நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தென்தமிழகக் கடற்கரையோர திமிங்கலச் சாவுகள் ஏன்? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஜனவரி 15, 2016 | , , , ,

திமிங்கலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கி தற்கொலை செய்து கொள்வது அவ்வப்போது உலகில் பல பகுதிகளில் நடப்பது தான். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி பகுதியிலும் இது நடந்திருக்கிறது. Mass Stranding மற்றும் Beaching என்றெல்லாம் இதற்கு வேறு பெயர்கள் உண்டு. இந்தியக் கடற்கரைகளில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் இது நடந்திருக்கிறது. வருடத்துக்கு ஒரு நிகழ்வாவது இம்மாதிரி நடப்பதுண்டு.

ஏன் இவை இப்படிக் கூட்டமாய் தங்களை மாய்த்துக் கொள்கின்றன என்பது குறித்து தெளிவான முடிவுகள் இல்லை. ஆனால் இந்நிகழ்வுகள் நடந்த சூழல் குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் நிறைய காரண காரியங்களைக் கூறுகிறார்கள்.

1. திமிங்கலங்கள் கூடமாய் வாழும். நாற்பது அம்பது சேர்ந்து இருக்கும் ஒரு கூட்டத்துக்கு pod என்று பெயர். பெரிய pod இல் நூறு வரை இருக்கலாம். மில்லியன் கணக்கில் இருக்கும் சின்ன மீன் தொகுதிகளோடு ஒப்பிடும் போது திமிங்கலக் கூட்டத்தின் எண்ணிக்கை சிறியது தான். கூட்டத்துக்கு ஒரு தலைவன் இருப்பான். சிலநேரங்களில் தலைவர் தவறான வழியில் சென்றால் மற்றவர்களும் அதனைத்தொடர்ந்து செல்வதால் இது போன்று ஏற்படுகிறது.

2. கூட்டத்தின் தலைவனுக்கு உடல் உபாதை ஏற்படும்போது, தளர்ச்சியடைந்து, ஆழ்கடலில் தாக்குப் பிடிக்க முடியாமல் கரையை நோக்கி வரும். ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, தலைவனைப் பின்பற்றி மற்ற திமிங்கலங்கள் கரையை நோக்கி நீந்தி வரும்.

3. ஆழ்கடலில் கடலதிர்வு (Sea Quake ) ஏற்படும்போது அதன் ஓசை மற்றும் பிற மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டு அல்லது பயந்து வேறு திசையில் வேகமாகப் பயணிக்கும்போது இதுபோன்று ஏற்படும்.

4. ஆழ்கடலுக்கு மட்டுமே அதன் உடல் உகந்தது. கரையை நோக்கி வர வர தண்ணீரின் வெப்பநிலை அதிகரிப்பதால் அதனால் தாக்குப் பிடிக்க முடியாது. அதுபோலவே கரைப் பகுதியில் அடிக்கும் பெரும் அலைகளையும் அவற்றால் தாக்குப் பிடிக்க முடியாது. எனவே ஆழ்கடலில் இருந்து நடுக்கடலுக்கு வந்தாலே ரிஸ்க் தான். அதையும் தாண்டி Shallow seas க்கு வந்துவிட்டால் மீனவர்களின் உதவியுடன் அவை திருப்பி விடப்படவிட்டால் சாவு நிச்சயம்.

5. நேற்றைய நிகழ்வில் செத்துக் கிடக்கும் திமிங்கலங்களைப் பார்த்தால் அவை Pilot ரகம் போன்று எனக்குத் தெரிகிறது. பைலட் அதிகளவு ஆழ்கடலில் மட்டுமே இருக்கும் திமிங்கலம். Orca எனப்படும் Killer Whales கரையிலும் கொஞ்சம் தாக்குப்பிடித்து திரும்பப் போகும். மேற்கூறிய காரணங்களில் ஏதோ காரணத்தால் ஆழம் குறைந்த பகுதிக்கு வந்து நாட்கணக்கில் அவஸ்தைப் பட்டு மாண்டு கரையில் ஒதுங்கியிருக்கும். சிலவற்றை மீனவர்களும் அரசும் இணைந்து கடலுக்குள் திருப்பி விட்டிருக்கிறார்கள்.

6. கூடங்குளம் அணு உலைக் கழிவால் இது நடந்திருந்தால் ஆழ்கடலில் இருக்கும் ஒரே ஒரு மீனை மட்டும் அது பாதிக்காது. கோடிக்கணக்கில் கடல்மீன் செத்து மிதந்திருக்கும். அது மட்டுமின்று மீனவர்களால் திருப்பி விடப்பட்ட திமிங்கலங்கள் பாதுகாப்பாக திரும்பிச் சென்றதன் மூலம் இவை Stranding அல்லது Beaching என்றே கொள்ள முடிகின்றது.

பின்குறிப்பு:

அணுஉலை பாதுகாப்பு தனி டாபிக். இரண்டையும் இந்த நேரத்தில் கலக்கிறோம் என்றே தோன்றுகிறது. ஒரு சின்ன மழை பெருமழையாக உருவெடுத்து 500 பேரைக் காவு வாங்கி நீர்நிலைகளைத் திணறச் செய்தபோது ஒன்றுமே செய்யாத அரசுகள் அணு உலையில் ஏதாவது நடந்தால் மக்களைக் காப்பாற்றும் என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கு ஒரு Two Minute Silence :)

Peer Mohamed

6 Responses So Far:

Adirai Ahmad சொன்னது…

விவேகமுள்ள பதிவு! விவரமான பதிவு! விசேஷமான பதிவு!
இறுதிப் பத்தி, ஆட்சியாளர்களின் அறிவைச் செம்மைப்படுத்தட்டும்!

sheikdawoodmohamedfarook சொன்னது…

திமிங்கலம் பற்றியதெளிவானபதிவு.பாராட்டுக்கள்

Shameed சொன்னது…

//கூடங்குளம் அணு உலைக் கழிவால் இது நடந்திருந்தால் ஆழ்கடலில் இருக்கும் ஒரே ஒரு மீனை மட்டும் அது பாதிக்காது. கோடிக்கணக்கில் கடல்மீன் செத்து மிதந்திருக்கும்.// அருமையான விளக்கம்.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.அணு உலை கதிர்களோ,வேறு அமிலங்களோ திமிங்கலச்சாவுக்கு காரணமில்லை எனும் தெளிவான விளக்கம் அருமை!இறுதி பாரா,பாராமுகம் கொண்ட அரசியல்வாதிகளைப்பற்றிய விழிப்புணர்வு!

Yasir சொன்னது…

அதானே அதெப்படி திமிங்கலம் மட்டும் சாகும்...சாட்டையடி பதிவு தெளிவான விளக்கம்

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+