அனுபவப் பாடம்
அறிந்திருக்க வேணும்
அதிலுள்ள தெளிவு
ஆத்மார்த்த அறிவு
புதுமையாய் பலவும்
புரியத்தரும் பாடம்
பூப்போன்று உலகில்
பழகச்சொல்லும் பாடம்
பொறுமையை நமக்கு
புகட்டிடும் பாடம்
பொல்லாதவை விட்டு
புறம்தள்ளும் பாடம்
வெறுமைகள் யாவும்
விலக்கிடும் பாடம்
விதியையும் வெல்ல
விளக்கம்தரும் பாடம்
தருமத்தை என்றும்
தாங்கிவரும் பாடம்
தரணியர் போற்ற
தரம்மிக்க பாடம்
வாழ்க்கையில் நமக்கு
வழிகாட்டும் பாடம்
வானுயர வளர
வகைசெய்யும் பாடம்
சாதனைபடைக்க
போதனைதரும் பாடம்
சோதனை வருமுன்
சொல்லிவிடும் பாடம்
அகிலத்தைத் தேடி
அதற்கில்லை கூலி
இனம்காணு கோடி
இதற்கில்லை வேலி
அனுபவப் பாடம்
அகம் உணர்ந்த வேதம்
புரிந்தவர் வாழ்வில்
புண்ணியம் தரும் பாடம்
அதிரை மெய்சா
1 Responses So Far:
அனுபவம் ஒரு சிறந்த பாடம்.
நல்ல மனிதர்களின் அனுபவங்கள் பாடம்
தீயோர் அனுபவங்கள் எச்சரிக்கை.
அருமை மெய்சா.
Post a Comment