தெரிகிறது.

ZAKIR HUSSAIN said...

இந்த மிதிரிக்கட்டையை நாமும் போட்டுப்பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு சமீபத்தில் பினாங்கு போனபோது கேம்பல் ஸ்ட்ரீட்டில் வாங்கி வீட்டுக்கு வந்து ஒரு 20 நிமிடம் போட்டு பக்கத்தில் உள்ள இடங்களுக்கு நடந்து பார்த்தேன். முழங்கால் இரண்டிலும் யாரோ ரென்டுபேர் ஊஞ்சல் ஆடும் அளவுக்கு 'தொங்கு வலி" ...

நீதி:

நமக்கு முன்னோர்களிடம் இருந்த வழு வேறு...நம்மிடம் இருக்கும் வழு வேறு.

சிகிச்சை:

தென்னமரக்குடி எண்ணெய்

Blood circulation said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

" என்னை மிதித்தாலும்
காலமெல்லாம் உன்
கால்கோர்த்து வருவேன் "
-- மிதிரிக்கட்டை:

Blood circulation said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

" என்னை மிதித்தாலும்
காலமெல்லாம் உன்
கால்கோர்த்து வருவேன் "
-- மிதிரிக்கட்டை:

Shameed said...

இப்போது மிதிரி கட்டை இல்லை ஆனால் நாமா எல்லோருமே "கட்டையா" இருக்கோம்

sabeer.abushahruk said...

Caterpillar safety shoe வரை போட்டுப் பார்த்தும் yardல் நின்றால் சூடு கால்வழி தலைவரை ஏறுவதாக complaint செய்தேன்.

என் Boss அவன் Holland நண்பனிடம் சொல்லி எனக்காக பிரத்யேக safety shoe வரவழைத்துத் தந்தான். சூப்பரா இருக்கு.

உள்ளே ஆராய்ந்தபோது "அட தோலினால் போத்தப்பட்டு மிதிரிக்கட்டை!!!!"

மெய்சா, பழசைக் கிளறு.

Shameed said...

safety shoeவா இது பற்றி அண்ணன் nas அவர்கள் ஒரு கட்டுரையோ எழுதுவார்களே!

sabeer.abushahruk said...

ஹாஹா

ஹமீது, அது காட்டுக்கு; இது ரோட்டுக்கு!

அதிரை.மெய்சா said...

பழமை பொருள்கள் எல்லாமே நமக்கு கேடுவிளைவிக்காத மிக பயனுள்ள பொருளாகவும் பலம்மிக்கதாகவும் இருக்கிறது. நாம் அதை ஒவ்வொன்றாக மறந்து புதுமையை நோக்கிச்செல்வதால்தான் இன்றைக்கு நாம் பல இன்னலுக்கு ஆளாவதுடன் நம் ஆயுட்காலத்தையும் குறைத்துக்கொண்டு வருகிறோம்.

கருத்திட்டும் வாசித்த வாசகர்களுக்கும் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.