Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று! நாளை! - தொடர் - 22 23

அதிரைநிருபர் பதிப்பகம் | September 18, 2016 | , , , ,

கவிஞர் வைரமுத்து ஒரு கவிதை எழுதி இருந்தார்.

பசுவினைப் பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்று கரக்கவா முடியும்? 

– என்பது அந்தப் பாடல் வரிகளாகும். காஞ்சி மடாதிபதி பற்றி அந்தப் பாடலின் வரிகளை சற்று எதுகை மோனையுடன் மாற்றி எழுதினால் இப்படி எழுதலாம் (கவிக் குடும்பத்தோர் மன்னிப்பார்களாக!)

பாம்பினைப் பசுவென்று சாட்சி சொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்று கரக்கவா முடியும்? 

– என்பதே மாற்றப்பட்ட வரிகள். 

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரை ஒரு பாம்பு என்று பலர் வர்ணிக்கிறார்கள். இந்தப் பாம்பை ஒரு பசு என்று சாட்சிதான் சொல்ல முடியும். ஆனால் இப்படிப் பொய் சாட்சி சொன்ன காரணத்தால் , இந்தப் பாம்பு பசு கறக்கும் பாலை சுரக்குமா? கறக்குமா? அல்லது அதன் இயல்பான விஷத்தைத்தான் சுரக்குமா? பாம்பு எப்படி பசுவின் வேஷம் போட்டாலும் பாம்பு பாம்புதான்.

சங்கராச்சாரியாரை ஜெகத் குரு என்று கண்மூடித்தனமாகப் போற்றும் பொதுமக்கள் புரிந்து கொள்வதற்காக அங்கே இங்கே எல்லாம் போகாமல், மகாபாரதத்தின் ஒரு காட்சியை இங்கு விவரிக்க விரும்புகிறோம். இறுதிப் போர் நடக்கும் முன்பே போரின் கொடுமைகளை அர்ஜுனன் நினைத்துப் பார்க்கிறான். அர்ஜுனனின் அச்சத்தைப் போக்குவதற்காக, கிருஷ்ணன் இவ்வுலகில் மனிதனின் தோற்றம் பற்றி அவனுக்கு விளக்குகிறார்.

“அர்ஜுனா ! நீ புல்லாய் புழுவாய் மீனாய் பறவையாய் பிறந்து பின் மனிதனானாய் . உன் பயணம் மிகப் பெரியது . நீ அர்ஜுனனாக இருப்பது இப்பயணத்தின் ஒரு பகுதி. ஒரு சிறிய புள்ளி. இந்தப் பயணம் தொடரும். பயணம் தொடர்வதற்காக உடல் அழியும். நீ உடல் அல்ல, ஆன்மா. ஆன்மாவின் பயணம் மிகப் பெரியது. காமக்குரோதம் நீக்கி மூலாதார சக்தியைத் தூண்டிவிட்டு அனாதகம் என்கிற சக்தியை நோக்கி நடந்து, ருசி, பசி, வாசனைகளை விலக்கி, இன்னும் நடந்து விசுத்தி என்ற இடத்தை அடைந்து, அந்த சக்தியின் துணையோடு ஆஞ்ஞை அடைந்தால் பரமானந்தமான சஹஸ்ரம் அடையலாம். இதுவே ஆத்ம பயணத்தின் வழி" என்கிறார்.

அதாவது அடிப்படையில் இந்து தர்மம் என்பது காமம், குரோதம், மோகம் ஆகிய மன வன்மங்களை துறந்துவிடச் சொல்கிறது . அதிலும் குறிப்பாக ஒரு மதத்தின் மரியாதைக்குரிய தலைமை பீடத்தில் இருப்பவர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் வாழ்ந்து காட்டுவது அவசியமாகும். இந்த அடிப்படைத் தகுதிக்கு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி தகுதிபடைத்தவராக வாழ்ந்தாரா என்பதே நம் முன் நிற்கும் விடை பெற இயலாத வினா.

சங்கர மடத்தை நிறுவிய ஆதி சங்கரரைப் பற்றியோ அவரது புனித நோக்கங்கள் அல்லது செயல்பாடுகள் நெறிமுறைகள் பற்றி விமர்சனங்கள் எழவில்லை. அவருடைய கொள்கைகளை ஏற்பவர்களும் சரி ஏற்காதவர்களும் சரி அவரது தனிப்பட்ட வாழ்வைப் பற்றி சந்தேகப் படவில்லை. அதே போல்தான் சுவாமி விவேகானந்தரும் வாழ்ந்தார். தான் நம்பியதை அவர் உபதேசித்தார். தனிமனித வாழ்வில் ஒழுக்கத்தை அவர் சீர் குலைத்தாக எவரும் அவரை நோக்கி குற்ற விரலை நீட்டவில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, தயானந்த சரஸ்வதி மதுரை ஆதீனம் போன்றவர்களைப் பற்றி யாரும் விமர்சித்ததாக நாங்கள் படிக்கவில்லை. அப்படி விமர்சனத்துக்குரிய செயல்களில் அவர்கள் ஈடுபட்ட செய்திகளும் இல்லை. இதே காஞ்சியில் மடாதிபதியாக இருந்து மறைந்த முன்னாள் பெரியவர் சந்திரசேகர் சுவாமி பற்றி விரலை அல்ல புருவத்தை கூட உயர்த்தியவர்கள் கிடையாது. ஆனால் இப்படிப்பட்ட பெரியவர்கள் இருந்த இடத்துக்கு வந்த ஜெயேந்திரர் பற்றி மட்டும் ஏன் விமர்சனங்கள் வருகின்றன? காரணம் நெருப்பு இல்லாமல் புகையவில்லை. காஞ்சி மடத்தின் வரலாறு பற்றி விக்கிபீடியாவிடம் கேட்டால் அது இப்படிக் கூறுகிறது.

