Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கேன்ஷல்ல அனுப்பிடுங்க... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 21, 2016 | , , , , ,



வருடம் 2000 !

காலை 06:30 வாக்கில் தங்குமிடத்திலிருந்து வேலைக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது...

அருகில் ஒரு குரல், ஃப்ளாஸ்கில் விழுந்த சில்வர் ஸ்பூன் போன்ற ஒலியெழுப்பியது...

`தம்பி என்னை எப்படியாவது ஊருக்கு அனுப்பிடுங்க...`

`என்னாச்சு`

`முடியல... ஊரில நல்லா டிஸ்ட்ரிபூஷன் வியாபரம் செய்துகிட்டு இருந்தேன்...`

கண்ணீர், விழியிலிருந்து வெடித்துச் சிதறியது அங்கே அணைபோட ஆனையிடவும் இயலவில்லை, சாலையில் நடந்து செல்கிறோம் என்றா அந்த கண்ணீருக்கு தெரியும், தார் சாலையிலும் சொட்டுகள் முட்டியது.

`ஏன் பாய் அழறீங்க, இது ரோடு கம்பெணியாட்கள் பார்க்கிறார்கள்`

`முடியல இங்கே படுகின்ற கஷ்டம் வாழ்நாளில் படவே இல்லையே தம்பி, புள்ளைங்க படிப்பு இருக்கே....`

`என்னதான் கஷ்டம் ? என்னிடம் சொல்ல வேண்டியதுதானே சரி செய்றேனே...`

`வந்ததுலேயிருந்து லோடிங்லேயும், பாத்ரூம் கழுவுறதுலேயும் வேலைக்கு போட்டாங்க, ஊர் ஞாபகமா வருது...`

`என்ன பாய் வந்து ஆறு மாசத்துக்கு மேல ஆச்சு பழகியிருக்கனுமே... இங்கே இன்னுமா மாத்தாம வச்சிருக்கானுங்க...`

`நீங்க சொன்னா மாத்திடுவாங்கதான் தம்பி, ஆனா முடியல போயிடுறேன். தயவு செய்து கேன்சல் செய்து அனுப்புங்க`

`இருங்க இருங்க, மதியம் ப்ரேக்கில் ஆஃபிஸ்ல வந்து பாருங்க... பேசி முடிவு பன்னிக்கலாம்`

அன்று எதிர்பாராத வெளிவேலை ஒன்று இருந்ததால் வெளியில் சென்றுவிட்டு நாள் முழுவதும் திரும்பவில்லை அடுத்த நாள்தான் அலுவலகம்.

அடுத்த நாள் அலுவலகத்தில் இருந்து கொண்டு அவர் மைக்ரோ ஃபோனில் அழைக்கப்படுகிறார்.

`என்ன முடிவோட இருக்கீங்க ?`

`தம்பி இன்னும் கொஞ்ச நாள் இருந்து பார்க்கிறேன்`

`என்னாச்சு, ஒரு நாளில் மாற்றம் ?`

`ராத்திரிபூரா சிந்திச்சு பார்த்தேன் வீட்டுச் சூழல் கண்ணுல சுத்துனுச்சு தாங்க முடியல இன்னும் ஒரு ஆறு மாசம் இருக்கலாம்னு முடிவு பன்னேன்`

`சரி, நாளையிலேயிருந்து உங்க வேலைய மாத்தியிருக்கு அது கஷ்டமா இருக்காது`

`சரி தம்பி`

வருடம் 2013 நடுவில்...

`என்னோட பையன் விசிட்டில் வந்திருக்கான் தம்பி`

`அப்படியா சந்தோஷம், என்னா படிச்சிருக்கான் ஏன் அதுக்குள்ள இங்கே வரவச்சீங்க`

`அவன் ஆசைப்பட்டான், பி.இ. படிச்சிருக்கான்`

`மாஷா அல்லாஹ், விசிட் நீங்களா எடுத்தீங்க?`

`இல்லே தம்பி, என்னோட மச்சினன் தான் எடுத்தான் விஷாக்கு காசு நாந்தான் கொடுத்தேன், அவனோட மகளுக்குத்தான் மகனை பேசி வைத்திருக்கோம்`

`ஓ... அப்படியா..`

`ஏதாவது தெரிந்த இடம் இருந்தா வேலைக்கு சொல்லுங்க தம்பி`

`இன்ஷா அல்லாஹ் !`

மூன்று வாரம் ஓடிவிட்டது.

`தம்பி மகனுக்கு வேலை கிடைத்து விட்டது`

`அல்ஹம்துலில்லாஹ்`

`நல்ல வேலை படிப்பு ஏத்த வேலை`

`அப்படியா, நல்லது....`

`முடிச்சுட்டு போகலாம்னு இருக்கேன் தம்பி`

`ஏன் இன்னும் கொஞ்சம் இருக்கலாமே....?`

`இப்படித்தான் தம்பி பத்து வருசத்துக்கு முன்னாடி சொன்னீங்க இப்போ எல்லாமே மாறிப் போச்சு`

`இப்போ நீங்க திருப்தியாகத்தான் ஊருக்கு போக முடிவெடுத்தீங்களா?`

`ஆமா தம்பி நிறைய பட்டாச்சு பார்த்தாச்சு, மகளுக்கு தங்கச்சியோட நாத்தனார் மகனைத்தான் பேசி வச்சிருக்கோம் அத விவரமா சுறுக்க பேசி முடிக்கனும்`

`மாஷா அல்லாஹ்`

விஷா கேன்ஷல் செய்து இங்கிருந்து சென்ற நான்கு மாதம் கழித்து கல்யாண பத்திரிகை கைக்கு கிடைக்கிறது. அவருடைய மகளின் கல்யாணம் !

அபுஇப்ராஹிம்

7 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

இதுவும் கடந்து போகும்

Ebrahim Ansari said...

சித்திரம் பேசுகிறது.

அதிரை.மெய்சா said...

அயல்நாட்டு அவல வாழ்கையை குடும்பப்பின்னனியுடன் நன்றாக பின்னியுள்ளீர்கள்.

sabeer.abushahruk said...

அபு இபு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எந்த புனைவும் கலக்காத இயல்பான சில உரையாடல்களின் வாயிலாக ஒரு முழு வாழ்க்கையின் திரைக்கதையைப் பதிந்திருக்கிறீர்கள்.

எதார்த்தமான உரையாடல்கள் புற நிகழ்வுகளைச் சொன்னாலும் அகவாழ்க்கையின் இழப்புகளையும் கடப்பாடுகளையும் சிறப்பாகத் தொக்கி வைத்துச் சொல்கிறது.

ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதுநிதர்சனம்.

சூப்பர்.

Shameed said...

பு(ப)டம் போட்ட கதை சூப்பர்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கடந்த வருடங்களின் கடந்த அனுபங்களின் பகிர்வுதான்..

வாசித்து விட்டு கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்..!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.உன்மை சம்பவம் ஜனரஞ்சகமாக சொல்லபட்டுள்ளது!அருமை!இந்த கதையின் உன்மை நாயகன்(ர்) நல்லதொரு குடும்பஸ்தன்.அவரின் விருட்சம் துளிர்விடதொடங்கிவிட்டபின் அவர் எடுக்கும் முடிவு சரியானது!ஆனால் கஸ்டத்தில் முன்பு அவர் எடுத்தமுடிவு தவறானது என்பதோடு அல்லாமல்
அவருக்கு உதவி செய்து அவர் விருட்சத்தின் மேல் வெளிச்சம் பாய்ச்சியதில் உங்கள் பங்கிற்கு அல்லாஹ்விடம் நற்கூலிவுண்டு!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு