''நபி(ஸல்) அவர்கள் உபரியான (நபிலான) தொழுகைகளில் சுப்ஹு தொழுகையின் (முன்) இரண்டு ரக்அத்களைவிட வேறு எதிலும் மிக உறுதியாக கடைபிடிப்பவர்களாக இருந்ததில்லை. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1101)
''சுப்ஹு தொழுகையின் (முன்) இரண்டு ரக்அத்கள், இவ்வுலகம், மற்றும் அதில் உள்ளதை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1102)
''நபி(ஸல்) அவர்கள் சுப்ஹின் இரண்டு ரக்அத்தில் ''குல் யாஅய்யுஹல் காஃபிரூன்'' (109 வது அத்தியாயம்), மற்றும் குல்ஹுவல்லாஹுஅஹத்'' (112 வது அத்தியாயம்) ஆகியவற்றை ஓதுவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1108
அதிரைநிருபர் பதிப்பகம்
0 Responses So Far:
Post a Comment