நெஞ்சினிலே நித்தமுமாய்
நினைவலைகள்
வந்ததுவே வந்தனமாய் என்மனதில்
வஞ்சித்தவரும் வாழ்த்தியவரும்
நெஞ்சுக்குள்ளே
வனப்புடனே வாழ்ந்தவரோ
மண்ணுக்குள்ளே
தனை ஈன்ற தாய் தந்தையோ
உயிருக்குள்ளே
தாரமாகி எனைக் கவர்ந்தவள்
மனதுக்குள்ளே
கொஞ்சுதழிழை பயில்வித்த ஆசான்
உடலுக்குள்ளே
கொஞ்சிப்பேசும் குழந்தைகளோ
கண்ணுக்குள்ளே
கூவிப்போகும் குயிலினோசை
காதுக்குள்ளே
கூடிக்கூவி பழகிய நட்புக்கள்
உயிர்நாடிக்குள்ளே
அரும்பு மீசையில் விரும்பிய காதல்
ஆன்மாக்குள்ளே
அன்பென நினைத்து வம்பில் முடிந்தது
ஆசைக்குள்ளே
நாகாத்துப் பேசிட்டு நல்லாசி வழங்கியதும்
நாவுக்குள்ளே
முகர்ந்த மணமும் முகம்சுழிக்கும் வாசனையும்
மூக்குக்குள்ளே
பொல்லாரைப் புறந்தள்ளி பகையோரை வசைபாடியது
வாயிக்குள்ளே
படைத்திட்ட இறையோனை வணங்கிய தழும்பு
நெற்றிக்குள்ளே
பாச உறவுகளும் நேச ஊராரும்
உணர்வுக்குள்ளே
பாடிப்பறந்தவர் வெளிநாட்டில் அடைபட்டது
புத்திக்குள்ளே
இத்தனையும் புதைந்தனவே முத்துக்களாய்
மனதுக்குள்ளே
எதைமறப்பேன் எதைநினைப்பேன்
எனக்குள்ளே
இன்னுமுண்டு பல்லாயிரம் வகை
இதயத்துக்குள்ளே
இவையனைத்தையும் நினைத்திடனும்
இறப்புக்குள்ளே
அதிரை மெய்சா
2 Responses So Far:
அருமை அருமை!
வாசிக்க முடிந்தவைகள் அனைத்திலும் அங்கே அமர்ந்து கருத்திடவில்லையே தவிர... ஆனால் உங்கள் கவிதைகளின் கருவோடு வளரும் எண்ணங்களில் கலந்துதான் இருக்கிறேன்... கவிக் காக்காவோடும்... எப்போதும்...
Post a Comment