ராத்திரி பூரா உம்மா சொன்ன பேய்க்கதையே கேட்டுட்டுபடுத்த மம்மசங்கனி கொஞ்சம் நேரஞ்சென்டு ‘திடுக்’குண்டு பயந்து கொளறிகிட்டு பாயே உட்டு எந்திருச்சான்.
ராத்திரி படுத்ததும் கண்ணை கொண்டேயி ஒரே சொறுவா சொறுவி நெத்திரை வந்து மையத்து கட்டையா போட்டுடுச்சு. ராத்திரிபூறா –ஒரே பேய்மினாம் - பேய் மினாமா வந்து ‘திடுக்-திடுக்’ கின்டு பயந்து குளறி கிட்டு – எந்துரிச்சு – எந்துரிச்சு படுத்தான். நெஞ்சுகுள்ளே திடுக்கு-திடுக்குண்டு அடுச்சுகிட்டு கொஞ்சங் நெத்திரையை வரலே! பொறண்டு -பொறண்டு படுத்துப் பாத்தான்.
அப்படி செஞ்சும் கண்ணுலே நெத்திரை கடுகு அளவும் வரலே. பாயே சுருட்டி எடுத்து கக்கத்துலே வச்சுக்கிட்டு கூடத்தை உட்டு ஊட்டுகுலி உள்ளே போய்படுத்தான்.
ஊட்டு குளியில் படுத்து’ அப்பாடா!’ என்று நல்லா கண்ண சந்து தூங்கிய கொஞ்ச நேரத்தில் அங்கே அடுக்கி வச்சிருந்த அடுக்கு பானை சட்டிபொட்டி எல்லாம்’கடப்புடா திடுப்புடு-தடபுடா’ என்ற பெரும் சத்தத்தோடு கீலே உலுந்து உருண்ட. சத்தம் கேட்டு திடுக்குன்டு பயந்து கொளரிகிட்டு எந்திரிச்ச மம்மசங்கனிமேலே கறுப்பு பூனை ஒன்னு ஏறி ’’மியாவ்!மியாவ்’’ என்று கத்திக் கொண்டு ஓடியது. அந்தப் பூனை பயந்து கண்ணை மூடிகிட்டு ஓடிய வேகத்தில் அங்கே ஏற்றி வைத்த அரிக்கன் லாம்பு மேலே உலுந்து, லாம்பு சாஞ்சு மண்எண்ணை எல்லாம் கீலே ஊத்தி ஊடுபூரா நெருப்பு புடிக்கப் போச்சு! நல்லவேளே! அல்லாஹ், நெருப்பு பத்தி ஊடு சாம்பலா போகமே காப்பாத்துனான்!
அந்தப் பூனை அலறி அடிச்சு பயந்து கண்ணை மூடிகிட்டு ஓடுன ஓட்டத்துலே அடுக்கு பானை மேலே மோதி பானை எல்லாம் ஒன்னுக்கு மேலே ஒன்னு ‘’தடப்புடா-கடப்புடா’’ என்று சரிந்து உளுந்தது. பானை சரிந்து உளுந்த சத்தம் கேட்டு உம்மா தங்கச்சி எல்லாம் பதறிக்கிட்டு வாரிச்சுருட்டி எந்திருச்சு ’’கள்ளன்! கள்ளன்’’ என்று சத்தம் போட்டு கத்தினாங்க.
சத்தம் கேட்டு அடுத்த ஊடு அண்டுன ஊட்டுகாரவோ எல்லாம் கம்பையும் தடியையும் எடுத்துக் கிட்டு ஆளாளுக்கு ஓடிவந்தாஹ. மூனாம் நம்பர் வீட்டு வாலேமீன் முள்ளு மீசை சீனி மீராஸா தாழை வெட்டும் நீண்ட அறுவாலே கையிலே எடுத்துக் கிட்டு ’’எங்கேடா அந்த அம்மாளே......... மகன்? அவனை இங்கேயே இழுத்து போட்டு கொடுவாமீனு போல கண்ட-துண்டமா வெட்டி கூறுபோட்டுடுறேன்’’ என்று உறுமிக் கொண்டு புலிபோல் வெளியை பாய்ந்தார். கடசியா பாத்தா கள்ளன் வரலே. வந்தது கறுப்பு பூனை என்றதும் ரெத்த தாகத்தில் தவித்த வாலேமீன் மீசை சீனி மீராசாவின் தாழே வெட்டும் வீச்சு அறுவா ஏமாந்து போனது...!
‘’தெரு முளுதும் ஒரே பேய்பெறலியா ஈக்கிது. வயசு பையன் தனியா படுக்கப்புடாது. எங்கிட்டனேயே படுத்துக்கோண்டு’’ உம்மா சொன்னதும் பாயே கூடத்துலே போட்டு உம்மாவும் மம்மசங்கனியும் படுத்து கொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் மம்மசங்கனிக்கு நெத்திரை வந்து கண் மசங்கி பாயிலே உலுந்து படுத்தவன்தான். அப்பொறம் பாத்தா அங்கிட்டு இங்கிட்டு அசையாமே மையத்து பொணமா கெடந்தான். இடுப்பிலே வுடுத்திய வேட்டி இடுப்பை உட்டு சோந்துபோய் மொட்ட கட்டையாய் பொறண்டு சோந்து கெடந்தான். உம்மா முளிச்சு பாத்துட்டு இடுப்பு வேட்டியை எடுத்து மூடி ஒலுங்கு பண்ணி போட்டாங்கோ. தான் பெத்தபுள்ளேதானே? வேறே யாரும் பொறர்த்தியாறா? செஞ்சா என்ன? கொஞ்ச நேரத்தில்.. அவன் பொண்டாட்டி பக்கீர் பாத்துமா மண்எண்ணையை சதுரம் முளுதும் ஊத்தி கிட்டு கொளுத்திக் கிறமாதிரி ஒருமினாம் கண்டு திடுக்குன்டு பயந்து பதறி கொலரிகிட்டு பாயை உட்டு எந்திரிச்சான். அவன் சதுரம் முலுக்க குப்புண்டு முத்து முத்தா வேத்து போயி போத்தி கிட்ட போர்வை தலே வச்சு படுத்த தலவாணி விருச்சு படுத்தபாயி யெல்லாம் தொப்பு தொப்பா நொனஞ்சு போச்சு.
அதுலேந்து அவனுக்கு பயமும் மனக்கொலப்புமும் பதட்டமும் வந்து, கண்ணை கொஞ்சம் மூடுனால் அவன் நெஞ்ஜூ மேலேயாரோ ஒரு வயசு பொண்ணு ஏறி உக்காந்துக்கிட்டு கொரவளையை புடிச்சு நெறிச்சு ’’அடே! கலிச்சலுலே போவா! நீ மண்ணா போயி மடிவா! அம்மா வாத்து ஒன்னே வாறிக்கிட்டு போவ! பொக்கடை கெளம்பி பொக்குண்டு போவா! ஒனக்கு காலரா வந்து நீ கதறி துடிச்சு அலுவ-அலுவ ஒன்னே வாறி சுருட்டி கொண்டுகிட்டு போவ! பினாங்குக்கு போனவன் அப்புடியே திரும்பி வராமே கப்பலுலேயே மல்லாக்க உலுந்து மாண்டுடுவா!
ஒனக்கு களுத்தை நீட்டி வாக்கப்பட்டு வந்து என்ன சொகத்தேடா கண்டேன்? பினாங்கு சபுறு மாப்புலேன்ட ஆசைப்பட்டு வாக்கப்பட்டு வந்தேனேடா? ஆசைப்பட்டு வந்தஎனக்கு ஒரு பினாங்கு பத்தைகைலி உண்டு மாடா? பூவெண்ணை போத்தல் உண்டு மாடா? பொட்டி பீஸ்பொடவை உடுத்தி கலஞ்ஜேனாடா? ‘’நைலெக்ஸ் ஸாரி உடுத்திக் கலாம்’ முண்ட ஆசை யோடு தானேடா ஒனக்கு களுத்தை நீட்டினேன்.? நீட்டிய களுத்துக்கு கருசமணி பொன்னுக்கு எடமணி செஞ்சு போடவக்கத்த பயலுக்கு வாக்கப்பட்டு வந்தேனே! நான் பாவிமவ? பினாங்கு கடப்பாசி, கிளிசாப் தைலம், ஓடிகுலோன் போத்தல் உண்டுமாடா? பினாங்கு பத்தை கைலி உடுத்திக் கலந்சுக்கலாம்’ முன்டு ஆசையோட தானேடா பினாங்கு சபுறு மாப்புளேலேண்டு வாக்கப்பட்டு வந்தேன். அப்புடி ஆசைப்பட்டு வந்து நான் என்ன சொகத்தேடா கண்டேன்? என் ஆசையிலே கொல்லி வச்சுட்டு இப்போ கூதகாலத்துலே பொன்ட்டாடியே கட்டிலிலே சொகமா கட்டிபுடிச்சு படுத்து பொரண்டுட்டு காலங்காத்தாலே மாமியாகாரி அடிச்சுகொடுக்கும் கோலி முட்டை தேத்தண்ணி குடிச்சிட்டு கொளத்துலேபோய்குளிக்கலாமுண்ட ஆசையோட வந்துட்டியா?’’ என்று அந்த உருவம் கர்ஜித்தது.
‘’நான் புளியங் கொம்பை புடிக்கவல்லோ புவிமேல் தவங்கெடந்தேன்! நாம்பாவி புடிச்ச கொப்பு முருங்ககொப்போ? புடிச்சகொப்பு முருங்ககொப்போ’’ என்று மம்மசங்கனி நெஞ்சுமேலே ஏறி உக்காந்த அந்த பேய்ராகம் போட்டு பாட்டும் பாடியது. இசைஞானமும் குரல் இனிமையையும் கவிதை புனையும் திறனும் கொண்ட சர்வகலை பேயே மினாமில் கண்டது முதல் மம்மசங்கனிக்கு ராவுபூரா நெத்திரையே அத்துப் போச்சு. நெஞ்சுக்கு மேலே ஒரு மலையை தூக்கி வச்ச மாதிரி ஒரே பாரம். மூச்சுதெணறி உஸுரு போற மாதிரி வந்துடுச்சு. பக்கத்துலே படுத்து கெடக்குற உம்மாவை எலுப்பக்கூட வாய் வறலே.! நல்லவேலே சுபுஹு தொளுவைக்கு ‘’அல்லாஹுஅக்பர்!அல்லாஹு அக்பர்!’’ என்று வாங்கு சொன்னாங்க. வாங்கு சத்தம் கேட்தும் பேய் மம்மசங்கனி நெஞ்ச உட்டு எறங்கிஓடிப்போச்சு. பேய் ஓடிப்போனதும் மம்மசங்கனியோட சதுரம்பூரா ஒரே முத்து-முத்துவேர்வை குப்புண்டு வேத்து விறுவிறுத்து போயி பேச்சு-மூச்சு இல்லாமே மசங்கி அங்குனேயே அசையாமே மையத்தா கெடந்துட்டான்.. கொஞ்ச நேரஞ்செண்டதும் ஊசார் வந்து ரெண்டு கண்ணேயும் முளிச்சு பாத்தான். கெ லக்கு வெளுத்து நெலம் தெளிஞ்சுருச்சு! அவனோட மூத்த தங்கச்சி பாத்து முத்து வெறும் தேத்தண்ணியில் முட்டை அடிச்சு ஒரு கொவளே நெறைய கொண்ணாந்து வச்சு ’’ குடி காக்கா! நம்மூட்டு கோலி உட்ட முட்டை அடிச்சவெறும் தேத்தண்ணி’’ என்றாள்.
அதைக் குடிச்ச மம்மசங்கனி பெட்டியை தொறந்து தேங்காபூ டவளு, கோள் கட்டு பல்லு பசை, பல் விளக்குற புருசு ,சோப்புடப்பா, யார்ட்லி சோப்பு 555 தீக்காலி மாசிகரெட் ஒரு டின்னு, Ronson Lighter எல்லாம் கையிலே எடுத்துக் கிட்டு குளிக்கப்போனான்.
போகும்போது எதுக்குகே வந்த காது கொடஞ்சான் கார் மீராசா ’’அடே! மம்மசங்கனிய?! எப்போடா வந்தா?’’ என்றான்.
’’அடே! கார் மீராசாவா? நேத்து வந்தேண்டா! நல்லா ஈக்கிரியா?’’என்றான்.
’’ஈக்கிறேன்டா! ஆமா,ஒன்னே பாத்தா ரெம்போ எளச்சு போனா போலே இருக்குகே?
அது சரி எங்கே வந்து எறங்குனா?’’ யென்றான்’ கார்மீராசா.
’’நாகபட்டினத்துலே தான்! அதுதானே நமக்கு வசதி! எறங்குனதும் கார் புடிச்சு சாயங்காலமே ஊருக்கு வந்து சேந்துடலாம்’’ என்றான் மம்மசங்கனி.
’’அடே! நா அதே கேக்கலேடா, யார் ஊட்டுலே வந்து எறங்குனா? உம்மா ஊட்டுல்லேயா? இல்லே பொண்டாட்டி ஊட்டுலேயா?’’ என்றான் கார்மீராசா.
’’உம்மா ஊட்டுலேதான் வந்து எறங்குனேன். மொத சபுறு உம்மா ஊட்டுலேதானே எறங்கணும். அதானே வளக்கம்!’’என்றான் மம்மசங்கனி.
“ஆமா.... ஒனக்கு..... ஒரு.. புல்லே பொறந்திருக்கிறதா கேள்விபட்டேனே? புள்ளயே தூக்கி பாத்தியா? புள்ளேய உன்னேபோல கருப்பா இருக்கா? இல்லே உம்மாவைபோல செவப்பா இருக்கா?’’என்று கேட்டான் கார்மீராசா.
இதைக் கேட்ட மம்மசங்கனி பதில் சொல்ல தயங்கினான். இப்படி கொடைஞ்சு-கொடைஞ்சு கார்மீராசா கேள்வி கேப்பான் என்று மம்மசங்கனி நெனைக்கலே. விவஸ்த்தை இல்லாமல் கேள்வி மேல் கேள்விகளை கொடஞ்சு-கொடஞ்சு கேட்பது கார்மீராசாவோடு கூடப்பிறந்த குணம். அதனால்அவனுக்கு ‘காது கொடஞ்ஜான் கார்மீராசா’’ என்று பட்டப்பெயர் வைத்து விட்டார்கள். காது கொடஞ்ஜான் கார்மீராசா’ என்று சொன்னால் தான் அங்கே எல்லோருக்கும் அவனை தெரியும். இன்னொரு கார்மீராசாவும் இருக்கிறார். அவருக்கும் ஒரு பட்டப்பெயர் உண்டு. அது ’காதுஊதி’ ‘கார்மீராசா’’ என்பதாகும். ஊரில் எந்த மூளை-முடுக்கு,சந்து-பொந்தில் நடக்கும் நல்லது-கெட்ட விஷயங்கள் எதுவானாலும் கொஞ்சங்கூட பிசகாமல் இவர் எலிகாதுகள் எட்டிபிடித்து விடும். செய்தி கிடைத்த சில வினாடிகளில் போவோர் – வருவோர் - இருப்போர் எல்லோர் காதுகளையும் இவர் பிடித்து அந்த செய்தியை கிசுகிசுயென காதில் ஊதினால் தான் ‘பிறவிப் பயனை’ அடைந்த மனதிருப்தி அவருக்குஉண்டாகும்.
செய்தி ஊதி முடித்தபின் அவர் சொல்லும் கடைசி வார்த்தை ‘’இதை வெளியே யாரிடமும் சொல்லிப் புடாதே! உன்னிடம் மட்டும் தான் சொல்கிறேன். இதை மனசுக்குள்ளே பொத்தி வச்சுக்கோ!’’ என்பார் இவர் ஊதிய அந்த செய்தியே கேட்டவர்களில் இவர் நூற்றி ஏழாவது ஆஸாமி.
இப்போ நாமோ காது ஊதிகார் மீராசவை உட்டுட்டு காது கொடஞ்ஜான் கார் மீராசாவுக் குவருவோம். மம்மசங்கனி நெனச்சு பாக்காத கேள்வியை காது கொடஞ்சான் கார்மீராஸா கேட்டதும் அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் திணறிய மம்மசங்கனிக்கு திடிரென ஒரு ஐடியா பிறந்தது. ’’இன்னும் பிள்ளையை நான் தூக்கி பாக்கலே!’’ என்றான். ’’என்னடா? நேத்து சாங்காலம் வந்தேங்குறா?! ராத்திரிபூர புள்ளேயே பொண்டாடியை பாக்காமே என்னடா செஞ்சே?’’ என்றான்.
காது கொடஞ்சான் கார்மீராசா. ’நீ’ கேக்குறா? இது என்ன மாஷம் தெரியுமா? சபூர்களி மாசம். இந்த மாசத்துலே எந்தநல்ல காரியமும் செய்யப்புடாது. செஞ்சா விடியாது. இது எனக்கு மொத சபுறு. பொறந்தது தலேபுள்ளே. அதனாலே இந்த மாசம் நான் அங்கே போனால் காலம் முளுதும் கஸ்ட்டமும் சண்டை வம்புமா வந்து வந்துகிட்டேயிருக்கும். அதனாலே இன்னும் அஞ்சு நாள் செண்டு சபுர்களி மாஷம் முடிஞ்ஜதும் அடுத்த வியால கெலமே பின்னேரம் வெள்ளி கெலமே ராவு மக்ரிப்புக்கு பொறவு அந்த ஊட்டு நெலப் படியை பிஸ்மில்லா சொல்லி சோத்தங்காலாலே தாண்டி உள்ளே போய் புள்ளேயே தூக்கிபாரு’’ என்டு என் உம்மா சொன்னுச்சு. அதான் நான் இன்னும் பொண்ட்டாட்டி ஊட்டுக்கு போவலே’’ என்று மம்மசங்கனி ஒரு வாகா ஒரு பொய் சொல்லி காது கொடஞ்சான் கார்மீராசவை சமாளித்தான்.
தொடரும்...
S முஹம்மது பாரூக்
7 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய ஃபாரூக் மாமா,
ரொம்ப கேப் விட்டு வந்திருப்பதால் சுதி குறைந்திருக்குமோ என்று வாசிக்க ஆரம்பித்தால் அதே சுறுசுறு.
அந்த 'வசை' செம ஸ்ட்ராங்க்!
கேப் விடாம அடிங்க!
வஅலைக்கும்முஸ்ஸலாம்// மருமகன்சபீர்!சிலகாரணங்களால் இடைவெளி நீண்டுவிட்டது. வருந்துகிறேன். பின்னூட்டத்திற்குநன்றி.அஸ்ஸலாமுஅலைக்கும்.
//வாலேமீன் முள்ளு மீசை சீனி மீராஸா தாழை வெட்டும் நீண்ட அறுவாலே கையிலே எடுத்துக் கிட்டு ’//
மச்சான்! அந்த உண்மையான சீனிமீராசா எனக்கு நினைவுக்கு வந்துவிட்டார். அப்படியே அச்சு அசலாக
தூக்கலான தொடர்.
தொய்வில்லாமல் வந்தால் நல்லதே. உங்களின் உடல்நலமும் பேணிக் கொள்ளவும்.
//அல்லாவும் அவுலியாக்களும் நெருப்பு பத்தி ஊடு சாம்பலா போகமே காப்பாத்துனாங்கோ!//
நக்கலான அல்லது பாமரத் தனமான பேச்சாக இருந்தாலும், அதில் 'ஷிர்க்' கலந்துவிடாமல் கண்காணிப்பாக இருப்பதுவே நன்று.
அப்படியே வந்துவிட்டாலும், கதையில் வரும் அடுத்த பாத்திரம் அதைத் திருத்துவதாக இருக்கவேண்டும்! கவனிக்கவும்.
//////அல்லாவும் அவுலியாக்களும் நெருப்பு பத்தி ஊடு சாம்பலா போகமே காப்பாத்துனாங்கோ!////
திருத்தம் செய்யப்பட்டு விட்டது...!
ஃபாருக் காக்கா அவர்களைப் போன்றோர் இன்னும் கணினி தட்டச்சு செய்து அனுப்பிவைக்கும் இந்த பதிவுவு இதுவரை இங்கே இன்ன பிற சுவையான பதிப்பில் கோலோச்சிய சகோதரர்களிடம் இன்னும் நீங்களெல்லாம் ஏன் எழுதாமல் இருக்கிறீர்கள் என்பது கேட்பது போன்றுதான் இருக்கிறது அவர்களின் ஒவ்வொரு பதிவையும் பதிக்கும்போதும் வாசிக்கும் போதும் !
அறிஞர் அஹமது காக்கா அவர்களுடைய கருத்துக்கு இந்தத் தொடரின் பதிவாளர் என்னை அலைபேசியில் அழைத்துப் பதியச் சொன்ன கருத்தாவது.
இந்தக் கதை 1950 களில் நடப்பதாக சித்தரிக்கபடுகிறது. விழிப்புணர்வுகள் இல்லாத காலத்தை இது படம்பிடிக்கிறது மக்களின் பேச்சு வழக்குத் தமிழில் எழுதப்படுகிறது . அன்றைய மக்கள் மட்டுமல்ல இன்றைய மக்களும் கூட இவ்வாறு இன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் காரணத்தாலேயே இவ்வாறு அவுலியா என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டு எழுதப்பட்டுள்ளது. மேலும் இதில் பேய்ப்பெரளி போன்ற வார்த்தைகளும் மண்ணின் வழக்கு மொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இலக்கியத்தமிழில் எழுதினால் சுவை இருக்காது என்பதே பதிவாளரின் கருத்து.
மற்றபடி ஷிர்க்கை புகுத்தி எழுதுவது அவர்களது நோக்கமல்ல.
Post a Comment