கருமுகில் பொழியும்
பெருமழை நீரென
தருமருள் எங்கள் இறைவா!
இருகரம் ஏந்தினோம்:
எம்முள் அடங்கா
இச்சைகள் இழுத்துச் செய்த
எண்ணில் அடங்கா
இழிச்செயல் பொறுத் தருள்வாய்!
பிள்ளைப் பிராயத்தில்
தொல்லை வடிவில் பிறர்க்கு
எல்லையின்றிச் செய்த பாவம்
இல்லை என்றாக்கு இறைவா!
பள்ளிப் பயின்ற காலங்களில்
சொல்லித் திரிந்த பொய்களுடன்
அள்ளித் தெளித்த வார்த்தைகளை
இல்லை என்றாக்கு இறையோனே!
அர்ப்பக் காரணங்களுக்கும்
சொற்ப நேரச் சுகங்களுக்கும்
சர்ப்பக் கடி விஷம்போல்
செப்பிய பொய்புரட்டுப் பொறு!
வாலிப முறுக்கில்
வழுக்கிச் சறுக்கிய பிழைகள்,
சூடேறிய இரத்தத்தால்
ஈடேறிய பாவங்கள் மன்னிப்பாய்!
கண்டெத்திய கேட்டினாலோ
கேட்டனுபவித்த கெடுதலாலோ
பேசிச்சுகித்த பிழைகளாலோ
கேடுகெட்ட எண்ணங்களாலோ
சுற்றிச் சூழ்ந்த பாவம் நீக்கு!
ஏட்டையோ எழுத்தையோ
பார்ப்பவனல்ல - நீ
இதயத்தையும் எண்ணங்களையும் பார்ப்பவன்!
பாடும் பாட்டின்
பாவம் பார்ப்பவனல்ல நீ - நாங்கள்
படும் பாட்டின்
பாவம் போக்குபவன்
எங்களின் பலவீனங்களை
பலங்களாய் மாற்று
செலவினங்களைச் சிக்கனமாக்கு
அழகிய முறையில்
விழைவதைக் கேட்பதையே
விரும்புபவன் நீ
அவ்வாறே முயன்றோம்
சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்து
எங்கள் துஆக்களை ஏற்பாய் இறைவா!
நிச்சயமாக நீயேமன்னிப்பவன்
மன்னிப்பதை விரும்புபவன்
எங்களையும் மன்னித்தருள்வாய் ரஹ்மானே
சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்
பெருமழை நீரென
தருமருள் எங்கள் இறைவா!
இருகரம் ஏந்தினோம்:
எம்முள் அடங்கா
இச்சைகள் இழுத்துச் செய்த
எண்ணில் அடங்கா
இழிச்செயல் பொறுத் தருள்வாய்!
பிள்ளைப் பிராயத்தில்
தொல்லை வடிவில் பிறர்க்கு
எல்லையின்றிச் செய்த பாவம்
இல்லை என்றாக்கு இறைவா!
பள்ளிப் பயின்ற காலங்களில்
சொல்லித் திரிந்த பொய்களுடன்
அள்ளித் தெளித்த வார்த்தைகளை
இல்லை என்றாக்கு இறையோனே!
அர்ப்பக் காரணங்களுக்கும்
சொற்ப நேரச் சுகங்களுக்கும்
சர்ப்பக் கடி விஷம்போல்
செப்பிய பொய்புரட்டுப் பொறு!
வாலிப முறுக்கில்
வழுக்கிச் சறுக்கிய பிழைகள்,
சூடேறிய இரத்தத்தால்
ஈடேறிய பாவங்கள் மன்னிப்பாய்!
கண்டெத்திய கேட்டினாலோ
கேட்டனுபவித்த கெடுதலாலோ
பேசிச்சுகித்த பிழைகளாலோ
கேடுகெட்ட எண்ணங்களாலோ
சுற்றிச் சூழ்ந்த பாவம் நீக்கு!
ஏட்டையோ எழுத்தையோ
பார்ப்பவனல்ல - நீ
இதயத்தையும் எண்ணங்களையும் பார்ப்பவன்!
பாடும் பாட்டின்
பாவம் பார்ப்பவனல்ல நீ - நாங்கள்
படும் பாட்டின்
பாவம் போக்குபவன்
எங்களின் பலவீனங்களை
பலங்களாய் மாற்று
செலவினங்களைச் சிக்கனமாக்கு
அழகிய முறையில்
விழைவதைக் கேட்பதையே
விரும்புபவன் நீ
அவ்வாறே முயன்றோம்
சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்து
எங்கள் துஆக்களை ஏற்பாய் இறைவா!
நிச்சயமாக நீயேமன்னிப்பவன்
மன்னிப்பதை விரும்புபவன்
எங்களையும் மன்னித்தருள்வாய் ரஹ்மானே
சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்
11 Responses So Far:
கருமுகில் பொழியும்
பெருமழை நீரென
தருமருள் எங்கள் இறைவா!
இருகரம் ஏந்தினோம்:
எம்முள் அடங்கா
இச்சைகள் இழுத்துச் செய்த
எண்ணில் அடங்கா
இழிச்செயல் பொறுத் தருள்வாய்!
பிள்ளைப் பிராயத்தில்
தொல்லை வடிவில் பிறர்க்கு
எல்லையின்றிச் செய்த பாவம்
இல்லை என்றாக்கு இறைவா!
பள்ளிப் பயின்ற காலங்களில்
சொல்லித் திரிந்த பொய்களுடன்
அள்ளித் தெளித்த வார்த்தைகளை
இல்லை என்றாக்கு இறையோனே!
அர்ப்பக் காரணங்களுக்கும்
சொற்ப நேரச் சுகங்களுக்கும்
சர்ப்பக் கடி விஷம்போல்
செப்பிய பொய்புரட்டுப் பொறு!
வாலிப முறுக்கில்
வழுக்கிச் சறுக்கிய பிழைகள்,
சூடேறிய இரத்தத்தால்
ஈடேறிய பாவங்கள் மன்னிப்பாய்!
கண்டெத்திய கேட்டினாலோ
கேட்டனுபவித்த கெடுதலாலோ
பேசிச்சுகித்த பிழைகளாலோ
கேடுகெட்ட எண்ணங்களாலோ
சுற்றிச் சூழ்ந்த பாவம் நீக்கு!
----------------------------------
ஆமீன்,ஆமீன் யாரப்புல் ஆலமீன்!
கருமுகில் பொழியும்
பெருமழை நீரென
தருமருள் எங்கள் இறைவா!
இருகரம் ஏந்தினோம்:
----------------------------
அல்லாஹ்வின் கருனை மழை வேண்டிடும் போதே அதனூடே பாவம் போக்க கேக்கும் பாவம்'பிடித்திருக்கு!ஒரு செயலை செய்ய தூண்ட எத்தனையோ நல்வழிகளுல் இத்தகைய அழகு வார்தை பின்னி படிப்பவருக்கும் அந்த செயல் பிடிக்கசெய்யும் பாவம்'பிடித்திருக்கு!இது நன்மை செய்ய இருகரம் ஏந்தும் பாவம்!'
எம்முள் அடங்கா
இச்சைகள் இழுத்துச் செய்த
எண்ணில் அடங்கா
இழிச்செயல் பொறுத் தருள்வாய்!
-----------------------------------
இழிச்செயலே ஈர்க்கும் விசவிசை!அதை நோக்கியே நம்மை உந்தும் இச்சை!இப்படி இரண்டிற்கும் ஓர் சகவாசம்!அது நம் வாழ்வின் நாசம்! கவனமாய் களைப்பட வேண்டிய சிக்கல்! இந்த சிக்கலான முடிச்சி அவிழ்க்கும் சூத்திர மந்திரம் ,தூஆவும்,பாவ மன்னிப்பும்!
பிள்ளைப் பிராயத்தில்
தொல்லை வடிவில் பிறர்க்கு
எல்லையின்றிச் செய்த பாவம்
இல்லை என்றாக்கு இறைவா!
----------------------------------
அறியா பருவமென்றாலும் அதுவும் பிறருக்கு தொல்லையில் முடிந்திருக்கும் நம் அறியா செயல்!அதை உணர்ந்து பிற்காலத்தில் கேட்டும் பாவ மன்னிப்பு! பக்குவதின் உயர்தன்மை!அது எல்லாரும் கடைப்பிடிக்க வரும் சமூகம் முன்னரே முழித்துக்கொள்ளும் இதுபோல் செய்யாமல் இருக்க!
அர்ப்பக் காரணங்களுக்கும்
சொற்ப நேரச் சுகங்களுக்கும்
சர்ப்பக் கடி விஷம்போல்
செப்பிய பொய்புரட்டுப் பொறு!
-------------------------------------
வார்தை கம்பீரம் கொண்டிருந்தாலும் அதில் சொல்லபட்ட பாம்பின் விஷம் போல்தான் அந்த பாவ செயல்கள்!அதுவும் அற்ப நேர சந்தோசத்துக்காக , நம் சுயனலத்திற்காக! கவனிக்கபட வேண்டிய கேக்கபட வேண்டிய மன்னிப்பு!
வாலிப முறுக்கில்
வழுக்கிச் சறுக்கிய பிழைகள்,
சூடேறிய இரத்தத்தால்
ஈடேறிய பாவங்கள் மன்னிப்பாய்!
----------------------------------------------
இந்த கால கட்டம் எல்லாரும் கடந்தவை இனி வருபவர்களும் கவனமுடன் கடக்க வேண்டியவை!எல்லாம் இன்ப மயம் என தெரியும் தோற்றபிழை அதிகம் நடக்கும் பருவம்!தனியே உலகம் தனக்கே சமைத்து அதில் செய்யும் செயல் எல்லாவற்றையும் சரியெனவே நம்பும்,விரும்பும் பருவம்!கண்டிப்பாக மன்னிப்பு கோரி அல்லாஹ்வின் கோபப்பார்வையிலிருந்து மீள்வோமாக!
ஏட்டையோ எழுத்தையோ
பார்ப்பவனல்ல - நீ
இதயத்தையும் எண்ணங்களையும் பார்ப்பவன்!
பாடும் பாட்டின்
பாவம் பார்ப்பவனல்ல நீ - நாங்கள்
படும் பாட்டின்
பாவம் போக்குபவன்
----------------------------------
நிரந்தரமானவன்!தெளிவானவன்,அதிபதி அல்லாஹ் மன்னிக்ககூடியவன்,தன்மையானவன்,அதே வேளை கண்டிபானவன்,தண்டிக்க கூடியவன்,
எங்களின் பலவீனங்களை
பலங்களாய் மாற்று
செலவினங்களைச் சிக்கனமாக்கு
அழகிய முறையில்
விழைவதைக் கேட்பதையே
விரும்புபவன் நீ
அவ்வாறே முயன்றோம்
சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்து
எங்கள் துஆக்களை ஏற்பாய் இறைவா!
நிச்சயமாக நீயேமன்னிப்பவன்
மன்னிப்பதை விரும்புபவன்
எங்களையும் மன்னித்தருள்வாய் ரஹ்மானே
----------------------------------------------------------
ஆமின்,ஆமின்,யாரப்புல் ஆலமீன்.
கவிஞரே!இதுபோல் அடிக்கடி ,அவசியம் தேவை !வாழ்த்துக்கள்!
எங்கும் நிறைந்தோனே!
இருகரம்
ஏந்துகிறேன் அல்லாஹ்!
சங்கை மிகுந்தோனே!
சஞ்சலம்
தீர்த்திடு யா அல்லாஹ்!
உன்னையன்றி யார்தான்
எனக்கு
உதவிடுவார் அல்லாஹ்
அன்பும் பண்பும்
ஆற்றல் நிறைந்தோனே
அருள்வாய் யாஅல்லாஹ்! -
=====================================================================
இ. எம் ஹனிபாவின் குரலில் இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் சபீர் அவர்களுக்கு,
பாவ மன்னிப்பிற்கான கவிதை அருமை.
இறையோன் நம் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பானாக. ஆமீன்.
ப. அஹ்மது அமீன் அமீரக துபையிலிருந்து.
Post a Comment