அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
பாங்கு கூறுதலின் சிறப்பு
''பாங்கு
கூறுவதிலும், (தொழுகையின்) முதல் வரிசையிலும் உள்ள சிறப்பை மக்கள் அறிந்து, பின்பு
அதற்கு சீட்டுக் குலுக்கிப் போடாமல் அவர்கள் அதை அடைந்து கொள்ள முடியாது என்று
இருந்தால், அதற்காக சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். மேலும், (தொழுகைக்கு)
விரைந்து செல்வதில் உள்ளதை அவர்கள் அறிந்து கொண்டால், அதன் பக்கம் முந்திச்
செல்வார்கள். இஷாத் தொழுகையிலும், சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள சிறப்பை அவர்கள்
அறிந்து கொண்டால், தவழ்ந்தாவது அவ்விரண்டு தொழுகைக்கும் அவர்கள் வருவார்கள் என்று
நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1033)
''பாங்கு
கூறக்கூடியவர்கள், மறுமை நாளில் மக்களிலேயே கழுத்து நீண்டவர்களாக இருப்பார்கள்
''என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆவியா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1034)
''தொழுகைக்கு
பாங்கு கூறப்பட்டால், பாங்கு கூறும் சப்தம் கேட்காத தூரம் வரை பின் துவாரத்தில்
காற்றை வெளிப்படுத்தியவனாக ஷைத்தான் பின்னோக்கி ஓடுவான். பாங்கு கூறி முடித்து
விட்டால் முன்னோக்கி வருவான். தொழுகைக்கு இகாமத் கூறி முடிக்கப்பட்டு விட்டால்
முன்னோக்கி வருவான். இறுதியாக, ஒரு மனிதரின் உள்ளத்தில் இதற்கு முன்
நினைத்திராதவற்றை, இதை நினை. அதை நினை எனக் கூறுவான். கடைசியில், அவர் எத்தனை
தொழுதார் என்பதை அந்த மனிதர் அறியாதவராக ஆகிவிடுகிறார்'' என்று நபி
(ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1036)
''பாங்கை
நீங்கள் கேட்டால், பாங்கு கூறுபவர் போல் கூறுங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஸஈத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1038)
''பாங்கு
கூறுவதைக் கேட்ட ஒருவர், அல்லாஹும்ம ரப்ப ஹாஃதிஹித் தாமத்தி, வஸ்ஸலாதில் காஇமத்தி, ஆதி
முஹம்மதனில் வஸீலத்த, வல்ஃபழீலத்த, வப்அஸ்ஹுமகாமன் மஹ்மூதன் அல்லஃதீ வஅத்தஹு'' என்று கூறினால், மறுமை நாளில் என் பரிந்துரை அவருக்கு கடமையாகி
விட்டது என்று நபி(ஸல்) கூறினார்கள்.
துஆவின்
பொருள்:
இறைவா!
முழுமையான இந்த அழைப்பிற்கும் நிலையான தொழுகைக்கும் உரிய இறைவா ! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ''வஸீலா
தகுதியையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ
வாக்குறுதி அளித்த '' மகாமன் மஹ்மூத்'' எனும் புகழுக்குரிய இடத்தில் அவர்களை
எழுப்புவாயாக!
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1039)
''பாங்கு
கூறுபவரின் பாங்கை கேட்டவர், அஷ்ஹது
அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹுலாஷரீகலஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹுவரசூலுஹு, ரழீத்து
பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரஸுலன், வபில் இஸ்லாமி தீனன்'' என்று கூறினால் அவரின் குற்றங்கள் அவருக்கு மன்னிக்கப்படும் என்று
நபி(ஸல்) கூறினார்கள்.
துஆவின்
பொருள்:
அல்லாஹ்வைத்
தவிர வேறு கடவுள் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாளன் இல்லை என்று சாட்சி
கூறுகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும், முஹம்மது(ஸல்) அவர்களை தூதராகவும், இஸ்லாமை
மார்க்கமாகவும் நான் திருப்தியுடன் ஏற்றுக் கொண்டேன்.(அறிவிப்பவர்: ஸயீத் இப்னு அபீவகாஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1040)
''பாங்கும்,
இகாமத்திற்குமிடையே கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படமாட்டாது'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (அபூதாவூது,
திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1041)
அளவற்ற அருளாளனும்
நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
(ஏக இறைவனை)
மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் தெளிவான சான்று அவர்களிடம் வரும் வரை தவறில் நீடித்துக் கொண்டே இருந்தனர்.
(98:1)
இவர் அல்லாஹ்வின்
தூதரவார். தூய்மையான ஏடுகளைக் கூறுகிறார். (98:2)
அதில் நேரான சட்டங்கள்
உள்ளன. (98:3)
வேதம் கொடுக்கப்பட்டோர்
தமக்குத் தெளிவான சான்று வந்த பின்பே தவிர பிளவுபடவில்லை. (98:4)
வணக்கத்தை
அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும்
தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
(98:5)
(ஏக இறைவனை)
மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில்
என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள்.அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (98:6)
நம்பிக்கை கொண்டு
நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். (98:7)
அவர்கள் இறைவனிடம்
அவர்களின் கூலி சொர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள்
ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக
இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக்
கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது. (98:1)
(அல்குர்ஆன்: 98:1 - 8
அல்பய்யினா -தெளிவான சான்று )
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன் S.
7 Responses So Far:
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...
தொழுகைக்கான அழைப்பின் மகத்துவம் பற்றிய ஹதீஸ் தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
//இஷாத் தொழுகையிலும், சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள சிறப்பை அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தாவது அவ்விரண்டு தொழுகைக்கும் அவர்கள் வருவார்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1033)//
இஷாத் தொழுகை,மற்றும் சுப்ஹுத் தொழுகையின் சிறப்புக்களை எதிர்வரும் கட்டுரைகளில் எதிர் பார்க்கின்றேன் அலாவுதீன் காகா
உள்ளம் கொள்ளைகொள்ளும் வழிகாட்டுதல்களின் தொகுப்பு உண்மையிலேயே வெள்ளிக்கிழமைகளைச் சிறப்பாக்குகின்றன.
நன்றி அலாவுதீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அலாவுதீன் காக்கா,
பாங்கின் சிறப்பை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.
உள்ளம் கொள்ளைகொள்ளும் வழிகாட்டுதல்களின் தொகுப்பு உண்மையிலேயே வெள்ளிக்கிழமைகளைச் சிறப்பாக்குகின்றன.
ஜஸக்கல்லாஹ் ஹைரா.
சகோ அலாவுடீன் காக்கா,உங்கள் குரான் ஹதீஸ் கட்டுரை அனைத்துக்கும் மருந்து.இது ஒரு நூலாக வெளி வர ஆசை.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் :ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
shameed சொன்னது…///// இஷாத் தொழுகை,மற்றும் சுப்ஹுத் தொழுகையின் சிறப்புக்களை எதிர்வரும் கட்டுரைகளில் எதிர் பார்க்கின்றேன் அலாவுதீன் காகா /////
இன்ஷாஅல்லாஹ் விளக்குவதற்கு முயற்சி செய்கிறேன்.
AR AL-அர அல சொன்னது…
/// சகோ அலாவுடீன் காக்கா,உங்கள் குரான் ஹதீஸ் கட்டுரை அனைத்துக்கும் மருந்து.இது ஒரு நூலாக வெளி வர ஆசை. ////
இன்ஷாஅல்லாஹ் முயற்சி செய்வோம்.
Post a Comment