Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தந்தையெனும் பாசம் 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2016 | , , , ,

அன்னையவள் அன்பென்னும் அருமருந்தே அரவணைத்து,
மன்னவனே இவரென்று மக்களையே மனமுருகி,
இன்பமெனும் செல்வமென எந்நாளும் காத்திருந்து,
தன்னலமே தான்மறந்து தரணியிலே வாழ்ந்திருக்கும்!

தாயவளின் உள்ளமது தவறுகின்ற தன்மகனின்...
காயங்கள் மட்டுந்தான் காணுமன்றி வேறெங்கும்
சாயுதலே இன்மையினால் தந்தையின் பாசத்தை
நேயமுடன் நானிங்கு நெகிழ்கவிதை பாடவந்தேன்!

தாயவளே சிலநேரம் தாவென்று தம்மக்கள்
நேயமுடன் கேட்கின்ற நெகிழ்ம பொம்மையதை
வாயுரையால் விலக்கிவிட மாளாத துயரடையும்
சேயதனின் ஆசைதனை தீர்ப்பவரும் தந்தையன்றோ?

முழுமைபெற்ற இலக்கியத்தை, முற்றுமுணர் மாந்தர்களை,
பழுதறவே  தம்மன்பைப் பாங்காக மைந்தர்முன்
வழுவகன்ற வார்த்தைகளில் மலர்ந்தருளுந் தந்தையரை
விழுந்தெங்கும் தேடுகிறேன்; மேதினியில் காணவில்லை!

தந்தையுளம் தரணியிலே தவறிவிழும் தனயனையே
முந்திவந்து காத்திடத்தான் முனைந்தாலும்; வீழ்ந்தெழுகும்
தந்தனையன் தூசுகளைத் தட்டிவிட்டு மீள்முனையச்
சிந்தனையைக் கூராக்கிச் செப்பலிடும் சீர்மையன்றோ!

அன்னையென்ற கட்டிடத்தின் அடித்தளமே தந்தையவர்
தன்னிருப்பால் தடையின்றித் தருகின்ற தைரியமே;
தன்மகனை ஊர்போற்றும் சான்றோனாய் ஆவதற்கே
முன்னிருத்தும் தந்தையவர் முகமூடி கண்டிப்போ?

நாம்கலங்கும் வேளையிலே நம்பிக்கை தான்கொடுத்து,
நாம்சறுக்கும் வேளையிலே நமையேந்தித் தான்பிடித்து,
நாம்பிறழும் வேளையிலே நமைக்கடிந்தே தான்காத்து,
நாம்சிறக்கும் வேளையிலே நமைக்கண்டே தான்சிலிர்த்து

தளிர்க்கின்ற சிறுவிதையும் தானாக எழுவதுபோல் 
வளங்களுடன் தம்மைந்தர் வாழ்ந்திருக்கச் சுயம்புவென
களம்தனிலே கருத்தூன்றிக் கலக்கிடவே விரும்புகின்ற
உளப்பாங்கு கொண்டநல் உன்னதமே தந்தையன்றோ!

அத்தனைப் பெருமைகளை அற்புதமாய் வாழ்த்துகளை
முத்தனைய சிரிப்பொன்றால் முகிழ்க்கின்ற பேரன்பால்
வித்தகமாய்த் தான்பெற்ற வியனுலகின் தாய்மையெனும்
பித்தமிழ்தின் பின்புலத்துப் பேராற்றல் தந்தையன்றோ?

”கவியன்பன்” கலாம்

பிச்சைப் பாத்திரம் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2016 | , , ,


பிச்சைப் பாத்திரம்
பிச்சைக்காரன் என்கிற முத்திரையை
குத்தும் பாத்திரம்

உதவாக்கரைகளுக்கும் உணவளிக்கும்
உன்னதப் பாத்திரம்

இக்கதாபாத்திரத்தில்
சதாஅழுது புலம்பி
கண்கலங்கி நிற்கும் பாத்திரம்

உழைத்து வியர்வை சிந்தாமல்
ஊர்சுற்றி வலம்வந்து
உணவைச் சேகரிக்க
உறுதுணையாயிருக்கும்
ஒப்பற்ற பாத்திரம்

சோம்பேறிகளுக்கு வாழ்வளித்து
சுயநல வாதிகளுக்கு கைகொடுத்து
சாம்ராஜ்யத்தை அழிக்கும் பாத்திரம்

எஞ்சிய உணவையும்
எச்சிலைச் சோற்றையும்
வஞ்சகமில்லாமல் வாங்கி
வயிற்ரை நிரப்பிக் கொள்ள
உதவும் பாத்திரம்

ஒற்றைப் பாத்திரத்தில்
ஒன்பது வகை உணவு
ஓராயிரம் கனவுடன்
ருசித்திடும் நாவு

ஏக்கம் நிறைந்திட்ட
இல்லாதோர்வாழ்வில்
ஏகமாய் மகிழ்விக்கும்
இன்பப் பாத்திரமாம்

யார் வைத்த பெயரோ
அன்றுமுதல் இப்பாத்திரத்துக்கு
பஞ்சமில்லை

இப்பாத்திரம் கையிலிருக்கும் வரை
இவ்விதி என்றும் மாறப்போவதில்லை

பிச்சைப் பாத்திரத்தை தூக்கியெறி
கதாபாத்திரத்தை கையிலெடு
முயற்ச்சிசெய்து முன்னுக்குச் செல்
முன்னேற்றப் பாதையை கவனத்தில் கொள்

ஏற்றமுடன் உழைக்கத் துவங்கு
ஏறெடுத்து பார்க்கும் உலகு

உடல் களைக்கும்வரை உழைத்துப் பழகு
வழி கிடைக்கும்வரை உறங்கமறு

மாற்றமுடன் நீ நடக்க
மதியை கூறாய் தீட்டிக்கொள்
நாட்டமுடன் நடந்தேறும்
நாட்டுமக்கள் திரும்பிப்பார்ப்பர்

போற்றும் உந்தன் திறமையைத்தான்
புகழில் உயர்ந்து நின்றுடுவாய்
தன்னைநம்பு தலை நிமிர்வாய்
தவறாமல்செல் வழிகாண்பாய்

மாற்றத்தை நீநன்கு உணர்ந்திடுவாய்
ஏற்றத்தை நீயென்றும் பெற்றிடுவாய்

தோற்றத்தில் நீ அன்று
பிச்சைக்காரன்
தொய்வின்றி முயற்ச்சித்தால்
வெற்றிக்காரன்

நட்பும் உறவும் வந்து சேர
நாடிய அனைத்தையும்
நீ பெறுவாய்
நலமுடன் என்றும் வாழ்ந்திடுவாய்

அதிரை மெய்சா

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 13 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 30, 2016 | ,


இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்கும் பிறமத சகோதரர்கள் மட்டுமல்லாமல் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள முற்படும் சகோதரர்களும் தவறாமல் எடுத்து வைக்கும் முக்கியமான கேள்வி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பலதாரமணம் பற்றியதாகும். பெரும்பாலானோர் இது ஆண் பெண் சமவுரிமை என்கிற நோக்கில் அணுகுகிறார்கள். இன்னும் சிலர் இதை பெண்களுக்கு இஸ்லாத்தால் இழைக்கப்படும் கொடுமையாகவும் நினைக்கின்றார்கள். யாராக இருந்தாலும் அந்த நண்பர்களுக்கு விளக்கம் தரவேண்டியது ஒரு அழைப்புப் பணியாளரின் கடமையாகும்.

இஸ்லாம் எந்த சூழ்நிலையில் எந்தெந்தக் காரணங்களுக்காக பலதார மணத்தை அனுமதித்து இருக்கிறது – அப்படி அனுமதிக்கப்ட்டாலும் நடைமுறையில் அவ்வாறு பரவலாக பின்பற்றப்படுகிறதா என்பதைப் பற்றி பின்னர் பேசலாம். அதற்கும் முன்பாக பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் இருக்கும் நியாயத்தை சற்று அலசலாம். 

இந்த அலசலை, கடந்த வாரம் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து தொடங்குவது நலமாக இருக்கும் என்று கருதுகிறோம். அரசால் அறிவிக்கப்பட்ட தமிழக வாக்காளர் பட்டியல் இப்படிப் பேசுகிறது. 

ஆண் வாக்காளர்கள் 2,88,17,750
பெண் வாக்காளர்கள் 2,90,93,349
திருநங்கைகள் 4,383. 

இந்தப் புள்ளி விபரம் சொல்லும் உண்மை என்னவென்றால் , ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதுதான். இதே நிலை எல்லா மாநிலங்களிலும் நிலவுகிறது. பெண்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு புள்ளி விபரம் சொல்வது என்னவென்றால் பெண்களில், கணவனை இழந்த விதவைகள் குறிப்பாக இளம் விதவைகளும் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள் என்பதும் அதிலும் நாட்டிலேயே தமிழகமே முதலிடம் வகிக்கிறது என்பதும்தான். தமிழகம் இந்தத் தலைமை இடம் பெறக் காரணம் அரசே நடத்தும் மதுக்கடைகள் என்பது ஒரு தலையாய காரணம் . 

உலக மக்கள்தொகையை ஆய்ந்தாலும் உலகம் முழுதுமே ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்ற முதல் உண்மையை நாம் இப்போது உணர்த்த வேண்டியதாக இருக்கிறது. சில நாடுகளின் உதாரணங்களை சுட்டிக் காட்டலாம். அமெரிக்காவின் மக்கள் தொகைக் கணக்கில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட 78 லட்சம் அதிகமென்றும் நியூயார்க்கில் மட்டும் 10 லட்சம் அதிகமென்றும் அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒருபாகம், எயிட்ஸ் நோய்க்கு பாதை போட்டுக் கொடுக்கும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் சொல்கிறது. பிரிட்டனில் இந்தப் பாலின வேறுபாடு 40 லட்சம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஜெர்மனும் இந்தப் பந்தயத்தில் முன்னிலை வகிக்கிறது. அந்த நாட்டில் பெண்கள் 50 லட்சம் பேர் அதிகமாக இருக்கிறார்களாம். ரஷ்யா இந்தப் போட்டியில் விட்டுக் கொடுக்குமா? அந்த நாட்டில் 90 லட்சம் பெண்கள் ஆண்களைவிட அதிகம் அதிகம்.

“ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை “ என்ற கோட்பாட்டை உலக நாடுகள் பின்பற்றினால் ஒரு ஆணுக்கு ஒரு பெண் மனைவியாக வாய்க்கும் அளவுக்கு இருபாலினத்தின் மக்கள்தொகை சமநிலையில் இருக்கிறதா என்ற கேள்வியை இந்தப் புள்ளிவிபரங்களைக் கண்ட பிறகு உலகைநோக்கி நாம் கேட்போம். 

மக்கள்தொகை மாறுபாடுமட்டுமல்ல பெண்களின் ஆயுட்காலம் ஆண்களின் ஆயுட்காலத்தைவிட அதிகம் என்றும் அறிகிறோம். அதனினும் மேலாக, போர் முதலிய உயிருக்கு ஆபத்தான காரியங்களில் ஆண்களே அதிகம் அல்லது முழுக்க முழுக்க ஈடுபடுகிறார்கள். அடுத்தபடியாக பிரயாணங்களில், விபத்துக்களில் உயிரை விடும் நிலைமையும் பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். ஒரு கப்பல் மூழ்கிறது அல்லது ஒரு விமானம் விபத்தில் விழுகிறது என்றால் அத்தகைய விபத்துக்களில் இறப்பவர்களிலும் ஆண்களே அதிகம். குடும்பத்துக்காக பொருள் தேடி வெளியுலகம் செல்லும் ஆண்களும் தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் ஆண்களுமே விபத்துக்களில் கொத்துக் கொத்தாக இறந்து போகிறார்கள். ஆகவே விதவைகளாக வாழவேண்டிய நிலைமை பெண்களுக்கும் அற்ப ஆயுசில் இறந்து போகும் நிலைமை ஆண்களுக்கும்தான் அதிகம் என்பது ஏற்கத்தக்க உண்மை. 

இத்தகைய காரணங்களால் விதவைகளாகப் போகும் பெண்கள், அப்படியே கவனிக்கப்படாமல் விட்டு விடப்பட வேண்டிய வேடிக்கைப் பொருள்கள்தானா? அந்தப் பெண்கள் மானம் கருதி உடல்பசியை அடக்கலாம்; வயிற்றுப்பசி அடக்க வழி என்ன? 

ஆண்களுக்கு அரவணைப்பு மட்டும் போதும். பெண்களானால் அவர்களுக்கு அரவணைப்பும் வேண்டும் அத்துடன் அவர்கள் போர்த்திக் கொள்ள போர்வையும் கொடுக்க வேண்டும். கணவன் என்ற பாதுகாப்பு வேலி பெண்களையும் அவர்களது மானத்தையும் வாழ்வையும் பாதுகாத்து வரும் நேரத்தில் போர், விபத்து போன்ற காரணங்களால் சாய்ந்து விழுந்துவிடுமானால் கண்ட கண்ட வெள்ளாடுகளும் வேலிதாண்டி மானம் எனும் பயிரை மேய்ந்துவிட வாய்ப்புண்டு. ஆகவே விதவையான பெண்களின் மானப் பயிரை சட்டரீதியாக மற்றொரு வேலிபோட்டு காக்கவேண்டிய கடமை உணரப்பட்டதாலேயே இயன்றவர்கள், சக்தி படைத்தவர்கள், வாய்ப்புள்ளவர்கள், நீதி தவறாத வகையில் தனது மனைவிமார்களை நடத்த வல்லமை படைத்தவர்கள் நான்கு பெண்கள் வரை திருமணம் முடித்துக் கொள்ளலாம் என்ற அனுமதி இஸ்லாத்தில் வழங்கப்பட்டது. 

சிறுவயது ஆண்களின் மரணம் சமுதாயத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருந்த நிலையில் அந்த ஆணை மணமுடித்த பெண் விதவையாகின்றாள். இவளுடைய வாழ்க்கை பாதுகாப்பு கேள்வியாகிறது. உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைகள் அவளது பெற்றோர்களாளோ அல்லது உடன்பிறந்தவர்களாளோ கொடுக்கப்படக் கூடும். உணவு உடை உறைவிடம் போன்றவை எவ்வாறு ஒரு மனிதனுக்கு அவனது வாழ்க்கையில் தவிர்க்கப்பட முடியாத ஒன்றோ, அது போலவே, குடும்ப வாழ்க்கையும் தாம்பத்ய உறவும் உடற்கூறு அறிவியல் ரீதியாக தவிர்க்கப்பட முடியாத ஒன்றே என்பது உண்மையா? பொய்யா?

இது எல்லா மனிதர்களின் உடல் தேவை. உணவு உட்கொள்ள பொருளாதாரத்தை முறையான வழியில் ஈட்ட முடியாத ஒருவன் திருடுவது எப்படி தவிர்க்க முடியாமல் போய்விடுகிறதோ அதே போல, குடும்ப வாழ்வின் உடல் தேவைகள் முறைப்படி வழங்கப்படாதிருந்தால், முறைதவறிய வழியில் பெற வேண்டியதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். விபச்சாரமும் இரவு விடுதிகளும் உலகில் வளர்ந்தோங்க இவைகளே அடிப்படைக் காரணம். முறைதவறி பெறும் உடலின்பம் சமுதாயத்தின் நலனுக்கு உகந்ததல்லவே? எனவே, இத்தகையோருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது பரிகாரமே தவிர பரிகாசத்துக்குரியதல்ல. 

இந்த அனுமதி இறைவனால் எவ்வாறு எந்தக் காலகட்டத்தில் வழங்கப்பட்டது என்பதையும் பார்க்கலாம். திருமறையின் அன்னிஸா அத்தியாயம் பெண்களைப் பற்றியும் பெண்களின் உரிமைகளைப் பற்றியும் தொடக்கத்தில் பேசுகிறது. அந்த அத்தியாயத்தின் 3- வது வசனம், இப்படிக் கூறுகிறது. 

“அனாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் ( அவர்களிடையே) நீதமாக நடந்திடமுடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணைமட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருக்க இதுவே மிகவும் நெருக்கமானதாகும்”. 

அனாதைகள் என்று இங்கு திருமறை குறிப்பிடுவது யாரை? 

இஸ்லாத்தை பெருமானார் ( ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த காலங்களில் நடைபெற்ற உஹுதுப் போரில் - அதிகமான எண்ணிக்கை உடைய முஸ்லிம்கள் இஸ்லாத்தைத் தழுவாத நிலையில் - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சிறு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70 முஸ்லிம்கள் போரில் இறந்து போன காரணத்தால் குடும்பத்தலைவனை இழந்து அனாதைகளான பெண்களையும் அவர்களது குழந்தைகளையும்தான். 

இவ்வாறு திடீரென்று ஒரு கணிசமான எண்ணிக்கையுள்ள அனாதைகள் ஒரு சிறிய சமுதாயத்தில் உண்டாகும்போது அவர்களை அநியாயமான முறையில் இச்சைகளுக்கு இரையாக்கிவிடாமல் அவர்களை இறைவன் காட்டிய வழியில் சக்தி இருந்தால் மணம் புரிந்து அரவணைத்திடுங்கள்; சட்டபூர்வமான அங்கீகாரம் கொடுங்கள் என்று சொல்வது தவறா? 

ஒரு செய்தியை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ளலாம் என்று வெறுமனே அனுமதிப்பதற்காக மேற்கண்ட வசனங்கள் இறைவனால் எடுத்துரைக்கப்படவில்லை. ஏனெனில், இந்த வசனம் இறக்கப்படுவதற்கு முன்பே பலதார மணம் நடைமுறையில் இருந்தது. இந்த வசனம் இறங்கிடக் காரணமே போர்களில் இறைவனுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுடைய அனாதைக் குழந்தைகளின் பிரச்னையை தீர்த்துவைக்க உங்களால் இயலவில்லை என்றால் அக்குழந்தைகளை வைத்திருக்கும் பெண்களை உங்களின் மனைவிகளாக ஏற்றுக் கொண்டு ஆதரியுங்கள் என்ற சமூக நல நோக்கத்துக்காகவே . இந்த மனிதாபிமான ரீதியில் அனுமதிக்கப்பட்ட பலதாரமணம் தவறா? 

மேலும், அந்த வசனத்தை இன்னும் ஆய்ந்து பார்ப்போமானால் கட்டுப்பாடு இல்லாத பலதார மணத்தை திருமறை தடுத்து அதற்கு நான்கு என்ற வரையறை வைத்து இருக்கிறது. அதற்கும் சில கடுமையான நிபந்தனைகளையும் விதித்து இருக்கிறது என்பதை நடுநிலையாக நின்று காணலாம். எல்லா மனைவியரிடமும் நீதியுடன் சமத்துவமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையை மீறுபவன் இறைவனின் கட்டளையை மீறியவனாவான். அந்த வகையில் மறுமையில் அவன் தண்டிக்கப்படுவான் . இந்த நிபந்தனை இஸ்லாத்தின் ஷரியத் சட்டம். இதை மீறுபவன் இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி இம்மையிலும் தண்டிக்கப்படுவான் என்பதே உண்மை.

எனவே ஆண்களின் ஜனத்தொகை குறைவு எனும் எதார்த்தமான நிலையில், விதவையான பெண்களுக்கு மணமுடித்துவைப்பது அல்லது அவர்களையும் இறந்த கணவனோடு சேர்த்தே உயிரோடு கொன்றுவிடுவது என்ற இரண்டு தீர்வுகளில் அவளுக்கு மறுமணம் செய்துவைப்பதுதான் மனிதநேயமான தீப்பாக இருக்கமுடியும். 

மறுமணம் என்கிற சலுகையும் வாய்ப்பும் இல்லாததால் பெண்கள், கணவன் இறந்ததும் அவன் உடலை எரித்த நெருப்பின் சிதையிலேயே உயிரோடு எரித்த உடன்கட்டை என்கிற “சதி” எனப்படுகிற பெண்களுக்கு எதிராக நடந்த சமுதாய சதி நூற்றண்டுகளுக்கு முன்பு வரை நமது இந்திய சமுதாயத்தில் இருந்துவந்த கொடுமையையும் நாம் அறிந்து இருக்கிறோம். 

சில அமைப்புகளும் சக்திகளும் தவறான புரிந்துணர்வில் முஸ்லிம்கள் பல பெண்களை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை வகைவகையாக அனுபவிக்கிறார்கள் என்று தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். இஸ்லாம் அனுமதித்துள்ள பலதார மணத்தை சாடுகிறார்கள். தங்களின் தவறான புரிந்துணர்வுக்கு திருமறை வசனத்தையும் சான்றாகத் தந்து விவாதிக்கிறார்கள். யானையைத் தடவிப் பார்த்த குருடர்களின் கதையைப் போலத்தான் இந்நிலை இருக்கிறது. உண்மையில் அவர்களது இந்த விவாதங்கள் மேற்கத்திய அடிமைத்தனத்தின் விளைவே ஆகும். இஸ்லாம் அனுமதித்துள்ள பலதார மணத்தை ஒரு வசதி என்ற நிலையில்தான் பார்க்கவேண்டுமே தவிர சதி என்றோ சமத்துவமின்மை என்றோ என்று பார்க்கக் கூடாது என்பதை சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.காரணம், பலதார மணம் என்பது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சமூக, ஒழுக்க நடைமுறைகளில் தேவையாக இருக்கிறது என்பதை நமது மேற்கண்ட வாதங்கள் எடுத்துரைக்கின்றன. 

அளவற்ற அளவிலான பெண்களை அந்தப்புற நாயகிகளாக அனுபவித்துக் கொண்டு மிருகங்களை விடகேவலமாக நடத்திக் கொண்டிருந்த சமூகத்தில், அநாதைகளையும் நிர்க்கதியானவர்களையும் சட்டப்பூர்வமாக மனைவியாக்கி சாந்தியையும் சமத்துவத்துவத்தையும் பேணச்சொன்ன இஸ்லாம், அதிக பட்சம் நான்கு என்ற வரையறையையும் கட்டளையாக இட்டுள்ளதையும், ஆண்களால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் நீதமாக நடந்து கொள்ள முடியாது என்று எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தைச் சொல்லி நீதமாக நடக்க முடியாதவர்களுக்கு ஒரு மனைவியே போதும் என்று திட்டவட்டமாகச் சொல்லி இருப்பதை , கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை செயல்திட்டத்தின் அடிப்படையில் ( Single Agenda) சிந்திக்க மறுப்பவர்கள் சிந்திக்கும் வண்ணம் வாதங்களை எடுத்துரைப்பது ஒரு அழைப்பாளனின் கடமையாகும். 

எனவே பலதாரமணம் சமுதாயத்தில் இருக்க வேண்டிய பரிகாரமே.

அதைப் பயன்படுத்துவது தனிநபர்களின் சூழ்நிலைகளைப் பொறுத்தது என்பதே உண்மை. 

பலதாரமணத்தை எதிர்த்து அதற்காக வாதிடும் நண்பர்கள் சார்ந்துள்ள மதங்கள் உண்மையிலேயே பலதாரமண விஷயத்தை எவ்வாறு கையாள்கிறது என்பதையும் உலக மதங்களில், வரலாற்றில் இந்தக் கோட்பாடு எவ்வாறு எடுத்தாளப்பட்டிருகிறது என்பதையும் இன்னும் சற்று விரிவாக விளக்க வேண்டி இருக்கிறது. 

இன்ஷா அல்லாஹ் தொடரும். 

இபுராஹிம் அன்சாரி

அவர்கள் வாழ்வு - ஜைனப் (ரலி) அவர்கள் ! 2

அதிரைநிருபர் | January 29, 2016 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...!

அகிலத்தின் அருட்கொடை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருமை மகளார் ஜைனப்(ரலி) அவர்களின் தியாகம் பற்றி நாம் அறிந்திடாத வரலாற்றுச் செய்திகளையும், அதன் மூலம் நமக்கிருக்கும் படிப்பினைகளையும் பற்றி இந்த மீள்பதிவின் மூலம் அறிந்துக்கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் !.

உயிரினும் மேலான உத்தம இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களுடைய நான்கு மகள்களில் மூத்த மகள்தான் ஜைனப்(ரலி) அவர்கள். உம்மு குல்தும்(ரலி), ருகைய்யா (ரலி) பாத்திமா(ரலி) ஆகியோர் மற்ற மூன்று பெண்மக்கள். இவர்கள் நால்வரும் அன்னை ஹதீஜா(ரலி) அவர்களுக்கு பிறந்தவர்கள்.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதற்கு முன்பே தம் மூத்த மகள் ஜைனப்(ரலி) அவர்களை அபுல் ஆஸ் என்பவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்திருந்தார்கள். அபுல் ஆஸ் அவர்கள் அன்னை ஹதீஜா(ரலி) அவர்களின் சகோதரியின் மகனாவார். ஜைனப்(ரலி) அவர்களின் கணவர் பண்பானவர், நல்லொழுக்கமானவர் என்று வரலாற்றில் அறியப்பட்டவர். இஸ்லாத்தில் ஒருவர் எவ்விதமான துன்பங்களையும் சகித்துக் கொண்டு பொறுமையுடன் வாழ்ந்து அந்த துன்பங்களிலுருந்து மீண்டு, தான் தழுவிய தூய இஸ்லாம் தன்னுடைய சொந்தத்திற்கும், கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் உள்ளவர்களுக்கு அண்ணலாரின் அருமை மகளார் ஜைனப் (ரலி) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த பின் வரும் உருக்கமான சம்பவங்கள் நல்லதொரு படிப்பினை.

தன் மகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கும் அபுல் ஆஸுக்கும் திருமணம் முடிந்த சில வருடங்களில் நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் அபுல் ஆஸ் அவர்கள் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருளப்பட்ட இஸ்லாத்தை எத்தி வைக்கிறார்கள், முதலில் மனைவி ஹதீஜா(ரலி), பின்னர் மகள்கள் ஜைனப்(ரலி), உம்மு குல்தும்(ரலி) ருகைய்யா(ரலி) ஃபாத்திமா(ரலி) ஆகியோர் இஸ்லாத்தை ஏற்கிறார்கள். இதில் இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக உம்மு குல்தும்(ரலி) ருக்கையா(ரலி) ஆகியோரை அவர்களின் கணவன்மார்கள் விவாகரத்து செய்தனர். அது ஒரு மிக உருக்கமான வரலாற்றுச் சம்பவம். இந்த தருணத்தில் நபி(ஸல்) அவர்களின் மூத்த மகள் ஜைனப்(ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தார்.

வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்புகிறார் அபுல் ஆஸ். வீட்டில் தன் மனைவி இஸ்லாத்தை ஏற்ற செய்தியை அறிந்து கொள்கிறார். ஜைனப்(ரலி) அவர்கள் தன் கணவனைப் பார்த்து “என்னுடைய தந்தை இறைத்தூதராகி விட்டார்கள், அல்லாஹ்விடமிருந்து வஹி அருளப்பட்டது, என்னுடைய தந்தையின் மூலம் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன், நீங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அன்பாக ஒரு கோரிக்கையை வைத்தார். அதற்கு அபுல் ஆஸ் “ஒரு பெண்ணுடைய பேச்சைக் கேட்டு நான் இஸ்லாத்தை ஏற்றால் என்னை என் சமூகம் கேவலமாக பேசும் என்பதற்காக நான் அஞ்சுகிறேன், நான் இஸ்லாத்தை ஏற்க மாட்டேன், அதே நேரம் உங்கள் தந்தை உண்மையாளர்” என்று சொன்னார். தன் கணவர் இஸ்லாத்தை ஏற்பார் என்று மிக ஆவலுடன் எதிர்ப்பாத்திருந்த  அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பாசம் நிறைந்த அருமை மூத்த மகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கு மிகுந்த வேதனையளித்தது. இவர்கள் இருவரின் வாழ்வும் சிறிது காலம் மக்காவில் சென்றது. பின்னர் தான் காஃபிர்களோடு திருமண உறவு இல்லை என்ற சட்டம் மதினாவில் இறங்கியது.

மக்காவில் மார்க்க பிரச்சாரம் செய்ய பல இன்னல்கள் துன்பங்களைச் சகித்துக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்கிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் குடும்பத்தோடு மதீனாவுக்கு செல்லத் தயாராகிறார்கள், நபி(ஸல்) அவர்களின் மூத்த மகள் ஜைனப் (ரலி) அவர்கள் “என் அருமைத் தந்தையே நான் என்ன செய்ய, நானும் உங்களோடு வருகிறேனே” என்று மிகுந்த ஏக்கத்துடன் சொந்தங்களுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் தந்தையோடு செல்வதா? கணவனோடு இருப்பதா? என்ற குழப்ப எண்ணத்துடன் தன் தந்தையிடம் வினவினார். அபுல் ஆஸ் நல்லவர் என்பதாலோ என்னவோ நபி(ஸல்) தன் அருமை மகளிடம் “நீ உன் கணவனோடு இருந்துவிடு மகளே” என்று கட்டளையிட்டார்கள். தன் தந்தையின் கட்டளையைப் பொறுமையோடு ஏற்றுக் கொண்டார்கள் ஜைனப்(ரலி). தாயில்லாத ஜைனப்(ரலி) அவர்களுக்கு தாய்க்கு தாயாக பாசம் காட்டி கொண்டிருந்த தந்தையான இறைத்தூதர், உடன் பிறந்த சகோதரிகள், இன்னும் பிற சொந்தங்கள் தன்னை விட்டுவிட்டு ஹிஜ்ரத் செய்கிறார்களே என்ற பரிதவிப்பு, பிரிவின் துயரம் தியாகத் திருமகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் இஸ்லாத்தை ஏற்ற ஒரே கரணத்திற்காகவும், தன் தந்தை நபி(ஸல்) அவர்கள் தனக்கு ஒன்று சொன்னால் அது நிச்சயம் தனக்கு நன்மை தருவதாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் மக்காவில் தன் கணவனோடு வாழ்ந்து வந்தார்கள்.

பின்னர் சில காலம் கழித்து பத்ரு யுத்தம் நடைபெறுகிறது. அதில் காஃபிர்களுடைய அணியில் ஜைனப்(ரலி) அவர்களின் கணவர் அபுல் ஆஸ் உள்ளார். பத்ருப் போரின் வெற்றியின் போது அபுல் ஆஸ் கைது செய்யப்படுகிறார். அபுல் ஆஸ் கைது செய்யப்படுள்ளார் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்கும், ஜைனப்(ரலி) அவர்களுக்கும் வந்தடைகிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலை நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்படுகிறது. தன்னுடைய மகளின் கணவர் தன்னை எதிர்த்து போரிட வந்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று. இது போல் ஜைனப்(ரலி) அவர்களுக்கும் ஓர் தர்ம சங்கடமான நிலை, இறைத்தூதர் தன் தந்தை நபி(ஸல்) அவர்களை எதிர்த்து போரிட தன் கணவர் சென்று கைது செய்யப்பட்டுள்ளார்களே என்ற வேதனை. போரில் கைது செய்யப்பட்டவர்களை நபி(ஸல்) அவர்கள் பரிகாரம் பெற்று விடுதலைச் செய்கிறார்கள் என்ற செய்தி ஜைனப்(ரலி) அவர்களுக்கு வருகிறது. உடனே தன் தாய் அன்னை ஹதீஜா(ரலி) அவர்கள் தனக்காக விட்டுச் சென்ற அழகிய மணிமாலையை கழுத்தில் இருந்து கழட்டி, அபுல் ஆஸ் அவர்கள் சகோதரர் ஒருவரிடம் கொடுத்து, “இதை பரிகாரமாக என் தந்தை நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்து என் கணவரை மீட்டு வாருங்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

அபுல் ஆஸ் அவர்களின் சகோதரர் சகீக் இப்னு ரபிஹ் என்பவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அந்த மணிமாலையைக் கொடுத்து ஜைனப்(ரலி) இதை கொடுத்து அவரின் கணவர் அபுல் ஆஸை விடுதலை செய்ய கோரினார் என்று சொன்னார். அந்த மணிமாலையைப் பார்த்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள், “இது என் அருமை மகள் ஜைனப்(ரலி) அவர்களுக்கு என் மனைவி ஹதீஜா(ரலி) கொடுத்த மாலை” என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார்கள். என்ன தான் மிகப்பெரிய தலைவராக இருந்தாலும், நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் மகளின் கணவரை உடனே விடுதலை செய்யவில்லை. 

தன் தோழர்களிடம் அபுல் ஆஸின் விடுதலை தொடர்பாக கேட்கிறார்கள், “நாம் ஒரு சிலரை பரிகாரம் இல்லாமல் விடுதலை செய்கிறோம், இந்த அபுல் ஆஸை அது போல் விடுதலை செய்யலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி தோழர்கள் சம்மதித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அபுல் ஆஸை வரவழைத்து “இந்த மாலை ஹதீஜா(ரலி) அவர்களுடையது, என் அருமை மகள் ஜைனப்(ரலி) அவர்களிடம் இருக்க வேண்டியது, எனக்கு என் மகளைத் திருப்பி அனுப்புங்கள்” என்று கூறி அபுல் ஆஸை விடுதலை செய்தார்கள்.

தன் தந்தையின் கட்டளை தன் கணவனை விட்டு விட்டு வர வேண்டும் என்று. மிகுந்த மன பாரத்துடன் மக்காவைவிட்டு தன்னுடைய பெண் குழந்தை உமாமா(ரலி) அவர்களைச் சுமந்து கொண்டு மதீனா வந்தடைந்தார்கள். சில காலம் சென்றதும், நபி(ஸல்) அவர்களிடம் ஜைனப்(ரலி) அவர்களைத் திருமணம் செய்ய ஒரு சில நபித் தோழர்கள் விருப்பம் தெரிவித்தனர், ஆனால் ஜைனப்(ரலி) அவர்கள் விரும்பவில்லை. காஃபிராக உள்ள தன் கணவர் இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்பதில் முழு நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஒரு நாள் ஒரு காஃபிர் வியாபாரக் கூட்டம் மதினாவை கடந்து செல்கிறது, அவர்கள் இஸ்லாமிய எதிரிகள் என்பதால், அப்போது பொருட்களுடன் அவர்களைச் சிறைப்பிடிக்கிறார்கள் நபித்தோழர்கள், அவர்கள் அனைவரும் கைது செய்து மதீனா அழைத்து வருகிறார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அவர்களிடமிருந்து தப்பியோடிய அபுல் ஆஸ் அவர்கள் ஜைனப்(ரலி) அவர்களிடம் அடைக்கலம் தேடுகிறார். “மக்காவில் உள்ள நிறைய மக்களுடைய சொத்துக்கள் அதில் உள்ளது, எப்படியாவது என்னுடைய பொருளாதாரத்தை காப்பாற்றித் தந்து விடுங்கள்” என்று அபுல் ஆஸ் அவர்கள் ஜைனப்(ரலி) அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள். 

உடனே தன் பாசம் நிறைந்த தந்தை நபி(ஸல்) அவர்களிடம் “என் கணவரின் சொத்தை நீங்கள் திருப்பி கொடுக்க முடியுமா” என்று தயக்கத்துடன் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ அந்த விவகாரத்தில் முடிவு செய்ய எனக்கு உரிமை இல்லை என்று சொல்லிவிட்டு” நபித் தோழர்களிடம் கேட்கிறார்கள் “ஜைனப்(ரலி) தன் கணவரின் சொத்தைத் திருப்பிக் கேட்கிறார்கள் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் “ ஜைனப்(ரலி) அவர்கள் யாருக்கு பாதுகாப்பு கொடுத்தார்களோ அவர்களுக்கு நாமும் பாதுபாப்புக் கொடுப்போம்” என்று நபித்தோழர்கள் பதில் சொல்ல, அபுல் ஆஸை விடுதலை செய்து சொத்துக்கள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தார்கள் நபி(ஸல்) அவர்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஜைனப்(ரலி) அவர்கள் அபுல் ஆஸை அழைத்து “இன்னும் நீங்கள் இஸ்லாத்திற்கு வர மாட்டீர்களா?” என்று மிகுந்த ஏக்கத்துடன் கேட்டார்கள். “இல்லை” என்ற பதில் மட்டும் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டார் அபுல் ஆஸ். தன் கணவர் இஸ்லாத்தை ஏற்பார் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார் ஜைனப்(ரலி) அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமும் மன வருத்தமும் ஏற்பட்டது.

மக்காவில் உள்ளவர்களின் பொருட்களையும் சொத்துக்களையும் ஒப்படைத்து விட்டு, சில நாட்களுக்கு பிறகு அபுல் ஆஸ் அவர்கள் மதீனா திரும்பி வந்து, “வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை, நபி முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர் என்று சாட்சி கூறுகிறேன்” என்று கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். இதனை வாசிக்கும் நம் கண்கள் கலங்குகிறதே, ஆனால் காஃபிராக இருந்த கணவர் இஸ்லாத்தை ஏற்ற அந்த தருணத்தில், பல வருடங்கள் அந்த சந்தர்பத்திற்காக காத்திருந்த அந்த பொருமைசாலி ஜைனப்(ரலி) அவர்களின் மகிழ்ச்சி நிச்சயம் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருந்திருந்தது. சில மாதங்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்தார்கள், அபுல் ஆஸ்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற ஒரு வருடத்திற்குள் ஜைனப்(ரலி) அவர்கள் இவ்வுலகைவிட்டு பிரிந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால். இறைத்தூதரின் மகளாக இருந்து, இஸ்லாத்தை ஏற்று, பல இன்னல்களை சந்தித்து, தன் தந்தை படும் கஷ்டங்களை சகித்துக் கொண்டு,  இறைத்தூதரான தன் தந்தைக்கு தன் கணவனால் சங்கடங்கள் ஏற்பட்டுள்ள சூழலிலும், தன்னோடு வாழ்ந்து வரும் கணவரும் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமே என்ற ஏக்கத்தோடு, நம்பிக்கையோடு இருந்தார்களே அந்த பொருமைசாலி ஜைனப்(ரலி) அவர்கள். அவர்களிடம் இருந்ததைப் போன்று நம் குடும்பத்தவர், தாய், தந்தை, கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், நண்பர்கள், சொந்தங்கள் ஆகியோர் ‘இணைவைப்பு’, ‘பித்அத்’தான (இஸ்லாத்தில் இல்லாத புதிய) காரியங்களிலிருந்து விடுபட்டு நேர் வழிக்கு வர வேண்டும் என்று என்றைக்காவது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்போமா? அதற்கான கவலை ஏக்கம், நம்மிடம் உள்ளதா?

மார்க்க விசயத்தில் சிறிய தவறிழைக்கும் நம் சொந்தங்களிடம் நம்மில் பலர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற தோனியில், மார்க்க மாமேதைகள் போல் பொருமை இழந்து வார்த்தைகளை விட்டு, பத்வாக்கள் (மார்க்க தீர்ப்பு) கொடுத்து நம் சொந்தங்களிடம் வெருப்புணர்வை அல்லவா தூண்டுகிறோம், நிதானத்தை எப்போது கையாளாக போகிறோம்? சிந்திக்க வேண்டாமா?

தன் கணவர் தொழுகை இன்னும் ஏனைய இபாத்துக்கள் ஏதும் இல்லாதவராக உள்ளாரே என்று கவலைப்படாத மனைவிமார்கள், ஜைனப்(ரலி) அவர்களின் இந்த சம்பவங்களை நிச்சயம் அறிய வேண்டும். தன் கணவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு தேவை பொருளாதாரம், அவர் சம்பாத்தியம் ஹலாலோ ஹராமோ, அது எனக்கு தேவையில்லை, என்றில்லாமல், அப்படிப்பட்டவர்கள் தொழுகை மற்றும் இபாதத்துக்களை பேணுபவராக இருக்க வேண்டும், அவருடைய சம்பாத்தியம் ஹலாலாகமட்டுமே இருக்க வேண்டும் என்று து ஆ செய்யும் மனைவிமார்கள் எத்தனைப் பேர் நம்மிடையா இருக்கின்றனர் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் விளங்கி வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.

M தாஜுதீன்
இது ஒரு மீள்பதிவு

இக்றா ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | January 28, 2016 | , , , , ,

இக்றா !

ஓதுவீராக...!

என்னது ?

இப்படி சொன்னால் என்ன ?

அப்புறம்...?

`அதுதான்`

இக்றா !


நீண்ட நாள் கனவுதான் நம்மவர்களுக்கு உதவிகள் செய்து அரசு வேலைகளில் பணியிடங்களை நிரப்ப வேண்டும் அவர்களுக்கும் சமுதாயத்துக்கும் பலன் அளிக்கும் விதமாக சேவை செய்ய வைக்க வேண்டும் என்பதே...

அதற்கான சுழியொன்று போட்டதோ ஒரு சகோதரி அந்த சுழியைச் சுற்றி வட்டமொன்று போட்டுக் கொண்டோம் அதனுள் திட்டமொன்றையும் உள்ளடக்கினோம், அங்கே சட்ட திட்டம் என மூச்சு முட்ட வைக்காமல், இலகுவான செயல் திட்டம் தாயாரித்தோம்.

பெயர் !?

இஸ்லாமிய பெயராக இருக்க வேண்டும், இலகுவாக இருக்க வேண்டும்...

மற்றுமொரு சகோதரர் ஒருவரும் இணைந்தார் அன்னாந்து பார்த்தால் அவருக்கு தெரிவதெல்லாம் வளர்வதும் தேய்வதும் ஆராய்வதுமே அவரின் ஆய்வு.

என்ன செய்யலாம் ?

இக்றா !

ஓதுவீராக...!

என்னது ?

இப்படி சொன்னால் என்ன ?

அப்புறம்...?

`அதுதான்`

இக்றா !

என்ன செய்யப் போவுது ?

`அரசு உயர் மற்றும் மேலான்மை பணிகளுக்கான பயிற்சிக் களம்`

ஓ... இதுதான் அதுவா !

அல்ஹம்துலில்லாஹ்...

வெற்றிப் படிகள் கட்டியெழுப்ப மாணவமணிகளின் சிந்தனை குவியத் துவங்கி விட்டது...

இனி தொடரும், பல ஊர்களுக்கும் படரும் அது அவரவர்களின் சக்திக்குட்பட்ட பங்களிப்புடன்...

இன்ஷா அல்லாஹ் !

இக்றா
`அரசு உயர் மற்றும் மேலான்மை பணிகளுக்கான பயிற்சிக் களம்`

பகிர்வு பரிந்துரை : அபுஇப்ராஹிம்

சோழ வளநாடு சோறுடைத்து.. [மீள்பதிவுதான் இருந்தாலும் மறுசோறுல...] 1

அதிரைநிருபர் பதிப்பகம் | January 27, 2016 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

"சோறு கண்ட இடமே சொர்க்கம்" என்பது போல் சிலருடைய வாழ்க்கை கழிந்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் செயல்களை உரையாடல் முறையில் சிறிய ஆக்கத்தினை பதிவு செய்ய விரும்பியவனாக.



முதல் நபர்: டே மாப்புளே! இன்னைக்கி ரெண்டுஎடத்துல நடுத்தெருவுலையும்,சி.எம்.பி லைன்லயும் கல்யாணம் இருக்குதுடா வெல்லர்மே வந்துரா கல்யாணத்துக்கு போவலாம்.

இரண்டாம் நபர்: நா வரலடா மாப்புளே எனக்கு அழைப்பு இல்லடா.

முதல் நபர்: டே ரெண்டு கல்யாணக்கார மாப்புளயும் நம்ம எல்லோரையும் கூப்புட்டுட்டு போனான்கடா.

இரண்டாம் நபர்: அப்புடியா சரி நா வர்ரேன் என்னைக்குடா வலிமா ?

முதல் நபர்: ஆமாடா இன்னைக்கு வலிமாவுக்கும்,காலை சாப்பாட்டுக்கும் கூப்புட்டாங்கட.

இரண்டாம் நபர்: காலை சாப்பாட்டுக்கு எங்கடா போவலாம்?

முதல் நபர்: எங்க போனாலும் ஒரே சாப்பாடுதாண்டா வலிமாவுக்குதான் அஞ்சிகறி சோத்துக்கு போவனும்டா.

இரண்டாம் நபர்: எந்த தெருவுலடா அஞ்சிகறி சோறு?

முதல் நபர்: சி.எம்.பி லைன்ல பிரியாணியும், நடுத்தெருவுல அஞ்சிகறி சோறுண்டு நினைக்கிறேண்டா. நம்மோ நடுத்தெருவுக்கே போயிடலாம்.

இரண்டாம் நபர்: டே இவனே 12 அரை மணி ஆச்சுடா.தொழுகைக்கு தக்வா பள்ளிக்கு போய்டலாமா?

முதல் நபர்: வனாண்டா மாப்புளே அங்கே கூட்டம் அதிகமா இருக்கும்டா நம்ம முஹல்லாவிலே தொழுதுட்டு பசங்களா வருவாங்க சேர்ந்து பைக்கிலே போய்லாண்டா.

இரண்டாம் நபர்: சரி வா இகாமத்து சொல்லப்போறாங்க தொழுவ போவலாம்.

முதல் நபர்: உவ்வளவு நேரமாச்சுடா தொழுவ முடிய நம்ம பசங்களையும் காணமடா சரி பரவா இல்லை வா வேகமாக நடக்கலாம்.

விருந்து நடக்கும் வீடு நெருங்கியதும்

இரண்டாம் நபர்: அந்தோல ரெண்டுவேறு வராங்க வா ஒரு சஹனுக்கு உட்காந்திடலாம்.

முதல் நபர்: டே சும்மாயிரா கெளடு கெட்டதுலாம் வானாண்டா.நம்ம பசங்க வராங்களாண்டு பார்ரா? 'அ அந்தோ வர்ராங்கடா'.

இரண்டாம் நபர்: டே மச்சா எல்லோரும் எங்கடா போனிய? உங்களையலாம் அங்கே எதிர்பாத்துக்கிட்டு இருந்தோம்டா.

நண்பர்கள்: ஆமாடா மாப்புளே நாங்க எல்லோரும் மெய்ன்ட் ரோட்லே போய் சர்பத்து குடிச்சிட்டு அப்புடியே தக்வா பள்ளியிலே தொழுதுட்டு வர்றோம்.

முதல் நபர்: சரி வாங்கடா உள்ளே போய் காத்தாடிலே உக்காரலாம்.

சஹன் சோறு பரிமாற்றம் நடைபெறும்போது

முதல் நபர்: காக்கா இங்கே தாங்க என்று அவசரமாய்..சோத்தை சாப்பிட்டு முடித்ததும்

இரண்டாம் நபர்: டே மாப்புளே இன்னொரு சஹன் வாங்கலாமா?

நண்பர்கள்: ஆமாடா அந்தோல போற பையன்கிட்ட கேளுடா.

முதல் நபர்: தம்பி தம்பி இன்னொரு சஹன் சாப்பாடு கொண்டுவாமா.

தம்பி: மறு சோரா காக்கா?

முதல் நபர்: இல்லம்மா மறு சஹமா தம்பி.

தம்பி: சாரி காக்கா கூட்டம் நெறையா இருக்குரதுநாளே சாப்பாடு பத்தல
.
நண்பர்கள்: டே மச்சா இவன்கிட்ட கேக்காதே அந்தோ வர்ரா பாரு நம்ம ஆளு அவகிட்ட கேப்போம்டா. அஸ்ஸலாமு அலைக்கும் என்ன தலைவரே கவனிப்பே இல்லை?

தலைவர்: என்ன வேணும் சொல்லுங்க தலைவரே ?

நண்பர்கள்: நல்ல கறியா பார்த்து ஒரு சஹன் கொண்டு வாங்க தலைவரே!

தலைவர்: இந்தாங்க தலைவரே நல்ல சாப்புடுங்க வேற எதுவும் வேலுமா தலைவரே?

நண்பர்கள்: மொதல்ல இத சாபுட்டுகிறோம் தலைவரே.

முதல் நபர்: டே மச்சா சோத்துக்கு கொஞ்சம் உப்பும் கறியும் கொஞ்சம் வேவலடா யாருடா சமைச்சது?

இரண்டாம் நபர்: கண்டிப்பா நெய்னவா இருக்காதுடா.

முதல் நபர்: சரி அதவுடு ராவைக்கி அந்த கல்யாணக்கார மாப்புள சாப்புட கூப்புட்டான்.போவலாம் மறந்துடாம வந்துரு.

விருந்தோம்பல் மானுட இயல்பு அதனை அழகுற நடத்திக் காட்டுவதும் அங்கே நளினமாக நடந்து கொள்வது அன்பை வெளிகாட்டும் நட்பை கூட்டிடும் !

ஊரில் கலரி சாப்பாடு அல்லது கல்யாண அலம்பல் என்று வந்துவிட்டால் இளைய பட்டாளத்தின் செயல்கள் அச்சூழலில் அவர்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிக்கும்படி என்றிருந்தாலும் மற்றவர்களின் பார்வையில் அங்கே முகம் சுளிக்கவைக்கும் என்பதை மறந்து விடுகின்றனர்..

சிந்திக்கத்தான் வேண்டும் !

லெ.மு.செ.அபுபக்கர்

கூட்டணிக் கொள்கைகள்! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | January 26, 2016 | , ,


இதோ
கொள்கைவாதிகள்
கடைவிரித்தாயிற்று
வசதி படைத்தோர்
வளைத்து
வாங்கி
கூட்டணி போட்டுக்கொள்ளலாம்

பல அடுக்குப் பேச்சுவார்த்தைகளில்
கொள்ளைச் சதவிகிதங்கள்
தொகுதி பங்கீடுகளைத் தீர்மாணிக்க
கொள்கை சமரசம்
எட்டப்பட்டுவிடும்

தோள் கொடுக்கும் -கட்சித்
தொண்டனையும்
தோளில் இடும் -கரைத்
துண்டினையும்
லாவகமாகக்
கையாண்டு கொள்ளலாம்

கேடிகள் கைகளில்
கோடிகள்
முதலீடு செய்ய
முதலைகள் தயார்
இனி
கூட்டணி போட்டு
தொழில் செய்வர்
தேர்தல் வர்த்தகத்தில்

வாடிக்கையாளர்களான
வாக்காளப் பெருமக்களைச்
சில்லறை கொடுத்துச்
சரி செய்வர்
வென்றபின் வதைக்க
வரி செய்வர்

மதராஸ் வெள்ளத்தை
மறக்கடிக்க
மக்கள் வெள்ளத்தின் முன்
பொதுக்கூட்டங்களில்
பித்தலாட்டம் காட்டுவர்
கைதட்டிக் களித்திருக்கும்
கையாலாகாத கூட்டம்

அநாகரிக ஆபாசப் பேச்சுகளை
எச்சில் ஒழுக ரசித்திருக்கும்
விசிலடிச்சான்கள்
தத்தம் விடியல்களுக்குத்
திரையிடும்
அரசியல்வியாதிகளிடம்
சொக்கிக்கிடப்பர்

அரிதாரம் ஒப்பேற்றிய
அழகுக்கும்
அறிவாளி எழுதித்தந்த
வசனத்திற்கும்
சுயமரியாதையை இழந்துவிட்ட
ரசிகர் கூட்டம்
நிசம் என்றெண்ணி
நிழலிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும்

கடந்த தேர்தலில்
கடுமையாய் விமரிசித்த
எதிர்க் கட்சிக்காரனை
இம்முறை
வாழ்த்தி வரவேற்க
தயாராவதே கூட்டணி தர்மம்

ஆட்சி அமைத்தபின்
குட்டிக் கட்சிகளை
கழட்டிவிடத் தயாராக
தாய்க் கட்சிகள்
வியூகம் அமைப்பதே
அரசியல் சாணக்கியம்

என்ன "பீப்" சனநாயகமோ?
த்தூ...!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

இனிப்புக்கு ரொம்பதான் கொழுப்பு ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | January 25, 2016 | , , ,


நாம் உலகில் வாழும் காலங்களில் ஆரோக்கியத்துடன் இருந்து அதே ஆரோக்கியத்துடன் எவருக்கும் எவ்வித தொந்தரவும் தொல்லைகளும் இல்லாமல் இறுதியில் இறைவனடி சேர ஒவ்வொருவருவரும் தம் வாழ்நாட்களில் ஐங்கால இறைவணக்கத்துடன் அணுதினமும் குறைந்தது அரை மணி நேரமாவது கண்டிப்பாக உடலுக்கும், வயதிற்கும் ஏற்ற உடற்பயிற்சி செய்ய கடமைப்பட்டுள்ளோம். இதற்கு நகரத்தில் தான் வசிக்க வேண்டுமென்றோ அல்லது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும் உடற்பயிற்சி நிலையங்களுக்கு காசு செலவழித்து செல்ல வேண்டுமென்ற அவசியமோ இல்லை. ஊரில் இருந்து கொண்டே, வீட்டில் இருந்து கொண்டே, அறையில் இருந்து கொண்டே எவரும் அறியாத வகையிலும் செய்யலாம். இது ஒன்றும் மார்க்கத்திற்கு புறம்பான செயல் அல்ல. (பிறகென்ன ஒரே யோசனெ? ஆரம்பிச்சிட வேண்டியது தானே?)

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உடற்பயிற்சி செய்வதால் வரும் இன்ன பிற நன்மைகள் பற்றியும் நம்மூர் பாஷையில் கொஞ்சம் இங்கு அலசுவோம் வாங்கஹாக்கா...

1. கை கால் கடுப்பு, இடுப்பு புடிப்பு கொறையும். (இதில் திட்டுமுட்டு செரவடி, கொடப்பெரட்டு, ஓங்காரம், ஒரு மாரியா வர்ரது, மசக்கம், பித்தம் எல்லாம் அடங்கும்)

2. கழுத்து சுலுக்கு வராது.(மொம்மானிவாக்கா கடையிலெ வீசக்கார தைலம் வியாபாரம் கொஞ்சம் கொறைய வாய்ப்புண்டு)

3. தலவாணிக்கு ஒறை போட்ட மாதிரி தொந்தி உழுவாது. (நெறையா பேரு ஊர்லெ நிண்டுக்கிட்டே தன் சொந்த பெரு விரலெ சின்னப்புள்ளையிலெ பாத்தது......)

4. வாய்வுக்கோளாறு கொறையும். (அங்கிட்டு, இங்கிட்டு காத்து கண்ணாப்பின்னாண்டு பிரியாது. அக்கம், பக்கம் திரும்பி பாத்துக்கிட்டு யாருமில்லாத நேரம் டீசண்ட்டா பிரியும்)

5. இனிப்பு நீரு, ரெத்தக்கொதிப்பு வராமல் தள்ளிப்போகும். அப்படியே வந்திருந்தாலும் கட்டுப்பாட்டோடு ஈக்கிம். (பகல்லெ களரிக்கார ஊட்டுக்கு போயிட்டு சாங்காலம் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி ஈக்காது)

6. ஒடம்புலெ தேவையில்லாமல் தொங்கும் ஊளைச்சதை வத்திப்போவும். (அதனாலெ சட்டெ, பேண்டு அளவு எப்பொழுதும் மாறாமல் ஒரேக்கணக்கா ஈக்கிம்)

7. தோலு சுருக்கம் சுருக்கன வராது. (அதுக்காக இன்னொரு கலியாணத்துக்கெல்லாம் ஆசப்படக்கூடாது)

8. ராத்திரி அசந்த நல்ல தூக்கம் வரும். (கள்ளன்வொலுக்கு வசதியாப்போயிடாமெ பாத்துக்கிட வேண்டியது ஆமாம்..)

9. சேர்மாவாடிக்கு போறதுக்கு கூட செத்த பைக்கு கடன்வாங்க அவசியம் ஈக்காது. (கடன் வாங்காம சொந்த கால்லேயே போயிட்டு வந்துர்லாம்)

10. மனசு சீராக பதஸ்ட்டமும், படபடப்பும் இல்லாமல் சாந்தமாக ஈக்கிம். (அதுக்குத்தானே ஒலகத்துலெ இவ்ளோவ் செரமப்படனுமா ஈக்கிது?)

11. ஒடம்புக்காக ஒன்னுமே செய்யாததாலெ வரும் ஏகப்பட்ட ப்ரச்செனைகள் கொறஞ்சி பட்டுக்கோட்டைக்கும், தஞ்சாவூருக்கும் ஆஸ்பத்திரி, ஊடுண்டு அலையிறது கொறஞ்சி போகும். நேரமும், காசும் மிஞ்சும். (அந்த காசெ சேத்தாலே காலப்போக்குலெ மனக்கட்டு வாங்கி போடலாம் எங்கையாச்சும்..)

12. ஒரு மூக்கு ஓட்டையிலெ மூச்செ புடிச்சி கொஞ்சம் நொடி உள்ளக்க வச்சி பொறகு இன்னொரு மூக்கு ஓட்டையிலெ மூச்செ உட்டு ஒவ்வொரு நாளும் இப்புடி பழகுனா நெஞ்சுக்குள்ள அடிக்கடி கறி, கோழி, குருவி சாப்புட்றதுனாலெ கொழுப்பு அடைச்சி மூச்சி பிரச்சினை, ஹார்ட்டு குழாயி அடப்பு பிரச்சினை இதெல்லாம் வராம தடுக்கலாம். (ஊட்டு சர்சராக்குழியிலெ கானு அடச்சி போயிட்டாலெ அதெ சுத்தம் பண்ண வ்ளோவ் காசு கேக்குறானுவோ? ஹார்ட்டுக்குள்ள அடப்பு வந்திரிச்சிண்டா ஊட்டு பத்திரத்தெயிலெ எழுதிக்கேப்பானுவோ டாக்டருமாருவொ?) 

13. உடற்பயிற்சி செய்யிறதுனாலெ ஒடம்புலெ உள்ள கெட்ட நீரு/கிருமிகள் வேர்வை மூலமா வெளியாயிடும். ஒடம்பும், மனசும் ஃப்ரஸ்ஸா ஈக்கிம். ரத்த ஓட்டம் சீராக ஈக்கிம்.

14. மணிக்கணுக்குலெ காலைக்கடனுக்கு காத்துக்கெடக்க வேண்டிய அவசியம் ஈக்காது. அப்புறம் ஒடம்பு ரொம்ப ராஹத்தா ஈக்கிம்.

15. உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் பொழுது ரெண்டு, மூணு நாளெக்கி ஒடம்பு பூராவும் வலிக்கும். காச்சல் கூட வரும். பயந்துட கூடாது. காச்சல் உட்டதும் தொடரனும். அப்புறம் என்னா? சிக்ஸ் பேக்கு, எயிட் பேக்குண்டு வசதிக்கு தகுந்தமாரி வச்சிக்கிட வேண்டியது தானே? இதுக்கு அரசாங்க வரியா போடப்போவுது?

நம்ம ரத்தத்துலெ இனிப்பையும், கொழுப்பையும் கொறச்சிட்டா அல்லது கட்டுப்பாட்டுடன் வச்சிக்கிட்டாலே போதுங்க. ஏகப்பட்ட நோய்நொடிகள் நம்மை தாக்காமல் தடுக்கலாம். பெருவாரியான நோய்நொடிகளை நம்ம ஒடம்புக்குள்ள பந்தல் போட்டு வாசல்லெ பன்னீரு தெளிச்சி, சந்தனத்தெ ஒரு கோப்பையிலெ வச்சிக்கிட்டு வரவேற்கிறதே இந்த ரெண்டும் தாங்க (இனிப்பும், கொழுப்பும்). (சகன்லெயும் அது ரெண்டும் தானே நாட்டாமை பண்ணுது?)

எப்புடி பலமான இறையச்சம் (தக்வா) உள்ளவர்களை பார்த்து சைத்தான் அவர்களை வழிகெடுக்க நெருங்க முடியாமல் எரிச்சலடைந்து சோர்ந்துபோகிறானோ (சோந்துபோவான்) அது மாதிரி தாங்க நம்ம ஒடம்பெ ஆரோக்கியமா எப்போழும் வச்சிக்கிட்டா நோய்நொடிகள் எளிதில் நம்மை தாக்க முடியாமல் எரிச்சலாகி மாச்சப்பட்டு எங்கையாவது ஓடிப்போயிடும். அப்புறமென்ன நோய்நொடிகளும் அதை ஊக்குவிப்பவர்களும் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையம் போல் ஆரோக்கியமான மனிதர்களை எதிர்த்து போராட வேண்டியது தான். அதுக்கு ஒத்து ஊதுறதுக்கும் ஆளுவொ நாட்லெ ஈக்கத்தான் செய்வாங்க. அதெ பத்தி கவலைப்படாதியெ. நமக்கு நம்ம ஆரோக்கியம் தான் முக்கியம்ங்க.......

இன்னொரு விசயங்க, எங்க அப்பா காலத்துலெ எல்லாம் எல்லாப்பள்ளியாசல்லையும் ஒரு நாக்காலியெ கூட பாத்தது இல்லெ. எம்பது, தொன்னூறு வயசானவங்க கூட நின்டுக்கிட்டு இல்லாட்டி தரையிலெ உக்காந்துகிட்டு தான் தொழுவுவாங்க. இப்பொ என்னாண்டாக்கா ஒவ்வொரு பள்ளியாசல்லையும் பத்து நாக்காலிக்கு மேலெ வாங்கி போட்டு வச்சிக்கிறாஹ. சின்ன, சின்ன வயசுகாரவங்க கூட எதாவது ஒடம்பு சரியில்லாம நாக்காலியிலெ உக்காந்துக்கிட்டு தொழுவுறாங்க...காரணம் என்னாண்டாக்கா இப்பொ உள்ள மக்கள்ட்டெ ஆரோக்கியம் கொறஞ்சி போச்சிங்க. 

கொஞ்ச நாள்ச்செண்டு திடீர்ண்டு மனசுலெ வந்ததெ எழுதிப்புட்டெங்க. படிச்சிட்டு உங்க கருத்தெ சொல்லுங்க....

மு.செ.மு. நெய்னா முஹம்மது

காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா..!?!? 4

அதிரைநிருபர் பதிப்பகம் | January 24, 2016 | ,

காசைக் கடவுளுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு காசு பணம் மிக அத்தியாவசியமானதுடன் இன்றைய காலகட்டத்தில் இவ்வுலகில் காசிருந்தால் எதையும் வாங்கிவிடலாம் என்ற எண்ணமும் மேலோங்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் மானத்துடனும் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வறுமை இல்லாமலும் வாழ்வதற்கு காசு பணம் மிக மிக முக்கியமானதாகும். மறுப்பதற்கில்லை. அதே சமயம் நாகரீகமும் 

நவீனங்களும் தலை தூக்கிய பின்பு இன்றைய சூழ்நிலையில் பணத்தேவைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் பன்மடங்கு கூடிவிட்டன. நாணயத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் நலிந்து கொண்டிருப்பதால் நம்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பெருந்தொகை தேவைப்படுகிறது என்பது என்னவோ உண்மைதான் அதுபோல இந்த சூழலில் காசு பணம் இருந்தால் எதையும் வாங்கி விடலாம் என்கிற எண்ணம் ஒவ்வொருவரிடத்திலும் மேலோங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மையே.! 

காசிருந்தால் எதையும் வாங்கிவிடாலாம் என்று சொல்வதற்கு பொருத்தமாக இன்றைய காலகட்டத்தில் நடக்கும் பல சம்பவங்களை உதாரணங்களாகச் சொல்லலாம்.அதில் முதலாவதாக சொல்லப்போனால் ஒருமனிதனின் குணம், குடும்பம்,கோத்தரம், பழக்கவழக்கம்,நடவடிக்கை,செயல், சமுதாயத்தார் மத்தியில் உள்ள பெயர் புகழ் இதை பார்த்து மதித்த காலம்போய் இப்போதைய காலகட்டத்தில் பணக்கார்களையும், பெரும் செல்வந்தர்களையும் மதிக்கும் காலமாக பணக்காரர்களுடன் பழக்கவழக்கம் வைத்துக் கொள்வதையும் அவர்களை தனது நண்பர்களாக சொல்லிக் கொள்வதையும் கௌரவமாகவும் பெருமையாகவும் நினைக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதானால் மனிதர்களை மதிப்பது என்பது அவனது காசுபணத்தை வசதிவாய்ப்பை பொருளாதாரத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

அடுத்து இதில் பெரும்கொடுமையும் வேதனைப்படக்கூடிய விஷயம் என்னவென்று சொன்னால் பணக்காரர்கள் செய்யும் பெரிய தப்புக்கள்,குற்றங்கள் கூட சிலசமயத்தில் நியாயமாக்கப்பட்டு அவர்களுக்கு சாதகமாக பேசப்படுகிறது. அதே தவறை ஒரு சாதாரண நடுத்தர மனிதன் செய்தால் அதை பெரும்குற்றமாக கருதப்படுகிறது.அப்படியானால் அந்த சூழ்நிலையில் காசுபணம் உள்ளவர்களை பொருத்தமட்டில் காசுபணம் இருப்பதால் செல்வந்தர்களாக இருப்பதால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்பதாகத்தானே அர்த்தமாகிறது.? 

அடுத்து பார்ப்போமேயானால் காசுபணம் கைநிறைய வந்தவுடன் சிலர் தனது கடமைகளை செய்ய மறந்துவிடுகிறார்கள். பெற்றோர்களை உடன்பிறந்தோர்களை உறவினர்களை சிறுவயதில் வறுமையில் இருந்தபோது பழகிய நண்பர்களை இப்படி நெருங்கிய கடமைப்பட்டவர்களைக் கூட மறந்து விடுகிறார்கள். எத்தனைதான் காசிருந்தாலும் உண்மையான அன்பு பாசத்தையும் இரத்தபந்த உறவுகளையும் உண்மையான உயிர் நட்புக்களையும் எத்தனைகோடியை அள்ளிக் கொடுத்தாலும் வாங்கிட முடியுமா.? ஆனால் அதை காசைவிட்டு எறிந்தால் எல்லாம் வாங்கிட முடியும் என நினைக்கிறார்கள்.இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாற்றுடன் பல உதாரணங்களை சொல்லிக் கொண்டு போகலாம்.

எனவே இப்படியான குற்றச்சாற்றுகளுக்கு நாம் ஆளாகிவிடாமல் இறைவன் நமக்கு காசுபணத்தை தாராளமாக தரும்போது நமக்குள் தன்னடக்கமும் தாராள குணமும் பிறரையும் சமமாக மதிக்கும் பரந்த மனப்பான்மையும், நல்லெண்ணமும் வளரவேண்டும். ஒன்றைமட்டும் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலகில் நாம்மட்டுமல்ல இந்த காசுபணமும் யாருக்கும் நிலையானது அல்ல. அது எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு ரீதியில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம்மைவிட்டு போய்விடலாம். ஆகையபடியால் அது நம்மிடத்தில் இருக்கும்போது இந்தக் காசுபணத்தை எப்படி நல்வழியில் நாம் செலவு செய்யப்போகிறோம் என்கிற பயம்தான் மனதில் வரவேண்டுமேயன்றி திமிர்த்தனம் இம்மியளவும் வந்துவிடக் கூடாது. காசுபணம் இருக்கிறது என்கிற மமதையில் நாம் செய்யும் தவறுகளால் அந்தக் காசுபணம் ஒருநொடியில் காணாமல்போய் விட வாய்ப்பு உள்ளது. எனவே காசுபணம் எவ்வளவுக்கு அவசியமானதாக இருந்தாலும் அதை கடவுளுக்கு நிகராக மதித்து விடக்கூடாது. அதனைக் கொண்டு எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்கிற எண்ணம் துளிகூட மனதில் வளர்ந்து விடக் கூடாது. 

ஆகவே நாம் எத்தனை கோடிக்குச் சொந்தக்காரர்களாக இருந்தாலும் இந்த காசுபணமும் பகட்டான வாழ்க்கையும் நிலையானது அல்ல என்பதை உணர்ந்திட வேண்டும். இதைவிட நிலையானவை நாம் செய்யும் நற்காரியங்களிலும் பிறரை மதித்து நடப்பதிலும் தானதர்மம் செய்வதிலும் பிற நல்ல செயல்பாட்டிலும் தான் இருக்கிறது என்கிற நம்பிக்கையுடன் இறைவனின் பயமும் நம்பிக்கையும் வந்து விட்டால் காசுபணத்தைக் கொண்டு இவ்வுலகில் நாம் நினைத்தது எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது என்கிற எண்ணம் மனதில் துளிர்விட்டு வளர்ந்து தன்னம்பிக்கையுடன் தலைக்கனம் இல்லாத நேர்மையான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

அதிரை மெய்சா

அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா? – 12 20

அதிரைநிருபர் பதிப்பகம் | January 23, 2016 | ,


இந்தியாவில் இஸ்லாத்தை  எதிர்ப்போர்கள் எடுத்துவைக்கும் முதல்விவாதம் என்னவென்றால்  இஸ்லாம் ஒரு அந்நிய மதம் – முஸ்லிம்கள் அராபிய அடிமைகள் – இஸ்லாம் கலாச்சாரத்தால் , மொழியால் வேறுபட்டது என்பதாகும். 

அத்தகைய தவறான புரிந்துணர்வை நீக்கும் விதத்தில் பதில் அளிக்கத் தொடங்கலாம்.  

இந்தக் கேள்விகளுக்கு ஒரு மேலோட்டமான,   பதில் சொல்வது  என்றால்  இவைகளைத்தான்  சொல்லத் தோன்றும்.   

இந்தியாவில் பிறந்த ஒருவன் அந்நிய மண்ணுக்கு வேலைதேடிப் போவதும் அங்கிருந்து பொருளீட்டி இந்தியாவுக்கு அனுப்புவதும், 

வெளிநாடுகளில் இருந்து புதிய புதிய பொருட்களையும் சாதனங்களையும்  கொண்டு வந்து பயன்படுத்துவதும் , 

காலையில் குடிக்கும் காபி தொடங்கி  பகட்டாக வாழ  காற்றாடி, குளிர்சாதனம், தொலைக் காட்சிப் பெட்டி, மைக்ரோ ஓவன் , வாஷிங்மிஷின் , அலைபேசி, தொலைபேசி  இரவில் இழுத்துப்  போர்த்திக் கொண்டு உறங்கும் கம்பளிப் போர்வை வரை    பயன்படுத்துவதும்,       

வெளிநாடுகளில் கடைப்பிடித்த அல்லது கற்றுக் கொண்ட பழக்க வழக்கங்களை அன்றாட வாழ்வில் அமுல் படுத்துவதும் ,

தொழில் வளர்ச்சிக்காக வெளிநாடுகளில் தொழில்நுட்பங்கள்  நிறைந்த   இயந்திரங்களை இறக்குமதி செய்வதும்  , 

தீராத வியாதிகளைத் தீர்க்க உயர்ந்தவகை மருத்துவ வசதிகளை வெளிநாடுகளுக்கு சென்றேனும்        பெற்றுக்கொள்வதும் ,

சித்தா , ஆயுர்வேத மருந்துகளை மறந்துவிட்டு அலோபதி, ஹோமியோபதி என்கிற மருத்துவமுறைகளைப் பின்பற்றுவதும், 

காய்கறிகளின் மரபணுக்களை மாற்றி இயற்கைக்கு மாறுபாடான விதைகளையும் இறக்குமதி செய்யப்பட்ட உரங்களையும்  பயன்படுத்துவதும் ,  

பிஜ்ஜா , நூடுல்ஸ், பிரைடு சிக்கன் , பாஸ்ட் புட் போன்ற  உணவுப் பழக்கங்களை அந்நியனிடமிருந்து சுவீகாரம் எடுத்துக் கொள்வதும் , 

கொடுமைப்படுத்தும் கோடையிலும் கோட்டும் சூட்டும் மாட்டி கழுத்தில் டை கட்டி பீடுநடைபோடும் போதும், ஆங்கிலக் கல்வியை முன்னிலைப் படுத்தி குழந்தைகளை கான்வெண்டுகளில் சேர்ப்பதும்,  

அரசியல் கட்சிகள் கம்யூனிசம் என்றும் சோசலிஷம் என்றும் முதலாளித்துவம் என்றும் அந்நிய நாட்டில் வடிவமைக்கப்பட்ட  பொருளாதாரக் கொள்கைகளை வைத்துக் கொள்வதும் ,

அனைத்துக்கும் மேலாக,  அன்னியன் வகுத்த  அடிப்படையிலேயே இந்தியநாட்டின்  பாராளுமன்ற, சட்ட, ஜனநாயக விதிமுறைகளை பயன்படுத்துவதும் , 

அனுமதிக்கத்தக்கவை என்றால், மக்களின் மனம் விரும்பும் ஒரு மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வது மட்டும் எப்படித் தவறாகும்? 

மேலே குறிப்பிடப்பட்டவை உடனே வெளிப்படுத்தும் உணர்வுகளே. ஆனால் விரிவான பதில்களும் நிறைய  இருக்கின்றன.   

இந்தியா,  ஒரு பன்முக சமுதாயங்களின் சங்கமம். பலவகைப்பட்ட மத, இன, வழிபாட்டுமுறைகள் , மொழி, பண்பாடு, கலாச்சாரம், நிறம்,உடலமைப்புகொண்ட மக்கள் என பலவேறுபாடுகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே கருதும் அரசியலமைப்பு சட்டத்தைக் கொண்ட ஒரு சன்மார்க்கநாடு. 

அஸ்ஸாமில் பிறந்தவனும் ஆண்டிப்பட்டியில் பிறந்தவனும் சட்டத்தின் முன் சமம் ஆனவன். இந்த நாட்டில் பிறந்த எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்கிற உரிமை பெற்றவர்கள். அவரவர்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற அனைவருக்கும் சமஉரிமையை அரசியல் சட்டம் வழங்கி இருக்கிறது. இதுவே இந்தியாவின் சிறப்பு. 

இந்த நாட்டின் பெரும்பான்மை சகோதரர்கள் பின்பற்றும் மதமாக இந்து மதம் இருக்கிறது. இந்தப் பெரும்பான்மை பற்றி பல கேள்விகள் பல     திசைகளிலிருந்தும் எழுப்பப்பட்டாலும் நாம் அதைப் பற்றி  பேசவேண்டிய தளமும் களமும்  இது அல்ல என்று கருதுகிறோம். 

அதே நேரம் நாம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம். நமது முதல் கேள்வி – 

பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் மதமான இந்து மதம் தவிர இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதங்கள்தான் அந்நிய மதங்கள் என்று தவறான புரிந்துணர்வின் அடிப்படையில்  பட்டம் சூட்டப்பட்டிருக்கின்றன. இந்த நாட்டில் பிறந்த மக்களில் பெரும்பகுதியினர் இந்து மதத்தைப் பின்பற்றுவதால் அவர்கள் இந்துக்கள் அதனால் இந்தியர்கள்  என்றால் மற்ற மதங்களைப் பின்பற்றுவோர் மட்டும் எங்கே பிறந்தார்கள்? நாம் அறிந்தவரை  அவர்கள் அண்டார்டிகாவிலோ ஆப்ரிகாவிலோ பிறக்கவில்லையே. அவர்களும் இதே மண்ணில் பிறந்தவர்கள்தானே. பிறந்த நாட்டின் குடியுரிமை, பிறந்தவர்கள் அனைவருக்கும் பொதுச்சொத்துதானே! 

அடுத்த கேள்வி இந்தியாஎன்கிற  பூகோள அமைப்புடைய நாட்டுக்கு எந்த மதம் சொந்த மதம்? இந்தியா என்கிற பெயருடன் ஒரு  நாடு உருவானது எப்போது? இந்தியா என்ற பெயர் இந்த நாட்டுக்கு சூட்டப்பட்டது எப்போது? இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டபோதே இஸ்லாமும் கிருத்தவமும் இந்தியாவில் பல மக்களால் பின்பற்றப்பட்டே வந்தனவே! . அதனால்தானே இந்தியா என்று பெயர்சூட்டப்பட்ட  பூகோளப் பகுதி   மதவாரியாக இரண்டாகப் பிரிக்கப்பட்டது? 

மூன்றாவது முக்கியமான கேள்வி வரலாற்று ரீதியாக ஒட்டுமொத்த இந்தியாவுக்கு என்று தனியாக ஒரு மதம் இருந்ததா? அப்படியானால்  இந்தியாவுக்கு  சொந்தமாக இருந்த மதத்தின் பெயர் என்ன? அந்த மதத்துக்கு இடையூறாக வந்த அந்நிய மதங்கள் யாவை? பெரும்பான்மை மக்கள் பின்பற்றுவதாக இன்று கற்பிக்கப்படும் இந்துமதம்தான்  இந்தியாவின் மதமா என்ற கேள்விக்கு பதிலைத் தேடினால்தான் இஸ்லாம் ஒரு அந்நிய மதம் என்ற தவறான புரிந்துணர்வை நீக்க முயல முடியும். 

உண்மையான  வரலாற்றை ஆதாரங்களோடு  ஆராய்ந்து பார்ப்போமானால், இன்று முஸ்லிம்களை  அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் எங்கிருந்தோ இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். 

வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) ‘தஸ்யு’க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் பாரசீகத்தில் இருந்து படைஎடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரியர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடைகளுக்கு  மேய்ச்சல் காட்டும்  இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கினார்கள். இதற்காகவே  மனுநீதி எனும் வர்க்கபேத சாஸ்திரத்தையும் உண்டாக்கினார்கள். 

நடுநிலையான வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளவைகளை இங்கு விலாவாரியாக விவரிக்கவேண்டியதில்லை. அவைகள் திறந்த புத்தகங்களாக விரிந்து கிடக்கின்றன. ஆயிரம் எடுத்துக்காட்டுகளில் இரண்டே இரண்டை மட்டும்  இங்கு எடுத்துச்  சொல்லலாம். ((K.K.Hirst) K.K. ஹிர்ஸ்ட்  என்ற புகழ்பெற்ற  ஆய்வாளர் நதிக்கரைகளில் தழைத்த உலக நாகரிகங்களை ஒவ்வொன்றாக  ஆய்ந்த ஆய்வாளர் ஆவார். . அமெரிக்காவின் இல்லினாஸ் பல்கலைக் கழக்கத்தின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் தலைவியுமாவார். இவர் இவ்வாறு கூறுகிறார் 

“ Sometime around 1700 BC, the Aryans invaded the ancient urban civilizations of the Indus Valley, and destroyed that culture. The Indus Valley Civilization were far more civilized than any horse-back nomad, having had a written language, farming capabilities, and led a truly urban existence. Some 1,200 years after the supposed invasion, the descendants of the Aryans, so they say, wrote the classic Indian literature called the Vedic manuscripts.” 

“கி. மு. 1700 ஆம் ஆண்டுவாக்கில்  ஆரியர்கள் இந்தியாவின் சிந்துசமவெளி நாகரிகங்கள் தழைத்து  வளர்ந்த வளமான  சிந்து சமவெளியின் மீது அத்துமீறி படைஎடுத்தார்கள். அவர்கள் படையெடுத்த காலத்தில்,  நாகரிகம் தழைத்து வளர்ந்திருந்த  அந்தப் பகுதி  தங்களுக்கென மொழி மற்றும் வேளாண்மைத் திறமைகளில் உயர்நிலையில் இருந்ததுடன் உயர்ந்த  நகர்ப்புற  வாழ்க்கையிலும் மேம்பட்டு இருந்தார்கள். இவ்வாறு இந்த நாட்டுக்குள் நுழைந்த ஆரியர்கள் அத்தகையப் படையெடுப்புக்குப் பின் கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளுக்குப் பின்தான் வேதங்கள் என்று அழைக்கப்பட்ட  தொன்மை வாய்ந்த இலக்கியங்களை எழுதத் தொடங்கினார்கள்.அவைகளே வேதங்கள் என்று அழைக்கப்பட்டன ”

அடுத்ததாக,   

“ சிரியா நாட்டைச் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையுமுன் சில காலம் ஈரானை சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள் அதன்பின் இந்தியாவிற்குள் வந்தபின் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள். எனவே பாரசீக மொழியில் உள்ள கடவுள் பெயர்களை ஒரு பாரசீக அகராதியில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது. “

இந்த பாரசீக அகராதியின் பெயர் “Muslim and Parsi Names” இதை எழுதியவர்கள் இன்றைய மத்திய அமைச்சர் திருமதி. மேனகாகாந்தி மற்றும் பேராசிரியர் ஓசைர் ஹுசைன்.

ஆகவே முஸ்லிம்களை அந்நியர் என்று கூறுபவர்களும் இந்த நாட்டுக்குள் புகுந்த அந்நியர்களே என்பதே வரலாறு தரும் உண்மை.  

இதுமட்டுமல்ல , இந்தியாவின் அரசியலை ஆட்டிப் படைத்த ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய   காலத்தில்  இங்கு     வெளியுலகிலிருந்து   குடியேறியவர்கள்தான்.  சௌகான், பரிகரர், சோலங்கி என்று சொல்லப்படுபவர்கள் எல்லோருமே  வெளியுலகில் இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள்தான். முஸ்லிம்களை மட்டும்  மட்டும் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று பழிதூற்றுவது  நியாயமற்ற விவாதம்ஆகும். 

மண்ணின் மைந்தர்கள்,  ஆரியர்கள் நாடுகடந்து கொண்டுவந்த மதத்தை ஏற்கலாம் என்ற  வாதம் சரியாக இருக்குமானால் அதே மண்ணில் பிறந்த மைந்தர்கள் இஸ்லாத்தையும் ஏற்பதில் தவறென்ன? 

இங்கு நாம் சுருக்கமாக சொல்லவருவது என்னவென்றால்  ஆரியர்கள்  இந்தியாவுக்குள் மத்திய ஆசியாவிலிருந்து வரும்  முன் இந்தியாவுக்குகென, குறிப்பிட்ட மதங்கள் இருந்திருக்கவில்லை. அக்கால இந்திய மக்கள் சிலை வணங்கிகளாகவும், தங்கள் இஷ்ட தெய்வங்களை தாங்களே தேர்வு செய்து வழிபடுபவர்களாகவும் இருந்தனர். இதில் கல்,மரம்,நிலம்,நெருப்பு,சூரியன், மனிதன், ஆகிய அனைத்தும் அடங்கும். ஆரிய நுழைவுக்குப் பின்னர்தான் வேதங்களின் அடிப்படையில் வேத மதம் அல்லது இந்துமதம் கட்டமைக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்பின் அடிப்படை நான்குவகை வர்ணாசிரமாக இருந்தது.   

மேலும் இந்தியாவில் இன்று கிருத்துவ மற்றும் இஸ்லாத்தைத் தழுவிய மக்கள்   இந்த நாட்டின் மண்ணிலே பிறந்து வளர்ந்து வர்ணாசிரமஅடிப்படையிலான  சமுதாயக் கொடுமைகளை,  சாதி ஒடுக்குமுறைகளை நீக்கிக் கொள்வதற்காக   மதம் மாறியவர்கள்தான். அத்தகைய கொடுமைகளை விலாவாரியாக விவரிக்க ஆரம்பிப்பது இந்தத் தொடரின் நோக்கத்தில் துவேஷ வித்தைத் தூவிவிடும். ஆகவே அவற்றைத் தவிர்க்கிறோம். எனினும் கொடுமைகளின் காரணமாக மனம்விரும்பிய மதங்களில் நிலைபெற்ற முஸ்லிம் மற்றும் கிருத்தவர்களை  அந்நிய மதங்களின் அடிமைகள் என்று வர்ணிப்பது உண்மைகளுக்கு மாறானது.     

உண்மையான வரலாற்றின் பக்கங்களை இன்னொரு கோணத்தில் ஆராயப் போனால் , வணிகத்துக்காகவும்   முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள்.  வணிகம் செய்ய வந்தவர்கள் தங்களின் வணிக வசதிக்காக இங்கேயே தங்க ஆரம்பித்தார்கள். இங்குள்ளவர்கள் முஸ்லிம்களின் நல்ல நாணயமான நடத்தைகளைப் பார்த்து வியந்து அவர்களுடன் வணிகம் செய்ய விரும்பினார்கள்.  அவர்களின் நாணயம்,      நல்லெண்ணம்,  நடத்தை, ஒழுக்கம், ஆகியவற்றால்  ஈர்க்கப்பட்டவர்களின் இதய மாற்றம்,  எண்ணப்புரட்சி பெருகியதால்தான்   இஸ்லாம் இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. பல்வேறு திசைகளிலும் வழிகாட்டும்  அழைப்புப் பணியும்  வெற்றிகரமாக நடந்தது. தங்களின் பிறவியின் களங்கத்தை துடைக்கும் புனித நீராக இஸ்லாத்தைக் கண்ட மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர்.  

அன்றைய உலக மக்களின்  இயல்பும் தொழிலும் வாழ வகையுள்ள  நாடுகளைத் தேடிச் செல்வதுமாகும்.  அவ்வாறு  நாடுகளைத்  தேடிப் புறப்பட்ட இனங்கள் உலக வரலாற்றில் எத்தனையோ உள்ளன. கொலம்பசில் இருந்து, வாஸ்கோடாகாமா  வரையும், அலெக்ஸான்டரில் இருந்து நெப்போலியன் வரையிலும் கூட இந்த வரலாறு உலக சரித்திரப்பக்கங்களில் நீளும் . 

அதே ரீதியில்தான் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்திலேயே இந்தியாவின்  மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு  அராபிய வணிகர்கள் வருகைதந்தனர். கேரளக் கடற்கரைப் பகுதிகளில்           அந்தக் காலத்திலேயே  கட்டப்பட்ட பள்ளிவாசல்களின் கோபுரங்களில் இத்தகைய சான்றுகள் கொடிகட்டிப் பறக்கின்றன. சேரநாட்டை ஆண்ட மன்னர் சேரமான் பெருமாளின் வரலாற்றிலும்  விரவிக் கிடக்கிறது. அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு ஹஜ்ஜுக்கு சென்று திரும்பும்போது ஓமன் நாட்டின் சலாலாவில் இறைவனடி சேர்ந்த சான்றுகள் காணக்கிடைக்கின்றன.

வணிக நோக்கங்களுக்காகவும் பிழைப்புத் தேடியும்  சிங்கப்பூர், மலேசியா, இலங்கை , பர்மா, சீசெல்ஸ், தென் ஆப்ரிகா, மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று குடியேறிய  இந்தியர்களுக்கும் அந்தந்த நாட்டின் குடியுரிமைகள் வழங்கப் பட்டு இருக்கின்றன. மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் அங்கு எல்லா ஊர்களிலும் கோயில்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. பத்துமலை தைப்பூசத்  திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. அமெரிக்காவின் பல பெரிய நகரங்களில் இந்துக் கோயில்கள் கட்டபட்டிருப்பது கண்கூடு. அண்மையில்,  அபுதாபி நாட்டில் கூட கோயில் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.   அங்கெல்லாம் இந்து மதத்தை அந்நிய மதம் என்று கேலி பேசுவோர் யாருமில்லையே! 

மதங்களை ஒரு மரமாகக் கொண்டால் தழைத்து வளர தான் நின்ற இடத்தில்   சூரிய வெளிச்சம்  கிடைக்காத காரணத்தால் வெளிச்சம்  இருக்கும் பக்கம் நீண்டு வளரும் மரங்களின்  கிளைகளைப் போலதான் இஸ்லாமும் கிருத்துவமும் இந்த மண்ணில் வளர்ந்தன;  தழைத்தன ; பலருக்கு நிழல் தந்தன. கிளைகள் விரவிப் படந்து வளர்ந்தாலும் மரத்தின் ஆணிவேர்  இந்திய மண்ணில்தான் ஊன்றி நின்று நிலைபெற்று நிற்கிறது. வளர்வதற்காக வெளிச்சத்தின்  பக்கம் நீண்டுவிட்டன என்கிற தாவரசலன இயல்புக்காகவே வளர்ந்த  கிளைகளை வெட்ட நினைப்பவர்கள்தான் இஸ்லாத்தை அந்நிய மதம் என்கிறார்கள். 

இந்த வரலாற்று செய்திகளை அழைப்புப் பணியாளர்கள் குறித்துவைத்துக் கொள்ளவேண்டும்.    

இன்னும் பேசவேண்டி இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் தொடரும். 

இபுராஹிம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு