Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 029 2

அதிரைநிருபர் பதிப்பகம் | April 01, 2016 | ,


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

உலக பற்றியின்மையின் சிறப்பு உலக சுகங்களை குறைத்துக் கொள்ள ஆர்வமூட்டல், ஏழ்மையின் சிறப்பு

இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தி இருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பகலிலோ அதற்கு (பூமிக்கு)கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம். (அல்குர்ஆன்: 10:24)

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன்: 18:46)

விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.'' என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில்  (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன்:57:20)

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.(அல்குர்ஆன்: 3:14)

மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்), அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம். (அல்குர்ஆன்: 35:5)

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. அவ்வாறில்லை! அறவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள். அவ்வாறில்லை நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள். பின்னர் மிக உறுதியாக அறிவீர்கள். பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 102:1-7)

இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை மறுமை வாழ்வு தான் வாழ்வாகும், அவர்கள் அறியக் கூடாதா? (அல்குர்ஆன் : 29:64)

'' ...நீங்கள் சுபச்செய்தி கேளுங்கள். உங்களை மகிழ்வுறச் செய்யும் செய்தியைப் பெறுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ஏழ்மை உங்களிடம் ஏற்படுவதை நான் பயப்படவில்லை. எனினும், உங்களுக்கு  முன் இருந்தோருக்கு வசதியாக ஆக்கப்பட்டது போல் உங்களுக்கும் இந்த உலகம் வசதியாக்கப்படுவதையே நான் பயப்படுகிறேன். மேலும் அதில் அவர்கள் பெருமை கொண்டது போல், நீங்களும் அதில் பெருமை கொண்டு இருப்பதையும், அவர்களை அது அழித்தது போல் உங்களை அது அழித்து விடும் என்பதையுமே (நான் பயப்படுகிறேன்)'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 457)

''நபி(ஸல்) அவர்கள் மேடையில் (மிம்பரில்) உட்கார்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்களும் உட்கார்ந்தோம். அப்போது அவர்கள், ''எனக்குப் பின் உங்களிடையே உலக வசதி அதிகமாக்கப்படுவதைக் கண்டு நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 458)

''இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை (நிரந்தரம்) இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் (பிரார்த்தனைச் செய்யும்போது) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 459)

''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 461)

''உலக வசதிகளை அனுபவித்த ஒருவர் மறுமையில் நரகவாசிகளில் ஒருவராக கொண்டு வரப்பட்டு, நரகில் ஒரே மூழ்காக முக்கி எடுக்கப்படுவார். ''ஆதமின் மகனே! நீ நல்லதை எதையும் பார்த்ததுண்டா? உன்னிடம் சுகமான வாழ்வு வந்ததுண்டா?'' என்று கேட்கப்படும். (அவன் உலகில் கிடைத்ததை வேதனை காரணமாக மறந்து) ''இல்லை, இறைவா'' என்பான். அடுத்து உலகில் மனிதர்களிலேயே மிக கஷ்டமான ஒருவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக கொண்டு வரப்படுவார். அவரை சொர்க்கத்தினுள் அனுப்பி, (வெளியே) கொண்டு வரப்பட்டு, அவரிடம், ''நீ சிரமத்தைக் கண்டதுண்டா? உன்னிடம் துன்பம் வந்ததுண்டா?'' என்று கேட்கப்படும். (அவர் சொர்க்கத்தின் சுகம் அறிந்து தன்னை மறந்து) 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, என்னிடம் சிரமம் வந்ததுமில்லை. நான் துன்பத்தை கண்டதுமில்லை என்று கூறுவார் என நபி(ஸல்)கூறினார்கள்.    (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 462)

''மறுமை விஷயத்தில் இவ்வுலகம் என்பது, உங்களில் ஒருவர் தன்விரலை கடலில் வைத்து, அதில் எவ்வளவு தண்ணீர்; உள்ளது என்பதைப் பார்ப்பது போல் தானே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முஸ்தவ்ரித் இப்னு ஷத்தாத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 463)

''நபி(ஸல்) அவர்கள் கடை வீதிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களின் இரு புறத்திலும் இருந்தனர். அங்கே செத்த சிறிய காதுடைய ஆடு கிடந்தது. அதை நெருங்கி, அதன் காதைப் பிடித்துத் தூக்கி, 'உங்களில் எவர் இதை சில திர்ஹம்களுக்கு விலைக்குப் பெறுவதை விரும்புகிறவர்? என்று நபி(ஸல்) கேட்டார்கள். ''நாங்கள் விரும்ப மாட்டோம். எங்களுக்கு எந்த தேவையும் இதனால் இல்லை. இதை வாங்கி நாங்கள் என்ன செய்வது?'' என்று நபித்தோழர்கள் கூறினர். ''இந்த ஆடு உங்களுக்குப் பயன்படும் என விரும்புகிறீர்களா? என்று மீண்டும் நபி(ஸல்) கேட்டார்கள். ''அல்லாஹ்வின் மீது சத்தியமாகஉயிருடன் அது இருந்தாலும் காது சிறுத்த குறையுள்ளதாக அது உள்ளது. இது இப்போது இறந்து விட்ட நிலையில் எதற்குப் பயன்படும்?'' என்று நபித்தோழர்கள் கூறினர். ''அல்லாஹ்வின் மீது  சத்தியமாக, இந்த ஆடு உங்களிடம் (மதிப்பற்றதாக) இருப்பதைப் போல் அல்லாஹ்விடம் மதிப்பற்றதாக இந்த உலகம் உள்ளது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 464)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
  
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
 அலாவுதீன் S.

2 Responses So Far:

sabeer.abushahruk said...

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்

Adirai pasanga😎 said...

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

ஆழ்ந்த கருத்துக்கள் , அருமயான போதனைகள் சிந்தித்து செயல்படுபவர்கட்கு ஒன்று போதும். யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டுவாயாக.

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு