Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கூட்டணிக் கொள்கைகள்! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | January 26, 2016 | , ,


இதோ
கொள்கைவாதிகள்
கடைவிரித்தாயிற்று
வசதி படைத்தோர்
வளைத்து
வாங்கி
கூட்டணி போட்டுக்கொள்ளலாம்

பல அடுக்குப் பேச்சுவார்த்தைகளில்
கொள்ளைச் சதவிகிதங்கள்
தொகுதி பங்கீடுகளைத் தீர்மாணிக்க
கொள்கை சமரசம்
எட்டப்பட்டுவிடும்

தோள் கொடுக்கும் -கட்சித்
தொண்டனையும்
தோளில் இடும் -கரைத்
துண்டினையும்
லாவகமாகக்
கையாண்டு கொள்ளலாம்

கேடிகள் கைகளில்
கோடிகள்
முதலீடு செய்ய
முதலைகள் தயார்
இனி
கூட்டணி போட்டு
தொழில் செய்வர்
தேர்தல் வர்த்தகத்தில்

வாடிக்கையாளர்களான
வாக்காளப் பெருமக்களைச்
சில்லறை கொடுத்துச்
சரி செய்வர்
வென்றபின் வதைக்க
வரி செய்வர்

மதராஸ் வெள்ளத்தை
மறக்கடிக்க
மக்கள் வெள்ளத்தின் முன்
பொதுக்கூட்டங்களில்
பித்தலாட்டம் காட்டுவர்
கைதட்டிக் களித்திருக்கும்
கையாலாகாத கூட்டம்

அநாகரிக ஆபாசப் பேச்சுகளை
எச்சில் ஒழுக ரசித்திருக்கும்
விசிலடிச்சான்கள்
தத்தம் விடியல்களுக்குத்
திரையிடும்
அரசியல்வியாதிகளிடம்
சொக்கிக்கிடப்பர்

அரிதாரம் ஒப்பேற்றிய
அழகுக்கும்
அறிவாளி எழுதித்தந்த
வசனத்திற்கும்
சுயமரியாதையை இழந்துவிட்ட
ரசிகர் கூட்டம்
நிசம் என்றெண்ணி
நிழலிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும்

கடந்த தேர்தலில்
கடுமையாய் விமரிசித்த
எதிர்க் கட்சிக்காரனை
இம்முறை
வாழ்த்தி வரவேற்க
தயாராவதே கூட்டணி தர்மம்

ஆட்சி அமைத்தபின்
குட்டிக் கட்சிகளை
கழட்டிவிடத் தயாராக
தாய்க் கட்சிகள்
வியூகம் அமைப்பதே
அரசியல் சாணக்கியம்

என்ன "பீப்" சனநாயகமோ?
த்தூ...!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

11 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். கூட்டணிக் கொள்கைகள்,கூட்டு கொள்ளைகளாகும்!சரியான நேரத்தில் வந்திருக்கும் எச்சரிக்கை பிரச்சாரம் இந்த கவிதை!

அதிரை.மெய்சா said...

தூங்கிக்கொண்டிருக்கும் நம் மக்களை தக்கசமயத்தில் எழுப்பி கவிதையால் விழிப்புணர்வூட்டியுள்ளாய்.அருமை.

உங்கள் பொன்னான வாக்குகளை சில்லரைக்கு வாக்களிக்காமல் சிந்தித்து வாக்களியுங்கள்.

Ebrahim Ansari said...

ஒரு நிகழ்ச்சியின் தொடக்கத்தில்
தமிழ்த்"தாய்" வாழ்த்து
ஒரு நிகழ்ச்சியின் நிறைவில் ஜனகனமன
ஒரு ஆட்சியின் நிறைவில்
மூன்று மாணவிகள் தற்கொலையா?
மின் மிகை மாநிலத்தில் நேற்றிரவு மட்டும்
ஆறுமுறை மின்சாரம்
மாமியார் வீட்டுக்கு போய் வந்தது .
மின்சாரம் மட்டும் போகவில்லை
ராயல் ஆப்பிள் பழமும்
லயன் டேட் பேரிச்சம் பழமும்
தின்று ஊறிய இரத்தமும் ஐநூறு எம் எல் போனது
அந்த ரத்தம் குடித்து
கொசு கொழுத்தது .
நான் அறுபது முறை
புரண்டு படுத்தேன்
தன்னிறைவு பெற்ற
தண்ணீர் மாநிலமாம் - ஆனால்
முத்துப் பேட்டையில்
மூன்று நாட்கள் குடிநீர் இல்லை.
இலவசப் பொருட்கள் வழங்கிய
அடுத்த நாள்முதல்
ஓட்டை உடைசல்
ஈயம் பித்தளைப் பொருள்
வாங்குவோரின்
வண்டிகள் நடமாட்டம்
அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு
தொலைக் காட்சியில் நேரலை
காலிக் குடங்களின் அணிவகுப்பு
குடியரசு நாளில் காட்சிக்கு நேரிடை அலை
எங்கு பார்த்தாலும் கொடி ஏற்றுகிறார்கள் - ஆனால்
குடி ஏற்றவில்லை. -மாறாக
குடிகாரர்கள் போதை
ஏற்றுகிறார்கள்.
( சத்தியமாக இதை நான் எழுதவில்லை - எனது மாணவி ஒருவர் எழுதி என்னைப் பதியச் சொன்னார் . வளரும் சமுதாயம் ஒரு தினுசாகவே சிந்திக்கிறது )

Ebrahim Ansari said...

// அரிதாரம் ஒப்பேற்றிய
அழகுக்கும்
அறிவாளி எழுதித்தந்த
வசனத்திற்கும்
சுயமரியாதையை இழந்துவிட்ட
ரசிகர் கூட்டம்
நிசம் என்றெண்ணி
நிழலிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும்//

எதார்த்தம்.

சொன்னால் வெட்கம் சொல்லாவிட்டால் துக்கம்.

crown said...

எங்கு பார்த்தாலும் கொடி ஏற்றுகிறார்கள் - ஆனால்
குடி ஏற்றவில்லை. -மாறாக
குடிகாரர்கள் போதை
ஏற்றுகிறார்கள்.
-------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.கிளாஸ்!உங்க மாணவிக்கு வாழ்த்துக்கள்!அருமை!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கூட்டணி கும்பீடும்..!
கூலிக்கு காலி செய்து உண்ட விட்டை திண்டாட வைப்பதும்..

பாழாய்ப்போன அரசியல் !

sheikdawoodmohamedfarook said...

ஏற்க்கனவே முட்டாளாகிய வாக்காளனை மீண்டும்முட்டாளாக்கி புதுப்பிப்பதே பொதுதேர்தல்.

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவ்ன்,

கூட்டுக்கொள்ளையர்தான். மிச்சம்மீதியென தங்கிவிட்ட மேநாட்டு வெள்ளையரோ?

ஓட்டு வாங்கியபின் வெற்றியடைந்து வைப்பார்கள் பாருங்கள் வேட்டு...!

sabeer.abushahruk said...

மெய்சா,
ஈனா ஆனா காக்கா
அபு இபு
ஃபாரூக் மாமா

வாசித்து கருத்திட்டமைக்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

Muhammad abubacker ( LMS ) said...

நச்சென்ற வார்த்தைகள் சிந்தாமல் சிதறாமல் பதிவாகி இருக்கிறது அதிரை நிருபர் வாக்குச் சாவடியில்.

Muhammad abubacker ( LMS ) said...

நச்சென்ற வார்த்தைகள் சிந்தாமல் சிதறாமல் பதிவாகி இருக்கிறது அதிரை நிருபர் வாக்குச் சாவடியில்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு