Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 052 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 02, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

''ஒரு பயணத்தில் மூன்று பேர் சென்றால், அவர்களில் ஒருவரை அவர்கள் தலைவராக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), அபூஹூரைரா(ரலி)  அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 960)

வயிறுடன் முதுகு ஒட்டி விட்ட (மெலிந்த) ஒட்டகையின் அருகில் நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். அப்போது அவர்கள் ‘’வாய் பேச இயலாத இந்த மிருகங்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியமாக உள்ளவற்றில் பயணம் செய்யுங்கள். உடல் ஆரோக்கியமாக உள்ளதையே (அறுத்து) உண்ணுங்கள்’’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ரபீஉ இப்னு அம்ரு(ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 966)

''நாங்கள் ஒரு பயணத்தில் இருந்த போது, தன் வாகனத்தில் இருந்த ஒருவர், வலதுபுறமாகவும் - இடதுபுறமாகவும் தன் பார்வையை திருப்பிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''(வாகனத்தின்) முதுகில் மேல் மிச்ச - இடமுள்ளவராக ஒருவர் இருந்தால், வாகன வசதி இல்லாத ஒருவருக்கு அதை ஒதுக்கட்டும்! ஒருவரிடம் பயண உணவில் மீதம் இருந்தால், பயண உணவு இல்லாதவருக்கு என அதைக் கொடுக்கட்டும்! என்று ஒவ்வொரு பொருட்களின் தனித்தனி வகைகளாக நபி(ஸல்) கூறினார்கள். மேல் மிச்சமாக உள்ள எதுவும் நமக்கு உரிமையானது அல்ல'' என்று நாங்கள் எண்ணும் அளவுக்குக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 969)

பயணம் செல்பவர் வாகனத்தில் ஏறியதும் கூற வேண்டியவை:

அல்லாஹ் கூறுகிறான்:
கப்பல்களையும், கால் நடைகளையும் அதன் மீது நீங்கள் சரியாக உட்கார்ந்து பயணம் செய்திட அல்லாஹ் உருவாக்கினான். அதில் நீங்கள் சரியாக உட்கார்ந்து விட்டால், உங்கள் இறைவனின் அருட்கொடைகளை நினைவு கூர்ந்து ‘‘சுப்ஹானல்லஃதீ ஸக்கர லனா ஹாதா வமாகுன்னா லஹுமுக்ரினீன் வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்'' என்று கூறுங்கள்.

துஆவின் பொருள்:
அல்லாஹ்வே தூய்மையானவன். அவன் தான் இதை நமக்கு வசப்படுத்தித் தந்தான். (முன்பு) இதற்கு நாம் சக்தி பெற்றவர்களாக இல்லை. நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்புவர்களாக உள்ளோம்.  
(அல்குர்ஆன்: 43 -12 -14 அஸ்ஸுக்ருஃப் அலங்காரம்)

''நபி(ஸல்) அவர்கள் பயணம் புறப்பட்டால், பயண சிரமங்கள், திடீர் ஆபத்துகள், இருப்பவை அழிதல், அநீதமிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை, குடும்பம், சொத்தில் ஏற்படும் தீயவை ஆகியவற்றில் பாதுகாப்புத் தேடுவார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு ஸர்ஜிஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 973)

''நாங்கள் (பயணத்தில்) மேடுகளில் ஏறினால் தக்பீர் கூறுபவர்களாகவும், இறங்கும் போது ''தஸ்பீஹ்'' கூறுபவர்களாகவும் இருந்தோம். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 975)

''இறைத்தூதர் அவர்களே! நான் பயணம் செல்ல விரும்புகிறேன். எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று ஒருமனிதர் கேட்டர் ''இறைச்சத்தை நீர் பேணிக் கொள்வீராக! அனைத்து உயரமான பகுதிகளில் உயரும் போதும் தக்பீர் கூறுவீராக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் புறப்பட்டுச் சென்றதும் இறைவா! அவருக்கு பயண தூரத்தை சுருக்குவாயாக! அவரின் பயணத்தை எளிதாக்குவாயாக'' என்று நபி(ஸல்) துஆச் செய்தார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 978)

''ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். ஓடைப் பகுதியின் மேடுகளில் நாங்கள் ஏறும் போது, ''லாயிலாஹ இல்லல்லாஹ் அல்லாஹுஅக்பர்'' எனக் கூறுவோம். எங்களின் சப்தம் கூடியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ''மனிதர்களே! நீங்கள் அமைதியைக் கடைபிடியுங்கள்! நீங்கள் செவிடனையோ, உங்களை விட்டு மறைந்தவனையோ அழைக்கவில்லை. நிச்சயமாக  அவன் உங்களுடன் இருக்கிறான். நிச்சயமாக அவன் கேட்பவன் - நெருக்கமானவன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 979)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக! (92:1)

பிரகாசிக்கும் பகல் மீது சத்தியமாக! (92:2)
ஆணையும், பெண்ணையும் அவன் படைத்திருப்பதன் மீது சத்தியமாக! (92:3)

உங்கள் முயற்சி பலதரப்பட்டதாக உள்ளது. (92:4)

யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம். (92:5,6,7)

யார் கஞ்சத்தனம்; செய்து தேவையற்றவராகத் தன்னை கருதி,
நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம். (92:8,9,10)

அவன் விழும் போது அவனது செல்வம் அவனைக் காக்காது. (92:11)

நேர் வழி நம்மைச் சேர்ந்தது. (92:12)

மறுமையும், இம்மையும் நமக்கே உரியது. (92:13)

கொளுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு  எச்சரிக்கிறேன். (92:14)

துர்பாக்கியசாலியைத் தவிர வேறு யாரும் அதில் கருக மாட்டார்கள். (92:15)

அவன் பொய்யெனக் கருதி அலட்சியம்  செய்தவன். (92:16)

இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப்படுவார். (92:17)

அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர். (92:18)

மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது. (92:19,20)

அவர் திருப்தியடைவார். (92:21)
(அல்குர்ஆன்: 92:1 21 அல்லைல் இரவு)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
  
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S

6 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

குர்ஆனையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காட்டிய படியும் எல்லா தருணத்திலும் பின்பற்றி நடப்போம்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.குர்ஆனையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காட்டிய படியும் எல்லா தருணத்திலும் பின்பற்றி நடப்போம்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

வெள்ளிக்கிழமைகளில் எதிர்பார்த்துக் காத்திருந்து அருந்தும் அருமருந்து தொகுத்தளிக்கும் அலாவுதீனுக்கு நன்றி.

Ebrahim Ansari said...

அலை பாயும் மனதுக்கு அமைதி தரும் அருமருந்து. மணம் விட்டுப் படிப்போர் இதை நிச்சயம் மருந்தேனவே உணர்வர்.

ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

இப்படிக்கு
உணர்ந்தவர்களில் ஒருவன்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு