அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
கொடையளித்தல், அல்லாஹ்வை பயந்து நல்ல வழிகளில் செலவு செய்தல்:
நீங்கள்
எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். (அல்குர்ஆன்: 34:39)
நல்லவற்றில்
நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக
வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 2:272)
நீங்கள்
எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன் : 2:273)
'மூன்று செய்திகளை உங்களிடம் நான் சத்தியமிட்டுக்
கூறுகிறேன். அதை நீங்கள் பேணிக் கொள்ளுங்கள். 1) தர்மம் செய்வது, ஒரு மனிதனின் சொத்தை குறைத்து விடாது. 2) அநீதம் செய்யப்பட்ட ஒருவன் அது
விஷயமாக அவன் பொறுமையாக இருந்தால், அவனுக்கு
அல்லாஹ் கண்ணியத்தை அதிகப்படுத்தாமல் இருப்பதில்லை. 3) யாசகத்தின் வாசலை ஒருவன் திறந்து கொண்டால், ஏழ்மையின் வாசலை அல்லாஹ் திறக்காமல்
இருப்பதில்லை.
இன்னும்
உங்களுக்குச் சில செய்திகளைக் கூறுகிறேன். அதை நீங்கள் பேணிக் கொள்ளுங்கள். நிச்சயமாக
உலகம், நான்கு
பேர்களுக்கு மட்டும்தான்.
1) ஒருவனுக்கு அல்லாஹ் சொத்தையும், அறிவையும் வழங்குகிறான். அவன்
இது விஷயமாக தன் இறைவனைப் பயப்படுகிறான். தன்னுடன் அவனின் உறவினர்களை சேர்க்கிறான்.
மேலும் அல்லாஹ்விற்குரிய கடமைகளை அறிகிறான். இவன், உயர்ந்த பதவிகளில் உள்ளான்.
2) ஒருவனுக்கு அல்லாஹ் அறிவை வழங்கி உள்ளான். சொத்தை
அவனுக்கு வழங்கிவிடவில்லை. அவன் உண்மையான எண்ணமுடையவன், 'எனக்கு சொத்து இருந்தால், நானும் இவனைப் போன்று செயல்படுவேன்' என்று கூறுகிறான். இதுவே இவனது
எண்ணமுமாக உள்ளது. எனவே இருவரின் கூலியும் சமமாகும்.
3) ஒருவனுக்கு அல்லாஹ் சொத்தை வழங்கி உள்ளான். ஆனால்
அறிவை அவனுக்கு வழங்கிடவில்லை. அறிவின்றி அவனது சொத்தில் அவன் மூழ்கிக் கிடந்தான்.
அவன் தன் இறைவனை பயப்படவில்லை. தன் உறவினரையும் அவன் சேர்க்கவில்லை. அல்லாஹ்விற்குரிய
கடமைகளையும் அவன் அறிந்திடவில்லை. இவன் மிக கீழான தகுதியில் உள்ளான்.
4) ஒருவனுக்கு அல்லாஹ் சொத்தையும், அறிவையும் வழங்கவில்லை. 'எனக்கு சொத்து இருந்தால், இவனைப் போன்று (தீய) செயல்களை
நானும் செய்வேன்' என்று கூறுகிறான்.
அவன் தன் எண்ணப்படி உள்ளான். இவ்விருவரின் தண்டனையும் சமமானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகபஷா என்ற உமர் இப்னு ஸஹ்துல் அன்மாரீ (ரலி) அவர்கள்
(திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 557)
'உன் (பணப்பையை) முடிச்சுப் போட வேண்டாம். அவ்வாறு
(செய்தால்) உனக்கு எதிராக (அல்லாஹ்வினால்) முடிச்சுப் போடப்படும்'' என்று என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மற்றொரு
அறிவிப்பில், ''நீ செலவு
செய்! நீ எண்ணி (செலவு) செய்யாதே! அல்லாஹ் உனக்கு எதிராக எண்ணிக் கொடுத்து விடுவான்.
நீ (செலவு செய்யாமல்) தடுத்துக் கொள்ள வேண்டாம். அல்லாஹ் உனக்கு எதிராக தடுத்து விடுவான்
என்று உள்ளது.'' (அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 559)
'கஞ்சனுக்கும், செலவு செய்பவனுக்கும் உதாரணம், உருக்குச் சட்டையை தங்களின் நெஞ்சிலிருந்து, தொண்டைக்குழி வரை அணிந்துள்ள இருவரின்
உதாரணம் போலாகும். செலவு செய்பவன், செலவு செய்யும்
போது அந்த உருக்குச் சட்டை அவனது (கால்) விரல்களை மறைத்து, அவனது பாதத்தின் அடிச்சுவட்டையும் மறைத்து தோல் முடியையும்
மூடி விடுகிறது. கஞ்சன், எதை செலவு
செய்தாலும் அவனது உருக்குச் சட்டையின் ஒவ்வொரு வளையமும் அந்தந்த இடத்தை ஒட்டிக்கொள்கிறது.
அவனோ அதை விரிவாக்க விரும்புகிறான். அதுவோ விரிவாவதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 560)
'தூய்மையான (பொருளின் தர்மத்)தைத் தவிர அல்லாஹ் ஒப்புக்
கொள்ள மாட்டான் என்பதால் தூய்மையான உழைப்பின் மூலம் உள்ள ஒரு பேரீத்தம் பழத்தின் பணத்தை ஒருவன் தர்மம் செய்தால், நிச்சயமாக அல்லாஹ் அதை தன் வலது கையால் ஏற்றுக் கொள்கிறான்.
பின்பு உங்களில் ஒருவர் தன் குதிரைக் குட்டியை உயரமாக ஆகும் அளவுக்கு வளர்ப்பது போல், தர்மம் செய்தவருக்காக அந்த தர்மத்தை
(மலை போல் நன்மையை) வளர்க்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 561)
வனாந்திர பூமியில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, மேகத்தில் ''இன்னாரின்
தோட்டத்திற்கு நீர் வழங்கு'' என்ற
சப்தத்தைக் கேட்டார். உடனே அந்த மேகம் நகர்ந்து சென்று, தன் தண்ணீரை கறுப்புக் கற்கள் நிறைந்த பூமியில்
கொட்டியது. அதன் ஓடைகளில் ஓர் ஓடை, அந்த தண்ணீர் முழுவதையும் கொண்டு சென்றது. உடனே அந்த மனிதர் தண்ணீரைத் தொடர்ந்து ஓடினார். அப்போது தண்ணீர் சென்றடையும் தோட்டத்தில் ஒருவர்
நின்று கொண்டிருந்தார். தன் மண் வெட்டியால் தண்ணீரைத் திருப்பிக்
கொண்டிருந்தார். இவர் அவரிடம், ''அல்லாஹ்வின் அடியாரே! உன்
பெயர் என்ன? என்று கேட்டார். 'இன்னார்' என
அவர் கூறினார். அந்த பெயர், மேகத்தில் கேட்ட பெயர் போலவே இருந்தது. ''அல்லாஹ்வின் அடியாரே! என்
பெயர் பற்றி ஏன் கேட்கிறீர்?'' என்று
கேட்டார். இந்த தண்ணீரைத் தந்த
மேகத்தில் ''இன்னாரின்
தோட்டத்திற்கு தண்ணீர் வழங்கு!' என
ஒரு சப்தத்தைக் கேட்டேன். அது உங்கள் பெயராக
இருந்தது. நீர் என்ன (நற்செயல்) செய்கிறீர்?'' என்று கேட்டார். ''நீ கேட்டு விட்டதால் அதை நான் வெளியே கூறும் நிலையில்
உள்ளேன். (கிடைக்கும்
விளைச்சலை மூன்று பங்காக்கி) அதில் ஒன்றை தர்மம்
வழங்குவேன். மற்றொன்றை நானும், என் குடும்பத்தாரும் சாப்பிடுவோம். மற்றொன்றை இதிலேயே (மறு
விளைச்சலுக்குப்) போடுவேன் என்று
கூறினார். இதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 562)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன் S.
16 Responses So Far:
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா...
அழகிய ஹதீஸ் தொகுப்பு ஜஸாக்கல்லாஹ் ஹைர் அலாவுதீன் காக்கா
குரான் என்னும் அற்ப்புத விளக்கின் மூலம் தர்மத்தின் உயவர்வை வெளிச்சம்
போட்டுக்கொண்டிருக்கும் அலாவுதீன் அவர்களே !
ஹதீதின் மூலமும் சில அற்ப்புத தர்மத்தின் உயர்வான விஷயங்கள் வெளிப்படுவது குறித்து மிக்க மகிழ்ச்சி.
இரண்டையும் ஒருசேரக்கொண்டு செல்வீர்கள் என்ற அளவிட முடியா சந்தோசத்துடன் மேலும் மேலும் தர்மத்தை தூண்டும் நிகழ்வுகளை
தங்களிடமிருந்து எதிர்பார்க்கும்,
அபு ஆசிப்.
அழகான பதிவு தந்தமைக்கு ஜஸாக்கால்லாஹ் ஹைர்!
ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை. தொகுத்த உங்களுக்கு அல்லாஹ் நலமும் மகிழ்வும் தருவானாக சகோதரர் அலாவுதீன் அவர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ் அருமையான மருந்து காக்கா ஜஜக்கல்லாஹ் ஹைரா.
அன்புள்ளம் கொண்ட அதிரை நிருபர் குழுவினர்க்கும்.இத் தளத்தில் எழுத்தாற்றலை பரத்திக்கொண்டிருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கும்.ஓன்று விடாமல் சேகரித்துக் கொண்டிருக்கும் பாசத்திரிக்குரியவர்களுக்கும்.பல மாதங்களுக்குப் பிறகு ஸலாத்தினை கூறியவனாக தாங்கள் அனைவரின் உடல் நலத்தினை அறிய ஆவல் கொண்டவனாக.
அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
லெ.மு.செ.(அ) வருகை சந்தோஷமாக இருக்கு... ஜஸாகல்லாஹ் !
அமைதியற்ற உள்ளத்திற்கு அற்புத அருமருந்து
படித்து மட்டுமே விட்டுவிடாமல் செயலில் வந்தால்தான் எம்மருந்தும் வேலை செய்யும் அதுபோலவே இம்மருந்தும்.
யா அல்லாஹ் சொல்லும் செயலும் ஒன்றாக இருந்த சன்மார்க்கத் தூதர் அவர்தம் சத்திய தோழர் வ்ழியில் நாங்களும் இருக்க நேர்வழி காட்டி நல்லருள் புரிவாயாக.
அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
லெ.மு.செ.(அ) வருகை எங்களுக்கெல்லாம் ஒரு உத்வேகம் ஜஸாகல்லாஹ் !
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ் அருமையான மருந்து காக்கா ஜஸாகல்லாஹ் ஹைரன்
//Shameed சொன்னது…
அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
லெ.மு.செ.(அ) வருகை எங்களுக்கெல்லாம் ஒரு உத்வேகம் ஜஸாகல்லாஹ் !//
ஹமீதாக்கா, நீங்கள் இடையில் வராதது எங்களுக்கு மந்தம்
பதிவுக்கு நன்றி.
அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து. என்ற தலைப்பில் ஒரு அழகான தொகுப்பாக்கம்.
//குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.//
மேலே சொல்லப்பட்ட வாக்கியங்கள் உண்மையிலும் உண்மை அதுவே. அதை யாராலும் மறுக்க முடியாது.
ஒரு காலத்தில் அதாவது நான் சிறுவனாக இருக்கும்போது இன்னும் சொல்லப்போனால் ஐம்பது வருடங்களுக்கு முன்னாள் வெளியூர்வாசிகள் அதிரையை சின்ன மக்கா என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அன்றைய அதிரை வாசிகள் முன் உதாரணமாக வாழ்ந்து காட்டினார்கள். அன்று வாழ்ந்தவர்களைபோல் இன்று வாழ்பவர்கள் எத்தனை பேர்?.
இன்று அவரவர் சிந்திக்க வேண்டிய நேரம்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ் அருமையான மருந்து காக்கா ஜஸாகல்லாஹ் ஹைரன்
லெ.மு.செ.(அ)அவர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கின்றது
ஒவ்வொரு வரிகளும் ஆழமான கருத்து நிறைந்த ஹதீஸ் தொகுப்புக்கள். அருமை. வாழ்த்துக்கள்.
Post a Comment