பிஸ்மில்லாஹ்...
சென்னையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர் சென்றபோது; ஒரு நல்ல செய்தியைக் கேட்கவும், காணவும் நேர்ந்தது. அதைப் பற்றி உங்களிடையே பகிர்ந்து கொள்ளவும் மேலும், அவ்வழியில் முஸ்லீம்களாகிய நாம் இன்னும் பல பயன்கள் பெரும் வகையில் - முன்னேற்றப் படுத்திக் கொள்ளலாம் என்ற யோசனையை முன் வைக்கவுமே இந்த அனுபவ பதிவு !
சென்னைக்கு உள்ளேயும் சரி, நாம் பயணிக்கும் திருச்சி வரியிலான மேம்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைகளாகட்டும், ஒவ்வொரு ஊரின் வலது அல்லது இடது பக்கமாக சிறியதும் / நடுத்தரதுமான ஏதேனும் ஒரு பள்ளிவாசல் காணக் கூடியதாக இருக்கிறது. அந்தக் காட்சிகள் நம் கண்களுக்கு குளிர்ச்சியை தந்து மனதுக்கு இன்பமாக இருக்கிறது.
பல பள்ளி வாசல்களின் அருகில் மரக்கறி உணவு ரெஸ்டரண்டுகள் அமைந்து இருப்பதால், வக்து நேரத்தில் (பயணிகளுக்கு ஜம்மு / கஸ்ரு சலுகையுண்டு) தொழுதுவிட்டு அருகில் உள்ள உணவகத்தில் உணவருந்தி விட்டு மீண்டும் பயணம் செய்ய இதமகாவும், வசதியாகவும் இருக்கிறது அப்படிப்பட்ட பள்ளியைத்தான் புகைப்படத்தில் காண்கிறீர்கள்.
இது திண்டிவனம் நுழைந்தவுடன் இருக்கிறது பள்ளியின் பெயர் சல்மான் ஜும்மா பள்ளி, இதன் அருகிலேயே ஒரு மரக்கறி உணவகம் இருக்கிறது. இந்தப் பள்ளியில், பெண்கள் தொழவும் தனி இடவசதியுண்டு.
மேலும் பள்ளிவாசளின் இமாம் கூறியது “இந்த பள்ளிவாசலுக்கு சலவைக்கல், ஒலிபெருக்கி கருவிகள், பள்ளிவாசலின் பெயர் பலகை என்று இவை அனைத்தையும் தன்னார்வத்துடன் செய்து கொடுத்தது அதிராம்பட்டினத்தைச் சார்ந்த மூன்று சகோதரர்கள்தான்” என்றார். நம்மூர் மக்களின் நல்ல எண்ணங்களை அறிந்து மனம் மகிழ்வடைந்தது அல்ஹம்துலில்லாஹ் !
வரும் வழியில் white mosque ”வெள்ளை மஸ்ஜித்” என்ற பெயரில் அழகான ஒரு பள்ளி தென்பட்டது, கடந்து வந்த ஊர் பெயர் அறிய முடியவில்லை.
சில பள்ளி வாசல்களில் பெண்களுக்கு என தனியிட வசதி இல்லை, மேலும் சில பள்ளிகளில் பெண்கள் தொழும் இடம் பள்ளிவாசலை விட்டு ஒதுங்கி உள்ளதால், பெண்கள் தனியே சென்று தொழ தயங்குகிறார்கள். அவற்றையெல்லாம், சரி செய்து பெண் பயணிகளுக்கும் இயற்கை உபாதைகளை நிறைவு செய்து கொள்ளவும் தொழவும் வாய்ப்புகளை பரவலாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
ஆனாலும், மேற்சுட்டிய நிறைகளில் சில குறைகளை களைய இலட்சங்கள் செலவாகும், அந்தந்த ஊர் பள்ளிவாசல்கள் அமைந்திருக்கும் மக்கள் வசதி படைத்தவர்களல்லர். மேலும் அவ்வாறான வழித்தடங்களில் பயணங்களில் ஈடுபடும் இஸ்லாமிய அன்பர்கள் ஒன்றினைந்தோ / தனித்தோ சென்னை வரை செல்லும் வழித்தடங்களில் இருக்கும் பள்ளிவாசல்களை புணரமைப்பு செய்ய முன் வந்தால் இறைவனின் நற்கூலி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை இன்ஷா அல்லாஹ் !
இன்னும்...
வழித்தடங்களில் அமைந்திருக்கும் பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றிற்கு அருகிலும் அதிரையின் ஐந்து கறி சோறும், கீழக்கரை கோழி குறுமாவும், காயல்பட்டினத்து நெய்நோறும் கிடைத்தால் இன்னும் சுகமாக இருக்கும் அல்லவா !?
உணவுவிடுதி தொழிலில் ஆர்வம் உள்ளவர்களும் சிந்திக்கலாமே...
தீனுக்கு அருகில் ’த்தீனும்’ கிடைக்க !
அ.ர.அ.ல.
17 Responses So Far:
//தீனுக்கு அருகில் 'த்தீனும்'கிடைக்க// ''கோவில்களுக்கு அருகில் குளம் இருப்பதைப்போல் பள்ளிவாசல்களுக்கு அருகில் ஒரு சுட்டகோழிகடையாவது இருக்கவேண்டும்.அப்போதான் 'சப்'நிறையும். .
பயனுள்ள பதிவு.
//அதிரையின் ஐந்துகறிசோறும் கீழக்கரை கோழிகுர்மாவும்.....// தம்பிஅ.ர..அ.ல!பரங்கிப்பேட்டை தால்ச்சாவை மறந்துட்டீயலே!
MashA allah nalla pathivu
MashA allah nalla pathivu
பயனுள்ள பதிவு.
பயன் தகவல்களைத் தரும் கட்டுரை. பாராட்டுக்கள்.
மரக்கறி உணவகங்கள் என்பது அனைவருக்கும் புரியுமா?
மேலும் மரத்திலிருந்து கிடைக்கும் கறியை வைத்து சமைத்து உணவு படைக்கும் விடுதி என்று எடுத்துக் கொண்டால் முருங்கைக் காயை மட்டுமே முக்கியமாக எடுக்க முடியும். மற்றபடி காய்கறிகள் என்று குறிப்பிட விரும்பினால் காய்கறிகள் செடிகள், கொடிகள், கீரைகள் மற்றும் கிழங்கு வகைகளில்தான் கிடைக்கும்.
ஆகவே செடிக்கறி, கொடிக்கறி , கிழங்குக் கறி, கீரைக்கறி என்றுதான் சொல்ல வேண்டி இருக்கும்.
அவற்றையும் மரக்கறி என்று வகைப்படுத்துவது சரிதானா? புரியவில்லை.
இவ்வாறு காய்கறிகளை வைத்து உணவு படைக்கும் விடுதிகளை சைவம் என்றும் மாமிசத்தை வைத்து உணவு தரும் விடுதிகளை அசைவம் என்றும் ஒற்றைச் சொல்லால் வகைப்படுத்துவதே வழக்கில் இருக்கிறது.
மரக்கறி என்பதற்கு பதிலாக , சொல் வழக்கில் இருக்கும் சைவ உணவு விடுதி என்று சொல்வதால் தவறு ஏற்பட்டு விடுமா?
கருத்திட்ட அனைத்து நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
இன்ஷா அல்லாஹ் , நல்ல உள்ளங்கள் மூலம் , பள்ளிகள் எல்லாம் புனரமைக்க அல்லாஹ் அருள் புரிவானாக , ஆமீன்
Dear Muslim brothers,please consider for the business opportunities to open a non veg restaurants near by the mosques at trichy to chennai highways.
انشاءاللّٰه this Will help us more due to the halal way consuming as well as prayers on the go.
( many veg restaurants are not hygiene at all)
இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் கூற்று சரியே. மரக்கறி பற்றி.
மற்றபடி சைவம் எண்பது மத ரீதியில் உள்ள சொல் என்பதால் தவிர்த்தேன்.
Allah knows best
جزاك اللهُ خيرًا
அஸ்ஸலாமுஅலைக்கும்.பயனுள்ள பதிவு.
மாஷா அல்லாஹ் மார்க்க அக்கறையுடன் கூடிய பதிவு.திருச்சியிலிருந்து ஊர் வரும் வழியில் சில குக்கிராமங்களில் கூட புர்கா போட்டுக்கொண்டு வாகனத்திலும், நடந்தும் செல்லும் பெண்களை பார்க்கும் பொழுது மனதிற்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம் நம் சமுதாய மக்கள் இங்கு கூட வாழ்கிறார்களே என்று.
//மற்றபடி சைவம் என்பது மத ரீதியான சொல் என்பதால் தவிர்த்தேன்//இந்த அளவுஅந்த மதத்தின் மீது வெறுப்பு வேர் ஓடக் காரணம்தான் என்ன?சொல்லுங்களேன்!
It's due to the polytheism.
Please check Quran verses 14:36
28:64
28:87
جزاك اللهُ خيرًا kaka
15/09/16 அன்று மதுரை வழியாக புறப்பட்டு தமாம் வரும் போது வழியில் மதுரை ரிங் ரோட்டில் ஒரு அழகிய பள்ளி வாசலை பார்த்தேன்
பயண அவசரத்தில் புகைப்படம் எடுக்க முடியவில்லை. அந்த பள்ளிவாசலை பார்த்ததும் இது போல் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று மனதில் தோன்றியது அதே தினத்தில் அதிரை நிருபரில் இந்த கட்டுரை பதியப்பட்டுள்ளதை கண்டு ஆச்சர்யப்பட்டு போனேன்
முகநூலில் தம்பி ஷாபி கேட்ட கேள்விக்கு பதில்
//காய்கறி என்பதே இயற்கையான சொல் எனலாமோ Ebrahim Ansari Masthan Samad காக்கா?//
அப்படிசொல்லலாம்என்பது எனதுகருத்து. அதில்உடன்பாடுஉண்டு. அதேநேரம் சைவம்என்று இந்தஇடத்தில்குறிப்பிடுவது பொதுவாகவழக்கில் வந்துவிட்ட சொல்என்பதாக எடுத்துக்கொள்ளலாம். அந்தஅடிப்படையில்அந்தவார்த்தையை புறக்கணிக்கவேண்டியதுஇல்லை. சைவம் என்பது ஒருமதம்என்றஅடிப்படையில்பார்ப்போமானால் அதற்கு எதிர்மறையான அசைவம்என்பது எந்தமதம் என்றகேள்வி எழும்.
பன்முகத்தன்மை கொண்டநாட்டில் இவைகள்தவிர்க்கஇயலாதவை. அத்துடன்வழக்கில்வந்துவிட்டசொல்லை அந்தசொல்லின்அர்த்தத்துக்காக உளமார பயன்படுத்துவதில் தவறில்லைஎன்பது என்கருத்து. பொதுவாழ்வுத்தளங்களில் முழுக்கமுழுக்க தனிப்பட்டே நிற்க வேண்டுமானால் விமானத்தில் அடுத்த சீட்டில் அமர்ந்துஇருப்பவருடன் பயணிக்கஇயலாது. விமானஒட்டி யார்என்றுபார்த்துத்தான் பயணிக்க வேண்டும். இவைசாத்தியமா?
தனி மனிதனை குறிப்பிடவில்லை ( என்றும் )இஸ்லாம் தவிர , எந்த சித்தாந்தத்தையும் ஏற்க இயலாது انشاءاللّٰه
Post a Comment