“காஞ்சி சங்கர மடம் (Kanchi Sankara matha) தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஓர் இந்து சமய துறவியர் இருப்பிடமாகும். இது காஞ்சி காமகோடி பீடம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆதி சங்கரர் இங்கு சமாதியடைந்ததாகவும் இந்த மடத்தை நிறுவியதாகவும் கூறப்படுகிறது. இந்த மடத்தின் தலைவர்கள், பீடாதிபதிகள், மற்றநான்கு (சிருங்கேரி, துவாரகா, பூரி, சோதிர்மத்) சங்கரமடத் தலைவர்களைப் போலவே, "சங்கராச்சாரியர்" என்றப் பட்டத்துடன் விளங்குகின்றனர். காஞ்சி மடம் கும்பகோணத்தில் இருந்த 18ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் புகழ்பெறத் துவங்கியது. சிலர் இதனை சிருங்கேரி மடத்தின் கிளையாகக் கருதுகின்றனர். இன்று தென்னிந்தியாவில் உள்ள முதன்மையான இந்து சமய அமைப்புகளில் ஒன்றாக இந்த மடம் விளங்குகிறது.

நவம்பர் 2004ஆம் ஆண்டு இந்த மடத்தின் பீடாதிபதிகளாக இருந்த செயந்திர சரசுவதி மற்றும் விசயேந்திர சரசுவதி சுவாமிகள் இருவரும் சங்கர்ராமன் கொலை வழக்கில் கைதானதை அடுத்து இதற்கு இழுக்கு ஏற்பட்டது."

சங்கர ராமன் கொலை வழக்கில் சிக்குவதற்கு முன்பாகவே ஜெயேந்திரர் மீது அரசல் புரசலாக சில பாலியல் தொடர்பான செய்திகள் கசிந்தன. கோடம்பாக்கத்தில் இருந்துதான் கிசுகிசுக்கள் வரவேண்டுமென்ற நியதிகள் மாறி ஒரு பெரும்பான்மை மதத்தைப் பின்பற்றும் மக்கள் மதித்து, நம்பி வழிபடும் பாரம்பரியமும் புனிதமும் மிக்கதாக மக்கள் கருதும் மதச் சார்பின்றி நமது மரியாதைக்கும் உரிய காஞ்சி மடத்தில் இருந்தும் கிசுகிசுக்கள் கசிய ஆரம்பித்தன எனபது ஒரு துரதிஷ்டமான நிலை. காமம் குரோதம் மோகம் போன்ற மனதின் வன்மங்களை மறந்தவர்களும் துறந்தவர்களும் தலைமைதாங்கும் மதத்தின் மடத்தில் காமத்தின் அடிப்படையிலான காரியங்களும், குரோதத்தின் அடிப்படையிலான கொலை போன்றவையும் நடந்ததாக கூறப்பட்டது . இந்தக் காரியங்களுக்கு முன்னோட்டமாக பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சியடையும்படி திடீரென்று அங்கு ஒரு சம்பவம் நடந்தது. அதாவது உலகப் புகழ் பெற்ற மடத்தின் தலைவராக இருந்த ஜெயேந்திரர் திடீரென்று காணாமல் போய்விட்டார். ஒரு உடலுக்குத் தலை இல்லாமல் போனது. முண்டம் மற்றும் துடித்துக் கொண்டு இருந்தது. தலையைத்தேடி இந்த நாட்டின் தலையே தலைக் காவிரி என்கிற இடத்துக்கு ஆளனுப்பித் தேடியது. ஆகவே ஜெயேந்திரர் மீது சங்கர ராமன் கொலை வழக்கு தொடரப் படுமுன்பே இவரது நன்னடத்தை பற்றிய சான்றிதழ் திருப்தி இல்லை என்றே வழங்கப் படக் காரணமானார்.

இது நடந்தது 1986 ல் . எல்லாப் பத்திரிகைகளிலும் வந்த விபரப்படி, ஜெயேந்திரர் தனது துறவறத்துக்கு அடையாளமான இழக்கக்கூடாத தண்டத்தை எங்கோ போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல், வெங்கட்ராமன் என்பவரின் பெண்னுடன் எங்கோ மாயமானார். ஒருவேளை அவருக்கு துறவறம் கசந்து இருக்கலாம். இல்லறத்தை நாடி இருக்கலாம். இது தனிமனித உணர்வுகளின் அடிப்படையில் ஒரு தனிமனிதர் எடுக்கும் முடிவு. உடல் இச்சைகளை அடக்கத் தாக்குப் பிடிக்காத துறவறம் அவரை மடத்தைவிட்டு ஒடி ஒளியச் சொன்னது. ஒரு மாதத்திற்கு மேல் குடும்பம் நடத்தினார். அப்போது மாயமாக மறைந்த சங்கராச்சாரி அவர்களை , சிபிஐ தேடிக் கண்டுபிடித்து தலைக் காவிரிக்கு போய் அந்தப் பெண்ணை இவரிடமிருந்து பிரித்துக் கூட்டிக் கொண்டு வந்த தகவல்கள் மிகவும் ஆச்சரியமானவை. மாயமாய் மறைந்த தலைவர் மாயாஜாலமாக காஞ்சிக்குக் கொண்டு வரப்பட்டார். இதற்குக் காரணம் அன்றைய குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனின் தலையீடு. அந்தக் கால இடைவெளியில் சின்ன சங்கராச்சாரி விஜயேந்திரரை நியமித்தது சங்கரமடம். இதுதான் இன்று இரண்டு சங்கராச்சாரிகள் இருப்பதன் காரணம்.

அடுத்து, பிரபலமான பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சங்கராச்சாரியார் தன்னிடம் முறை தவறி நடந்து கொண்டது குறித்து நவம்பர் 29, 2004 தேதி புகார் கொடுத்தார்.

அப்போது நிருபர்களுக்கு அனுராதா ரமணன் கொடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் அதிர்ச்சியளிப்பவையாக இருந்தன.

“1992 ஆம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் இன்னொரு பெண்ணும் (இவர் தான் சங்கராச்சாரியாரிடம் அறிமுகப்படுத்தியவர்) மடத்துக்கு சென்றோம். அங்கு உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது சங்கராச்சாரியார் ஆன்மீகம் பற்றி பேசினார். நான் தலை குனிந்து எழுதிக் கொண்டு இருந்தேன். ஆன்மீகவாதியின் பேச்சு திடீரென்று ஆபாசமாக மாறியது. அப்போது நான் என் தலையை நிமிர்த்தி அவரை பார்த்தேன். அப்போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னுடன் வந்து இருந்த பெண் சங்கராச்சாரியாருடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு இருந்தார். அவர் என்னிடம் மிக ஆபாசமாக பேசினார். அவரது விருப்பத்துக்கு என்னையும் இணங்கும்படி வற்புறுத்தினார். என்னால் கோபத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் நீயெல்லாம் மனுஷனா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன். அப்போது ஒரு வார பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை தொடராக எழுதி வந்தேன். அப்போதும் எனக்கு மிரட்டல் வந்தது. அதே போல போலீசில் புகார் கொடுக்க முடியாத படி அவர்கள் எனக்கு பல தொல்லைகள் கொடுத்தார்கள் “ என்று விதவையான அனுராதா ரமணன் கூறினார்.

தினபூமியில் (5.12.04) அன்று வெளிவந்த செய்தி. "காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அடிக்கடி இளம்பெண்கள் பலரை மடத்துக்கே வரவழைத்து சந்தித்திருக்கிறார். இதில் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அனுராதா என்ற பெண்ணும் ஒருவர். இதேபோல, கும்பகோணம் வனஜா, ஆந்திராவைச் சேர்ந்த ஜெயா உள்ளிட்டப் பெண்கள் ஜெயேந்திரரை அடிக்கடி சந்தித்துள்ளதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காஞ்சி சங்கர மடத்துடனும், ஜெயேந்திரருடனும் நெருங்கிய தொடர்புவைத்திருந்த நடிகைகளில் சொர்ணமால்யா முக்கியமானவர். இது நடக்க, சில ஆண்டுகளுக்கு முன்புதான் சொர்ணமால்யாவுக்கு திருமணம் நடந்தது. ஆனால், திடீரென்று தன் கணவரிடமிருந்து சொர்ணமால்யா விவாகரத்துக் கோரினார். இந்த விவகாரம் சங்கர மடத்திலும் வைத்து பஞ்சாயத்து செய்யப்பட்டது. சங்கராச்சாரியாருடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கணவரிடமிருந்து நிரந்தரமாகப் பிரிய சொர்ணமால்யா முடிவெடுத்தார்.

சொர்ணமால்யா தன் கணவரை பிரிந்து விடுவதற்கு ஜெயேந்திரரே ஆலோசனை வழங்கினார். இந்தச் சூழ்நிலையில் காண்ட்ராக்டர் ரவி சுப்ரமணியம் மூலம் சென்னையில் சொர்ணமால்யாவுக்கு வீடு ஒன்றை ஜெயேந்திரரே வாங்கி கொடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சொர்ணமால்யா அடிக்கடி சங்கர மடத்துக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதேபோல சங்கர மடப்புள்ளிகளும் சென்னையில் உள்ள சொர்ணமால்யாவின் வீட்டுக்கே தேடிச் சென்று அவரைச் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சொர்ணமால்யாவுக்கும் சங்கர மடத்திற்கும் இருந்த நெருக்கம் குறித்து பரபரப்பான தகவல்களை அவரின் கணவரே காவல்துறையிடம் கூறினார்.

சங்கரராமன் கொலை வழக்கிலும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப் பட்ட வழக்கிலும் இன்னும் புழல் சிறையில் இருக்கும் ரவி சுப்பிரமணியம் தந்த முதல் வாக்குமூலத்தில் ஜெயேந்திரர் பல பெண்களுடன் இருந்துள்ளதை நேரில் பார்த்ததாக ரவி சுப்பிரமணியம் அதிர்ச்சிகரமான தகவல்களைக் கூறினார். சங்கர ராமன் வழக்கில் இவர்தான் பிரதானசாட்சி. பின்னர் என்ன காரணமோ முதல் பிறழ் சாட்சியாகவும் மாறினார்.

இன்னொரு திருவிளையாடலும் வெளிவந்தது இப்படி ஒரு வாக்குமூலம் மூலம். “நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். என் மனைவி சித்ரா, , நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். 1994ம் ஆண்டில் எனக்கும்மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியதால் பிரிந்துவிட்டோம். தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்த நான் பின்னர் கட்டட காண்ட்ராக்ட் எடுத்து செய்ய ஆரம்பித்தேன். என் நண்பர் விஸ்வநாதன் மூலமாக காஞ்சி மடத்துடன் தொடர்பு கிடைத்தது. விஸ்வநாதனின் அக்காள் லீலாவுக்கும் ஜெயேந்திரருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. லீலாவும் ஜெயேந்திரரும் மணிக்கணக்கில் டெலிபோனில் அரட்டை அடிப்பது வழக்கம். அவர் மூலமாக ஜெயேந்திரரின் அறிமுகம் கிடைத்தது.

1995ம் ஆண்டில் நான், விஸ்வநாதன், அவரது மனைவி சரஸ்வதி மூன்று பேரும் தாம்பரத்தில் ஜெயேந்திரர் தங்கியிருந்த கல்யாண மண்டபத்தில் அவரை சந்திக்கப் போனோம். இரவு நேரத்தில் ஜெயேந்திரரை நாங்கள் தனித்தனியாக சந்திக்க வைக்கப்பட்டோம். பின்னர் மூவரும் வீட்டுக்குத் திரும்பியபோது, தன்னிடம் ஜெயேந்திரர் தகாத முறையில் நடக்க முயன்றதாக சரஸ்வதி எங்களிடம் கூறினார். இதையடுத்து ஜெயேந்திரரை கண்டிக்குமாறு லீலாவிடம் சொன்னோம். அவரும் ஜெயேந்திரருடன் பேசினார். இதைத் தொடர்ந்து சரஸ்வதியிடம் டெலிபோனிலேயே ஜெயேந்திரர் மன்னிப்பு கேட்டார்.

அதே சமயம் நானும் லீலாவும் தொடர்ந்து, அடிக்கடி காஞ்சி மடத்துக்கு சென்று வந்தோம். லீலாவுடன் மணிக்கணக்கில் ஜெயேந்திரர் தனியே பூட்டிய அறையில் இருப்பார். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்து போனதால், என்னை சங்கராகல்லூரிக் குழுவின் உறுப்பினராக ஜெயேந்திரர் நியமித்தார். அந்தக் கல்லூரிக்காக கட்டடம் கட்ட ரூ. 1.6 கோடி செலவிட திட்டமிட்டார். அந்தப் பணியை என்னிடம் தந்தார். நான் கட்டித்தந்தேன். இதையடுத்து காஞ்சி மடத்தின் பல கட்டட வேலைகளை எனக்குத் தந்தார் ஜெயேந்திரர்.

ஜெயேந்திரருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய தொடர்பு இருந்தது. மதிய நேரத்திலேயே தனது அறைக்குள் பல பெண்களுடன்அவர் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

மடத்தின் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் இயக்குனர் நடராஜனின் மனைவி பிரேமா, ஹைதராபாத்தில் ஆல் இந்தியாரேடியோவில் வேலை பார்க்கும் பெண் ஆகியோரை ஜெயேந்திரருடன் தவறான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

மருத்துவமனையில் கேண்டீன் வைத்திருக்கும் பத்மாவையும் மதிய நேரத்தில் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன். மடத்துக்குச்சொந்தமான நசரத்பேட்டை பள்ளியின் முதல்வர் ரேவதியும் ஜெயேந்திரருடன் பார்த்திருக்கிறேன்.

மதிய ஓய்வு நேரத்தில், பக்தர்களை சந்திக்காதபோது இவர்களுடன் இருந்துள்ளார் ஜெயேந்திரர். இதைத் தவிர நிறைய புளு பிலிம் படங்களையும் ஜெயேந்திரர் பார்ப்பார். மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரை இதெல்லாம் நடக்கும்.
2000ம் ஆண்டில் ஒருநாள் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் ஜெயேந்திரர் இருந்தார். அநத நேரத்தில் ஒரு மிகப் பெரியதொழிலதிபரின் மனைவி ஜெயேந்திரரை சந்திக்க வந்துவிட்டார். அவர் மிகப் பெரிய இடம் என்பதால் அனுமதி இல்லாமலேயேஜெயேந்திரரின் அறைக்குள் நுழைய வந்துவிட்டார்.

இதனால் பக்கத்து அறையில் இருந்த என்னை அவரசமாக அழைத்த ஜெயேந்திரர், அந்த ஆந்திரா பெண்ணின் கணவரைப் போல நடிக்குமாறு கூறினார். ஜெயேந்திரின் அறைக்குள் அரைகுறை ஆடையுடன் இருந்த அந்த இளம் பெண்ணின் அருகில் அவரதுகணவர் போல நடித்தேன். தொழிலதிபரின் மனைவி வந்துவிட்டுப் போகும் வரை அப்படியே உட்கார்ந்திருந்தேன். இப்படியெல்லாம் இத்யாதி இத்யாதி.

இவ்வளவு தூரம் தனது தவறான நடத்தைகளால் ஒரு புனிதமான இடம் என்று போற்றப்படும் இடத்தின் தலைவர் நடந்திருப்பது அவரது அந்தரங்க நம்பிக்கைக்குரிய ரவி சுப்ரமணியாலேயே மேற்கண்டவாறு எல்லாம் வாக்குமூலமாகத்தரப்பட்டு பத்திரிகைகளில் வெளியானவைதான். அப்படி ஒரு நடத்தை இருந்த ஒருவர், கொலையும் செய்ய முகாந்திரம் இருந்து இருக்கும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. பல சாதாரண தனி மனிதர்களின் வாழ்வில் காம வெறியாட்டம் கொலையில் முடிந்த கதைகளை அன்றாடம் பார்க்கிறோமே!

இதே சங்கராச்சாரியார் ஒரு பிராமணராக இருந்ததாலும் உயர்ந்த இடத்தின் செல்வாக்கு இருந்ததாலும் தற்போது தப்பித்துக் கொண்டார். ஆனால், இதே போல ஒரு வழக்கு கற்பழிப்பு, கொலை ஆகியவற்றுக்காக வேறொரு சாமியார் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். அவர்தான் பிரேமானந்தா சாமியார். பாவம்தான் இவர். தவறுகள் செய்ததுதான் செய்தார் ஒரு சூத்திரனாகப் பிறந்துதான் அவற்றை செய்ய வேண்டுமா? ஒரு பிராமணராக இருந்து இருந்தால் இவரும் தப்பித்து இருக்கலாமோ என்றே தோன்றுகிறது.

தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் காஞ்சிபுரத்தில் சங்கரராமன் குடும்பத்தினரை செய்தியாளர்கள் சந்தித்தார்கள். . கண்ணீரோடு முடங்கிக் கிடந்த சங்கரராமனின் மனைவி பத்மா, சோகம் அப்பிய முகத்துடன் பேசினார். 'என் கணவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவர். பாவிகள் அவரைத் துள்ளத் துடிக்க அவர் வேலை செய்த கோயிலிலேயே வெட்டிக் கொன்னாங்க. கொலையில சம்பந்தப்பட்டவங்க பெரிய இடம்னு தெரிஞ்ச பிறகும் விடாம வழக்கை நடத்த ஒத்துழைப்பு தந்தோம். 

ஒருநாள், விசாரணைக்காக போனபோது நீதிமன்ற வளாகத்திலேயே வெச்சி மூணு பேர், 'சாட்சியத்தை மாத்தி சொல்லலைன்னா உன் பிள்ளைங்களை ஆசிட் தொட்டியில வீசிடுவோம். அடையாளம் தெரியாம போயிடுவாங்க’னு மிரட்டினாங்க. கோயில்ல வெச்சி ஒரு உயிரைப் பறிக்கத் துணிஞ்சவங்க... இதையும் செய்திடுவாங்கங்கன்னு பயந்து போனேன். அவருதான் போயிட்டாரு... என் பிள்ளை களையாவது காப்பாத்து வோம்னு நீதிமன்றத்துல மாத்திச் சொல்லவேண்டியதாகிடுச்சி'' என்ற பத்மாவின் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. துடைத்துக்கொண்டு தொடர்கிறார். ''போலீஸ்காரங்க அடையாள அணிவகுப்புக்கு தனி வேன்ல அழைச்சிட்டுப்போனாங்க. நீதிமன்றத்துல குற்றவாளிகளை சரியா நான் அடையாளம் காட்டினேன். உயிருக்கு பயந்துதான் இந்தக் காரியத்தைச் செய்தேன். 

அவ்வளவு அச்சுறுத்தல் இருந்த சூழலில், எங்களை மறுபடியும் தனி வேன்ல கூட்டிட்டு வந்து வீட்டுல விட்டிருக்கலாம். ஆனா, போலீஸ்காரங்க, சர்வசாதாரணமா பஸ்ல திரும்பிபோகச் சொன்னாங்க. எப்போ என்ன நடக்குமோன்னு பயந்துக்கிட்டுத்தான் பஸ் ஏறினேன். 

அன்னிக்கு நடுராத்திரி 12 மணிக்கு தன்னந்தனியா வீடுவந்து சேர்ந்தோம். அதுல இருந்து யாரையுமே நாங்க நம்பலை. யார் மேலயும் நம்பிக்கை வைக்கிற நிலையில நாங்க இல்லை. நாங்க யாரைப் பகைச்சிக்கிட்டோமோ அந்தப் பெரியவங்க எதையும் செய்யத் துணிந்தவங்க. குற்றவாளிகளை அடையாளம் காட்டிட்டு வந்த அன்றைக்கு எங்க உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தா யார் பொறுப்பு? 

அநாதையாதானே இருக்கோம்? இனி நமக்கு யாரும் பாதுகாப்பில்லைனு முடிவுபண்ணித்தான் சாட்சியை மாத்திச் சொன்னோம். ஆனா, அந்த ஒரு காரணத்துக்காக எங்க ஒத்துழைப்பு இல்லைன்னு அரசு வக்கீல் சொல்லியிருக்கார். இது நியாயமா? அதுக்காக அவா அத்தனை பேரையும் விட்டுர்றதா?'' என்று கேட்ட பத்மா, எதையோ யோசித்தவராக இருந்தார்.

''கடவுள் எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கார். அவா பெரிய இடம். அவாளை எதிர்த்துப் போராட எங்களிடம் தெம்பும் திராணியும் இல்லை. நான் ஜெயலலிதா அம்மாவைத்தான் நம்புறேன். வழக்கை இத்தோட விட்டுடாம மறுபடியும் அப்பீல் போக நடவடிக்கை எடுக்கணும். எத்தனை வருஷமானாலும் எங்களுக்கு நீதி கிடைக்கணும். இது முதல்வர் அம்மாவுக்கு கண்ணீரோட நான் வைக்கிற கோரிக்கை'' என்றார் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.

அம்மா பேசுவதை கலங்கிய நிலையில் கவனித்தபடி இருந்தார் அவரது மகன் ஆனந்த் சர்மா. 'குற்றம் நிரூபணம் ஆகாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சங்கரராமன் கொலையில் இவர்களுக்குத் தொடர்பில்லை என்றால் சங்கரராமனை கொன்றது யார்? தன்னைத்தானே கத்தியால் வெட்டிக்கொண்டு செத்துப்போக என் தந்தை என்ன மனநோயாளியா?

2001-ல் சீனா செல்ல இருந்த ஜெயேந்திரரை, 'மடாதிபதிகள் கடல் கடந்து செல்லக்கூடாது’ என வழக்குப் போட்டுப் போகவிடாமல் என் தந்தை தடுத்தார். தொடர்ந்து மடத்தின் அட்டூழியங்களை வெளியில் சொன்னார். ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்களின் முறைகேடான செயல்களைச் சொந்தப் பெயரிலும் புனைபெயர்களிலும் புகார்களாக எழுதினார். இதற்கு ஆதாரமான கடிதங்களை முக்கிய ஆதாரங்களாக காவல் துறையினர் எங்கள் வீட்டிலிருந்து கொண்டுசென்றனர்.

அதிலேயே என் தந்தைக்கும் ஜெயேந்திரர் தரப்புக்கும் இருந்த பகை வெளிப்படையாகத் தெரியும். உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்கு மூலமாகவே இதைக் கூறியிருக்கிறேன். அடையாள அணிவகுப்பிலும் சரியான குற்றவாளிகளை அடையாளம் காட்டினோம். அதை ஏற்றுக் கொண்டனர். ஆனால், புதுவை நீதிமன்றத்தில் முதல் விசாரணையின் போது உயிர் பயத்தினால் நாங்கள் சாட்சியத்தை மாற்றிச் சொல்ல வேண்டியதானது. ஏற்கெனவே கொலை பாதகம் செய்த அவர்களின் மிரட்டலுக்கு எங்களைப் போன்ற சாமான்யன் பயப்படாமல் இருக்க முடியுமா? ஆண்டவன் நீதிமன்றத்தில் நிச்சயம் அவர்களுக்கு தண்டனை உண்டு'' என்றார் விரக்தியும் வேதனையும் கலந்த குரலில்.

சங்கரராமனின் மருமகன் கண்ணனிடம் பேசியபோது, 'இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. போதிய ஆதாரங்கள் இருந்தும் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் விடுவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.'' என்று சொன்னார்.-

இங்கு குறிப்பிட்டவை வெகு சிலவே. தட்ஸ்தமிழ், தினபூமி நாளிதழ்களில் வந்த துண்டு செய்திகளை கொண்டு தொகுத்துள்ளேன். ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களின் பழைய பதிப்புகளை புரட்டி பார்த்தால் தான் சங்கராச்சாரி ஜெயந்திரரின் உண்மையான முகம் ஒளிமயமாகத் தெரியும்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சில வினோதமான வழக்குகளுடன் சந்திக்கலாம். 
தொடரும்...
ஆக்கம்: முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc.,
உருவாக்கம் : இபுராஹிம் அன்சாரி

23 Responses So Far:

adiraimansoor said...

இன்றைக்கு உலகில் முல்லமாறித்தனம் செய்கின்றவனும், அயோக்கியர்களும் யோக்கியர்களாக சோடிக்கப்பட்டு அரியாசனத்தில் இருப்பது பொது மக்களின் அறியாத்தன்மையையும் அவர்களிடம் உள்ள மூட நாம்பிக்கைகளையும் கோழைத்த்னத்தையும் இந்த தொடர் படம் போட்டு காட்டுகின்றது

மட்டு மல்லாது
இத்தனை பத்திரிக்கைகள் இவர்களின் அயோக்கியத்தனத்தை வெளிக்கொண்டுவந்தும் அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்களின் மடமையையும் கோழைத்த்னத்தையும் ஊர்ஜிதம் செய்கின்றது

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்காமார்களுக்கு,

மாடர்ன் தியேட்டர்ஸின் படம் மாதிரில்ல இருக்கிறது துவான் ஜெயேந்திரரின் லீலைகள்! பலே சாமி!

அதிலும் நீங்கள் அவரோட முக்கியமான அஜால்குஜால் வேலைகளை ஒலிச்சித்திரம் அளவுக்கு சுவாரஸ்யம் குன்றாமல் தொகுத்துத் தந்திருப்பது சூப்பர்.

சொர்ணமால்யா ரஞ்சிதா போன்ற விட்டில்கள் எப்படித்தான் போய் முட்டிமோதி சாகிறார்களோ. ஸ்வாமிகளுக்கு வெளிச்சப் பிரவாகத்தில் நடித்துப் பிழைப்பவர்களை இருட்டில் வைத்துப் பார்க்க அதிகம் பிடிக்கும்போல.

சம்பந்தப் பட்டவங்களுக்கு எப்பதான் விளங்கப் போகுதோ!

(அ.நி.: "நேற்று" நேரகவும் "இன்று" தலைகீழாகவும் "நாளை" ஏனல்கோணலாகவும் படத்தில் இருப்பது எதேச்சையாகத் தோன்றவில்லையே? ஏதும் சூட்சமம் உண்டா?)

Ebrahim Ansari said...

தம்பி மன்சூர் அவர்களின் முதல் கருத்துரைக்கு நன்றி.

தம்பி சபீர் அவர்களே! வ அலைக்குமுஸ் ஸலாம்.

மாடர்ன் தியேட்டர்ஸ் - ஆமாம !

கைதி கண்ணாயிரமாக இருக்கவேண்டியவர்
வண்ணக்கிளிகளை வைத்து விளையாடியவர்
இந்த சங்கரை - இருவல்லவர்களை
எத்தனை சி ஐ டி சங்கர்கள் வந்தாலும் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே. பார்க்கலாம்.

Ebrahim Ansari said...

//ஸ்வாமிகளுக்கு வெளிச்சப் பிரவாகத்தில் நடித்துப் பிழைப்பவர்களை இருட்டில் வைத்துப் பார்க்க அதிகம் பிடிக்கும்போல//

கவித! கவித!.

Shameed said...

அவாலு கதைய கேட்டா நம்ம தல சுத்துது

نتائج الاعداية بسوريا said...

பெண் பித்தர்களை அவர்களின் உண்மை சொரூபம் தெரியாமல் பூஜித்து கொண்டாடும் பக்தர்கள் இருக்கும் வரை அவர்கள் காட்டில் என்றுமே மழைதான்.

நீதியை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு பக்திக்கு முக்கியத்தும் கொடுக்கும் அறிவிலிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரைக்கும் இவர்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

//கைதி கண்ணாயிரமாக இருக்கவேண்டியவர்
வண்ணக்கிளிகளை வைத்து விளையாடியவர்
இந்த சங்கரை - இருவல்லவர்களை
எத்தனை சி ஐ டி சங்கர்கள் வந்தாலும் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே. பார்க்கலாம். //

ஹாஹ்ஹா ஹா...

வல்லவனுக்கு வல்லவனும் கருந்தேள் கண்ணாயிரமும் வந்துதான் இவாலுக்கு ரிவிட் அடிக்கனும். அதுவரை துடிக்கும் துப்பாக்கியாலோ ரிவால்வார் ரீட்டாவாலோ ஒன்னும் செய்ய முடியாது. கங்கா மாதிரி சும்மா இருக்க வேண்டியதுதான். கேட்டால் எங்க பாட்டன் சொத்தும்பாய்ங்க

Ebrahim Ansari said...

தம்பி சபீர்!

கொஞ்சும் குமரிகள் என்று கும்மாளம் போட்டுக் கொண்டிருந்த காளி கோயில் கபாலி.
அலிபாபாவும் இருபத்தொன்பது திருடர்களும்.

ஹாஹாஹாஹா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முதலில் இன்றைய பதிவின் கருதான்... நேற்று இன்று நாளை ! யின் எழுத்துக்களின் குட்டிக் கரனமும், ஜவ்விழுப்பும்...

லேட்டா வந்ததுக்கு பொறுத்தருள்க... ! எதிர்பாரத திருப்பங்கள் இருந்திருப்பின் சட்டென்று என்ட்ரி கொடுத்திருக்கலாம், எல்லோரும் அந்தக்கால சினிமா விமர்சனம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தால்... அட எப்போ இங்கே சினிமா விமர்சனப் பகுதி ஆரம்பித்தோம்னு அசந்துட்டேன்...

களியாட்டம் காவியுடை போர்த்தியதனால் கப்சிப் !

அதான் ஃபில்டர் காஃபி கப் சிப் அடிச்ச மாதிரி போச்சு இப்போ !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஓர் இந்து சமய துறவியர் இருப்பிடமாகும். இது காஞ்சி காமகோடி பீடம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. //

காம(ம்) கோடி ! - சாவுண்டுக்கு ஏத்த சமாச்சாரங்கள் நடக்கலைன்னா எப்புடி ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இன்றைய நிலை இப்படி தலை கீழாப்போச்சே!

புனிதர்கள் இதை பொருட்படுத்த வில்லையா?

கலியாணத்தெ கட்டி கண்ணியம் காத்திடுங்க!

Ebrahim Ansari said...

துறவறத்தை சுயமாக- சுத்தமாக- அதற்காக விதிக்கப் பட்ட ஆகம் விதிகளின்படி கடைப் பிடிப்பது உடல் இச்சை மன இச்சை ஆகியவற்றால் ஆட்டிப் படைக்கப் படும் மனிதனால் இயலாது என்பதால்தான் இஸ்லாம் துறவறத்தை தடை செய்துள்ளது.

பெயருக்கு துறவறம் பூண்டு இருக்கிறோம் என்று பெயர் வைத்துக் கொண்டு கோடி கோடியான செல்வத்தில் புரள்கிரார்கள். தனிமனித ஒழுக்கக்கேடுகள் மடங்களில் அதிகரித்துவிட்டன. சாமியார்கள் என்று போர்வை போர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். போர்வையை விளக்கிப் பார்த்தால் அசிங்கமான காட்சிகள் காத்திருக்கின்றன.

கடைப் பிடிக்க கஷ்டமானால் ஏன் இந்த துறவறம்?

Ebrahim Ansari said...

//அட எப்போ இங்கே சினிமா விமர்சனப் பகுதி ஆரம்பித்தோம்னு அசந்துட்டேன்...//

இல்லை இல்லை. அது நோக்கமல்ல.

சாக்கடை மீது கல்லெடுத்து எறியும் போது சில துளிகள் பட்டுவிடுகின்றன. மற்றபடி சில தலைப்புகளை வைத்துக் கொண்டு பதிவின் பேசு பொருளுக்குத் தொடர்புபடுத்தி ஆஸ்தானக் கவிஞருடன் ஒரு வார்த்தை விளையாட்டு .

அவ்வளவே.

மற்றபடி .......விமர்சனம் அரசியல் , காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றிய விமர்சனமே!

Ebrahim Ansari said...

//முதலில் இன்றைய பதிவின் கருதான்... நேற்று இன்று நாளை ! யின் எழுத்துக்களின் குட்டிக் கரனமும், ஜவ்விழுப்பும்...//

சிறந்த நெறியாள்மைக்கான விருது வழங்கப்படத் தகுதி பெற்றுள்ளது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மற்றபடி .......விமர்சனம் அரசியல் , காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றிய விமர்சனமே!//

காக்கா, நான் சொல்ல வந்தது ! சினிமாவில் காட்டுவதெல்லாம் நிஜத்தில் சாத்தியமில்லை என்பதை பொய்பித்தவர்கள் இந்த பெண் பித்தர்கள் என்பதே... அந்த அளவுக்கு சினிமாவையும் மிஞ்சிய கருவரை காம கோடிகள் !

தலையில் அடித்துக் கொள்வதை விட முட்டிக் கொண்டு இரத்தம் வராமல் வெதும்பத்தான் முடியும், இங்கே மிகப் பிரபலமான வங்கியொன்றில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவருக்கு அந்த காமகோடியைப் பார்க்காமல் பொழுது விடியாதாம், அதனால தனது ஆர்கனைசரில் organizer முதல் பக்கத்தில் காமகோடி பீடைகளின் படத்தை ஒட்டிவைத்திருக்கிறார். இதனைப் பார்த்ததும் அவருக்கென்று நான் எடுத்துச் சென்ற் இந்த வருட give away gift - organizerஐ கொடுக்காமலே திரும்பி விட்டேன்.

Ebrahim Ansari said...

தம்பி அபூ இப்ராஹீம் அவர்களுக்கு,

//தனது ஆர்கனைசரில் organizer முதல் பக்கத்தில் காமகோடி பீடைகளின் படத்தை ஒட்டிவைத்திருக்கிறார். இதனைப் பார்த்ததும் அவருக்கென்று நான் எடுத்துச் சென்ற் இந்த வருட give away gift - organizerஐ கொடுக்காமலே திரும்பி விட்டேன்//

அதற்கு பதில் நமது கடந்த பதிவையும் இந்தப் பதிவையும் நகலெடுத்துக் கொடுங்களேன். நம்மால் முடிந்தது.

sabeer.abushahruk said...

ஆன் தி அதர் ஹேண்ட், எனக்கும் ஆர்கனைசர் தரப்படவில்லையே...அப்டீனா எனக்கும் சங்கரராமன் கொலைக்கும் தொடர்புண்டா என்ன?

காக்கா, கேட்டு சொல்லுங்களேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா, அவர் இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் தொடரை தொடர்ந்து வாசித்தவர்தான் அவர்...

நம்முடைய பதிவுகளை அடிக்கடி அவரின் ஐபேடில் வாசிப்பதை அப்படியே காண்பிக்கவும் செய்வார் சில சமயங்களில்.

நபிமணியும் நகைச்சுவையையும் நன்கு ரசித்து வாசித்துவிட்டு எனக்கு அலைபேசியில் சொன்னவர்தான் இவர்

அதனால்தான்...

இப்படி எழுதியிருந்தேன்...

//தலையில் அடித்துக் கொள்வதை விட முட்டிக் கொண்டு இரத்தம் வராமல் வெதும்பத்தான் முடியும், இங்கே மிகப் பிரபலமான வங்கியொன்றில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவருக்கு //

இதனை அவரும் வாசிப்பார்... :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா...

ஆஃப்லைன் "ஆர்கனைசர் ரெடி" இன்ஷா அல்லாஹ் ! நேரில் சந்திக்கும்போது !

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

நான் கேட்கும் முன்பே ஆர்கனைசர் ஆர்கனைஸ் ஆகிவிட்டதே. ஆல் தி பெஸ்ட் .

நமது பதிவுகளை படித்து வரும் நண்பர் என்றால் இந்த வழக்கின் பதிவும் அவர் படித்து இருப்பார். காஞ்சி மடத்தின் ஹிட் லிஸ்டில் நானும் பகுருதீனும் இருப்போமோ?

sabeer.abushahruk said...

//காஞ்சி மடத்தின் ஹிட் லிஸ்டில் நானும் பகுருதீனும் இருப்போமோ?//

ஹிட்டான புரட்சி எழுத்தாளர்கள் லிஸ்ட்லதான் இருக்கீஹ.

Yasir said...

அசிங்கம்பிடித்த இந்த சாமியார்களை இன்னும் தங்கள் குருவாக வைத்து இருகின்றார்களே...வெட்கம்......

க கந்தசாமி said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு