Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஹஜ் பெருநாள்...! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 12, 2016 | , , , ,


நினைவலைகளை நிழலாட வைப்பதில் அதிரைநிருபருக்கும் அதில் பங்கேற்கும் படைப்பாளிகளுக்கும் என்று தனித் தன்மையுண்டு என்பதை எங்களோடு நேசம் வருடிகொண்டிருக்கும் யாவருக்கும் தெரிந்ததே..

இந்த தியாகத் திருநாளை நாம் அனைவரும் சந்தோஷமாகவும், இறை அச்சத்தோடும் கொண்டாடுவோம் இன்ஷா அல்லாஹ்..

இச்சந்தர்ப்பத்தில் அதிரைநிருபரின் ஆஸ்தான கவி "சபீர்" அவர்களும் அதிரைநிருபரின் எழில் "கிரவுன்" தஸ்தகீர் அவர்களும் நினைவு கூறும் "ஹஜ் பெருநாள்" குதூகலங்களை பகிர்ந்து கொள்வதில் பங்கேற்போம்...

. . . . . . . . . . . . . .

ஆஹா பெருநாள்
அருமையான திருநாள்...
ஆண்டவன் நமக்களித்த
அழகான ஒருநாள்!

ஆர்ப்பரிக்கும் மனத
அசைபோடும் இனிதாய்
அதிரைப் பட்டினத்து
அந்தக்கால பெருநாள்!

அன்றிரவு முழுதும்
அமைதியில்லா உறக்கம்...
அதிகாலை தொழுகை
அதற்கடுத்து குளியல்!

குளியல் என்ற பெயரில்
கும்மாலம் குதூகலம்...
குளத்து மேட்டிலிருந்து
குபீர் பாய்ச்சல் குட்டிக்கரணம்!

உச்சந் தலை முதல்
உள்ளங் கால் வரை
உஷ்ணம் தீர உடம்பில்
உம்மா தேய்த்த எண்ணெய்!

எண்ணெய்ப் பிசுக்கெல்லாம்
எங்கெங்கும் மிதக்க
வெட்டிக்குளமெல்லம்
தொட்டு விளையாட்டு..
உள்நீச்ச லோடு
கண்டு விளையாட்டு!

புத்தம்புது கைலி
புதிதாய் தைத்த சட்டை
புட்டாமாவு போட்டு
பினாங்கு அத்தர் பூசி...

உச்சமான உடுப்பாக
ஷைத்தானுக்கு தடுப்பாக
ஹெல்மெட்டு போல
வெல்வெட்டில் தொப்பி!

கண்களில் சுர்மா
கையில் சீக்கோ ஃபைவ்
கால்களில் கித்தாச் செருப்பு
கைக்குட்டைக்குள்ளும்
யாட்லி பவுடர்...

சங்கு மார்க்கு லுங்கி
டெட்ரெக்சில் கம்சு சட்டை
சில்லென்ற ஹவ்தில்
ஒலூச் செய்ய நனையும்

தெருவெங்கும் ஒலிக்கும்
தக்பீரின் முழக்கம்,
ஊரெங்கும் திளைக்கும்
தக்வாவின் சிறப்பும்!

ஊருக்கே உரித்தான ப்ரத்யேக ராகத்தில்
அத்தனைப் பள்ளிகளிலும் சத்தமாய்க் கேட்கும்...
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்...
லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்...
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து!

பெருநாள் காசு பைக்குள்ளே
திருநாள் தொழுகை நிறைவேற்றி
தோள்தழுவி வாழ்த்தி
சந்தோஷ தருணங்களை பகிர்வோம்!

உப்புக்கண்டம் சப்புக்கொட்டி
வர்ணங்களிலும் வடிவங்களிலும்
வார்த்துவைத்த கடப்பாசி
வாய்க்குள் கரையும் வட்லப்பம்
இடியப்பம் சவ்வரிசி
ரொட்டி எறச்சானம்...

அதிரைபட்டினத்தின் அந்தகால பெருநாள்!

இன்றோ...
நெட்காலிலும்
நீண்ட பெருமூச்சிலும்
ரகசிய கண்ணீரிலும்
மூடிய இமைகளுக்குள்
முடிவற்ற நினைவுகளிலும்
செல்ஃபோனில் சேகரித்த
செல்லுலாய்டு முகங்களிலும்
சட்டென முடிந்துபோகிறது

பெருநாள் சந்தோஷங்கள்!!!

KulluAam WaAnthum BiKhair

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

........................................................................................

ஈகைத் திருநாளாம்
முஸ்லிம் எல்லோரும்
மகிழ்வடைய வந்த பேருனாளாம்.

பணகாரர் முதல் ஏழை, எளியவர் வரை
சிறுவர் முதல் பெரியவர்வரை
பெறும் சந்தோசம்... வார்தையில் அடங்காது.

தியாகத்தின் பிறந்த நாள்
ஹஜ் புனித பயனம் தந்தனாள்.
வருடத்தில் ஒருமுறை வரும் வசந்த நன்னாள்.

புத்தாடையும்
புது, புது உணவு பலகாரமும்
குதூகலமும், மகிழ்சி ஆராவாரமும்
தந்திடும் இன்னாளில்
நமக்குள் ஒரு சபதம் செய்வோம்.

அந்த சபதம் ஒற்றுமையெனும் கயிற்றை பிடிப்போம் !!!

CROWN

........................................................................................

அன்பிற்குரியவர்களே..

"பெருநாள் வாழ்த்து" பகிர்ந்து கொள்வது பல்லாண்டு கால வழக்கமாக இருந்தாலும், நடைமுறையில் உள்ள பெருநாள் வாழ்த்துச் செய்திகள் எல்லாம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்று தந்தது அல்ல.

இத்தருணத்தில், இன்ஷா அல்லாஹ் அனைவரும் சந்தோசமாக ஹஜ்ஜுப் பொருநாளை கொண்டாடுவோம். சொந்தங்களின் நலன் அறிய முற்படுவோம் அவர்களோடு ஒன்றி உறவாடுவோம்.

அனைவரின் நலனுக்காகவும், நம் பெற்றோர்களின் நலனுக்காவும், சொந்தங்களின் நலனுக்காவும், உலக முஸ்லீம்கள் அனைவரின் நலனுக்காகவும் துஆ செய்வோம்.

இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்

8 Responses So Far:

Ebrahim Ansari said...

வட்டிலப்பமும் கடல்பாசியும் இன்றே சாப்பிட்டது போல் இருக்கிறது.

செரிமானம் ஆனதும் மீண்டும் வருவேன் இன்ஷா அல்லாஹ் .

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இருவரின் அழகு பழைய நினவூட்டல் கவிதை அருமை!

அதோடு எல்லாரும் வாழ்த்து பகிர நினைக்கயில்

//பல்லாண்டு கால வழக்கமாக இருந்தாலும், நடைமுறையில் உள்ள பெருநாள் வாழ்த்துச் செய்திகள் எல்லாம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்று தந்தது அல்ல.//

என இப்படி உள்ளதால் எல்லாரும் கமென்டுக்கு வராமல் பெருநா பிஸியாகி விட்டர்களோ!

KALAM SHAICK ABDUL KADER said...

இதில் எதில் சுவை மிக்கது என்று பிரிக்க இயலாத இரட்டைக் கூட்டுச் சுவைகள்! வடலப்பம், கடப்பாசி, ரவா கஞ்சி எல்லாவற்றையும் ஒரு சேரக் கலந்துச் சாப்பிட்டால் வருமே ஒரு மஸ்து என்னும் மயக்கம் அதுவே இந்த இரட்டைக் கவிதைகளை ஒரு சேரச் சுவைத்ததும் கிட்டியது.

عبد الرحيم بن جميل said...

ஈத் முபாரக் சொல்வது நபி வழி இல்லை என்பதை விளங்கிக் கொண்டேன்...சபீர் மாமா க்கு ஈத் முபாரக் சொன்னேன் ரிப்ளை ஈத் முபாரக் என்று வரவில்லை..ஈத் முபாரக் சொல்லலாமா கூடாதா?

sabeer.abushahruk said...

அப்துர்ரஹீம்,

நான் சவுதியில் வசித்த காலங்களில் பழகிய அரபிகள்

"குல்லுஆம் வ அன்த்தும் பிக்ஹைர்" என்றே வாழ்த்துவர்.

அதையே பழகியதால் அப்படியே சொல்வது என் பழக்கமாகிப் போனது.

ஈத் முபாரக் சொல்லலாமா என்னும் தங்களின் கேள்விக்கு என்னிடமும் பதில் இல்லை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நபி ஸல் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளில் ஈத் முபாரக் என்ற வார்த்தை சொல்லுவது இல்லை.

விரிவாக விரைவில் தர முயற்சி செய்கிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நபி ஸல் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளில் ஈத் முபாரக் என்ற வார்த்தை சொல்லுவது இல்லை.

விரிவாக விரைவில் தர முயற்சி செய்கிறேன்.

crown said...

தெருவெங்கும் ஒலிக்கும்
தக்பீரின் முழக்கம்,
ஊரெங்கும் திளைக்கும்
தக்வாவின் சிறப்பும்!
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்...
லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்...
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து!
-----------------------------------------------
இன்றோ...
நெட்காலிலும்
நீண்ட பெருமூச்சிலும்
ரகசிய கண்ணீரிலும்
மூடிய இமைகளுக்குள்
முடிவற்ற நினைவுகளிலும்
செல்ஃபோனில் சேகரித்த
செல்லுலாய்டு முகங்களிலும்
சட்டென முடிந்துபோகிறது

பெருநாள் சந்தோஷங்கள்!!!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு