அந்த இன்ப அதிர்ச்சி என்னவென்றால் புகைப்படத்தில் உள்ள இந்த அழகிய அல்லாஹுவின் பள்ளிவாசல்தான். பாங்கு ஓசை கேட்டுத்தான் பள்ளிக்கு தொழுவதற்குப் போவோம். ஆனால், இந்தப் பள்ளிவாசலைப் பார்த்ததும் மனம் தொழச் சொன்னது. அப்படி ஒர் அழகு பார்ப்பதற்கு தாஜ் மஹால் போன்று அற்புதமாக இருந்தது.
கொச்சின் ரோடு போக்குவரத்து நெருக்கடியான ஊர். ஆனாலும், சாலை விசாலமாக இருந்தது.கொச்சினைச் ‘சின்ன துபாய்’ என்று சொல்லலாம். அந்த அளவுக்குக் கட்டிடங்கள் பெருகி இருந்தது. கொச்சினில் "ஹலால் சாப்பாடு எங்கு கிடைக்கும்" என ஒரு 'இக்காவை' விளித்து சோதித்தபோது அரை கிலோ மீட்டரில் ஒரு அரபிக் ரெஸ்டாரென்ட் உள்ளது என்று சொல்லி வயிற்றில் 'சாயா வார்த்தார்' (வயிற்றில் பால் வார்ப்பது தமிழ் நாட்டுலதான்) அதன் பிறகு பத்து கண்களும் அரபிக் ரெஸ்டாரென்ட் எங்கு உள்ளது என்று ஆட்டோ போகஸ்சில் தேடி அலைந்து கண்டு பிடித்தது.
வண்டியை நிறுத்தியதும் நான்கு பேரும் இறங்கி போன மாயம் புரியவில்லை ஹோட்டல் உள்ளே ஏற்கனவே புகுந்து விட்டனர் நான் வண்டியை பார்க் செய்துவிட்டு போகும் போது மெனு கார்டை எடுத்து படித்துகொண்டு இருந்தார்கள். அரபிக் ஸ்டைல் சுட்ட கோழி இரண்டும் குசும்பாய் குபுசும் ஆர்டர் செய்தோம் நண்பருக்கு கிரேவி ஐட்டம் வேண்டும் என்று அடம் பிடித்ததால் ஒரு பெப்பர் சிக்கனும் ஆர்டர் செய்து விட்டு 'கொரைய சமயம்' வெயிட் செய்தோம் நாங்கள் மட்டும் அல்ல பக்கத்தில் வந்திருந்த அரபிகளும் தான்.
இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு நேராக கோவளம் பீச் இரவு 11:00 க்கு வந்தடைந்தோம் ஹோட்டல் தேடி அலைந்தே மணி 1 ஆகிவிட்டது பிறகு ஒரு பஞ்சாபி ஹோட்டலில் ரூம் போட்டு (பல்லே பலே பாங்டாவெல்லம் பார்க்கல) தங்கி விட்டு காலை கோவளம் பீச்சை நடந்து பார்க்கக் கிளம்பினோம் (நீண்ட பீச்சைச் சுற்றிப்பார்க்க முடியாதல்லவா) கிளம்பினோம் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த அந்த கோவளம் பீச் தற்போது தலைகீழ் மாற்றமாக இருந்தது எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் முளைத்து இயற்க்கை அழகை மறைத்து விட்டது போட்டோ எடுக்க கூட மனம் இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் எனும் ஊருக்குப் பயணப்பட்டோம்.
இந்த மாத்தூரில் இரண்டு மலைகளுக்கு இடையேவா பாலம் போட்டுள்ளார்கள் இது என்ன ஒரு செய்தியா? என்று நினைக்க வேண்டாம் இதுதான் செய்தியே காரணம் பாலம் என்றால் கிழே நீர் ஓடும் பாலத்தில் பஸ் ஓடும் ஆனால் இந்த பாலத்தில் நீர் ஓடும் பலத்தின் சைடில் நடக்க வேண்டி சிமென்ட் தட்டு போட்டு ஆள் போக வர சிறிய பாதை அமைத்து இருப்பார்கள்.
நான் இங்கு பல முறை போய் வந்துள்ளேன் முதல் முறை சென்ற போது அண்ணன் N.A.ஷாகுல் சாரும் வந்திருந்தார் பாலத்தில் நடந்து போய் கீழே பார்த்ததும் எங்களுக்கு தலை சுற்றியது அப்படி ஒரு உயரம் அண்ணன் NAS பாலத்தின் நடுவே போனதும் பயம் வந்து என் கையை பிடித்துக்கொண்டார் நானும் என்னை அறியாமல் அவர் கையை பிடித்துகொண்டேன் அப்படி ஒரு திரில்லிங் அந்த பாலத்தில். முதன் முதலில் போனபோது .எப்படி திரில்லிங் இருந்ததோ அதேபோல் எத்தனை முறை போனாலும் அதே திரில்லிங் இருக்கிறது அந்த பாலத்தில்.
இந்த மாத்தூர் பாலத்தினை கட்டிய விவரங்களை போட்டோ பார்க்கவும் இங்குச் சுற்றி உள்ள மலைகளில் செவ்வாழை மற்றும் அண்ணாசி பழம் விளைகின்றது இதன் சுவை வேறு எங்கும் நான் பாத்ததில்லை நான் எப்போது சென்றாலும் செவ்வாழை கட்டை வாங்கி வந்து வீட்டு கொல்லையில் வைத்து வாழையை வளர்த்து விடுவேன்.
இந்த முறை சென்றபோதும் வாழை கட்டை வாங்கி வந்தேன் அதோடு அங்கு ஒரு புதிய பழம் ஒன்றை பார்த்தேன் பலாப்பழம் போல் சிறிதாக இருத்தது துரியான் பலமும் அல்ல அதன் பெயர் மறந்து விட்டது பெயர் அறிந்தவர்கள் அதன் போட்டோ பார்த்துவிட்டு பெயரை பின்னுட்டம் இடவும் அதன் சுவை கொஞ்சம் புளிப்பும் இனிப்புமாக இருந்தது.
இந்த மாத்தூர் பாலத்தில் நடந்து போகும்போதே வெயிலும் மழையும் மாறி மாறி வரும் பாலத்தின் கீழும் நீர் ஓடும் பாலத்தின் மேலேயும் நீர் ஓடிக்கொண்டிருக்கும் நாங்கள் பாலத்தின் மேலே போய் பல போட்டோக்கள் எடுத்துக்கொண்டு மறுமுனையில் இருந்து பாலத்தின் கிழே வந்து ஓடிக்கொண்டிருந்த குளிர்ந்த நீரில் ஒரு நீண்ட குளியல் போட்டு பயணக்களைப்பைத் தீர்த்துக்கொண்டோம் இங்கு குளிப்பதில் வேறு ஒரு சுகமும் உண்டு சிறு சிறு மீன் குஞ்சுகள் நம் கால் பாதத்தை கொத்திக் கொண்டே இருக்கும் அதன் சுகத்தை அனுபவிக்க நீரின் உள்ளே கால்களை அசைக்காது இருக்கவேண்டும்.
மாத்தூர் தொடிப்பாலத்தை விட்டு பிரிய யாருக்கும் மனம் வரவில்லை நீண்ட நேரம் அங்கு இருந்துவிட்டு கன்னியாகுமரி நோக்கி பயணப்பட்டோம். இங்கே கன்னியாகுமரி வந்ததும் ஒரே ஜன நெருக்கடி எங்கு பார்த்தாலும் நெரிசல் இதை பார்த்ததும் ஊருக்கு கிளம்பி விடலாம் என்ற எண்ணம் ஏற்ப்பட்டது.
சரி வந்தது வந்து விட்டோம் விவேகனந்தர் பாறைக்கு போய் வரலாம் என்று படகுத்துறைக்கு போனால் அங்கு 4 மணிகெல்லாம் படகு போக்குவரத்து நிறுத்தப்படும் என்று சொல்லி விட்டார்கள்.
நண்பர்கள் கொஞ்சம் வீட்டிற்கு சாமான்கள் வாங்கலாம் என்று சொல்லி ஒரு காதி கிராஃப்ட் கடைக்குள் நுழைந்ததும் கண்ணில் பட்டது ஒரு உண்டியல் அது மரத்தால் இழைக்கப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது அதை பார்த்ததும் 'அலாவுதீன் காக்காவின் கடன் வாங்கலாம் வாங்க' என்ற கட்டுரையில் சேமிப்பு பற்றிச் சொன்னது நினைவு வந்து அங்கு இருந்த அழகிய உண்டியலை வாங்கிக்கொண்டு அங்கு இருந்து இரவு எட்டு மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு இரண்டு மணிக்கு நம் ஊர் வந்து சேர்ந்தோம் என்னதான் நாம் அழகான ஊர்களுக்கு போய் வந்தாலும் குப்பை கூளம் சாக்கடை நிறைந்த அந்த அதிரைப்பட்டினம் வந்ததும் மனதுக்கு ஒரு குதூகலம்தான். அப்படி என்னதான் ஈர்ப்பு உள்ளதோ இந்த அதிரைப்பட்டினத்தில் (அதை உங்க ஊட்டம்மாவிடம் கேளுங்கள் என்று யாரும் பின்னூட்டம் இட்டுவிடாதீர்கள்).
எவ்வளவு தூசி இருந்தாலும் அத்தனை அசெளகரியங்களிலும் நாம் வாழ்ந்த சின்ன வயதின் நினைவுகள் ஒட்டிக் கொண்டிருக்கிறது. சுற்றிப்பார்த்தது சொர்க்க பூமியானாலும் கவலை இல்லாமல் அலைந்த தெரு, புளியமரம், விளையாட்டுத் திடல், கடற்கரை, ரயில்வே ஸ்டேசன் அனைத்தையும் தனக்குள் பொக்கிசமாக வைத்திருப்பது என் அதிரைப்பட்டினம்தான். என்னைப் பொருத்தவரை எத்தனை முறை ஊருக்குள் வந்தாலும் அத்தனை முறையும் ஒரு விதமான இனம் புரியாத பரபரப்பான சந்தோசத்தை தருவது நம் ஊரின் தனிப்பெருமை.
அதிரைப்பட்டினத்தை தவிர்த்து எழுதுவது என்னால் முடியாத விசயம். நான் இன்னும் எத்தனை ஊர்களுக்கு வேண்டுமானாலும் எதிர்காலத்தில் போய் வரலாம், அத்தனையிலும் என் வேர்கள் இருக்கும் அதிரைப்பட்டினத்துக்கு நான் வரும் சந்தோசத்தை தராது. அந்த சந்தோசம் வார்த்தைகளுக்கு வசப்படாது.
தொடர் நிறைவுறுகிறது... :)
5 Responses So Far:
//அதிரைப்பட்டினத்தை தவிர்த்து எழுதுவது என்னால் முடியாத விசயம். நான் இன்னும் எத்தனை ஊர்களுக்கு வேண்டுமானாலும் எதிர்காலத்தில் போய் வரலாம், அத்தனையிலும் என் வேர்கள் இருக்கும் அதிரைப்பட்டினத்துக்கு நான் வரும் சந்தோசத்தை தராது. அந்த சந்தோசம் வார்த்தைகளுக்கு வசப்படாது.//
அருமை. //என் வேர்கள்// என்ற வார்த்தைகள் அனைவரின் உள்ளுணர்வு. சல்லிவேர்கள் எங்கே பரவினாலும் ஆணிவேர் அதிரையில்தானே இருக்கிறேது? அதனால்தான் ஊரின் நிலை கண்டால் கோபம் வருகிறது. நமது கோபம் சிலருடைய வருத்தத்தையும் சம்பாதித்துத் தருகிறது.
காலை புத்துணர்வுக்கு இன்னும் புத்துணர்வைத் தூண்டும் குளுகுளு படங்கள். பாராட்டுகிறேன்.
(பனிப்)புகைப் படங்கள் இப்போ வளைகுடாவில் நிறைய எடுக்கலாம் அவரவர்களின் மொபைலில் அதிகாலைப் பொழுதி போர்த்திருக்கும் பனிப்புகை மூட்டத்தை...
இருந்தாலும்... மூன்றாம் கண் பேசும் படம் ஒரு தனி அலாதிதான்... எப்போது மீண்டும் பேசும் !?
(பனிப்)புகைப் படங்கள் இப்போ வளைகுடாவில் நிறைய எடுக்கலாம் அவரவர்களின் மொபைலில் அதிகாலைப் பொழுதி போர்த்திருக்கும் பனிப்புகை மூட்டத்தை...
இருந்தாலும்... மூன்றாம் கண் பேசும் படம் ஒரு தனி அலாதிதான்... எப்போது மீண்டும் பேசும் !?
------------
வாசிக்க வாசிக்க நேசிக்கவும்.யோசிக்கவும் வைக்கிறது மூன்றாவது கண்! அபு.இபு காக்காவின் ஏக்கமும் என் ஏக்கமும் இன்ன பிறரின் ஏக்கமும் சாகுல் காக்கா காதில் விழுந்திருக்கும்!இன்னும்,இன்னும் வேண்டும் என மனம் வேண்டும்!
அந்தப் பழத்தின் பெயர் 'Egg Fruit'என்று நினைக்கிறேன். சும்மா சொல்லப்புடாது, முட்டையின் மஞ்சள் கரு போன்று இருக்கும்; ஆனால் இனிக்கும்!
இது Egg Fruit அல்லவாம். 'ஐனிச் சக்கை'யாம். என்னவள் சொன்னாள். 'சூப்பரா இருக்கும்' என்றும் சொன்னாள்! இன்ஷா அல்லாஹ், அடுத்த கேரளா விசிட்டில் 'பதம்' பார்த்துவிடுவோமே!
Post a Comment