(பதினாறு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பா.)
இயற்கையிலே பெரும்படைப்பாய்ச் சின்னஞ் சிறிதாய்
இருக்கின்ற அனைத்தையுமே படைத்த வல்ல
இறையோனின் ஆற்றலினை எண்ணிப் பார்க்க
இயலாதோர் பகுத்தறிவின் மாந்தர் தாமோ?
செயற்கையிலே வித்தகர்கள் மதிப்பை வேண்டிச்
செய்கின்ற கருவிகளை நின்று கண்டே
செயற்கரிய செயலென்று வியந்து நின்றே
சிந்தையினை இழந்திடுவார் அந்தோ! நல்ல
முயற்சியுடன் பகுத்தறிவால் சிந்திக் காமல்
முழுவாழ்வின் பயனிழந்து வீணாய்ப் போக
முதுமையிலே வாய்ப்பின்றிச் சாவைக் கண்டு
முடிவினிலே விலங்குகள்போல் செத்துப் போவார்!
பயிற்சியுடன் அறிவதனை வினையாய் ஆக்கிப்
பார்வையினைப் படைப்பினங்கள் பற்றி நல்ல
பாதையிலே சிந்தனையைச் செலுத்திப் பார்த்தால்
படைப்பினமாம் இயற்கையிலே இன்பம் காண்பார்!
அதிரை அஹ்மத்
1 Responses So Far:
பயிற்சியுடன் அறிவதனை வினையாய் ஆக்கிப்
பார்வையினைப் படைப்பினங்கள் பற்றி நல்ல
பாதையிலே சிந்தனையைச் செலுத்திப் பார்த்தால்
படைப்பினமாம் இயற்கையிலே இன்பம் காண்பார்!
Post a Comment