குடும்பன் குறிப்புகள்!

குடும்ப(ஸ்த)ன் பற்றிய
குறிப்புகளைச் சுருக்கி வரைக?

நீண்ட நியமக்காரனாம்
குடும்பன் குறிப்புகள்
சுருக்கி வரைதல்
சுலபமல்ல!

சில்லென்ற உணர்வு
சிலீரென வியாபிக்க
சின்னவளின் சிறுநீர்
துயிலெழுப்பும் பின்னிரவுகள்

சோற்றிலா குழம்பிலா
சமைத்து வைத்த சட்டியிலா
என
சொல்லிவிட முடியாதபடி
இழையோடும்
மனையாள் கூந்தல் உதிர்த்த
ஒற்றை நீள் உரோமம்
விரலில் சிக்கும் வினாடிகள்

சொற்பத் தொகை கூடுதலால்
தனக்கென
விருப்பப்பட்ட உடையை
வாங்காமல் தவிர்த்து,
மூத்தவள் முகவாட்டம்
பொறுக்க மாட்டாமல்
மும்மடங்கு விலையெனினும்
ஒப்பணைச் சாதனங்கள்
வாங்கித் தரும் வாஞ்சை

வயதேற்றும் வலிகளையும்
உடல் வதைக்கும் உபாதையினையும்
பொறுத்துப் புறக்கணித்து,
மணிநேர தலைவலி
மகனுக்கு வந்துவிடின்
மனம் சகிக்கா பரிதவிப்பு

உழைத்தலுக்கும் பணிச்சுமையோ
உறவழுத்தும் மனச்சுமையோ
தானேற்றுத் தானிருந்து
அன்பையும் அரவணைப்பையும்
விருப்பத்தையும் மட்டுமே
வீடு சேர்க்கும் அர்ப்பணிப்பு

கழுத்துப் பட்டி கடின் மடிப்பில்
சாயம் வெளுத்தச்
சட்டைகளைத் தானணிந்து,
கட்டியவள் மகிழ்ந்திருக்க
பட்டெடுக்கும் பதவிசு

கால் பதிந்து பள்ளமான -தன்
காலணியைத் துறக்க
கறாராய்க் கணக்குப் பார்த்து,
கண்மணியாம் பிள்ளைகட்கு
உடைகளுக்குப் பொருத்தமாக
நடையழகுக் காலணிகள்
வகைவகையாய் வாங்கித்தரும்

வாரயிறுதி நாட்களில்
ஊர் சுற்றிக்காட்டும்
உற்சாகமூட்ட
விளையாட்டில் செலவழிக்கும்

எஞ்சிய பீட்ஸாக்களும் -உருகி
மிஞ்சும் ஐஸ்க்ரீமும்
பிள்ளைகள் ஒதுக்கிவிட
காசுவிரயக் கணக்குப் பார்த்து
தான் தின்று தடுமாறும்
கூடிய கெட்டக் கொழுப்போடும்
எகிறிய இனிப்பு நீரோடும்

குடும்பன் குறிப்புகள்
ஆணாணுக்கு வேறுபடும்
குடும்பநலம் மட்டுமே
எவனுக்கும் வலிமை தரும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

33 கருத்துகள்

Ebrahim Ansari சொன்னது…

//கழுத்துப் பட்டி கடின் மடிப்பில்
சாயம் வெளுத்தச்
சட்டைகளைத் தானணிந்து,
கட்டியவள் மகிழ்ந்திருக்க
பட்டெடுக்கும் பதவிசு//

ரசித்தேன்.

ஒப்பிட்டேன் இப்படி
==================
பார்வையைத் தடுமாறவைத்த
பவர் மாறிய கண்ணாடியை
மாற்ற வைத்திருந்த பணத்தை
நடுவீட்டுக் காரியுடன்
நகைக்கடைக்குச் சென்று
தோடு தொங்கட்டான்
மாற்றிக் கேட்டதால்
செய்கூலி சேதாரத்துக்கு செலுத்திவிட்டு
தேய்ந்து போன கண்ணாடியையே
தினம் அணிந்து
சிரித்து சகிப்பான்
இன்னொரு வாய்ப்பை
எண்ணி இருப்பான்
கண்ணையே இழந்தாலும்
"கண்மணி" யை பராமரிப்பான்
புண் சிரிப்பே ஆனாலும் அவனுக்கு புன்சிரிப்பே
புன்னகையைப் பார்த்திருந்தால் போதாதோ?

Unknown சொன்னது…

Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer Abushahruk,

Nice poem on a typical "family guy". Beautifully narrated.

Thanks and regards,

B. Ahamed Ameen from Dubai.

sheikdawoodmohamedfarook சொன்னது…

தன்னைஎரித்து வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தி-ஒருகுடும்பஸ்தன். வாழ்க்கையில்இலைமறைகாயென மறைந்திருக்கும் உண்மைகளை கவிதைசொல்கிறது.வாழ்த்துக்கள்.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

உருக்கமான , உண்மை

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//எஞ்சிய பீட்ஸாக்களும் -உருகி
மிஞ்சும் ஐஸ்க்ரீமும்
பிள்ளைகள் ஒதுக்கிவிட
காசுவிரயக் கணக்குப் பார்த்து
தான் தின்று தடுமாறும்
கூடிய கெட்டக் கொழுப்போடும்
எகிறிய இனிப்பு நீரோடும்//

கவிதை மட்டுமல்ல... உருகும் உயிரோட்டம் !

Unknown சொன்னது…

ஆண்மை நிறைந்த ஆண்

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய இ.அ.காக்கா,

தாங்கள் கவிக்கும் காட்சிகளை மனக்கண்ணில் ஓடவிட்டேன். 'குடும்பன் குறிப்பு'களில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

குறிப்பாக,

//கண்ணையே இழந்தாலும்
"கண்மணி" யை பராமரிப்பான் //

என்னும் புனைவு, கவிஞர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு மட்டும் தோன்றுவது. 'கண்மணி' என்பது உன்னதமான உவமானம்.

நன்றி காக்கா.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

sabeer.abushahruk சொன்னது…

wa alaikkumussalam varah...

Dear thambi B.Ahamed Ameen,

Thanks for reading this posting and i am pleased that you like it.

i, somehow presumed that you would like it; assuming that, being a noble family man you could have come across those poetic moments.

Regards.

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய (ஃபாரூக்) மாமா,

வாசித்துக் கருத்திட நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி.

நூற்றுக்கணக்கில் குறிப்புகள் வரையும் தகுதிவாய்ந்த குடும்பஸ்தரான தங்கள் முன் நான் குறித்துத் தந்துள்ளவை கடுகளவே. இலைமறை காய் என்பதாலேயே இவ்வுளவியல் செய்திகளைப் பட்டும்படாமலும் சொல்லியிருக்கிறேன்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

நன்றி.

sabeer.abushahruk சொன்னது…

தம்பிகள் இப்னு அப்துர்ரஸாக, நட்புடன் ஜமால், அபு இபுறாகீம்,

வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

இப்னு அப்துர்ரஸாக்,

நெருக்கமானவர்களைப் பற்றி எழுதும் உண்மைகள் உருக்கமானதாகவே இருக்கும். கவிதையின் நோக்கத்தை கண்டுகொண்டுள்ளீர்கள், நன்றி.

அபு இபு, மேற்சொன்ன மறுமொழியே தங்கள் கருத்திற்கும்.

நட்புடன் ஜமால்,

இந்தக் கவிதையின் உயிர் இழையாக உங்கள் கருத்தைத்தான் சொல்வேன். இதன் மற்றுமொரு தலைப்பாகவே எடுத்துக் கொள்வேன்.

ஆண்மையின் அடிப்படை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதே நான் சொல்ல வந்ததுவும்.

"சின்னச்சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு-வைரமுத்து"

Shameed சொன்னது…

//கழுத்துப் பட்டி // முழு சட்டையும் பட்டியாய்(நாய்) இருக்கும்போது காலரும் பட்டியாய் மாறியதை அண்ணன் அறிவாரா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நல்ல மாப்பிள்ளை, நல்ல கவிதை!

அதிரை.மெய்சா சொன்னது…

குடும்பன் குடுப்புக்கள். பொறுப்பாக ஆராய்ந்து எழுதப்பட்ட பொக்கிஷக்குறிப்புகள். அருமை. அருமை.

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

//வயதேற்றும் வலிகளையும்
உடல் வதைக்கும் உபாதையினையும்
பொறுத்துப் புறக்கணித்து,
மணிநேர தலைவலி
மகனுக்கு வந்துவிடின்
மனம் சகிக்கா பரிதவிப்பு//

ஆம்‌ உன்மையாக தவிக்கிறேன்.இப்போ மகனின் மருத்துவத்திற்க்காக மதறாசில்.து செய்யுங்கள் காக்கா

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

வாசமலராய்
வாழ்கை மணக்கும்
வீசும் தென்றலாய்
விலகாது நிற்கும்
பேசிப் பழகினால்
பாசம் புரியும்
நேசித்து வாழ்ந்தால்
நெருக்கம் தெரியும்
வாசித்துப் பார்த்தால்
உருக்கம் புரியும்

sabeer.abushahruk சொன்னது…

ஹமீது, எம் ஹெச் ஜே, மெய்சா,

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

எல் எம் எஸ்,

தங்கள் மகன் பூரண நலம் பெற்று மீண்டு வர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக, ஆமீன்!

sabeer.abushahruk சொன்னது…

அன்பிற்குரிய கவியன்பன்,

//பேசிப் பழகினால்
பாசம் புரியும்
நேசித்து வாழ்ந்தால்
நெருக்கம் தெரியும்//

அருமை. இதை மேலும் வளர்த்தால் சிறப்பான கவிதை வாய்க்கும்.

நன்றி.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.கவிஞரே!முதலில் நன்றி!ஒவ்வொருவரின் ஆன்(ண்)மாவின் வாக்குமூலத்தின் ஒரு சரத்தை கவிதையாக சொன்னதற்க்காக!

crown சொன்னது…

குடும்ப(ஸ்த)ன் பற்றிய
குறிப்புகளைச் சுருக்கி வரைக?

நீண்ட நியமக்காரனாம்
குடும்பன் குறிப்புகள்
சுருக்கி வரைதல்
சுலபமல்ல!
-----------------------------------------
குடும்பஸ்தன்=இன்ப அவஸ்தைன்னும் சொல்லலாம்!அழகிய கண்ணீர் எனவும் மொழிபெயர்க்கலாம்!ஒரு வரைக்குள் அடக்கமுடியாத நெகிழ்வு ஓவியம்! இதில் என்னை பொருத்தி பார்க்குமுன் என் தந்தையை பொருத்தி பார்பதே சாலப்பொருத்தம் என்பது என் தனிப்பட்ட வாழ்வின் சாட்சி!அடையாளம்!

crown சொன்னது…

சில்லென்ற உணர்வு
சிலீரென வியாபிக்க
சின்னவளின் சிறுநீர்
துயிலெழுப்பும் பின்னிரவுகள்

-------------------------------
வாழ்கை பயணத்தில் சன்னல் வழி காற்று போல நிகழும் ஒரு வித உணர்வு!

crown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
crown சொன்னது…

சோற்றிலா குழம்பிலா
சமைத்து வைத்த சட்டியிலா
என
சொல்லிவிட முடியாதபடி
இழையோடும்
மனையாள் கூந்தல் உதிர்த்த
ஒற்றை நீள் உரோமம்
விரலில் சிக்கும் வினாடிகள்
----------------------------------
கூர்ந்து கடந்து போகும் பெருந்தன்மைக்கு சொன்தகாரன் என்பதையும் மனையாள் அவளின் அளப்பறிய சேவையை மனதார பாரட்டி அனுசரனை காட்டுபவனை இப்படி முடிச்சி போட்டு சொல்லும் லாவகம் அருமை!

crown சொன்னது…

சொற்பத் தொகை கூடுதலால்
தனக்கென
விருப்பப்பட்ட உடையை
வாங்காமல் தவிர்த்து,
மூத்தவள் முகவாட்டம்
பொறுக்க மாட்டாமல்
மும்மடங்கு விலையெனினும்
ஒப்பணைச் சாதனங்கள்
வாங்கித் தரும் வாஞ்சை
------------------------------------
தனக்கு விருப்ப உடையை வாங்கும் எண்ணத்தை தூக்கிப்போட்டு விட்டு அவளுடைய விருப்ப கூடுதல் விலைக்கூடிய ஒப்பனை பொருளை வாங்கும் வாஞ்சை!உன்(அப்பன்)ஒப்பனைபோல் வருமா என அவளே பெருமிதம் கொள்ளும் அளவிற்கு சிறப்புதரும்!.

crown சொன்னது…

வயதேற்றும் வலிகளையும்
உடல் வதைக்கும் உபாதையினையும்
பொறுத்துப் புறக்கணித்து,
மணிநேர தலைவலி
மகனுக்கு வந்துவிடின்
மனம் சகிக்கா பரிதவிப்பு
---------------------------
அனுபவப்பாடம் இங்கே! நான் பெற்றது எல்லாம் இங்கே! என்னை பெற்றவரிடத்தில் பெற்ற அன்பு!

crown சொன்னது…

உழைத்தலுக்கும் பணிச்சுமையோ
உறவழுத்தும் மனச்சுமையோ
தானேற்றுத் தானிருந்து
அன்பையும் அரவணைப்பையும்
விருப்பத்தையும் மட்டுமே
வீடு சேர்க்கும் அர்ப்பணிப்பு
--------------------------------------
தாய்மையை சுமக்கும் ஆண்மை! அல்லாஹ் எல்லா நல்ல ஆண்மைக்கும் கூலிதருவானாக ஆமீன்!

crown சொன்னது…

/கழுத்துப் பட்டி கடின் மடிப்பில்
சாயம் வெளுத்தச்
சட்டைகளைத் தானணிந்து,
கட்டியவள் மகிழ்ந்திருக்க
பட்டெடுக்கும் பதவிசு//

ரசித்தேன்.

ஒப்பிட்டேன் இப்படி
==================
பார்வையைத் தடுமாறவைத்த
பவர் மாறிய கண்ணாடியை
மாற்ற வைத்திருந்த பணத்தை
நடுவீட்டுக் காரியுடன்
நகைக்கடைக்குச் சென்று
தோடு தொங்கட்டான்
மாற்றிக் கேட்டதால்
செய்கூலி சேதாரத்துக்கு செலுத்திவிட்டு
தேய்ந்து போன கண்ணாடியையே
தினம் அணிந்து
சிரித்து சகிப்பான்
இன்னொரு வாய்ப்பை
எண்ணி இருப்பான்
கண்ணையே இழந்தாலும்
"கண்மணி" யை பராமரிப்பான்
புண் சிரிப்பே ஆனாலும் அவனுக்கு புன்சிரிப்பே
புன்னகையைப் பார்த்திருந்தால் போதாதோ?
-- நன்றி: கவிஞர்,எழுத்தாளர்,ஞானி இ.அ.காக்கா!

crown சொன்னது…

கால் பதிந்து பள்ளமான -தன்
காலணியைத் துறக்க
கறாராய்க் கணக்குப் பார்த்து,
கண்மணியாம் பிள்ளைகட்கு
உடைகளுக்குப் பொருத்தமாக
நடையழகுக் காலணிகள்
வகைவகையாய் வாங்கித்தரும்
------------------------------
இங்கே இந்த குடும்பஸ்தன் உயர்ந்து நிற்கிறான்!தனக்கென சின்ன காலனி(பகுதி)வாங்கிய சந்தோசம்! பிள்ளைகள் மகிழ்வாய் நடக்க பல இன்னல்கள் கடக்கிறான்!

crown சொன்னது…

//எஞ்சிய பீட்ஸாக்களும் -உருகி
மிஞ்சும் ஐஸ்க்ரீமும்
பிள்ளைகள் ஒதுக்கிவிட
காசுவிரயக் கணக்குப் பார்த்து
தான் தின்று தடுமாறும்
கூடிய கெட்டக் கொழுப்போடும்
எகிறிய இனிப்பு நீரோடும்//

கவிதை மட்டுமல்ல... உருகும் உயிரோட்டம் !

crown சொன்னது…

குடும்பன் குறிப்புகள்
ஆணாணுக்கு வேறுபடும்
குடும்பநலம் மட்டுமே
எவனுக்கும் வலிமை தரும்!
----------------------------------------------
உருக்கமான உண்மை!,ஆண்மை நிறைந்த ஆண்

sabeer.abushahruk சொன்னது…

அன்பிற்குரிய க்ரவ்ன்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல்லா சம்ஸாரிகளுக்கும் பொருந்தும் குறிப்புகளை விரும்பி வாசித்து விலாவாரியாக க்ரவ்னுரை வழங்கியதற்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

Riyaz Ahamed சொன்னது…

சலாம் குடும்ப குறிப்பு உண்மையான குடும்ப தலைவன் நிலை இது தான் சொல்வன்னம் தனி அழகு தான்

sabeer.abushahruk சொன்னது…

ரியாஸு

வன்ட்டியா?

கடைசி பஸ்ல எப்டியும் வந்த்டுவேன்னுவே தெரியும் ; வன்ட்டியே!!!

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சபீர் காக்கா,

தாமதத்திற்கு மன்னிக்கவும்.

வாசித்த அன்றே கருத்திட இருந்தேன், ஆனால் முடியவில்லை.

//கால் பதிந்து பள்ளமான -தன்
காலணியைத் துறக்க
கறாராய்க் கணக்குப் பார்த்து,
கண்மணியாம் பிள்ளைகட்கு
உடைகளுக்குப் பொருத்தமாக
நடையழகுக் காலணிகள்
வகைவகையாய் வாங்கித்தரும்//

இந்த வரிகள் வெளிநாட்டில் வாழும் அனைவரும் குடும்பனின் குறிப்பிலும் உள்ளவை என்பதை யாரும் மறுக்க இயலாது.

குடும்பனுக்கு என்னதான் வலிகள் நிறைய இருந்தாலும், குடும்ப நலன் என்ற எண்ணமே அந்த வலிகளுக்கு நிவாரணி..

ஜஸக்கல்லாஹ் ஹைர் காக்கா.