பேசும் படம் ஊமையானதோ!

ஊரையே பேச வைத்த பேசும் படம் ஊமையானதோ என்று கேள்வியோடு எட்டிப் பார்க்கும் மின்னஞ்சல்களுக்கு பதிலுரை என்னவோ "வேலைப் பளு பேசாமல் வேலையைப் பாரு என்ற அழுத்தம்".

மூன்றாம் கண் கண்ட காட்சிகளைக் கொண்டு இனியொரு பேரணி நடத்தலாமென்ற அடுத்தக் கட்ட முடிவு :)


ஒரே  புகை மூட்டமா இருக்கு, கீழே குனிந்து பாருங்க விமானம் ஏதாவது விழுந்து கிடக்கப் போவுது !?


எதுக்கும் கொஞ்சம் தள்ளி நின்னே  பாருங்க போட்டோவை.


இங்கயும் ரோடு போட்டு தரணுமுன்னு கலக்டர்டே மனு கொடுத்துராதிய 


இந்த மாதிரி காட்டை பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது காட்டு மிருகங்கள் அதற்கு அடுத்து வீரப்பன் 


ஆங்கிலத்தில் Couple (ஜோடி)இங்கே தமிழில் கப்பல் கப்பலாக 


கப்பலின் பெயரை பார்த்தாலே மைனாரிட்டி மெஜாரிட்டியை ஆட்சி செய்வது புரிய வருமே 


ஒண்டி கட்டை என்று சொல்வார்களே அதுக்கு  இது பொருந்துமா ?


ஆறு வித்தியாசமெல்லாம் ஒண்ணும் கிடையாது மேலே உள்ளது அப்படியோ கீழே தண்ணிரில் தெரிகின்றது 

Sஹமீது

10 கருத்துகள்

sabeer.abushahruk சொன்னது…

ஆம். பேசும்படம் பதிவுகள் எனக்கும் விருப்பமானவையே, அதிலும் அந்த அடிக்குறிப்புகள் அணி செய்பவை!

ஹமீதுவின் காமிரா கண்கள் வாழ்க!

sabeer.abushahruk சொன்னது…

இறைவன் இயற்றிய
இயற்கை எழிலை
அப்படி அப்படியே
ஆவணப் படுத்துவோம்...
ஆணவ மாநுடம்
சுயநலக் கோடரி
வீசும் முன்னமே!

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

அன்பிற்கினிய வாவண்ணா சார் அவர்களின் மரணச்செய்தி கேட்டு ஐம்புலன்களும் ஊமையாகி வருத்தத்தில் தவிக்கிறது. அல்லாஹ் அவர்களின் உலக வாழ்வின் எல்லாப்பாவங்களையும் மன்னித்து ஆஹிரத்தில் உயர் பதவியை தந்தருளவும், அவர்களின் இந்த திடீர் பிரிவால் வாடும் அவர்களின் பிள்ளைகள், குடும்பத்தினர்களுக்கும் வலையுலக நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாகவும்....ஆமீன்.

வாவண்ணா சாரின் நச்சென்ற ஒரு கருத்து இப்பொழுது உள்ளத்தில் வந்து நிலழாடுகிறது.

"மக்கள் தங்கள் வாக்குரிமைகளையும், குப்பைகளையும் போடக்கூடாத இடத்தில் போட்டுச்செல்கின்றனர்".

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sabeer.abushahruk சொன்னது…

வாவண்ணா சார் அவர்களின் ஆகிரத்து வாழ்விற்காக துஆச் செய்வோமாக.

அவர்கள்தம் அன்பு மருமகன் அபுஇபுறாகீம் அவர்கள் இன்றையப் பதிவிற்கு எதேச்சையாக இட்டத் தலைப்பு:

""பேசும் படம் ஊமையானதோ"

ஆம்... இன்றுதான் ஊமையானது.

Shameed சொன்னது…

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்துஸ் என்னும் சுவர்கத்தை நசீபாக்குவானாக. மேலும் அன்னாரை இழந்து வாழும் குடும்பாத்தார்களுக்கு அல்லாஹ் பொறுமையும் கொடுப்பானாக

ZAKIR HUSSAIN சொன்னது…

வாவன்னா சாரின் மரணம் மனதளவில் ஒரு கணத்தை தந்தது. அவருடைய மாணவர்களில் நானும் ஒருவன்.

அதிரை நிருபருக்காக அவரை பேட்டி எடுத்து பதிந்தேன். பிறகு அவரிடம் பேசும்போது அதே சுறுசுறுப்புடன் எப்போதும் பேசினார்.


துக்கமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அவரது குடும்பத்தினர் அனைவரும் பொறுமை காக்கவும். இறைவனிடம் அவரது மறுமை வாழ்வின் நன்மைக்கு துஆ செய்யவும்.

Unknown சொன்னது…

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இவர்களின் மறுமை வாழ்வு வெல்லட்டும். ஆமீன்.

வாவன்னா சார் என்றாலே தத்ரூப ஓவியங்களே கண்முன் நிழலாடும்.
ஒரு மாணவன் தவறு செய்தால் எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் பார்வையிலே ஒரு கனிவான சொல் உதிர்த்து நீ செய்வது தவறு என்று புரிய வைத்து பாடத்தை தொடர்வார்கள்.

இப்பேர்ப்பட்ட ஆசிரியர்கள் மிக மிக சொற்பமே.

.

அபு ஆசிப்.

Iqbal M. Salih சொன்னது…

வாவன்னா சாரின் மரணம் மனதளவில் ஒரு கணத்தை தந்தது. அவருடைய மாணவர்களில் நானும் ஒருவன்.
துக்கமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அவரது குடும்பத்தினர் அனைவரும் பொறுமை காக்கவும்.
வாவண்ணா சார் அவர்களின் ஆகிரத்து வாழ்விற்காக துஆச் செய்வோமாக. அல்லாஹும்மக்ஃபிர்லஹு வர்ஹம்ஹு வனவ்விரு கப்ரஹு வஎஸ்ஸிரு ஹிஸாபஹு வஎம்மின் கிதாபஹு.

Ebrahim Ansari சொன்னது…

தம்பி அபு இப்ராஹீம் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்.

தம்பி அபூபக்கர் அவர்கள் அலைபேசியில் செய்தியைச் சொன்னதும் அதிர்ந்து போனேன். எனது உணர்வுகளைக் கட்டுப் படுத்த இயலவில்லை. வகுப்பு வேறு.

அன்று மாலை மக்ரிபுக்குப் பிறகு எனது மரியாதைக்கும் அன்புக்கும் உரிய வாவன்னா சார் அவர்கள் ஊமையாகி கிடத்தபட்டிருந்த காட்சியைக் கண்டபோது கண்கள் அருவிகளாயின.

அல்லாஹ் போதுமானவன். அனைவரும் சபூர் செய்வோம். வாவன்னா சார் அவர்களின் மறுமைப் பதவிக்காக கை ஏந்துவோம்.