Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படுமுன் தெளிக! 34

அதிரைநிருபர் | September 25, 2016 | , ,

ஒன்பதாம் வகுப்பு
பத்தாம் வகுப்போடு
ஓடிப்போனது...
பெற்றோருக் கிடை
வகுப்புக் கலவரம்!

போய்ச் சேர்ந்த இடத்தில்
தேடிச் சென்றது இல்லை -
வீட்டுப் பாடம் ஒன்றும்
விபரம் புரியவில்லை -
கோனார் உரையிலும்
குறிப்பெதுவும் இல்லை!

குறுஞ்செய்தியில்
முடங்கிய விரல்களால்...
வெறுங்கஞ்சிக்குக்கூட
வேலை யில்லை!

கண்கள் வழி
கற்ற காதலும்...
காதலன் வழி
பெற்ற காமமும்...
வயிற்றுப் பசியில்
வெற்றாகிப் போனது!

கண்மனியும் பொன்மனியும்...
காவியமும் ஓவியமும்...
காசில்லா கதிகேட்டில்
காலாவதி யானது!

அவனுக்கு அவளும் -
அவளுக்கு அவனும் -
அலுத்துப் போன தொரு
அதிகாலையில்...

அரவணைக்க அம்மா,
ஆறுதலுக்கு அப்பா,
அந்தரங்கத் தோழியென
அவதரித்த அக்கா,
அம்மா சாயலில்
அருமைத் தம்பி,
இடுக்கன் களைய
இனியதொரு சகி,
இழந்ததெற் கெல்லாம்
ஏங்கியது மனது...!

மின்வெட்டு இரவொன்றின்
மிதக்கும் மின்மினி...
மழையற்ற தினமொன்றில்
புல்நுனியில் பனித்துளி...
என -
மிகைத்த காதல்;

முடியாத இரவு...
விடியாத வானம்...
படியாத உரவு ...
உலர்ந்த மலர்வனம்...
உருகாத மேகம்...
என -
எதிர்மறை எண்ணங்களில்
அஸ்தமித்தது!

ஏனோ...
பிடிமண் இடுகையில்
நொடிநேரம் காட்டும்
முகமொன்று -
குழிக்குள்...
மின்னி மறைந்தது!

முடிவைத் துவக்கமென்று
மயங்கும் பிஞ்சுகளே...
பழுக்கும் பருவம்வரை
பொறுத்தலே பகுத்தறிவு!

சபீர்

34 Responses So Far:

Yasir said...

அருமையான வரிகளை போட்டு....ஒரு சமுதாய சிந்தனை மேலோங்கிய கவிதையை எழுதி...என் மனதை உங்களை நோக்கி ஒட வைத்து விட்டீர்கள்...இந்த மாதிரி கவிதைகளை மாணவர்களின் பாட புத்தகத்தில் வெளியிடலாமே

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.ப(கெ)டுமுன் தெளிக.ஆமாம் தப்புக்கணக்கு பெற்றோருர்கள்(சமூதாயத்திற்கு)இடையே வகுப்பு கலவரம் ஓடிடும் காலிகளினால் இங்கு காலி(பலி)யாவது சொந்தமும் ,பந்தமும் தான்.
--------------------------------------------------
போய்ச் சேர்ந்த இடத்தில்
தேடிச் சென்றது இல்லை -
வீட்டுப் பாடம் ஒன்றும்
விபரம் புரியவில்லை -
கோனார் உரையிலும்
குறிப்பெதுவும் இல்லை!
குறுஞ்செய்தியில்
முடங்கிய விரல்களால்...
வெறுங்கஞ்சிக்குக்கூட
வேலை யில்லை!
------------------------------------------------
இப்படி போனாருக்கு கோனார் உரை (கைடூ )புரியாது.கூட்டிச்சென்றவனும் உதவும் அறிவு பெற்றவன் அல்லன்.ஏட்டுச் சுரைகாய் கரிக்குதவாது ,ஒருவாய் கவளம் சோறுக்கு வழி கிடையாது.
குருஞ்சேதி எழுதியே தேய்ந்த விரல்களும் ஓய்ந்து கிடக்கும்.(சும்மா நெட்டி முறிக்கும்).
------------------------------------------------
கண்கள் வழி
கற்ற காதலும்...
காதலன் வழி
பெற்ற காமமும்...
வயிற்றுப் பசியில்
வெற்றாகிப் போனது!
கண்மனியும் பொன்மனியும்...
காவியமும் ஓவியமும்...
காசில்லா கதிகேட்டில்
காலாவதி யானது!
------------------------------------------------
பசி வந்தால் எல்லாம்(காதல்,காமம்) பறந்துவிடும் பின் அந்த உறவுகளே உணவாகி ஒருதலை ஒருதர் பிரான்டிக்கொண்டு பிச்சைக்கு கட்சை அவிழ்க அவளை தூண்டுவான்.எச்சில் உணவுக்காய் எச்சில் இலையாகி பிறருக்கு விருந்தாகும் அந்த ஓடுய தேகம்,,அச்சச்சோ எல்லாம் சோகம்.
------------------------------------------------
அவனுக்கு அவளும் -
அவளுக்கு அவனும் -
அலுத்துப் போன தொரு
அதிகாலையில்...

அரவணைக்க அம்மா,
ஆறுதலுக்கு அப்பா,
அந்தரங்கத் தோழியென
அவதரித்த அக்கா,
அம்மா சாயலில்
அருமைத் தம்பி,
இடுக்கன் களைய
இனியதொரு சகி,
இழந்ததெற் கெல்லாம்
ஏங்கியது மனது...!

மின்வெட்டு இரவொன்றின்
மிதக்கும் மின்மினி...
மழையற்ற தினமொன்றில்
புல்நுனியில் பனித்துளி...
என -
மிகைத்த காதல்;

முடியாத இரவு...
விடியாத வானம்...
படியாத உரவு ...
உலர்ந்த மலர்வனம்...
உருகாத மேகம்...
என -
எதிர்மறை எண்ணங்களில்
அஸ்தமித்தது!
------------------------------------------------
எல்லா சுகமும் இழந்து,பின் ஒருதலை ராகமாய் சோக கீதம் பாடும் வொவ்வொரு நொடியும் ரணமாய் போகும்.ஆசை அறுபது நாள் ,போகம் முப்பதுனாள் எல்லாம் முடிந்தது.....இதுதான் எதார்தம்.
------------------------------------------------
ஏனோ...
பிடிமண் இடுகையில்
நொடிநேரம் காட்டும்
முகமொன்று -
குழிக்குள்...
மின்னி மறைந்தது!

முடிவைத் துவக்கமென்று
மயங்கும் பிஞ்சுகளே...
பழுக்கும் பருவம்வரை
பொறுத்தலே பகுத்தறிவு!
------------------------------------------------
எப்படி சொல்வது இதயத்தில் இடி,கண்ணீர் மழை .ஓடிப்போகும் முன் சகோதரியே இந்த சகோதரன் சபீர் சொன்ன கவிதையை படித்துபார் பின் நீ நடைபினமாகவோ,இளம் வயதில் அனாதையாகவோ,வாழ்வை முறித்து கொண்டு சாகும் கோழையாகவோ மாட்டாய்.
------------------------------------------------
காக்கா! வாழ்த்த வயதில்லை....அல்லாஹுக்கே வணக்கம் ஆனலும் உங்கள் அன்பின் ,அறிவின் சீடன்.

Ahamed irshad said...

மின்வெட்டு இரவொன்றின்
மிதக்கும் மின்மினி...
மழையற்ற தினமொன்றில்
புல்நுனியில் பனித்துளி...//

ர‌சித்த‌ வ‌ரிக‌ள்..ரொம்ப‌ ந‌ல்லாயிருக்குங்க‌..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இப்போதைக்கு என்னிடமிருந்து ஒரே வரிதான் :-

"படுமுன் தெளிக" !

//
ஏனோ...
பிடிமண் இடுகையில்
நொடிநேரம் காட்டும்
முகமொன்று -
குழிக்குள்...
மின்னி மறைந்தது!
//

கலங்கிட்டேன் "கண்ணுக்குள்"

//
போய்ச் சேர்ந்த இடத்தில்
தேடிச் சென்றது இல்லை -
வீட்டுப் பாடம் ஒன்றும்
விபரம் புரியவில்லை -
கோனார் உரையிலும்
குறிப்பெதுவும் இல்லை!
//

குழப்மியதும் உண்டு கலங்கியதும் உண்டு !

//
அரவணைக்க அம்மா,
ஆறுதலுக்கு அப்பா,
அந்தரங்கத் தோழியென
அவதரித்த அக்கா,
அம்மா சாயலில்
அருமைத் தம்பி,
இடுக்கன் களைய
இனியதொரு சகி,
இழந்ததெற் கெல்லாம்
ஏங்கியது மனது...!
//

நிஜம் நிஜம் நிஜம் !!!

Shameed said...

பகுத்தறிவு என்ன என்பதை பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பி கொண்டு சூடு போட்டவிதம் அருமை.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

ரெண்டு வரியிலயும் சொல்லலாம்:

சீரியல் பார்க்காதே,
சிரழிந்து போகாதே!

கவிஞருக்கு வாழ்த்துகள்!

ZAKIR HUSSAIN said...

எல்லாவரிகளும் பல விசயங்களை உள்ளடக்கிய ஒரு சின்ன தொகுப்பு...மொத்தத்தில் சத்தியமான சில வார்த்தைகளின் அணிவகுப்பு..

ZAKIR HUSSAIN said...

வாசகர்கள் கருத்தை மதித்து கட்டம் எல்லாம் போட்டு கெளரவப்படுத்தும் சகோதரர் தாஜ் அவர்கள் பாராட்டுக்குறியவர். இதைத்தான் கட்டம் கட்டமாக முன்னேறுவது என்பதா?

Ahamed irshad said...

ZAKIR HUSSAIN சொன்னது..

வாசகர்கள் கருத்தை மதித்து கட்டம் எல்லாம் போட்டு கெளரவப்படுத்தும் சகோதரர் தாஜ் அவர்கள் பாராட்டுக்குறியவர். இதைத்தான் கட்டம் கட்டமாக முன்னேறுவது என்பதா?///

சகோ.ஜாஹிர் சொன்ன‌தை க‌ன்னா முன்னாவென்று வ‌ழிமொழிகிறேன்.. ந‌ல்லாயிருக்கு..

Yasir said...

கலக்குவோம் கலக்குவோம்...கட்டம் கட்டி கலக்குவோம்..திட்டம் தீட்டி கலக்குவோம் என்கிறார்கள் போல அதிரை நிருபர் குழு

//சகோ.ஜாஹிர் சொன்ன‌தை க‌ன்னா முன்னாவென்று வ‌ழிமொழிகிறேன்.. ந‌ல்லாயிருக்கு.// எப்படி இப்படியேல்லாம் ..இர்ஷாத்..

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் மொத்ததுல நம்மள விட்டுவிட்டு சாபிட்டிடிங்க. நல்லா இருங்க.எங்களுக்கும் ஒரு காலம் வரும் அப்ப வந்து நாங்க வெளுத்து கட்டுவோம்ல இன்ஷா அல்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு அதைவிட சூப்பர் என்னானு தெரியுமா நிலவுக்கு வழிகேட்கத்தான் போனோம் ஆனா அங்கே அதிரையின் (நம்பிக்கை) நட்சத்திரங்களை காட்டி இவங்கதான் என்னோடு இருக்காங்கன்னு எங்களுக்கு கான்பிக்கப்பட்டது !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சபீர் காக்கா, உங்கள் தனித் திறமைக்கு ஆயிரமாயிரம் பாராட்டுக்கள்.

//முடிவைத் துவக்கமென்று
மயங்கும் பிஞ்சுகளே...
பழுக்கும் பருவம்வரை
பொறுத்தலே பகுத்தறிவு!//

உங்களின் ஒவ்வொரு வரிகளிலும் சமூக அக்கறை பதிந்துள்ளது.நீங்கள் பிஞ்சுகளுக்கு மட்டும் சூடு போடவில்லை, முத்துனதுகளுக்கும் தான்.

பாராட்டுக்கள்... வரும் முன் காப்போம், புகைப்படமும் ஓடிப்போகும் பிஞ்சிகளுக்கு நல்ல வழிகாட்டல்,அரவனைப்பு, இஸ்லாமிய அறிவு என்ற தடுப்பூசி அவசியம் என்பதை குறிக்கிறது.

இந்த ஆக்கம் அனைவருக்கும் ஒரு தடுப்பூசி என்றால் மிகையில்லை.

அதிரைநிருபர் said...

ZAKIR HUSSAIN சொன்னது… //வாசகர்கள் கருத்தை மதித்து கட்டம் எல்லாம் போட்டு கெளரவப்படுத்தும் சகோதரர் தாஜ் அவர்கள் பாராட்டுக்குறியவர்.//

அஹமது இர்ஷாத் சொன்னது… Yasir சொன்னது //சகோ.ஜாஹிர் சொன்ன‌தை க‌ன்னா முன்னாவென்று வ‌ழிமொழிகிறேன்.. ந‌ல்லாயிருக்கு.. //

Yasir சொன்னது... //கலக்குவோம் கலக்குவோம்...கட்டம் கட்டி கலக்குவோம்..திட்டம் தீட்டி கலக்குவோம் என்கிறார்கள் போல அதிரை நிருபர் குழு//

சகோதரர்கள் ஜாஹிர்,தஸ்தகிர், இர்ஷாத், யாசிர், மற்றும் உங்களைப் போன்ற அன்பு சகோதரர்களின் அன்பும், ஆதரவும், அரவனைப்பும், பாசமும், ஊக்கமும், ஆலோசனைகளும் நம்மை இன்னும் மிகச் சிறப்பாக செய்ய தூண்டுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நேற்று அன்பு சகோதரர் தஸ்தகிர் சொன்ன ஆலோசனை பல மணிநேரம் சிந்திக்க வைத்து மிகச் சிறப்பான உருவத்தை நம் அதிரைநிருபருக்கு தந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

நம்மை இந்த அளவுக்கு பொருமையையும், நிம்மதியையும், நேரத்தையும் தந்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி.

தொடருங்கள் நம் அதிரைநிருபருடன், தொடர்ந்து இணைந்திருங்கள்

அதிரைநிருபர் said...

//ZAKIR HUSSAIN சொன்னது… இதைத்தான் கட்டம் கட்டமாக முன்னேறுவது என்பதா?//

சகோதரர் ஜாஹிர்.நேற்று சபீர் காக்கவை சந்தித்த பிறகு எதார்ச்சையாக உருவானது இந்த புதிய கட்டங்கள். சகோதரர் சபீர், யாசிர் ஆகியோரின் சந்திப்பு ஒரு புது உத்வேகத்தை நமக்கு தந்தது என்பதை இங்கு பதிவதில் பெருமை கொள்கிறோம்.

அதிரைநிருபரில் நல்லவங்க எல்லோருக்கும் இடம் இருக்கு என்பதற்கு இதுவும் உதாரணம். இது அந்த அரசாங்க இட ஒதிக்கீடு அல்ல. :)

அனைவரும் தொடர்ந்து இணைந்திருங்கள்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.


சகோ. சபீர் அவர்களின் வரிகள் அலைபாயும் மனதைக்கொண்டு அல்லோலப்படும் நம் வாலிப சமுதாயத்தை செல்லமாக செப்பையில் அறைந்தது போல் இருக்கிறது. பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களின் கவிப்பணி.

அலாவுதீன்.S. said...

அதிரை கவி சபீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) வாழ்த்துக்கள்!

/// ஷைத்தானின் பிறப்பிடம் ///
ஓடும்பொழுது அவளுடன்
கொண்டு சென்ற பணம்
நகைகள் கரைந்த பிறகு
இழுத்து சென்றவனும் அவளை
லாட்ஜில் விட்டு விட்டு ஓட
வாழந்த இடத்திற்கு திரும்ப வழி இல்லை
அவளுக்கு அரவணக்க இடம் உண்டு
பெண்ணை விற்கும் காப்பகமும்,கீழ்ப்பாக்கமும்!

இளம்பெண்கள்தான் இப்படி என்றால்
இரண்டு மூன்று பிள்ளைகளின் தாயும்
ஓடுகிறாள் இதுதான் நவீன உலகமா?
இளம்பெண்கள் ஓடுவதற்கு
தாய் தந்தை குற்றவாளியா?
பிள்ளைகளின் தாய் ஓடுவதற்கு
கணவன் குற்றவாளியா?

ஒரு காலம் உண்டு
பெண்கள் பேசுவதற்கு வெளித்திண்ணை
இன்றோ பேச்சே இல்லை
இரவு ஆனால் கதவை பூட்டு
ஷைத்தானை திற
கேபிள் வழியாக ஆயிரக்கணக்கான
ஷைத்தான்கள் நடுஹாலில்!


எந்தவித வெட்கமின்றி
தாய் தந்தை பிள்ளைகள்
ஷைத்தானிய காட்சிகளில் ஒன்றியிருக்க
நம் வீட்டிலோ திருடன் வந்து
கொள்ளையடித்தாலும்
நம் காது செவிடாகும் அளவுக்கு
தொலைக்காட்சி சத்தம்!

நோய் எங்கு உள்ளது
எதற்கு வைத்தியம் பார்க்க
மார்க்கத்தை மறந்து
உலகின் இன்பத்தில் மூழ்கி
விட்டில் பூச்சிகளாய் மாறிக்
கொண்டு இருக்கும் சமுதாயம்
எப்பொழுது திருந்தும்!

ஷைத்தானின் சவால்
வல்ல அல்லாஹ்விடம்
உனது அடியார்களை
முன்புறம் பின்புறம்
வலப்புறம் இடப்புறம்
அனைத்திலும்
வழிகெடுப்பேன்!

நாம் ஷைத்தானுக்கு
சிகப்பு கம்பளம் விரித்து
நடுஹாலேயே அவனிடம்
ஒப்படைத்து விட்டோம்
எப்பொழுது மீள்வது??????

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நாம் ஷைத்தானுக்கு
சிகப்பு கம்பளம் விரித்து
நடுஹாலேயே அவனிடம்
ஒப்படைத்து விட்டோம்
எப்பொழுது மீள்வது?????//

(அதிரை) கவிக் காக்கவின் வரிகளுக்கு நிகராக நான் எழுத அதிரையின் விழி சகோ.அலாவுதீன் அவர்களிடன் கடன் வாங்க வேண்டும் ! விண்ணப்பம் எங்கே கிடைக்கும் !? அடமானம் என் அன்பு(தாங்க) இருக்கு இந்த எழுத்து ஏழையிடம் !

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் அபுஇபுறாஹிம்: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

///(அதிரை) கவிக் காக்கவின் வரிகளுக்கு நிகராக நான் எழுத விண்ணப்பம் எங்கே கிடைக்கும் !?///

தங்களின் விண்ணப்பத்தை வல்ல அல்லாஹ்விடம் போட்டு வையுங்கள். தங்களின் எழுத்திலும் , ஆற்றலிலும் வல்ல அல்லாஹ் பரக்கத் செய்து அருள் புரியட்டும். அல்லாஹ்தான் நமக்கு அனைத்து ஆற்றலையும் தரக்கூடியவன். அவன் நாடியபடி நம்மை இயக்கிக்கொண்டு இருக்கிறான். அல்லாஹ்வுடைய உதவியினாலும் அவன் நாட்டத்தினாலும் நம்முடைய செயல்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்புச் சகோ.அலாவுதீன், வலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்) !

இன்ஷா அல்லாஹ் !

அலாவுதீன்.S. said...

அதிரை நிருபர் குழுவுக்கும், சகோ. தாஜூதீனுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

//// நேற்று அன்பு சகோதரர் தஸ்தகிர் சொன்ன ஆலோசனை பல மணிநேரம் சிந்திக்க வைத்து மிகச் சிறப்பான உருவத்தை நம் அதிரைநிருபருக்கு தந்துள்ளது என்றால் அது மிகையில்லை.நம்மை இந்த அளவுக்கு பொருமையையும், நிம்மதியையும், நேரத்தையும் தந்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.///

பல மணிநேரம் செலவழித்து கஷ்டப்பட்டு ஒரு நல்ல மிகச் சிறப்பான உருவத்தை அதிரை நிருபருக்கு வழங்கிய உங்களுக்கு வாழத்துக்கள் பல. மாஷாஅல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

இந்த சிந்தனையை தூண்டிய சகோதரர் தஸ்தகிருக்கும் வாழ்த்துக்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நன்றிகளுக்கு நன்றி

Unknown said...

sharp words with social interests....

sabeer.abushahruk said...

மற்றுமொரு வாய்ப்பு -
உற்றார் உறவினரோடு
விருந்துண்ட உணர்வு!

பரிமாறியதை
பகிர்ந்துண்ட அணைவருக்கும்
நன்றி!

பொருத்தமான புகைப்பட பின்னனியும், மண்டபமும் தந்து கெளரவித்த "ஆக்க சக்தி"அதிரை நிருபர் குழுவினருக்கும், 

பந்தலில் நின்று வரவேற்று உதவிய "மாதிரி இளைஞன்" தம்பி yasirக்கும்,

ஒற்றை விருந்தை விழாக்கால விருந்தென பிரமாண்டப்படுத்தி கடைசிவரை கட்டிக்காத்து கண்ணியப் படுத்திய "தங்க தமிழ் கிரீடம்" தம்பி crownக்கும்,

சகன் பரத்தி பந்தி பரிமாறி நிர்வகித்த "சகலகலா வல்லவன்" தம்பி அபு இபுறாஹீமுக்கும்,

என் படைப்புகள் அஜீரனமாகாமல் ஜீரனிக்க சீரகத்தண்ணீர் தந்து வரும் "சிந்தனை சிலிக்கான்" தம்பி தாஜுதீனுக்கும்,

மருசோறு படைத்துப் பறிமாறிய "அதிரை விழி" அலாவுதீனுக்கும், 

ஊறுகாய் பொட்டலம்(சீரியல் பார்க்காதே, சிரழிந்து போகாதே) தந்து விருந்தை ஊக்குவித்த "ஆசான்"ஜமீல் காக்காவுக்கும்,

ருசி யுணர்ந்து ரசித்த "குட்டிப் புயல்" தம்பி இர்ஷாதுக்கும், 

உப்புக் காரம் சரி பார்த்து ஆமோதித்த "மைக்ரோவேவ்" ஷாகுலுக்கும், 

சாப்பிட்ட கையோடு சிலாகித்து...நாலு வரியேயானாலும் 'நச்'சுன்னு சொல்லிய "அதிரை ஊற்று"சகோ. MSM naina mohamed க்கும்,

லேட்டா வந்தாலும் லேட்டெஸ்ட்டா வந்து சுகந்தப் பாக்கோடு சுபம் சொன்ன "இளங்கவி" சகோ.harmys க்கும்,

வசந்த குறிப்புகள், வாழ்க்கைக் குறிப்புகள், பயணக் குறிப்புகளில் அசத்தி தற்போது கவிதைக்கு குறிப்பென்று அணிவகுக்கும் திறமைகளின் "அசத்தல் மன்னன்" என் zakirக்கும்...

அன்பும் நன்றியும்.

மற்றொரு உபசரிப்பில் சந்திப்போம்.
அஸ்ஸலாமு அலைக்கும்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//மற்றுமொரு வாய்ப்பு -
உற்றார் உறவினரோடு
விருந்துண்ட உணர்வு!//

என்று ஆரம்பித்த அன்பு சபீர் காக்காவின் பதிலை படித்தவுடன் இன்றைய பகல் பசி பறந்துவிட்டது.

இந்த பதிலை படிப்பவர்கள் அனைவரின் மனதில் பரவசம் நிச்சயம் வரும்.

நன்றி காக்கா.

அப்துல்மாலிக் said...

அருமையான எழுத்தோட்டம், எங்கோ ஆரம்பித்து முடிந்த இடம் வேறுபடுகிறது, இது வாழ்க்கைக்கும் பொருந்தும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பின்னூட்டத்திற்கு ஏற்புரை எழுதி எங்களையெல்லாம் சீக்கிரமே எழுப்பி விட்டதுக்கு இன்னொன்று அதைவிட அருமையாக வருமென்று தெரியும், இருந்தாலும் அதெப்படி காக்கா இப்படி ஒரு மந்திரி சபை அமைத்து அவங்களுக்கு இலாக்களை கொடுத்து முதலமைச்சரா (எவ்வித போட்டியுமின்றி) ஜெயிச்சுட்டீங்களே ! சும்மாவா சொன்னாங்க அதிரை(யில்) கவிக்கு க(வுக்கும்)வி(னாவுக்கும்) இடையில் காலை போட்டால் காவியமாகிடும்னு ! (அதான் அந்த துனைக்காளாம்ல அதைத்தான் சொன்னேன்) :)

jalal said...

அதிரை அதிவீர கவி
சபீர் நீ ஒரு
கோட்டு சூட்டு போட்ட நவீன கவி
சீரழிந்த ஜென்மங்களுக்கு சீலை கட்டி பார்த்த பாரி
கட்டவிழ்ந்த்து ஓடிய காற்றாறுக்கு அனண கட்டிய கரிகாலன்
அருமையான வரிகலைக்கொண்டு சவுக்கு அடி கொடுத்த
ஜன்சி ராணி
பென்மைக்கு விழிப்புனர்வு செய்த பொன்னான வரிகள்.
பாராட்டுகள் நன்றி

sabeer.abushahruk said...

வாங்க மச்சான்ஸ் ஜலால்,நியூயார்க்ல இப்பதான் விடிஞ்சுதா?

இந்த மேட்டர்லாம் முடிச்சு இப்ப அபு இபுறாகீமின் அத்தியவாசியமான பதிவில் கட்டுண்டு கிடக்கோம். அதப் பத்தி ஒங்க கருத்து என்னவாம்?

இருந்தாலும்...ஒங்க பாராட்டுக்களின் வீரியம்பற்றி சொல்லலேன்னா திண்ட சாப்பாடு (அது ஓட்ஸே அனாலும்) செரிக்காது.
//சீரழிந்த ஜென்மங்களுக்கு சீலை கட்டி பார்த்த பாரி
கட்டவிழ்ந்த்து ஓடிய காற்றாறுக்கு அனண கட்டிய கரிகாலன்// பின்னிட்டீங்க. மற்றபடி பாரி கரிகாலன்லாம் மச்சான்மேல உள்ள பாசத்ல சொன்னத எடுத்துக்றேன். நன்றி.

Shameed said...

jalal சொன்னது…

அதிரை அதிவீர கவி
சபீர் நீ ஒரு
கோட்டு சூட்டு போட்ட நவீன கவி
சீரழிந்த ஜென்மங்களுக்கு சீலை கட்டி பார்த்த பாரி
கட்டவிழ்ந்த்து ஓடிய காற்றாறுக்கு அனண கட்டிய கரிகாலன்
அருமையான வரிகலைக்கொண்டு சவுக்கு அடி கொடுத்த
ஜன்சி ராணி
பென்மைக்கு விழிப்புனர்வு செய்த பொன்னான வரிகள்.
பாராட்டுகள் நன்றி

என்ன ஹாஜி ரொம்ம லேட்ட வந்தும் புடவை மேட்டரல்லாம் அவுகிரீங்க

இதுக்கு முன்னாடி ரேடியோ விற்கு ஜாக்கெட் தச்ச மேட்டரல்லாம் எல்லாம் பார்த்தியல

jalal said...

மச்சான்ஸ்

வந்துட்டோம்ல

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல

jalal said...

ச்சாவன்னா

கவிதையே புடவைய்ய பத்தி தனே ? அதான்
!
இனி சீக்கிரமே வருவோம்ல

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

jalal சொன்னது…
ச்சாவன்னா///

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), முதலில் "ஜலால்" காக்கா அவர்களுக்கு நல்வரவு (எல்லோரின் சார்பாக) சொல்வோமே with :) சிறப்பிக்கட்டும் இங்கே இன்ஷா அல்லாஹ்... !

கருத்துக்களின் ஓடையைப் பார்த்த சீனியர்(காக்காமார்)களின் சில்லென்ற சுவசமாகத் தெரிகிறது :)

sheikdawoodmohamedfarook said...

அன்று அதிரை நிருபரில் கமெண்ட்களில் கலக்கியவர்களில் பெரும்பாலோரை இன்று காணோமே?கல்யாணம்முடித்து பிள்ளை குட்டிகள் பெத்துகிட்டு வாழ்க்கைஎன்னும் சாகரத்தில்கரை காண நீச்சல் போடுகிறார்களோ?

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு