Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஹஜ்பெருநாள் வந்தாச்சு... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | September 06, 2016 | , ,

பிறையைப் பார்த்து, கணக்கிட்டு, கேள்விப்பட்டு என்று ஏதோ ஒரு விதத்தில் அனைவரும் இந்நேரம் துல்ஹஜ் மாதத்தைத் துவங்கி, அதுவும் ஓரிருநாள் கழிந்திருக்கக்கூடும். பிரியாணிக்கு அரிசியையும் ஆட்டையும் தயார் செய்திருப்பீர்கள். அதற்குமுன் அவசரமாய் ஒரு நினைவூட்டல்

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாள்கள் ஆகச் சிறப்பு என்பது கருத்து வேறுபாடில்லாத உண்மை.

அந்தப் பத்து நாள்களில் ‘தக்ணூண்டு’ என்று நாம் நினைத்துக் கொள்ளும் அற்ப அளவிலான நல்ல விஷயத்திற்குக்கூட எக்கச்சக்க நன்மை என்பதும் கருத்து வேறுபாடில்லாத உண்மை.

உதாரணத்திற்கு-

சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்ற பதங்கள் நமது அன்றாட உரையாடல்களில் கலந்திருப்பவை. இல்லையா? அவற்றை இறைவனை நினைவுகூர்ந்து முதல் பத்து நாள்களில் அதிகமதிகம் உச்சரித்தால் போதும், ஏக நன்மை என்கிறது அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீஸ்.

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா இலாஹா இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து என்பது நமக்கு மிகவும் பரிச்சயமான தக்பீர். இம் மாதத்தின் முதல் பத்து நாள்களில், அப்துல்லாஹ் இப்னு உமரும் அபூஹுரைராவும் (ரலியல்லாஹு அன்ஹுமா) ‘வாருங்கள், மக்களுக்கு இதை நினைவூட்டுவோம்’ என்று இருவரும் சேர்ந்து கடைவீதிக்குச் சென்று நின்றுகொண்டு, இந்தத் தக்பீரை உரத்துக் கூவுவது வழக்கம். செவியுறும் மக்களுக்கும் உத்வேகம் பரவி, அவரவரும் தத்தம் சோலியைப் பார்த்தவாறே இவற்றை உரைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பிரயத்தனம், மெனக்கெடல் என்று அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையற்ற இவற்றை உரைப்பதில் நமக்கு என்ன சங்கடம் இருக்க முடியும்?

உரைக்க வேண்டும். நாமும் அவற்றை இந்த பத்து நாள்களில் அதிகமதிகம் உரைக்க வேண்டும். உரைப்பதைத் தொடர வேண்டும். சிறு துளி பெரு வெள்ளமாவதைப்போல், இச் செயல்கள் நன்மைகளை நமக்கு அள்ளி வழங்க அமைந்துள்ள பெரும் வாய்ப்பு.

இனி உங்கள் நாவாச்சு. வெகுமதி வழங்க அவனாச்சு!

0-0-0


It was narrated from ‘Abd-Allaah ibn ‘Umar (may Allaah be pleased with him) that the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “There are no days that are greater before Allaah or in which good deeds are more beloved to Him, than these ten days, so recite a great deal of tahleel, takbeer and tahmeed during them.” Narrated by Ahmad, 7/224; its isnaad was classed as saheeh by Ahmad Shaakir.

The takbeer is as follows:

Allaah akbar, Allaahu akbar, laa ilaaha ill-Allaah, Allaahu akbar, wa Lillaah il-hamd (Allaah is Most Great, Allaah is Most Great, there is no god but Allaah; Allaah is Most Great and to Allaah be praise).

And there are other versions.

This takbeer has become a forsaken Sunnah nowadays, especially at the beginning of these ten days. You can hardly hear it except from a few. It should be recited out loud, so as to revive the Sunnah and remind the heedless. It was proven that Ibn ‘Umar and Abu Hurayrah (may Allaah be pleased with them both) used to go out to the marketplace during the first ten days of Dhu’l-Hijjah, reciting the takbeer out loud, and the people would recite takbeer when they heard them, i.e., the people would remember the takbeer and each one would recite it by himself; it does not mean that they recited in unison – that is not prescribed in sharee’ah.

நூருத்தீன்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு